என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. சிஎஸ்கே-வில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் லுங்கி நிகிடி, மொயீன் அலி ஆகியோர் இடம் பெறவில்லை. அவர்களுக்குப் பதில் இம்ரான் தஹிர் இடம் பிடித்துள்ளனர்.

    ஆர்சிபி அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டள்ளன. டேனியல் கிறிஸ்டியன், நவ்தீப் சைனி சேர்க்கப்பட்டுள்ளனர்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி:

    1. ருத்துராஜ் கெய்க்வாட், 2. டு பிளிஸ்சிஸ், 3. இம்ரான் தஹிர், 4. சுரேஷ் ரெய்னா, 5. அம்பதி ராயுடு, 6. ஜடேஜா, 7.  எம்எஸ் டோனி, 8. சாம் கர்ரன், 9. ஷர்துல் தாகூர், 10. பிராவோ, 11. தீபக் சாஹர்.

    ஆர்சிபி அணி

    ஆர்சிபி அணி:

    1. விராட் கோலி, 2. தேவ்தத் படிக்கல், 3. நவ்தீப் சைனி, 4. மேக்ஸ்வெல், 5. ஏபி டி வில்லியர்ஸ், 6. வாஷிங்டன் சுந்தர், 7. டேனியல் கிறிஸ்டியன்,  8. கைல் ஜேமிசன், 9. ஹர்ஷல் பட்டேல், 10. முகமது சிராஜ், 11, சாஹல்.
    கடந்த 5 போட்டிகளிலும் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.

    மும்பை:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பையில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் தோற்கடித்தது.

    முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 133 ரன் எடுத்தது. அதிகபட்சமாக திரிபாதி 36 ரன் எடுத்தார். ராஜஸ்தான் தரப்பில் கிறிஸ்மோரிஸ் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    அடுத்து விளையாடிய ராஜஸ்தான் 18.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 134 ரன் எடுத்து வென்றது. கேப்டன் சஞ்சு சாம்சன் 42 ரன்னும், டேவிட் மில்லர் 24 ரன்னும், ஷிலம் துபே, ஜெய்ஸ்லால் தலா 22 ரன்னும் எடுத்தனர்.

    ராஜஸ்தான் பெற்ற 2-வது வெற்றி (5 ஆட்டம்) இதுவாகும். கொல்கத்தா 4-வது தோல்வியை (5 ஆட்டம்) சந்தித்தது.

    இந்த வெற்றி குறித்து அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியதாவது:-

    இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. பந்துவீச்சாளர்கள் பணி சிறப்பாக இருந்தது. கடந்த 5 போட்டிகளிலும் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். சீனியர் வீரர்களை போல் இளம் வீரர்களும் நன்றாக வீசினார்கள். கிரிஸ் மோரிஸ் விக்கெட்டுகளை வீழ்த்தும் வேட்கையில் இருந்தார். அவரது பந்துவீச்சு மிகவும் அபாரமாக இருந்தது.

    எனது பேட்டிங்கை ரசித்து விளையாடினேன். இனிவரும் ஆட்டங்களில் தொடர்ந்து வெற்றி பெற விரும்புகிறோம். அடுத்த போட்டியிலும் திட்டமிட்டு விளையாடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தொடர்ந்து 4வது தோல்வியை தழுவியது. இந்தத் தோல்வி குறித்து அந்த அணி கேப்டன் மார்கன் கூறியதாவது:-

    எங்களது பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. ஒட்டு மொத்த இன்னிங்சும் நோக்கம் இல்லாமல் இருந்தது. 40 ரன்கள் வரை குறைவாக எடுத்துவிட்டோம். மோசமான பேட்டிங்கால் தோல்வி அடைந்தோம்.

    முந்தைய ஆடுகளம் போல் இந்த பிட்ச் இல்லை. இதனால் எங்களால் சவாலை சமாளிக்க முடியவில்லை. இனிவரும் போட்டிகளில் சிறப்பாக விளையாட முயற்சிப்போம்.

    இவ்வாறு மார்கன் கூறி உள்ளார்.

    காட்டில் யானையும்- சிங்கமும் மோதினால், அப்படித்தான் வான்கடேயில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதும் போட்டியும்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் நான்கு போட்டிகளையும் வான்கடே மைதானத்திலேயே விளையாடி ஐந்தாவது போட்டியில் விளையாட இருக்கிறது. முதல் போட்டியில் மட்டுமே 188 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. 

    அதன்பின் சூப்பராக விளையாடி ஹாட்ரிக் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. குறிப்பாக கடந்த போட்டியில் கொல்கத்தாவிற்கு எதிராக பந்து வீச்சு, பேட்டிங் என இரண்டு துறையிலும் அசத்தியது. முதல் மூன்று போட்டிகளில் சொதப்பிய ருத்துராஜை அணியில் ஏன் வைத்திருக்கிறார்கள் என ரசிகர்கள் முணுமுணுக்க... கொல்கத்தாவிற்கு எதிராக ஆக்ரோஷமாகி 42 பந்தில் 64 ரன்கள் எடுத்து தனது திறமையை நிரூபித்தார்.

    வெளியில் ஆயிரம் சொல்லலாம்... அவர் மீது நம்பிக்கை இருக்கிறது என தலைமை கோச் ஸ்டீபன் பிளமிங் கூறியதை உண்மையாக்கினார் ருத்துராஜ். டு பிளிஸ்சிஸ் தனது டாப் ஃபார்ம்-ஐ பயன்படுத்தி 95 ரன்கள் விளாசினார். இதனால் ஓபனிங் செட்டாகி விட்டது.

    மொயீன் அலியை சென்னை சூப்பர் கிங்ஸ் 7 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியதற்கு வஞ்சமில்லாமல் விளையாடுகிறார். களம் இறங்கினாலே குறைந்த பந்தில் அதிக ரன்கள் கேரண்டி. எம்எஸ் டோனி கடைசி நான்கு ஓவர்களை டார்கெட் செய்கிறார். அதில் க்ளிக் ஆனால் வாணவேடிக்கையை பார்க்கலாம். முதல் போட்டியில் அரைசதம் அடித்த பிறகு ரெய்னாவுக்கு இன்னும் சரியாக க்ளிக் ஆகவில்லை. அதேபோல் அம்பதி ராயுடுவுக்கும். ஓபனிங் அசத்த ரெய்னா, அம்பதி ராயுடுவுக்கு க்ளிக் ஆனால், சிஎஸ்கே கில்லி போன்று அசத்தும்.

    பந்து வீச்சில் தீபக் சாஹர் பஞ்சாப் கிங்ஸ் (4 விக்கெட்), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (4) ஆகிய இரண்டு அணிகளுக்கு எதிராக மட்டுமே விக்கெட் வீழ்த்தியுள்ளார். ஆனால் விக்கெட் வீழ்த்தி இரணடு போட்டியிலும் பவர்பிளேயிலேயே சென்னை அணியின் வெற்றியை உறுதி செய்து விட்டார்.

    சுட்டிப்பையன் சாம் கர்ரன் அவ்வப்போது முக்கியமான விக்கெட்களை வீழ்த்தினாலும் ரன்கள் கொஞ்சம் அதிகமாக  விட்டுக்கொடுக்கிறார். இதை சரி செய்தால் அவர் பெர்பெக்ட் பாஸ்ட் பவுலர். கடந்த போட்டியில் பிராவோவிற்கு ஓய்வு கொடுத்து அதிவேக பந்து வீச்சாளரான லுங்கி நிகிடியை களம் இறக்கினார் தல டோனி. அவர் 3 விக்கெட் வீழ்த்தி அணிக்கு உதவிகரமான இருந்தார்.

    ஷர்துல் தாகூர் இன்னும் முழுமையாக ஆட்டத்திற்குள் வரவில்லை. ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் மட்டுமே மொயீன் அலி (3), ஜடேஜா (2) சுழற்பந்து வீச்சில் அசத்தினர். இவர்கள் மிடில் ஆர்டர் ஓவரில் விக்கெட் வீழ்த்தினால் அது அணிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும்.

    ஆர்சிபி இந்த முறை சரியான கலவையாக உள்ளது. மிகவும் மந்தமான சென்னை சேப்பாக்கம் ஆடுகளங்களில் மூன்று போட்டிகளில் விளையாடி மூன்றையும் வென்றுள்ளது. மேக்ஸ்வெல் மிடில் ஆர்டரில் இணைந்திருப்பது அந்த அணிக்கு யானைப்பலத்தை கொடுத்துள்ளது. மிகவும் மந்தமான சேப்பாக்கம் ஆடுகளத்தில் 39, 59, 78 என முத்திரை பதித்துள்ளார். அதேபோல் 360 டிகிரி ஏபிடி வில்லியர்ஸ் 48, 76 என அசத்தியுள்ளார்.

    விராட் கோலி 33, 33, 5 என ஜொலிக்காத நிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக வீறுகொண்டு எழுந்து 47 பந்தில் ஆட்டமிழக்காமல் 72 ரன்கள் விளாசினா். அதேபோல் கொரோனா தொற்றில் இருந்து மீண்ட தேவ்தத் படிக்கல் சென்னையில் 11, 25 என ஏமாற்றம் அடைந்த நிலையில் வான்கடேயில் நடைபெற்ற முதல் போட்டியிலேயே சதம் விளாசி அசத்தினார். 

    இதனால் ஆர்சிபி பேட்டிங்கில் படிக்கல், கோலி, மேக்ஸ்வெல், ஏபிடி என நான்கு தூண்களை வைத்துள்ளது. 

    யாரும் எதிர்பார்க்காத வகையில் பந்து வீச்சும் அந்த அணிக்கு கைக்கொடுத்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் இந்திய பந்து வீச்சாளர்களான ஹர்ஷல் பட்டேல், முகமது சிராஜ், நியூசிலாந்தின் ஜேமிசன் ஆகியோர்தான். 15 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட ஜேமிசன், தனது உயரத்தை சாதகமாக எடுத்துக் கொண்டு பவுன்சர், யார்க்கர், ஸ்லோவர் ஒன் என அசத்துகிறார்.

    மும்பைக்கு எதிராக 28 ரன் 2 விக்கெட், ஐதராபாத்துக்கு எதிராக 30 ரன் 1 விக்கெட், கொல்கத்தாவிற்கு எதிராக 41 ரன் 3 விக்கெட், ராஜஸ்தானுக்கு எதிராக 28 ரன் 1 விக்கெட் என ஒவ்வொரு போட்டியிலும் வாங்கிய துட்டுக்கு வஞ்சகமில்லாமல் பந்து வீசி வருகிறார். இவரிடம் பேட்டிங்கும் இருப்பது கூடுதல் பலம்.

    ஹர்ஷல் பட்டேல் 5, 2, 2, 3 என அசத்தியுள்ளார். பவுன்சர், ஸ்லோவர் ஒன், யார்க்கர் என பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகிறார். வான்கடேயில் ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு எதிராக 3 விக்கெட் வீழ்த்தினாலும் 47 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இந்த போட்டியில் அதை சரி செய்து கொள்ள முயற்சிப்பார். முகமது சிராஜ்-ஐ புதுபந்தில் பயன்படுத்துகிறது ஆர்சிபி. விக்கெட் அதிக அளவில் சாய்க்காவிட்டாலும் ரன்கள் விட்டுக்கொடுக்க மறுக்கிறார். வேகப்பந்து வீச்சில் இந்த மூன்று பேருடன் தற்போது கேன் ரிச்சர்ட்சன் இணைந்துள்ளார்.

    சுழற்பந்து வீச்சில் வாஷிங்டன் சுந்தர், சாஹல் உள்ளனர். இவர்கள் மிடில் ஆர்டரில் விக்கெட் வீழ்த்திவிட்டால் ஆர்சிபி கை ஓங்கும்.

    போட்டி பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. இதனால் பனிப்பொழிவு குறித்து கவலை இல்லை. மும்பை வான்கடே மைதானம் பேட்டிங்கிற்கு சொர்க்கமாக விளங்கும். இருந்தாலும் புதுப்பந்தில் ஸ்விங் இருக்கும். இதை சிஎஸ்கே-யின் தீபக் சாஹர், சாம் கர்ரன் ஆர்சிபியின் முகமது சிராஜ், ஜேமிசன் எப்படி சாதகமாக பயன்படுத்துகிறார்கள் என்பதை பார்க்க வேண்டும்.

    டாஸ் ஜெயிப்பது என்றாலோ விராட் கோலிக்கு அலர்ஜியாகும்.  ஆனால் அந்த முறை டாஸும் ஆர்சிபிக்கு கைக்கொடுத்துள்ளது. நான்கு போட்டியில் 3 முறை விராட் கோலி டாஸ் வென்றதும் அந்த அணிக்கு அதிர்ஷ்டமே. 

    அதிர்ஷ்டத்தில் டோனி குறைந்தவர் இல்லை. ஆனால் இந்த முறை நான்கில் ஒருமுறைதான் டாஸ்சில் வென்றுள்ளார். இருந்தாலும் போட்டியிலும் வென்றுள்ளார். டாஸ் வெல்லும் அணி பந்து வீச்சை தேர்வு செய்யும்.

    முதலில் பேட்டிங் செய்யும் அணி எளிதாக 180 முதல் 200 ரன்கள் வரை அடிக்கும். 200 ரன்கள் வரை சேஸிங் செய்யவும் வாய்ப்புள்ளது. பந்து வீச்சாளர்கள் திண்டாட வேண்டியதுதான். இந்த போட்டி காட்டில் யானையும், சிங்கமும் மோதுவதுபோல். யார் சின்ன தவறு செய்கிறார்களோ, அவர்கள் தோல்வியை சந்திப்பார்கள்.

    மொத்தத்தில் வான்கடேயில் சிக்சர் வாணவேடிக்கை.....
    கேப்டன் கருணரத்னே இரட்டை சதமடிக்க, தனஞ்செய டி சில்வா சதமடித்து அசத்த இலங்கை அணி 4ம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட்டுக்கு 512 ரன்கள் குவித்துள்ளது.
    பல்லேகெலே:

    இலங்கை-வங்காளதேச அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பல்லகெலேயில் நடந்து வருகிறது.

    இதில் முதலில் பேட் செய்த வங்காளதேசம் அணி 7 விக்கெட் இழப்புக்கு 541 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

    நஜ்முல் ஹூசைன் ஷன்டோ 163 ரன்னிலும், மொமினுல் ஹக் 127 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 3-வது விக்கெட்டுக்கு நஜ்முல் ஹூசைன்-மொமினுல் ஹக் ஜோடி 242 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

    டெஸ்ட் போட்டியில் மொமினுல் ஹக் டித்த 11-வது சதம் இதுவாகும். வெளிநாட்டு மண்ணில் அவரது முதல் சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. தமிம் இக்பால் 90 ரன்னில் வெளியேறினார். லிட்டன் தாஸ் அரை சதமடித்து அவுட்டானார். முஷ்பிகுர் ரஹீம் அரை சதமடித்து 68 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இலங்கை சார்பில் விஷ்வா பெர்னாண்டோ 4 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, இலங்கை அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக திமுத் கருணரத்னே, லஹிரு திரிமானே களமிறங்கினர்.

    இருவரும் நிதானமாக ஆடி அரை சதமடித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 114  ரன்கள் சேர்த்தது. அரை சதமடித்த திரிமானே அவுட்டானார். அடுத்து இறங்கிய ஒஷடா பெர்னாண்டோ 20 ரன்னிலும், ஏஞ்சலோ மேத்யூஸ் 25 ரன்னிலும் வெளியேறினர். 3ம் நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 3 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்துள்ளது. கருணரத்னே 85 ரன்னுடனும், தனஞ்செய டி சில்வா 26 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    சதமடித்த தனஞ்செய டி சில்வா

    இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. கருணரத்னேவும், தனஞ்செய டி சில்வாவும் பொறுப்புடன் ஆடினர்.

    இருவரும் இணைந்து மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். இதனால் வங்காளதேச பந்து வீச்சு பயனளிக்கவில்லை.

    கருணரத்னே இரட்டை சதமடித்து அசத்தினார். அவருக்கு நன்கு ஒத்துழைத்த தனஞ்செய டி சில்வா சதமடித்தார்.

    நான்காம் நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 3 விக்கெட் இழப்புக்கு 512 ரன்கள் குவித்துள்ளது. கருணரத்னே 234 ரன்களுடனும், தனஞ்செய டி சில்வா 154 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இலங்கை அணி முதல் இன்னிங்சில் வங்காளதேசத்தை விட இன்னும் 29 ரன்கள் பின்தங்கியுள்ளது. முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வராத நிலையில், இன்னும் ஒரு நாள் மட்டுமே மீதமிருப்பதால் முதல் டெஸ்ட் டிராவில் முடியவே வாய்ப்புள்ளது.
    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் தெண்டுல்கருக்கு கடந்த மாதம் 27-ந் தேதி கொரோனா தொற்று உறுதியானது.
    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் தெண்டுல்கருக்கு கடந்த மாதம் 27-ந் தேதி கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து சில நாட்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற அவர் கடந்த 8-ந் தேதி வீடு திரும்பி தனிமைப்படுத்துதலை கடைப்பிடித்தார். தற்போது தெண்டுல்கர் கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டு விட்டார். சாதனை நாயகன் தெண்டுல்கருக்கு நேற்று 48-வது பிறந்தநாளாகும். பிறந்தநாளை அவர் குடும்பத்தினருடன் எளியமுறையில் கொண்டாடினார். பிறந்த நாளையொட்டி தெண்டுல்கருக்கு முன்னாள், இன்னாள் வீரர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் சமூக வலைதளம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் தெண்டுல்கர் நேற்று டுவிட்டரில் வெளியிட்டு இருக்கும் வீடியோவில், ‘உங்கள் அனைவருடைய வாழ்த்துகளுக்கும் நன்றி. உங்களின் வாழ்த்துகள் இந்த நாளை மேலும் சிறப்பாக்கியது. கடந்த மாதம் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு டாக்டர்களின் அறிவுரைப்படி 21 நாட்கள் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். கொரோனாவில் இருந்து மீண்டு வர டாக்டர்கள் எனக்கு உதவியாய் இருந்தார்கள். உங்களின் பிரார்த்தனைகளும் எனக்கு துணையாக இருந்தது’ என்று கூறியுள்ளார்.

     தெண்டுல்கர்


    மேலும் அவர், ‘கடந்த ஆண்டு நான் பிளாஸ்மா தானம் செய்யும் மையத்தை தொடங்கி வைத்தேன். இந்தநேரத்தில் நான் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் தயவு செய்து உங்களுடைய ரத்த பிளாஸ்மாவை தானம் செய்யுங்கள். அது தேவைப்படும் நோயாளிகளுக்கு பேருதவியாக இருக்கும். நானும் அதை செய்ய இருக்கிறேன், மருத்துவர்கள் எப்போது சொல்கிறார்களோ அப்போது பிளாஸ்மா தானம் செய்வேன்’ என்றும் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
    1999-ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆன மிதாலிராஜ் இன்னும் ஆர்வம் குறையாமல் அதே உத்வேகத்துடன் விளையாடி வருகிறார்
    புதுடெல்லி:

    இந்திய பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலிராஜ். 1999-ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆன அவர் இன்னும் ஆர்வம் குறையாமல் அதே உத்வேகத்துடன் விளையாடி வருகிறார். இந்த நிலையில் அவர் அடுத்த ஆண்டுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

    கேப்டன் மிதாலிராஜ்


    நிகழ்ச்சி ஒன்றில் மிதாலி பேசுகையில், ‘21 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் இருக்கிறேன். 2022-ம் ஆண்டில் நியூசிலாந்தில் உலக கோப்பை போட்டி நடக்கிறது. இதுவே எனது கடைசி போட்டியாக இருக்கும். நாம் இப்போது கடினமான காலக்கட்டத்தில் இருக்கிறோம் என்பதை அறிவேன். ஆனாலும் உடல்தகுதியை மேம்படுத்த தொடர்ந்து உழைக்கிறேன்’ என்றார். 38 வயதான மிதாலிராஜ், 7 ஆயிரம் ரன்களுக்கு மேல் எடுத்த ஒரே வீராங்கனை ஆவார்.
    பந்து வீச்சில் கிறிஸ் மோரிஸ் 4 விக்கெட்வீழ்த்த, சஞ்சு சாம்சன் நிதானமாக ஆட கொல்கத்தாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் அணி.
    மும்பை:

    மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த ஐபிஎல் தொடரின் 18-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்,  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேட்பன் சஞ்சு சாம்சங் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி, கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக நிதிஷ் ரானா மற்றும் சுக்மன் கில் களமிறங்கினர்.  கில் 11 ரன்னிலும், ரானா 22 ரன்னிலும் வெளியேறினர். அடுத்து வந்த சுனில் நரைன் 6 ரன்னிலும், கேப்டன் மோர்கன் (0) ரன் எதுவும் எடுக்காமலும் வெளியேறினர்.

    ஓரளவு தாக்குப்பிடித்து ஆடிய திரிபாதி 36 ரன்களில் வெளியேறினார். தினேஷ் கார்த்திக் 25 ரன்னில் வெளியேறினார். மற்ற வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர்.

    இறுதியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    4 விக்கெட் வீழ்த்திய கிறிஸ் மோரிஸ்

    ராஜஸ்தான் சார்பில் கிறிஸ் மோரிஸ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

    134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லர், ஜெய்ஸ்வால் ஆடினர்.

    பட்லர் 5 ரன்னிலும், ஜெய்ஸ்வால் 22 ரன்னிலும், ஷிவன் துபே 22 ரன்னிலும், டெவாட்டியா 5 ரன்னிலும் அவுட்டாகினர்.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் கேப்டன் சஞ்சு சாம்சன் பொறுப்புடன் விளையாடினார். அவருக்கு மில்லர் ஒத்துழைப்பு கொடுத்தார்.

    இறுதியில், ராஜஸ்தான் அணி 18.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சாம்சன் 42 ரன்னும், மில்லர் 24 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இது ராஜஸ்தான் பெற்ற இரண்டாவது வெற்றியாகும். கொல்கத்தா அணி பெற்ற 4வது தோல்வி இதுவாகும்.
    பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா நடுவரின் முடிவுக்கு ஆட்சேபம் தெரிவித்து அவரை வார்த்தைகளால் வசைபாடினார்.

    சென்னை:

    ஐ.பி.எல். போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி பஞ்சாப் 2-வது வெற்றியை பெற்றது.

    சென்னையில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 131 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் பஞ்சாப் அணிக்கு 132 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    கேப்டன் ரோகித் சர்மா அதிகபட்சமாக 52 பந்தில் 63 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்), சூர்யகுமார் யாதவ் 27 பந்தில் 33 ரன்னும் (3 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தனர். முகமது ‌ஷமி, ரவி பிஷ்னோய் தலா 2 விக்கெட்டும், தீபக் ஹூடா, அர்ஷ்த்தீப்சிங் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் 17.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 132 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    கேப்டன் லோகேஷ் ராகுல் 52 பந்தில் 60 ரன்னும் (3 பவுண்டரி, 3 சிக்சர்), கிறிஸ்கெய்ல் 35 பந்தில் 43 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்), எடுத்தனர்.

    இந்த போட்டியில் மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா நடுவரின் முடிவுக்கு ஆட்சேபம் தெரிவித்து அவரை வார்த்தைகளால் வசைபாடினார்.

    பஞ்சாப் வீரர் ஹென்ரிக்ஸ் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரில் 5-வது பந்தில் ரோகித் சர்மாவுக்கு நடுவர் சம்சுதீன் அவுட் கொடுத்தார். பந்து தொடையில் பட்டு சென்றதை கேட்ச் பிடித்ததாக அவுட் கொடுக்கப்பட்டதால் ரோகித் சர்மா நடுவர் மீது கடும் அதிருப்தி அடைந்தார்.

    நடுவரை வார்த்தைகளால் வசை பாடியவாரே அவர் டி.ஆர்.எஸ். முடிவுக்கு சென்றார். இதில் ரோகித் சர்மா அவுட் இல்லை என்பது தெரியவந்தது. இதனால் அவர் தொடர்ந்து களத்தில் நின்று சிறப்பாக விளையாடி 63 ரன்களை எடுத்தார்.

    ரோகித் சர்மா களத்தில் நடந்துகொண்ட விதம் ஐ.பி.எல். நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது. இதனால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது.

    ரோகித் சர்மாவுக்கு அபராதம் விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மெதுவான பந்துவீச்சுக்காக அவருக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு இருந்தது.

    மும்பை அணி 2-வது தோல்வியை தழுவியது. இந்த தோல்வி குறித்து மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா கூறும்போது, நாங்கள் போதுமான அளவுக்கு ரன்களை குவிக்கவில்லை.

    கடந்த சில ஆட்டங்களில் எங்களது பேட்டிங் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக இல்லை. 150 முதல் 170 ரன்கள் வரை எடுத்திருக்க வேண்டும். ஆனால் அதை செய்ய தவறி விட்டோம் என்றார்.

    பஞ்சாப் அணி பெற்ற 2-வது வெற்றியாகும். இந்த வெற்றி குறித்து அந்த அணி கேப்டன் ராகுல் கூறும்போது, ‘வீரர்களின் கூட்டு முயற்சியால் இந்த வெற்றியை பெற்றுள்ளோம். இனி வரும் ஆட்டங்களிலும் தொடர்ந்து சிறப்பாக ஆட போராடுவோம்‘ என்றார்.

    பஞ்சாப் அணி அடுத்த ஆட்டத்தில் கொல்கத்தாவை 26-ந் தேதி எதிர்கொள்கிறது. மும்பை 29-ந் தேதி ராஜஸ்தானுடன் மோதுகிறது.

    தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஆல்ரவுண்டரான அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.16.25 கோடிக்கு ஏலம் எடுத்தது. அவருக்கான அடிப்படை விலை ரூ.75 லட்சமாகும்.

    லண்டன்:

    இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். ஏலத்தில் அதிக தொகைக்கு விலை போனவர் கிறிஸ்மோரிஸ்.

    தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஆல்ரவுண்டரான அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.16.25 கோடிக்கு ஏலம் எடுத்தது. அவருக்கான அடிப்படை விலை ரூ.75 லட்சமாகும்.

    எந்தவொரு வெளிநாட்டு வீரரும் இவ்வளவு அதிகமான தொகைக்கு ஏலம் போனது கிடையாது.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 ஆட்டத்தில் விளையாடி ஒரேஒரு வெற்றியை மட்டும் பெற்றது. 3 ஆட்டத்தில் தோற்றுள்ளது. டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் வெற்றிபெற்றது.

    இந்த வெற்றிக்கு கிறிஸ் மோரிஸ் முக்கிய காரணமாக இருந்தார். அவரது அதிரடியான ஆட்டத்தால் வெற்றி கிடைத்தது. மற்ற ஆட்டங்களில் அவர் திறமையை வெளிப்படுத்தவில்லை. இதேபோல பந்து வீச்சிலும் எதிர்பார்த்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

    இந்த நிலையில் கிறிஸ் மோரிஸ் ரூ.16 கோடிக்கு தகுதியானவர் இல்லை என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் கிறிஸ் மோரிசுக்கு வழங்கிய ரூ.16 கோடி அதிகம் என நினைக்கிறேன். அந்த தொகைக்கு அவர் தகுதியான வீரர் இல்லை.

    தனக்கு அதிகமான விலை கொடுக்கப்பட்டதன் அழுத்ததை மோரிஸ் தற்போது உணர்ந்து வருகிறார். அடுத்த சில போட்டிகளில் சிறப்பாக ஆடினாலும் கூட, கிறிஸ் மோரிஸ் நிலையான ஆட்டத்தை அதாவது பந்து வீச்சிலும், பேட்டிங்கிலும் அளிக்க மாட்டார்.

    நாம் அவரைப் பற்றி அதிகமாக பேசுகிறோம் என நினைக்கிறேன். 2 போட்டிகளில் ரன் அடிப்பார். சில போட்டிகளில் காணாமல் போய் விடுவார்.

    இவ்வாறு பீட்டர்சன் கூறியுள்ளார்.

    34 வயதான கிறிஸ் மோரிஸ் 4 ஆட்டத்தில் 48 ரன்களே எடுத்துள்ளார். 5 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.

    கேப்டன் மொமினுல் மற்றும் ஷண்டோ ஆகியோர் சதமடித்து அசத்த வங்காளதேசம் அணி தனது முதல் இன்னிங்சில் 541 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
    பல்லேகெலே:

    இலங்கை-வங்காளதேச அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பல்லகெலேயில் நடந்து வருகிறது.

    இதில் முதலில் பேட் செய்த வங்காளதேச அணி முதல் நாளில் நஜ்முல் ஹூசைன் ஷன்டோ சதமடித்து அசத்தினார். அவருக்கு கேப்டன் மொமினுல் ஹக் பக்கபலமாக இருந்து அரை சதமடித்தார். முதல் நாளில் 2 விக்கெட்டுக்கு 302 ரன்கள் எடுத்திருந்தது.

    நேற்று முன்தினம் நடந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் மொமினுல் ஹக் சதத்தை எட்டினார். டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த 11-வது சதம் இதுவாகும். வெளிநாட்டு மண்ணில் அவரது முதல் சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. நிலைத்து நின்று ஆடிய நஜ்முல் ஹூசைன் ஷன்டோ 163 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    3-வது விக்கெட்டுக்கு நஜ்முல் ஹூசைன்-மொமினுல் ஹக் ஜோடி 242 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. அவரை தொடர்ந்து மொமினுல் ஹக் 127 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    மழையால் ஆட்டம் சில மணி நேரம் பாதிக்கப்பட்டதுடன், போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் முன்கூட்டியே முடித்து கொள்ளப்பட்டது. இரண்டாம் நாள் முடிவில் வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 474 ரன்கள் குவித்திருந்தது. முஷ்பிகுர் ரஹிம் 43 ரன்னுடனும், லிட்டான் தாஸ் 25 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. லிட்டன் தாஸ் அரை சதமடித்து ஆட்டமிழந்தார். ரஹும் அரை சதமடித்து 68 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதியில் வங்காளதேசம் அணி 7 விக்கெட் இழப்புக்கு 541 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

    இலங்கை சார்பில் விஷ்வா பெர்னாண்டோ4 விக்கெட் வீழ்த்தினார்.

    இதைத்தொடர்ந்து இலங்கை அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக திமுத் கருணரத்னே, லஹிரு திரிமானே களமிறங்கினர்.

    அரை சதமடித்த கருணரத்னேவை பாராட்டும் திரிமானே

    இருவரும் நிதானமாக ஆடி அரை சதமடித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 114  ரன்கள் சேர்த்தது. அரை சதமடித்த திரிமானே அவுட்டானார். அடுத்து இறங்கிய ஒஷடா பெர்னாண்டோ 20 ரன்னிலும், ஏஞ்சலோ மேத்யூஸ் 25 ரன்னிலும் வெளியேறினர்.

    மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 3 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்துள்ளது. கருணரத்னே 85 ரன்னுடனும், தனஞ்செய டி சில்வா 26 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
    பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிராக மூன்றாவது முறையாக பவர்பிளேயில் குறைந்த ரன்கள் அடித்து மோசமான சாதனைக்குள்ளாகியது மும்பை இந்தியன்ஸ்.
    மும்பை இந்தியன்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 17-வது ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. ஆடுகளம் மிகவும் மந்தமாக இருப்பதால் பேட்ஸ்மேன்கள் ரன்கள் அடிப்பதற்கு திண்டாடி வருகின்றனர்.

    புதுப்பந்தில் முதல் 6 ஓவரில் ரன்கள் அடித்ததால்தான் உண்டு. இல்லையெனில் கஷ்டப்பட வேண்டியநிலை ஏற்படும். இன்று மும்பை இந்தியன்ஸ் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்தது. பஞ்சாப் அணியின் பந்து வீச்சை மும்பை இந்தியன்ஸ் பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்ள திணறினார்கள்.

    டி காக் அவுட்

    டி காக் 5 பந்தில் 3 ரன்கள் மட்டுமே அடித்தார். அடுத்து வந்த இஷான் கிஷன் ஆமை வேகத்தில் விளையாடினார். ரோகித் சர்மாவினாலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. இதனால் பவர் பிளே-யான முதல் 6 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 21 ரன்கள் மட்டுமே எடுத்தது. ரோகித் சர்மா 16 பந்தில் 13 ரன்கள் எடுத்தார். இஷான் கிஷன் 15 பந்தில் 5 ரன்கள் எடுத்தார்.

    இந்த சீசனில் பவர் பிளேயில் குறைந்த ஸ்கோர் இதுவாகும். மேலும், ஒட்டுமொத்த ஐபிஎல் வரலாற்றில் 4-வது மிகக்குறைந்த ஸ்கோர் ஆகும். இதில் மூன்று முறை பஞ்சாப் அணிக்கெதிராக எடுத்துள்ளது.

    மும்பை இந்தியன்ஸ் அணியின் குறைந்த ஸ்கோர் விவரம் வருமாறு:-

    வ.எண்

    எதிரணி

    ரன்/விக்கெட்

    மைதானம்

    வருடம்

    1

    பஞ்சாப்

    17/3

    வான்கடே

    2015

    2

    பஞ்சாப்

    21/2

    வி.பட்டனம்

    2016

    3

    ஆர்சிபி

    21/4

    பெங்களூரு

    2017

    4

    பஞ்சாப்

    21/1

    சென்னை

    2021 (இன்று)

    கே எல் ராகுல் அரை சதமடிக்க, கெயில் ஒத்துழைக்க பஞ்சாப் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது.
    சென்னை:

    ஐபிஎல் தொடரின் 17-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக பஞ்சாப் கிங்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, டி காக் ஆகியோர் களம் இறங்கினர்.

    டி காக் 3 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இஷான் கிஷன் 6 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
     
    3-வது விக்கெட்டுக்கு ரோகித் சர்மா உடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. சூர்யகுமார் யாதவ் 33 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    மறுமுனையில் அரைசதம் அடித்த ரோகித் சர்மா, 52 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 63 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஹர்திக் பாண்ட்யா 1 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

    இறுதியில் மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்களே எடுத்தது. பொல்லார்டு 12 பந்தில் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    பஞ்சாப் அணியில் முகமது ஷமி, ரவி பிஷ்னோய் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது.

    தொடக்க ஆட்டக்காரர்கள் கே எல் ராகுலும், மயங்க் அகர்வாலும் நிதானமாக ஆடினர். அகர்வால் 25 ரன்னில் அவுட்டானார்.

    அடுத்து இறங்கிய கிறிஸ் கெயில் ராகுலுடன் சேர்ந்து அதிரடியாக ஆடினார். ராகுல் அரை சதமடித்து அசத்தினார்.

    கடைசி கட்டத்தில் கிறிஸ் கெயில் பவுண்டரி, சிக்சர்களாக விளாசினார். ராகுல் 60 ரன்னுடனும், கெயில் 43 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இறுதியில், பஞ்சாப் அணி 17.4 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இது பஞ்சாப் அணியின் இரண்டாவது வெற்றி ஆகும்.
    ×