என் மலர்
செய்திகள்

வார்னர், ரிஷப் பண்ட்
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் பேட்டிங் தேர்வு
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் முதலில் பேட்டிங் செய்யும் நிலையில், அந்த அணியில் அக்சார் பட்டேல் இணைந்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 20-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
டெல்லி அணியில் லலித் நீக்கப்பட்டு அக்சார் பட்டேல் சேர்க்கப்பட்டுள்ளார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் புவனேஷ்வர் குமார் இடம் பெறவில்லை.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி:
1. பிரித்வி ஷா, 2. ஷிகர் தவான், 3. ஸ்டீவ் ஸ்மித், 4. ரிஷப் பண்ட், 5. ஹெட்மையர், 6. ஸ்டாய்னிஸ், 7. அக்சார் பட்டேல், 8. ஆர்.அஷ்வின், 9. ரபடா, 10. அமித் மிஷ்ரா, அவேஷ் கான்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத்:
1. டேவிட் வார்னர், 2. பேர்ஸ்டோவ், 3. கேன் வில்லியம்சன், 4. விராட் சிங், 5. விஜய் சங்கர், 6. அபிஷேக் ஷர்மா, 7. கேதர் ஜாதவ், 8. ரஷித் கான், 9. ஜே. சுசித், 10. கலீல் அகமது, 11. சித்தார்த் கவுல்.
Next Story






