search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரோகித் சர்மா
    X
    ரோகித் சர்மா

    தனி ஒருவனாக போராடிய ரோகித்: 63 அடித்தும் பஞ்சாப் அணிக்கு 132 ரன்களே இலக்கு நிர்ணயித்தது மும்பை

    மிகவும் மந்தமான சென்னை சேப்பாக்கம் ஆடுகளத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியால் 131 ரன்களே அடிக்க முடிந்தது.
    ஐபிஎல் தொடரின் 17-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக பஞ்சாப் கிங்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, டி காக் ஆகியோர் களம் இறங்கினர். டி காக் 3 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ரோகித் சர்மா உடன் இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தார்.

    இஷான் கிஷன் ரன்கள் எடுத்த மிகவும் திணறினார். இருந்தாலும் ரோகித் சர்மா தாக்குப்பிடித்து விளையாடினார். இஷான் கிஷன் 17 பந்தில் 6 ரன்கள் எடுத்து வெளியேறினார். அப்போது மும்பை அணி 7 ஓவரில் 26 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

    3-வது விக்கெட்டுக்கு ரோகித் சர்மா உடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. சூர்யகுமார் யாதவ் 27 பந்தில் 33 ரன்கள் எடுத்து வெளியேறினார். அப்போது மும்பை இந்தியன்ஸ் 16.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்திருந்தது.

    மறுமுனையில் 40 பந்தில் அரைசதம் அடித்த ரோகித் சர்மா, 52 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 63 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஹர்திக் பாண்ட்யா 1 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

    பிஷ்னோய்

    பொல்லார்டு பந்தை அடித்துதான் பார்த்தார். ஆனால் சிக்சர் செல்ல மறுத்து விட்டது. கடைசி நான்கு ஓவர்களில் 26 ரன்கள் மட்டுமே சேர்க்க இறுதியில் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்களே எடுத்தது. பொல்லார்டு 12 பந்தில் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    பஞ்சாப் அணியில் முகமது ஷமி, ரவி பிஷ்னோய் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
    Next Story
    ×