என் மலர்
விளையாட்டு
2021, ஐபிஎல் டி20 தொடரிலிருந்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளருமான அஸ்வின் விலகியுள்ளார்.
சென்னை:
2021, ஐபிஎல் டி20 தொடரிலிருந்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளருமான அஸ்வின் விலகியுள்ளார். கொரோனா வைரஸ் பரவலின்போது குடும்பத்துடன் இருக்கவேண்டிய அவசியம் இருப்பதால் விலகியதாக அஸ்வின் தெரிவித்துள்ளார். அதேநேரம், சூழல் நல்லபடியாக மாறினால், நான் அணிக்குள் மீண்டும் வருவேன் என்றும் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டரில் அஸ்வின் கூறியிருப்பதாவது “ 2021 ஐபிஎல் தொடரிலிருந்து நாளை முதல் நான் விடைபெற்றுக் கொள்கிறேன். கொரோனா வைரஸுக்கு எதிராக என்னுடைய குடும்பத்தார் போராடி வரும் நிலையில் இந்த நேரத்தில் அவர்களுக்காக இந்த கடினமான நேரத்தில் உடன் இருப்பது அவசியம். அனைத்தும் சரியான திசையில் சென்றால் நான் மீண்டும் அணியில் சேர்வேன் என எதிர்பார்க்கிறேன்” எனப்பதிவிட்டுள்ளார்.
இந்த கடினமான தருணத்தில் அஸிவினுக்கு முழு ஆதரவு அளிப்பதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்வாகமும் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில், மொகமது ரிஸ்வான் 91 ரன் அடிக்க, ஹசன் அலி 4 விக்கெட்டை வீழ்த்த பாகிஸ்தான் 24 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
ஹராரே:
பாகிஸ்தான் அணி ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி போட்டி ஹராரேயில் நேற்று நடைபெற்றது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது.
பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரரான மொகமது ரிஸ்வான் அதிரடியாக ஆடி 91 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார். கேப்டன் பாபர் அசாம் 52 ரன்னில் வெளியேறினார்.

ஜிம்பாப்வே சார்பில் லூக் ஜாங்வே 3 விக்கெட் கைப்பற்றினார்.
இதையடுத்து, 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் வெஸ்லி மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து அரை சதமடித்தார். அவர் 59 ரன்னில் அவுட்டானார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில் ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில்7 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் பாகிஸ்தான் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதுடன், தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
பாகிஸ்தான் சார்பில் ஹசன் அலி சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். எனவே ஆட்டநாயகன் விருது ஹசன் அலிக்கு வழங்கப்பட்டது. தொடர் நாயகன் விருது மொகமது ரிஸ்வானுக்கு அளிக்கப்பட்டது.

பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தியதால் இலங்கை மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
பல்லேகெலே:
இலங்கை-வங்காளதேச அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பல்லகெலேயில் நடைபெற்றது.
இதில் முதலில் பேட் செய்த வங்காளதேசம் அணி 7 விக்கெட் இழப்புக்கு 541 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
தமிம் இக்பால் 90 ரன்னில் வெளியேறினார். லிட்டன் தாஸ் அரை சதமடித்து அவுட்டானார். முஷ்பிகுர் ரஹீம் அரை சதமடித்து 68 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இலங்கை சார்பில் விஷ்வா பெர்னாண்டோ 4 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, இலங்கை அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் திமுத் கருணரத்னே இரட்டை சதமடித்து 244 ரன்னில் அவுட்டானார். தனஞ்செய டி சில்வா 166 ரன்னில் வெளியேறினார்.
இருவரும் இணைந்து 4வ்து விக்கெட்டுக்கு 345 ரன்கள் சேர்த்தனர். லஹிரு திரிமனே 58 ரன்னில் அவுட்டானார்.

இறுதியில், இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 648 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
வங்காளதேசம் சார்பில் தஸ்கின் அகமது 3 விக்கெட்டும், தைஜுல் இஸ்லாம் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை ஆடிய வங்காளதேசம், ஐந்தாம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 100 ரன்கள் எடுத்தது. தமிம் இக்பால் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இதன்மூலம் இலங்கை மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது.
ஆட்ட நாயகன் விருது திமுத் கருணரத்னேவுக்கு வழங்கப்பட்டது.
இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 29-ம் தேதி தொடங்குகிறது.
இலங்கை-வங்காளதேச அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பல்லகெலேயில் நடைபெற்றது.
இதில் முதலில் பேட் செய்த வங்காளதேசம் அணி 7 விக்கெட் இழப்புக்கு 541 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
நஜ்முல் ஹூசைன் ஷன்டோ 163 ரன்னிலும், மொமினுல் ஹக் 127 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 3-வது விக்கெட்டுக்கு நஜ்முல் ஹூசைன்-மொமினுல் ஹக் ஜோடி 242 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
தமிம் இக்பால் 90 ரன்னில் வெளியேறினார். லிட்டன் தாஸ் அரை சதமடித்து அவுட்டானார். முஷ்பிகுர் ரஹீம் அரை சதமடித்து 68 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இலங்கை சார்பில் விஷ்வா பெர்னாண்டோ 4 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, இலங்கை அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் திமுத் கருணரத்னே இரட்டை சதமடித்து 244 ரன்னில் அவுட்டானார். தனஞ்செய டி சில்வா 166 ரன்னில் வெளியேறினார்.
இருவரும் இணைந்து 4வ்து விக்கெட்டுக்கு 345 ரன்கள் சேர்த்தனர். லஹிரு திரிமனே 58 ரன்னில் அவுட்டானார்.

வங்காளதேசம் சார்பில் தஸ்கின் அகமது 3 விக்கெட்டும், தைஜுல் இஸ்லாம் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை ஆடிய வங்காளதேசம், ஐந்தாம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 100 ரன்கள் எடுத்தது. தமிம் இக்பால் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இதன்மூலம் இலங்கை மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது.
ஆட்ட நாயகன் விருது திமுத் கருணரத்னேவுக்கு வழங்கப்பட்டது.
இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 29-ம் தேதி தொடங்குகிறது.
கேன் வில்லியம்சன் அரை சதமடித்து ஆட்டத்தை சமன் செய்தும், சூப்பர் ஓவரில் ஐதராபாத் அணியை வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.
சென்னை:
டெல்லி கேப்பிட்டல்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதிய ஐபிஎல் தொடரின் 20-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற டெல்லி பேட்டிங் தேர்வு செய்தது. தவான், பிரித்வி ஷா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
பிரித்வி ஷா தொடக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாடினார். ஷிகர் தவான் 28 ரன்கள் அடித்தார். பிரித்வி ஷா அரைசதம் அடித்து 53 ரன்னில் ரன்அவுட் ஆனார்.
அடுத்து வந்த ரிஷப் பண்ட் 37 ரன்னிலும், ஹெட்மையர் 1 ரன்னிலும் வெளியேறினர்.
இறுதியில், டெல்லி அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 159 ரன்கள் அடித்துள்ளது. ஸ்மித் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து, 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது. டேவிட் வார்னர், பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.
வார்னர் 7 ரன், பேர்ஸ்டோவ் 38 ரன், விராட் சிங் 4 ரன், கேதார் ஜாதவ் 9 ரன், அபிஷேக் வர்மா 5 ரன், ரஷீத் கான் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டாகினர்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் கேன் வில்லியம்சன் நிலைத்து நின்று அரை சதமடித்தார். அவருடன் விஜய் சங்கர் இணைந்தார்.
கடைசி 2 ஓவரில் வெற்றி பெற 28 ரன்கள் தேவைப்பட்டது. 19வது ஓவரில் விஜய சங்கர் அவுட்டாக, 16 ரன்கள் கிடைத்தது.

இறுதியில், ஐதராபாத் அணி 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்ததால் போட்டி சமனானது. இதைத் தொடர்ந்து ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது.
ஐதராபாத் அணி முதலில் ஆடியது. வார்னரும், கேன் வில்லியம்சனும் இறங்கினர். அக்சர் படேல் பந்து வீசினார். ஒரு ஓவரில் அந்த அணி 7 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
அடுத்து ஆடிய டெல்லி அணி 6 பந்தில் வெற்றிக்கு தேவையான ரன்களை எடுத்தது. இது டெல்லி அணி பெற்ற 4வது வெற்றி. ஐதராபாத் அணி பெற்ற 4வது தோல்வி இதுவாகும்.

பிரித்வி ஷா அதிரடியாக விளையாடி அரைசதம் அடிக்க, ரிஷப் பண்ட் 37 ரன்கள் எடுக்க சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 160 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது டெல்லி கேப்பிட்டல்ஸ்.
டெல்லி கேப்பிட்டல்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் தொடரின் 20-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற டெல்லி பேட்டிங் தேர்வு செய்தது. தவான், பிரித்வி ஷா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
பிரித்வி ஷா தொடக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாடினார். மறுமுனையில் ஷிகர் தவான் ஆட்டத்தில் வேகமில்லை. அவர் 26 பந்தில் 28 ரன்கள் அடித்தார். பிரித்வி ஷா அரைசதம் அடித்து 39 பந்தில் 53 ரன்கள் விளாசி ரன்அவுட் ஆனார்.
11.4-வது ஓவரில் ரிஷப் பண்ட், ஸ்டீவ் ஸ்மித் இணைந்தனர். சேப்பாக்கம் ஆடுகளம் அதனது தன்மையை காட்ட இருவரும் ரன்கள் அடிக்க திணறினர். ரிஷப் பண்ட் 27 பந்தில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹெட்மையர் 1 ரன்னில் வெளியேறினார்.

கடைசி ஓவரில் கடும்பாடுபட்ட ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடிக்க டெல்லி அணிக்கு 14 ரன்கள் கிடைத்தது. இதனால் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் அடித்துள்ளது. ஸ்மித் 25 பந்தில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பேட்டிங். பந்து வீச்சு, பீல்டிங் என மூன்று துறைகளிலும் ஜடேஜா அற்புதமாக விளையாட, ஆர்சிபியை 69 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்.
சென்னை சூப்பர் கிங்ஸ்- ஆர்சிபி அணிகள் மோதிய ஐபிஎல் தொடரின் 19-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 4 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்தது. டு பிளிஸ்சிஸ் 41 பந்தில் 50 ரன்களும், ஜடேஜா 28 பந்தில் ஆட்டமிழக்காமல் 4 பவுண்டரி, 5 சிக்சருடன் 62 ரன்களும் விளாசினர்.
பின்னர் 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி களம் இறங்கியது. படிக்கல் அதிரடியை வெளிக்காட்ட, விராட் கோலி நிதான ஆட்டத்தை தொடங்கினார். ஆர்சிபி 3.1 ஓவரில் 44 ரனகள் எடுத்திருக்கும்போது விராட் கோலி 8 ரன்னிலும் வெளியேறினார்.
மறுமுனையில் விளையாடி படிக்கல் ஷர்துல் தாகூர் வீசிய 5-வது ஓவரின் கடைசி பந்தில் 15 பந்தில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அதன்பின் வாஷிங்டன் சுந்தர் (7), மேக்ஸ்வெல் (22), டி வில்லியர்ஸ் (4) ஆகியோர் ஜடேஜா பந்து வீச்சில் ஆட்டமிழக்க ஆர்சிபி அத்துடன் சரணடைந்தது. இதற்கிடையில் டான் கிறிஸ்டியனை ரன்அவுட் மூலம் வீழ்த்தினார் ஜடேஜா. 10.1 ஓவரில் 83 ரன்களுக்கும் ஆர்சிபி முக்கிய ஐந்து விக்கெட்டுகளை இழந்தது.

அதன்பின் 20 ஓவர் வரை விளையாடி 9 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் அடித்தது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் 69 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சாஹல் 21 பந்தில் 8 ரன்கள் எடுத்தும், முகமது சிராஜ் 14 பந்தில் 12 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கடைசி ஐந்து கடைநிலை வீரர்கள் 60 பந்துகளை சந்தித்தனர்.
சென்னை அணி சார்பில் ஜடேஜா 3 விக்கெட்டும் இம்ரான் தாஹிர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் முதலில் பேட்டிங் செய்யும் நிலையில், அந்த அணியில் அக்சார் பட்டேல் இணைந்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 20-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
டெல்லி அணியில் லலித் நீக்கப்பட்டு அக்சார் பட்டேல் சேர்க்கப்பட்டுள்ளார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் புவனேஷ்வர் குமார் இடம் பெறவில்லை.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி:
1. பிரித்வி ஷா, 2. ஷிகர் தவான், 3. ஸ்டீவ் ஸ்மித், 4. ரிஷப் பண்ட், 5. ஹெட்மையர், 6. ஸ்டாய்னிஸ், 7. அக்சார் பட்டேல், 8. ஆர்.அஷ்வின், 9. ரபடா, 10. அமித் மிஷ்ரா, அவேஷ் கான்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத்:
1. டேவிட் வார்னர், 2. பேர்ஸ்டோவ், 3. கேன் வில்லியம்சன், 4. விராட் சிங், 5. விஜய் சங்கர், 6. அபிஷேக் ஷர்மா, 7. கேதர் ஜாதவ், 8. ரஷித் கான், 9. ஜே. சுசித், 10. கலீல் அகமது, 11. சித்தார்த் கவுல்.
ஒரே ஓவரில் 37 ரன்கள் அடித்த அணி என்ற பெருமையை சிஎஸ்கே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிராக பெற்றுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 19-வது லீக் ஆட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.
19 ஓவர் முடிவில் சிஎஸ்கே 4 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்திருந்தது. 20-வது ஓவரை ஹர்சல் பட்டேல் வீசினார். ஜடேஜா இந்த ஓவரை எதிர்கொண்டார். முதல் இரண்டு பந்துகளையும் ஜடேஜா சிக்சருக்கு விளாசினார். 3-வது பந்தை ஹர்சல் பட்டேல் புல்டாஸாக இடுப்பிற்கு மேல் வீசினார். இந்த பந்தையும் சிக்சருக்கு தூக்கினார். அது நோ-பால் என அறிவிக்கப்பட்டது.

நோ-பாலுக்கு பதிலாக வீசிய பந்தையும் சிக்சருக்கு தூக்கினார். இதனால் தொடர்ந்து நான்கு பந்துகளையும் சிக்சருக்கு தூக்கினார். அடுத்த பந்தில் 2 ரன் எடுத்த ஜடேஜா, கடைசி பந்தையும் சிக்சருக்கு தூக்கினார். இதன் மூலம் ஒரே ஓவரில் 36 ரன்கள் விளாசினார். இதன்மூலம் கிறிஸ் கெய்ல் ஓரே ஓவரில் 36 ரன்கள் அடித்ததை சமன் செய்தார்.
கிறிஸ் கெய்ல் அதிரடியால் ஆர்சிபி ஒரே ஓவரில் 37 ரன்கள் எடுத்து, ஒரே ஓவரில் அதிக ரன்கள் அடித்த அணி என்ற பெருமையைப் பெற்றிருந்தது. தற்போது இந்த போட்டி மூலம் ஜடேஜா அதிரடியால் சிஎஸ்கே ஒரே ஓவரில் 37 ரன்கள் எடுத்து சாதனைப் படைத்துள்ளது.
தொடக்க ஜோடி 74 ரன்கள் சேர்க்க, டு பிளிஸ்சிஸ், ஜடேஜா அரைசதம் விளாச ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு 192 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.
ஐபிஎல் தொடரின் 19-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் டோனி பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி ருத்துராஜ் கெய்க்வாட், டு பிளிஸ்சிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.
இந்த ஜோடி 10-வது ஓவரின் முதல் பந்தில் பிரிந்தது. 9.1 ஓவரில் 74 ரன்கள் எடுத்திருக்கும்போது ருத்துராஜ் கெய்க்வாட் 25 பந்தில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து சுரேஷ் ரெய்னா களம் இறங்கினார். அவர் 18 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டு பிளிஸ்சிஸ் 40 பந்தில் அரைசதம் அடித்து, அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது சிஎஸ்கே 13.5 ஓவரில் 111 ரன்கள் எடுத்திருந்தது. இருவரின் விக்கெட்டையும் ஒரே ஓவரில் ஹர்சல் பட்டேல் வீழ்த்தினார்.

அதன்பின் சிஎஸ்கே-வின் ரன் குவிக்கும் உத்வேகத்தில் தடுமாற்றம் ஏற்பட்டது. ஜடேஜா டக்அவுட்டில் இருந்து தப்பித்து ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடினார். அம்பதி ராயுடு 7 பந்தில் 14 ரன்கள் எடுத்து ஹர்சல் பட்டேல் பந்தில் வீழந்தார். அப்போது சிஎஸ்கே 17.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்திருந்தது.
19-வது ஓவரை முகமது சிராஜ் வீசினார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 9 ரன்கள் அடித்தது. கடைசி ஓவரை ஹர்ஷல் பட்டேல் வீசினார். முதல் மூன்று பந்துகளையும் சிக்சருக்கு விளாசினார் ஜடேஜா. இதில் 3 பந்து நோ-பால் ஆகும். அதற்குப்பதிலாக வீசிய பந்திலும் சிக்ஸ் அடித்தார். அத்துடன் 26 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் அரைசதம் அடித்தார்.
ஐந்தாவது பந்தையும் சிக்சருக்கு தூக்கினார் ஜடேஜா. கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் 4 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்தது. கடைசி ஒவரில் ஜடேஜா 36 ரன்கள் விளாசினார். நோ-பாலில் ஒரு ரன் கிடைக்க ஹர்சல் பட்டேல் 37 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

ஜடேஜா 28 பந்தில் 4 பவுண்டரி, 5 சிக்சருடன் 62 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹர்சல் பட்டேல் 4 ஓவரில் 51 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.
தீபக் சாஹர் பந்தை சிக்சருக்கு தூக்கி, ஐபிஎல் கிரிக்கெட்டில் 200 சிக்சர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார் சிஎஸ்கே சின்ன தல சுரேஷ் ரெய்னா.
சென்னை - சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர் ருத்துராஜ் கெய்க்வாட் 10-வது ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து சுரேஷ் ரெய்னா களம் இறங்கினார். இந்த ஓவரின் கடைசி பந்தை லாங்-ஆன் திசையில் சிக்சருக்கு தூக்கினார்.
இந்த சிக்சர் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் 200 சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியில் சுரேஷ் ரெய்னா இணைந்துள்ளார். இந்திய வீரர்களில் ரோகித் சர்மா 222 சிக்சர்கள், எம்எஸ் டோனி 217 சிக்சர்கள், விராட் கோலி 204 சிக்சர்கள் அடித்துள்ளனர்.
இந்த போட்டியில் மேலும் 2 சிக்சர்கள் அடித்து 24 ரன்னில் ஆட்டம் இழந்தார். மொத்தம் 202 சிக்சர்கள் அடித்துள்ளார்.
ஜிம்பாப்வேவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் அரைசதம் அடித்த பாபர் அசாம், விராட் கோலியின் சாதனையையும் முறியடித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், கேப்டனுமான பாபர் அசாம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இன்று ஜிம்பாப்வே- பாகிஸ்தானுக்கு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் பாபர் அசாம் 52 ரன்கள் விளாசினார். அவர் 17 ரன்கள் அடித்தபோது 2000 ரன்களை தொட்டார். இது அவருக்கு 52-வது டி20 இன்னிங்ஸ் ஆகும். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 2000 ரன்களை கடந்த வீர்ர என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

இதற்கு முன் விராட் கோலி 56 இன்னிங்சில் 2000 ரன்கள் அடித்து முதலிடத்தில் இருந்தார். தற்போது பாபர் அசாம் அதை முறியடித்துள்ளார். ஆரோன் பிஞ்ச் 62 இன்னிங்சிலும், பிரெண்டன் மெக்கல்லம் 66 இன்னிங்சிலும், மார்ட்டின் கப்தில் 68 இன்னிங்சிலும் 2000 ரன்களை கடந்துள்ளனர்.
ஷுப்மான் கில் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை ஆலோசகர் டேவிட் ஹசி ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடஸ் அணியில் தொடக்க வீரராக ஷுப்மான் கில் களம் இறங்கி விளையாடி வருகிறார். இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கடைசி இடத்தில் உள்ளது. இனிவரும் 9 போட்டிகளும் அந்த அணிக்கு முக்கியமானவை.
கொல்கத்தா விளையாடி ஆறு போட்டிகளிலும் ஷுப்மான் கில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 19 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து தேவையில்லாமல் ரன்அவுட் ஆனார்.
அவர் மீது விமர்சனம் எழுந்துள்ள நிலையில், அந்த அணியின் தலைமை ஆலோசகர் டேவிட் ஹசி, ஷுப்மான் கில்லுக்கு ஆதரவாக உள்ளார். ஐபிஎல் தொடர் முடிவடையும்போது அதிக ரன்கள் அடித்தவர்களில் ஒருவராக இருப்பார் என்று தெரிவித்துள்ளார்.
‘‘ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அபாரமான விளையாடினார். வலைப்பயிற்சியில் அவர் பயிற்சி பெறுவதை பார்க்கும்போது மிகவும் சிறப்பானவர். பயிற்சிக்கான சிறந்த நெறிமுறையை பெற்றுள்ளார். அவருடைய கிளாஸ் பேட்டிங் அப்படியே இருக்கும். ஆடுகளத்திற்கு வெளியே தனிப்பட்ட சிறப்பாக இருக்கிறார். தனிப்பட்ட வீரராக இந்த ஐபிஎல் தொடர் முடிவடையும்போது அதிக ரன்கள் அடித்த வீரர்களில் ஒருவராக இருப்பார்’’ என்றார்.