என் மலர்tooltip icon

    விளையாட்டு

    உலக கோப்பை போட்டியின் ரிகர்வ் பிரிவில் இந்தியா 3 தங்கப்பதக்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும்.
    குடெமலா சிட்டி:

    உலக கோப்பை வில்வித்தை போட்டி (நிலை 1) குடெமலாவில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான ‘ரிகர்வ்’ தனிநபர் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி 7-3 என்ற கணக்கில் மெக்சிகோவின் அலிஜான்ட்ரா வாலென்சியாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். உலக கோப்பை போட்டியில் தனிநபர் பிரிவில் அவர் வென்ற 3-வது தங்கம் இதுவாகும். ஆண்களுக்கான தனிநபர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய வீரர் அதானு தாஸ் 6-4 என்ற கணக்கில் ஸ்பெயினின் டேனியல் கேஸ்ட்ரோவை தோற்கடித்து முதல்முறையாக தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் அதானு தாஸ், தீபிகா குமாரி ஆகியோர் இந்த ஆண்டுக்கான உலக கோப்பை இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றனர். இந்த ஜோடி கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இல்வாழ்க்கையில் இணைந்தது நினைவிருக்கலாம்.

    அதானு தாஸ்- தீபிகா குமாரி


    பெண்களுக்கான அணிகள் பிரிவில் தீபிகா குமாரி, அங்கிதா பாகத், கோமாலிகா பாரி ஆகியோர் அடங்கிய இந்திய அணி 5-4 என்ற கணக்கில் மெக்சிகோவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கியது. கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அதானு தாஸ், அங்கிதா பாகத் ஜோடி 6-2 என்ற கணக்கில் அமெரிக்க ஜோடியை தோற்கடித்து வெண்கலப்பதக்கம் வென்றது. உலக கோப்பை போட்டியின் ரிகர்வ் பிரிவில் இந்தியா 3 தங்கப்பதக்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும்.
    திரிபாதி 41 ரன்கள் அடிக்க, கேப்டன் மார்கன் பொறுப்புடன் ஆடி 47 ரன்கள் சேர்க்க கொல்கத்தா 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாபை வீழ்த்தியது.
    அகமதாபாத்:

    ஐபிஎல் தொடரின் 21-வது லீக் ஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் பஞ்சாப் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

    இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் மோர்கன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    மயங்க் அகர்வால்

    கேஎல் ராகுல் 19 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கிறிஸ் கெய்ல் டக் அவுட்டானார். கிறிஸ் ஜோர்டான் 18 பந்தில் 30 ரன்கள் அடிக்க பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் சேர்த்தது. மயங்க் அகர்வால் அதிகபட்சமாக 31 ரன்கள் சேர்த்தார்.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சார்பில் பேட் கம்மின்ஸ் 2 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டும், சுனில் நரைன் 2 விக்கெட்டும், வருண் சக்ரவர்த்தி 1 விக்கெட்டும் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான நிதிஷ் ரானா டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். ஷுப்மான் கில் 9 ரன்னில் வெளியேறினார்.
    அடுத்து வந்த சுனில் நரேன்டக் அவுட்டானார்.

    ஓரளவு பொறுப்புடன் ஆடிய ராகுல் திரிபாதி 41 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து இறங்கிய கேப்டன் மார்கன் சிறப்பாக விளையாடி 47 ரன்னுடன் அவுட்டாகாமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதன்மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

    இறுதியில், கொல்கத்தா அணி 16.4 ஓவரில் 126 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இது கொல்கத்தா பெற்ற இரண்டாவது வெற்றி ஆகும். பஞ்சாப் அணி பெற்ற 4வது தோல்வி ஆகும்.
    பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ரன்கள் குவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் விளையாடி விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
    ஐபிஎல் தொடரின் 21-வது லீக் ஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பஞ்சாப் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் மோர்கன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கேஎல் ராகுல் 19 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கிறிஸ் கெய்ல் முதல் பந்திலேயே வெளியேறினார். இவரது விக்கெட்டை ஷிவம் மாவி வீழ்த்தினார்.

    அதன்பின் சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி ஆகிய சுழற்பந்து வீச்சாளர்கள் கட்டுக்கோப்பாக பந்து வீச, கிறிஸ் ஜோர்டான் 18 பந்தில் 30 ரன்கள் அடிக்க பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் சேர்த்தது. மயங்க் அகர்வால் அதிகபட்சமாக 31 ரன்கள் சேர்த்தார்.

    ஜேரர்டான்

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பில் பேட் கம்மின்ஸ் 2 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டும், சுனில் நரைன் 2 விக்கெட்டும், வருண் சக்ரவர்த்தி 1 விக்கெட்டும் வீழ்த்தினார். சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி இருவரும் 8 ஓவர்களில் 46 ரன்களே விட்டுக்கொடுத்தனர்.
    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படாத நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஜோர்டான் சேர்க்கப்பட்டுள்ளார்.
    ஐபிஎல் தொடரின் 21-வது லீக் ஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது. இதில் பஞ்சாப் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் மோர்கன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    பஞ்சாப் கிங்ஸ் அணி:

    1. கேஎல் ராகுல், 2. மயங்க் அகர்வால், 3. கிறிஸ் கெய்ல், 4. ஹென்ரிக்ஸ், 5. நிக்கோலஸ் பூரன், 6. தீபக் ஹூடா, 7. ஷாருக் கான், 8. ஜோர்டான், 9. பிஷ்னோய், 10 முகமது ஷமி, 11. அர்ஷ்தீப் சிங்.

    கொல்கத்தா அணி

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி:

    1. நிதிஷ் ராணா, 2. ஷுப்மான் கில், 3. ராகுல் திரிபாதி, 4. மோர்கன், 5. தினேஷ் கார்த்திக், 6. சுனில் நரைன், 7. அந்த்ரே ரஸல், 8. பேட் கம்மின்ஸ், 9. ஷிவம் மாவி, 10. வருண் சக்ரவர்த்தி, 11. பிரசித் கிருஷ்ணா.
    இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் ஆஸ்திரேலிய வீரர்கள் மூன்று பேர் சொந்த நாடு திரும்பியுள்ளனர்.
    ஐபிஎல் 2021 டி20 கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் நடைபெற்று வருகின்றன. கடந்த 9-ந்தேதி ஐபிஎல் தொடர் தொடங்கியது. கடந்த 15 நாட்களில் இந்தியாவில் கொரோனா தொற்று மிகத்தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் தினந்தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 3.5 லட்சத்தை தாண்டிய வண்ணம் உள்ளது.

    இதனால் பெரும்பாலான நாடுகள் இந்தியா உடனான விமான போக்குவரத்தை துண்டித்துள்ளது. இந்தியாவில் இருந்து வரும் சொந்த நாட்டினருக்கே கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு வாரங்கள் இந்தியாவிற்கு கடும் சோதனைக் காலம் எனத் வல்லுனர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்களுக்கென ‘பயோ-பபுள்’ பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வளையத்திற்குள் வந்து விட்டால் தொடர் முடியும் வரை வெளியேற முடியாது. மைதானத்தில் இருந்து ஓட்டல், ஓட்டலில் இருந்து மைதானம் ஆகியவற்றிற்கு மட்டுமே அனுமதி.

    வீரர்களை சந்திக்க நேரிடும் அனைவரும் பயோ-பபுள் வளையத்திற்குள் வந்துவிடுவார்கள். அதேசமயம் சுதந்திரம் வேண்டும் என நினைப்பவர்களுக்கு இது கடினமானதாகும். ஆஸ்திரேலியாவின் ஆண்ட்ரூ டை தொடர்ந்து பயோ-பவுள் வளையத்திற்குள் இருக்க முடியாது எனக் கூறி தொடரில் இருந்து விலகினார்.

    இந்திய வீரர் அஷ்வின், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெற்றோரை கவனிக்க வேண்டும் என ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். இதனைத் தொடர்ந்து ஆர்சிபி அணியில் இடம் பிடித்திருந்த ஆடம் ஜம்பா, கேன் ரிச்சர்ட்சன் ஆகியோர் சொந்த நாடு திரும்ப முடிவு செய்துள்ளனர். சொந்த காரணத்திற்கான சொந்த நாடு திரும்புகிறோம் என்றாலும், இந்தியாவில் கொரோனா அதிகரிப்பு, ஆஸ்திரேலியாவில் கட்டுப்பாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு செல்வதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்திருக்கும் நாதன் கவுல்டர்-நைல், இந்த தருணத்தில் சொந்த நாடு திரும்புவதை விட பயோ-பபுள் சிறந்தது என்று தெரிவித்துள்ளார்.

    ஆண்ட்ரூ டை

    இதுகுறித்து நாதன் கவுல்டர்-நைல் கூறுகையில் ‘‘ஆண்ட்ரூ டை, ஜம்பா, கேன் ரிச்சர்ட்சன் சொந்த நாடு திரும்புவதை பார்க்க ஆச்சர்யமாக உள்ளது. ஆனால், அவர்களிடம் நீங்கள் பேசினால், அவர்கள் ஏன் திரும்புகிறார்கள் என்பதை புரிந்து கொள்வீர்கள். ஆடம் ஜம்பாவிடம் பேசும்போது, நாடு திரும்புவதற்கான தகுந்த காரணத்தை தெரிவித்தார். ஆனால், என்னைப் பொறுத்தவரைக்கும் இந்த நேரத்தில் சொந்த நாடு திரும்புவதை விட பயோ-பபுள் சிறந்தது என உணர்கிறேன்’’ என்றார்.
    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் பிரதமர் கேர்ஸ்க்கு நன்கொடை வழங்கியுள்ளார்.
    இந்தியாவில் கொரோனா 2-வது அலை சூறாவளியாக அடித்து வருகிறது. இந்த சூறாவளியில் அப்பாவி பொதுமக்கள் கொத்துகொத்தாக சிக்கியுள்ளனர். இதனால் மருத்துவமனைகளில் இடம் இல்லாமலும், அவரச உதவிக்கு முக்கியமான ஆக்சிஜன் கிடைப்பதிலும் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    மருத்துவனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மக்கள் உயிரிழந்து வரும் துயரமான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் பல நாடுகள் இந்தியாவிற்கு ஆக்சிஜன் வழங்க உதவிக்கரம் நீட்டியுள்ளன.

    பேட் கம்மின்ஸ்

    இந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ், ஆக்சிஜன் வாங்கி சப்ளை செய்வதற்காக, அவரால் முடிந்த அளவிற்கு 50 ஆயிரம் அமெரிக்கா டாலர் (இந்திய பண மதிப்பில் ரூ. 37,36,590.00) பிரதமர் கேர்ஸ் நிதிக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். மேலும், ஐபிஎல் போட்டியில் விளையாடும் மற்ற வீரர்களையும் அவர்களால் முடிந்த உதவிகளை செய்ய வலியுறுத்தியுள்ளார்.

    அத்துடன், இக்கட்டான நிலையில் ஏன் கிரிக்கெட் விளையாட்டு என நினைக்கலாம். ஆனால் மக்கள் வீட்டிற்குள்ளே முடங்கிக் கிடக்கும் நிலையில், கிரிக்கெட் அவர்களுக்கு சந்தோசத்தை அளிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க பேட்ஸ்மேன் தவான் ஐந்து போட்டிகளில் 259 ரன்கள் விளாசி, ஆரஞ்ச் தொப்பியை தன்வசம் வைத்துள்ளார்.
    ஐபிஎல் 2021 சீசனில் இதுவரை ஐந்து போட்டிகள் நடைபெற்றுள்ளன. ஐந்து போட்டிகள் முடிவில் பேட்டிங்கில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் 259 ரன்கள் விளாசி ஆரஞ்ச் தொப்பியை தன்வசம் வைத்துள்ளார். இரண்டு முறை அரைசதம் விளாசியுள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 92 ஆகும்.

    பஞ்சாப் கிங்ஸ் கேப்டனும், தொடக்க பேட்ஸ்மேனுமான கேஎல் ராகுல் ஐந்து போட்டிகளில் 221 ரன்கள் அடித்து 2-வது இடத்தில் உள்ளார். அதிகபட்சமாக 91 ரன்கள் அடித்துள்ளார். இரண்டு அரைசதம் அடித்துள்ளார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் டு பிளிஸ்சிஸ் ஐந்து போட்டிகளில் 214 ரன்கள் அடித்து 3-வது இடத்தில் உள்ளார். அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 95 ரன்கள் அடித்துள்ளார். 3 அரைசதம் விளாசியுள்ளார்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பேர்ஸ்டோ ஐந்து போட்டிகளில் 211 ரன்கள் அடித்து 4-வது இடத்தில் உள்ளார். இவரும் இரண்டு அரைசதம் அடித்துள்ளார்.

    மும்பை இந்தியன்ஸ் தொடக்க வீரர் ரோகித் சர்மா 201 ரன்களுடன் 5-வது இடத்திலும், ஆர்சிபியின் மேக்ஸ்வெல் 198 ரன்களுடனும் 6-வது இடத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சஞ்சு சாம்சன் 187 ரன்களுடன் 7-வது இடத்திலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நிதிஷ் ராணா 186 ரன்களுடன் 8-வது இடத்திலும், தேவ்தத் படிக்கல் 171 ரன்களுடன் 9-வது இடத்திலும், பிரித்வி ஷா 166 ரன்களுடன் 10-வது இடத்திலும் உள்ளனர்.

    ஹர்சல் பட்டேல்

    பந்து வீச்சில் ஆர்சிபி வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் 5 போட்டிகளில் 15 விக்கெட்டுகள் வீழ்த்தி பர்பிள் தொப்பியை தன்வசம் வைத்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ் வேகப்பந்து வீச்சாளர் அவேஷ்  கான் 11 விக்கெட்டுடன் 2-வது இடத்திலும், ராகுல் சாஹல், கிறிஸ் மோரிஸ் தலா 9 விக்கெட்டுகள் வீழ்த்தி முறையே 3-வது மற்றும் 4-வது இடங்களை பிடித்துள்ளனர்.

    தீபக் சாஹர் 8 விக்கெட்டுடன் 5-வது இடத்திலும், சேத்தன் சகாரியா 7 விக்கெட்டுடன் 6-வது இடத்திலும், அந்த்ரே ரஸல் 7 விக்கெட்டுடன் 7-வது இடத்திலும் ரஷித் கான், அர்ஷ்தீப் சிங், டிரென்ட் போல்ட் ஆகியோர் தலா 6 விக்கெட்டுடன் 8 முதல் 10 வரையிலான இடங்களை பிடித்துள்ளனர்.
    ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் 5 போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று ரன்ரேட் அடிப்படையில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
    ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த 9-ந்தேதி தொடங்கியது. சென்னை, மும்பை வான்கடேயில் முதல்கட்ட போட்டிகள் நடைபெற்றன. இதுவரை 8 அணிகளும் தலா ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ளன.

    முதல் நான்கு போட்டிகளில் ஆர்சிபி தொடர்ந்து வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடித்திருந்தது. நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக 69 ரன் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ், ஆர்சிபி அணிகள் தலா நான்கு வெற்றிகள் பெற்றன. இதற்கிடையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை சூப்பர் ஓவரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் வீழ்த்தியது. இதனால் டெல்லி அணியியும் ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்றுள்ளது.

    ஆர்சிபி

    மூன்று அணிகள் 8 புள்ளிகள் பெற்ற நிலையில், அடிப்படையில் சென்னை சூப்பர் கிங்ஸ் (+1.612) முதலிடம் பெற்றுள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் (+0.334) 2-வது இடத்தையும், ஆர்சிபி (+0.096) 3-வது இடத்தையும் பிடித்துள்ளது.

    மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தலா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. மூன்று அணிகளுக்கிடையிலா ரன்ரேட் அடிப்படையில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் முறையே 4 முதல் 6 இடங்களை பிடித்துள்ளன.

    டெல்லி கேப்பிட்டல்ஸ்

    சன்ரைசர்ஸ் ஐந்தில் ஒரு வெற்றி மட்டுமே பெற்று 7-வத இடத்திலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐந்தில் ஒரு வெற்றி பெற்று கடைசி இடத்திலும் உள்ளன.
    ஐபிஎல் தொடரில் இருந்து முன்னணி வீரர்களின் அடுத்தடுத்த விலகி வருவது கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
    மும்பை:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆடம் ஜம்பா, கேன் ரிச்சர்டுசன் ஆகியோர் விலகுவதாக அறிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பெற்றுள்ளனர்.

    தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஎல்  தொடரில் இருந்து விலகுவதாக இருவரும் விளக்கம் அளித்துள்ளனர். அண்மையில் தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்று இருந்த ஆண்ட்ரூ டை ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார். 

    ஐபிஎல் தொடரில் இருந்து முன்னணி வீரர்களின் அடுத்தடுத்த விலகி வருவது கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. 

    கிறிஸ் கெய்ல் 2011-ம் ஆண்டில் ஒரே ஓவரில் 36 ரன்கள் எடுத்திருந்த சாதனையை தற்போது சிஎஸ்கே அணியின் ஆல் ரவுண்டர் ஜடேஜா சமன் செய்துள்ளார்.

    மும்பை:

    ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 69 ரன் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை மிகவும் எளிதாக வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்தது.

    இந்த போட்டியில் ஜடேஜாவின் ஆல்ரவுண்டர் பணி மிகவும் அபாரமாக இருந்தது. பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என 3 துறையிலும் சிறப்பாக செயல்பட்டார்.

    5-வது வீரராக களம் இறங்கிய ஜடேஜா 28 பந்தில் 62 ரன் எடுத்தார். இதில் 4 பவுண்டரிகளும், 5 சிக்சர்களும் அடங்கும்.

    ஹர்‌ஷல் படேல் வீசிய ஆட்டத்தின் கடைசி ஓவரை ஜடேஜா முற்றிலும் மாற்றினார். அந்த ஓவரில் மட்டும் நோ பால் உட்பட 37 ரன் கிடைத்தது. ஜடேஜா 36 ரன்கள் (6,6,6,6,2,6,4) விளாசி புதிய சாதனை படைத்தார்.

    இதற்கு முன்பு கிறிஸ் கெய்ல் 2011-ம் ஆண்டில் ஒரே ஓவரில் 36 ரன்கள் (6,6,4,4,6,6,4) ரன்கள் விளாசினார். அதை ஜடேஜா தற்போது சமன் செய்துள்ளார்.

    பேட்டிங்கில் அதிரடியை வெளிப்படுத்திய ஜடேஜா பந்துவீச்சிலும் சாதித்தார். அவர் 13 ரன் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். அதிரடி பேட்ஸ்மேன்களான மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரை அவுட் செய்தார்.

    அதோடு கிறிஸ்டியனை ரன் அவுட் செய்தார்.

    ஜடேஜாவின் ஆட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி வெகுவாக பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஜடேஜா எப்போதுமே ஆட்டத்தை மாற்றுபவர். அவர் தனது சொந்த ஆட்டத்தையே மாற்றக்கூடியவர். ஒருசில ஆண்டுகளாகவே அவர் பேட்டிங்கில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை கொண்டுள்ளார் என்பதை நாங்கள் அறிவோம்.

    இவ்வாறு டோனி கூறினார்.

    ஆட்ட நாயகன் விருது பெற்ற ஜடேஜா கூறியதாவது:-

    பொதுவாக ஆல்ரவுண்டராக இருப்பது கடினமானது. ஏனெனில் அனைத்து பிரிவுகளிலும் சிறந்து விளங்கவேண்டும். பயிற்சியின்போது 3 பிரிவிலும் கவனம் செலுத்த மாட்டேன்.

    பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என இதில் ஏதாவது ஒன்றில் மட்டும் பயிற்சி செய்வேன். ஆட்டத்தின் கடைசி ஓவரில் எனக்கு டோனி நம்பிக்கை அளித்தார். ஹர்‌ஷல் படேல் ‘அவுட் சைடு ஆப்’ திசையில்தான் பந்து வீசுகிறார். தைரியமாக விளாசு என்றார்.

    அதிர்ஷ்டவசமாக அனைத்தும் சிக்சர்களாக மாறியது. தொடக்கத்தில் நான் கொடுத்த கேட்சை பிடித்திருந்தால் எனது நாளாக அமைந்திருக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சி.எஸ்.கே. 6-வது ஆட்டத்தில் ஐதராபாத்தை 28-ந் தேதி டெல்லியில் எதிர்கொள்கிறது. பெங் களூர் அணி 27-ந் தேதி டெல்லியுடன் (அகமதாபாத்) மோதுகிறது.

    ஐ.பி.எல். போட்டியில் சென்னை, மும்பையில் நேற்றுடன் ஆட்டங்கள் முடிந்தது. இனி டெல்லி, அகமதாபாத்தில் போட்டிகள் நடைபெறுகின்றன. 

    ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டது.

    மும்பை:

    ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டது.

    அந்த அணி குறிப்பிட்ட நேரத்தில் பந்தை வீசி முடிக்கவில்லை. இதனால் மெதுவாக பந்து வீசியதற்காக பெங்களூர் அணி மீது ஐ.பி.எல். விதிமுறைப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மெதுவாக பந்து வீசியதற்காக பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி, மும்பை இந்தியன் கேப்டன் ரோகித் சர்மா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் மார்கன் ஆகியோர் மீது இதே நடவடிக்கைக்காக தலா ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    2021, ஐபிஎல் டி20 தொடரிலிருந்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளருமான அஸ்வின் விலகியுள்ளார்.
    சென்னை:

    2021, ஐபிஎல் டி20 தொடரிலிருந்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளருமான அஸ்வின்  விலகியுள்ளார். கொரோனா வைரஸ் பரவலின்போது குடும்பத்துடன் இருக்கவேண்டிய அவசியம் இருப்பதால் விலகியதாக அஸ்வின் தெரிவித்துள்ளார். அதேநேரம், சூழல் நல்லபடியாக மாறினால், நான் அணிக்குள் மீண்டும் வருவேன் என்றும் அஸ்வின் தெரிவித்துள்ளார். 

    சக வீரர்களுடன் அஸ்வின்

    இது தொடர்பாக டுவிட்டரில் அஸ்வின் கூறியிருப்பதாவது “ 2021 ஐபிஎல் தொடரிலிருந்து நாளை முதல் நான் விடைபெற்றுக் கொள்கிறேன். கொரோனா வைரஸுக்கு எதிராக என்னுடைய குடும்பத்தார் போராடி வரும் நிலையில் இந்த நேரத்தில் அவர்களுக்காக இந்த கடினமான நேரத்தில் உடன் இருப்பது அவசியம். அனைத்தும் சரியான திசையில் சென்றால் நான் மீண்டும் அணியில் சேர்வேன் என எதிர்பார்க்கிறேன்” எனப்பதிவிட்டுள்ளார். 

    இந்த கடினமான தருணத்தில் அஸிவினுக்கு முழு ஆதரவு அளிப்பதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்வாகமும் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளது. 
    ×