என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரித்வி ஷா, தவான்
    X
    பிரித்வி ஷா, தவான்

    மந்தமான சேப்பாக்கம் ஆடுகளத்தில் ஐதராபாத்துக்கு 160 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது டெல்லி

    பிரித்வி ஷா அதிரடியாக விளையாடி அரைசதம் அடிக்க, ரிஷப் பண்ட் 37 ரன்கள் எடுக்க சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 160 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது டெல்லி கேப்பிட்டல்ஸ்.
    டெல்லி கேப்பிட்டல்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் தொடரின் 20-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற டெல்லி பேட்டிங் தேர்வு செய்தது. தவான், பிரித்வி ஷா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    பிரித்வி ஷா தொடக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாடினார். மறுமுனையில் ஷிகர் தவான் ஆட்டத்தில் வேகமில்லை. அவர் 26 பந்தில் 28 ரன்கள் அடித்தார். பிரித்வி ஷா அரைசதம் அடித்து 39 பந்தில் 53 ரன்கள் விளாசி ரன்அவுட் ஆனார்.

    11.4-வது ஓவரில் ரிஷப் பண்ட், ஸ்டீவ் ஸ்மித் இணைந்தனர். சேப்பாக்கம் ஆடுகளம் அதனது தன்மையை காட்ட இருவரும் ரன்கள் அடிக்க திணறினர். ரிஷப் பண்ட் 27 பந்தில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹெட்மையர் 1 ரன்னில் வெளியேறினார்.

    ரிஷப் பண்ட்

    கடைசி ஓவரில் கடும்பாடுபட்ட ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடிக்க டெல்லி அணிக்கு 14 ரன்கள் கிடைத்தது. இதனால் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் அடித்துள்ளது. ஸ்மித் 25 பந்தில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    Next Story
    ×