search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹர்ஷல் பட்டேல்"

    இந்தியாவின் ஐந்து பந்து வீச்சாளர்களும் விக்கெட் வீழ்த்த, நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் சிறப்பான தொடக்கத்தை சரியாக பயன்படுத்த தவறினர்.
    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் முகமது சிராஜ் நீக்கப்பட்டு ஹர்ஷல் பட்டேல் சேர்க்கப்பட்டார்.

    நியூசிலாந்து அணியின் மார்ட்டின் கப்தில், டேரில் மிட்செல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார். முதல் இரண்டு பந்துகளையும் அடுத்தடுத்து பவுண்டரிக்கு விரட்டி ரன் கணக்கை தொடங்கி வைத்தார் மார்ட்டின் கப்தில். கடைசி பந்தில் மேலும் ஒரு பவுண்டரி அடிக்க, நியூசிலாந்து அணிக்கு முதல் ஓவரில் 14 ரன்கள் கிடைத்தது.

    2-வது ஓவரில் 10 ரன்கள் அடித்தது. இதனால் 3-வது ஓவரிலேயே ரோகித் சர்மா சுழற்பந்து வீச்சை கொண்டு வந்தார். அந்த ஓவரில் நியூசிலாந்து 5 ரன்கள் அடித்தாலும், புவனேஷ்வர் குமார் வீசிய 4-வது ஓவரில் 13 ரன்கள் அடித்தது. அடுத்த ஓவரை தீபக் சாஹர் வீசினார். இந்த ஓவரில் முதல் பந்தை சிக்சருக்கு தூக்கிய கப்தில், அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். நியூசிலாந்து அணி முதல் விக்கெட்டுக்கு 4.2 ஓவரில் 48 ரன்கள் குவித்தது.

    அடுத்து வந்த சாப்மேன் 17 பந்தில் 21 ரன்கள் எடுத்து வெளியேறினார். மறுமுனையில் விளையாடிய மிட்செல் 28 பந்தில் 31 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதன்பின் நியூசிலாந்து அணியால் அதிரடியாக விளையாட முடியவில்லை. கிளென் பிலிப்ஸ் மட்டும் 21 பந்தில் 34 ரன்கள் சேர்த்தார்.

    அஸ்வின்

    இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் சேர்த்தது நியூசிலாந்து. இந்திய அணியில் அறிமுகமான ஹர்ஷல் பட்டேல் 4 ஓவரில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.

    புவனேஷ்வர் (39 ரன்), தீபக் சாஹர் (42 ரன்), அக்சார் பட்டேல் (26 ரன்), அஸ்வின் (19 ரன்) ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
    முகமது சிராஜ் காயம் காரணமாக இடம் பெறாத நிலையில், ஐ.பி.எல். தொடரில் அசத்திய ஹர்ஷல் பட்டேலுக்கு அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.
    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நடக்கிறது. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    இந்திய அணியில் முகமது சிராஜ் நீக்கப்பட்டு ஹர்ஷல் பட்டேல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த போட்டியில் வெற்றி பெற்றால், மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-0 எனக் கைப்பற்றும்.

    இந்திய அணி விவரம்:

    1. கே.எல். ராகுல், 2, ரோகித் சர்மா, 3. சூர்யகுமார் யாதவ், 4. ரிஷாப் பண்ட், 5. ஷ்ரேயாஸ் அய்யர், 6. வெங்கடேஷ் அய்யர், 7. அக்சார் பட்டேல், 8. அஸ்வின், 9. புவனேஷ்வர் குமார், 10. தீபக் சாஹர், 11. ஹர்சல் பட்டேல்.

    நியூசிலாந்து அணி விவரம்:

    1. மார்ட்டின் கப்தில், 2. டேரில் மிட்செல், 3. மார்க் சாப்மேன், 4. கிளென் பிலிப்ஸ், 5. டிம் செய்பெர்ட், 6. ஜேம்ஸ் நீஷம், 7. இஷ் சோதி, 8. மிட்செல் சான்ட்னர், 9. டிம் சவுத்தி, 10. ஆடம் மில்னே, 11. டிரென்ட் பவுல்ட்.
    ×