என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உடனடியாக ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்ற கேன் ரிச்சர்ட்சனுக்குப் பதிலாக புதிய வீரரை அணியில் சேர்த்துள்ளது ஆர்சிபி.
    இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஆஸ்திரேலியா விமான போக்குவரத்திற்கு தடைவிதித்துள்ளது. மேலும் எல்லைகளை மூடும் நிலையில் உள்ளது. இதனால் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆண்ட்ரூ டை, ஆடம் ஜம்பா, கேன் ரிச்சர்ட்சன் ஆகியோர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகி சொந்த நாடு புறப்பட்டனர்.

    இதில் ஆடம் ஜம்பா, கேன் ரிச்சர்ட்சன் ஆகியோர் ஆர்சிபி அணியில் இடம் பிடித்திருந்தனர். சொந்த காரணத்திற்காக ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக தெரிவித்தனர்.

    இந்த நிலையில் நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான ஸ்காட் குகெலெஜின்-ஐ ரிச்சர்ட்சனுக்கு மாற்று வீரராக அணியில் சேர்த்துள்ளது.

    கேன் ரிச்சர்ட்சன்

    குகெலெஜின் மும்பை இந்தியன்ஸ் அணியின் நெட் பவுலராக உள்ளார். தற்போது அவரும் பயோ-பபுள் வளையத்திற்குள்தால் இருக்கிறார். இதனால் மும்பை இந்தியன்ஸ் பயோ-பபுள் வளையத்தில் இருந்து ஆர்ச்சி பயோ-பபுள் வளையத்திற்குள் வந்துள்ளார். வருவதற்கு முன்பு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் நெகட்டிவ் முடிவு வந்ததாக ஆர்சிபி அணி தெரிவித்துள்ளார்.

    ஆர்சிபி அணியில் நியூசிலாந்தை சேர்ந்த கைல் ஜேமிசன் தொடர்ந்து ஆடும் லெவன் அணியில் இடம் பிடித்து விளையாடி வருகிறார்.
    சென்னை சூப்பர் கிங்ஸ் பல சீசனுக்குப் பிறகு தொடர்ந்து ஐந்து போட்டிகளில் வெற்றி பெறும் ஆர்வத்தில் உள்ளது.
    சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை வான்கடேயில் ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்ற நிலையிலும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் மந்தமான சென்னை ஆடுகளத்தில் ஐந்து போட்டிகளில் நான்கில் தோல்வியடைந்த நிலையில் இரு அணிகளும் டெல்லியில் முதன்முதலாக சந்திக்க இருக்கின்றன.

    புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் இடத்திலும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் கடைசி இடத்திலும் உள்ளன.

    பேட்டிங்கிற்கு சாதகமான வான்கடே ஆடுகளத்தில் எங்களால் சிறப்பாக பந்து வீசவும் முடியும் என நிரூபித்துக் காட்டியது சென்னை சூப்பர் கிங்ஸ்.

    கடைசியாக மோதிய ஆர்சிபி-க்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங்கில் சற்று திணறினாலும், கடைசி ஓவரில் ஜடேஜா ஐந்து சிக்சர்களுடன் 37 ரன்கள் (நோ-பால் ஒருரன்) விளாசியதன் மூலம் 191 ரன்கள் குவித்தது. இதன்மூலம் எங்கள் அணி வீரர்களால் கடைசி வரை பேட்டிங் செய்ய முடியும் என்பதை எதிரணிகளுக்கு கம்பீரமாக எச்சரித்துள்ளது.

    பவர் பிளே-யில் தீபக் சாஹர் 2 ஓவரில் 25 ரன்கள் விட்டுக்கொடுக்க, இது என்னடா சோதனை? என நினைப்பதற்குள் சுட்டிப்பையன் சாம் கர்ரன் ஆர்சிபி-யின் முதுகெலும்பான விராட் கோலியை 4-வது ஓவரிலேயே வீழ்த்தி பிள்ளையார் சுழி போட்டார். இதுவரை கண்ணில் படாத ஷர்துல் தாகூர் அபாயகரமான தேவ்தத் படிக்கல்லை வீழ்த்தி கூடுதல் பலம் சேர்த்தார்.

    சிஎஸ்கே அணி

    அதன்பின் ஜடேஜா (3), இம்ரான் தாஹிர் (2) சுழல் மாயாஜாலத்தில் ஆர்சிபி பேட்ஸ்மேன்கள் சிக்க சென்னை அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. பேட்டிங், பந்து வீச்சு, பீ்ல்டிங் என மூன்று துறைகளிலும் ஜடேஜா, சிஎஸ்கே-வுக்கு 3 வீரர்களுக்கு சமமானவராக திகழ்கிறார். இதனால் எதிரணிகள் 13 பேரை எதிர்த்து விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

    வான்கடே மைதானத்திற்கு அப்படியே எதிரானது டெல்லி பெரோஷ் ஷா கோட்லா (அருண் ஜெட்லி). இந்த மைதானம் சற்று மந்தமானது (ஸ்லோ). பந்து பிட்ச் ஆகி பேட்டிற்கு உடனடியாக வராது. இதனால் பேட்ஸ்மேன்கள் திணறக்கூடும். ஆனால் சேப்பாக்கம் மைதான ஆடுகளங்களை போன்று இருப்பதால், விளையாடிய அனுபவம் சிஎஸ்கே வீரர்களுக்கு உண்டு என்பதால், உடனடியாக அதற்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்வார்கள்.

    ஓபனிங் பேட்டிங்கில் டு பிளிஸ்சிஸ் சென்னை அணிக்கு பலமாக இருந்து வருகிறார். முதல் போட்டியை தவிர்த்து மற்ற நான்கு போட்டிகளிலும் (36, 33, 95, 50) துணாக இருந்துள்ளார். ருத்துராஜ் ஃபார்முக்கு திரும்பியிருப்பது சாதகம்.

    டு பிளிஸ்சிஸ் ஒவ்வொரு போட்டியிலும் அசத்தி வருவதால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய வேலை இல்லை. ஆர்சிபி-க்கு எதிராக அம்பதி ராயுடன் உடல் நலம் சரியில்லாத போன்று தோன்றினார் ஒருவேளை அவர் களம் இறங்க முடியவில்லை என்றால் மாற்று பேட்ஸ்மேனுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

    பந்து விச்சை பொறுத்த வரையில் தீபக் சாஹர் இரண்டு போட்டிகளில் மட்டுமே தலா நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இந்த இரண்டு போட்டிகளிலும் எதிரணியை சிஎஸ்கே குறைந்த ரன்னில் சுருட்டியுள்ளது. அவர் தொடர்ச்சியாக எல்லா போட்டிகளிலும் விக்கெட் வீழ்த்த வேண்டியது அவசியம்.


    எப்போதெல்லாம் அணிக்கு நெருக்கடி வருகிறதோ, அப்போதெல்லாம் கைக்கொடுக்க நம்ம சுட்டிப்பையன் சாம் கர்ரன் உள்ளார். கொல்கத்தாவிற்கு எதிராக அந்த்ரே ரஸல் ருத்ரதாண்டவம் ஆடிய நிலையில், அவரை க்ளீன் போல்டாகி போட்டியை சிஎஸ்கே பக்கம் திருப்பினார். அதேபோல்தான் ஆர்சிபிக்கு எதிராக கோலி விக்கெட்டை வீழ்த்தி கொடுத்தார்.

    பந்து வீசும்போது ஆடுகளத்தில் க்ரிப் கிடைத்தால் சுழற்பந்து வீச்சில் ஜடேஜா வல்லவராக திகழ்வார். அதேபோல் இம்ரான் தாஹிரும் அசத்துவார். கடந்தபோட்டியில் மொயீன் அலி ஆடவில்லை. இதனால் தாஹிருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஹூக்ளி, லெக் ஸ்பின் என அசத்தி 2 விக்கெட் வீழ்த்தினார். இருவரில் ஒருவர்தான் களம் இறங்க முடியும். மொயீன் அலி களம் இறங்கினால் பேட்டிங் கூடுதல் வலுப்பெறும். தாஹிர் களம் இறங்கினால் பந்து வீச்சு கூடுதல் வலுப்பெறும்.

    அதிரடி (டெத் ஓவர்கள்) ஓவர்களில் பிராவோவிற்கு இன்னும் சரியாக பந்து வீசும் வேலை வரவில்லை. அதற்காக அவர் காத்திருக்கிறார். ஒட்டுமொத்தத்தில் டெல்லியிலும் சிஎஸ்கே விசில் போட வைக்கும்.

    அப்பாடா... இப்படி ஒரு மந்தமான ஆடுகளத்தை பார்த்ததே இல்லை எனக் கூறி ஐந்து போட்டிக்குப்பிறகு வேறு இடம் வந்துள்ளது சன்ரைசர்ஸ் ஐதாராபாத்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி

    முதல் மூன்று போட்டிகளில் தோல்வியடைந்த பிறகு, கேன் வில்லியம்சன் களம் இறங்க 4-வது போட்டியில் வெற்றி பெற்றது. கடைசியாக டெல்லிக்கு எதிராக 160 இலக்கை நோக்கி செல்லும்போது, தனி ஒருவனாக போராடினார். இருந்தாலும் போட்டியை வெற்றி பெற வைக்க முடியவில்லை. ஆட்டம் ‘டை’ ஆகி, பிறகு சூப்பர் ஓவரில் தோல்வியைத் தழுவியது.

    சென்னையை விட டெல்லி ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சற்று சாதகமாக இருக்கும். இதனால் டேவிட் வார்னர்  அதிரடியை பார்க்கலாம். பேர்ஸ்டோ சென்னையில் (55, 12, 43, 63, 38) அட்டகாசமான தொடக்கம் கொடுத்தார். அது நீடிக்கலாம். அந்த அணிக்கு மிகப்பெரிய பலவீனமே, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்தான். அவர்கள் சொதப்பும் வரைக்கும் வெற்றி நிச்சயம் அல்ல.

    பந்து வீச்சில் புவனேஷ்வர் குமார் காயத்தால் கடந்த போட்டியில் விளையாடவில்லை. அவர் இந்த போட்டியிலும் விளையாடவில்லை என்றால் பாதிப்பை கொடுக்கும். ஏற்கனவே டி நடராஜன் விலகியுள்ள நிலை, புவி காயம் பந்து வீச்சில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ரஷித் கான் மட்டுமே தற்போது நல்ல பார்மில் உள்ளார். கலீல் அகமது, சித்தார்த் கவுல், விஜய் சங்கர், சிஎஸ்கே பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்துவார்களா? என்பது சந்தேகமே.

    மொத்தத்தில் 160 ரன்களுக்கு மேல் அடித்தால் வெற்றி பெறக்கூடிய ஸ்கோராக இருக்கும்.
    அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் டெல்லி அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததன் மூலம் 3-வது இடத்திற்கு சரிந்துள்ளது.
    ஐபிஎல் 2021 கிரிக்கெட் புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடிப்பதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ஆர்சிபி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவி வருகிறது.

    முதன் நான்கு போட்டிகள் முடிவில் ஆர்சிபி நான்கிலும் வெற்றி பெற்று முதலிடம் பிடித்திருந்தது. ஐந்தாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆர்சிபி-யை வீழ்த்தியதால் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் இடத்தை பிடித்தது. ஆர்சிபி 3-வது இடத்திற்கு சரிந்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் 2-வது இடம் பிடித்தது.

    இந்த நிலையில் நேற்று ஆர்சிபி- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இதில் வெற்றி பெறும் அணி முதல் இடத்தை பிடிக்கும் நிலை இருந்தது. ஆர்சிபி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் ஆர்சிபி மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. சிஎஸ்கே 2-வது இடத்தில் உள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் 3-வது இடத்திற்கு சரிந்துள்ளது.

    டெல்லி கேப்பிட்டல்ஸ்

    மும்பை இந்தியன்ஸ் 2 வெற்றிகளுடன் 4-வது இடத்திலும். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2 வெற்றிகளுடன் 5-வது இடத்திலும், பஞ்சாப் கிங்ஸ் 2 வெற்றிகளுடன் 6-வது இத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் 2 வெற்றிகளுடன் 7-வது இடத்திலும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஒரு வெற்றியுடன் கடைசி இடத்திலும் உள்ளது.
    3 முறை சாம்பியனான டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது.

    புதுடெல்லி:

    14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டில் சென்னை, மும்பையில் போட்டிகள் முடிந்துவிட்டது. அகமதாபாத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. டெல்லி மைதானத்தில் இன்று முதல் போட்டிகள் ஆரம்பமாகிறது.

    3 முறை சாம்பியனான டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது.

    சி.எஸ்.கே அணி தொடக்க ஆட்டத்தில் டெல்லியிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. அதன் பிறகு தொடர்ந்து 4 போட்டிகளில் வெற்றி பெற்றது. 2-வது போட்டியில் பஞ்சாப் கிங்சை 6 விக்கெட் வித்தியாசத்திலும், 3-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை 45 ரன் வித்தியாசத்திலும், 4-வது போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்சை 18 ரன் வித்தியாசத்திலும், 5-வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை 69 ரன் வித்தியாசத்திலும் தோற்கடித்தது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் 6-வது போட்டியில் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை இன்று சந்திக்கிறது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்த ஆட்டம் நடக்கிறது.

    சி.எஸ்.கே. அணியின் அதிரடி இன்றும் நீடிக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ஐதராபாத் அணியை வீழ்த்தி 5-வது வெற்றி பெறும் ஆர்வத்தில் உள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும்பட்சத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதல் இடத்துக்கு முன்னேறும்.

    ஆல்ரவுண்டர் பணியில் ரவீந்திர ஜடேஜா மிகவும் சிறப்பான நிலையில் உள்ளார். பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சாதித்தார். ஓரே ஓவரில் 36 ரன் விளாசி சாதனை படைத்ததார்.இதேபோல மொய்ன் அலி, சாம் கரண் ஆகியோரும் ஆல்ரவுண்டர் பணியில் சிறப்பாக செயல்படுபவர்கள்.

    பேட்டிங்கில் டுபிளசிஸ் மிகவும் நல்ல நிலையில் உள்ளார். அவர் 5 ஆட்டத்தில் 214 ரன்கள் எடுத்துள்ளார். இதேபோல ரெய்னா, அம்பதி ராயுடு போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களும் இருக்கிறார்கள். பந்துவீச்சில் தீபக் சாஹர், நிகிடி, ‌ஷர்துல் தாகூர் ஆகியோர் முத்திரை பதிக்கக் கூடியவர்கள்.

    ஐதராபாத் அணி ஒரு வெற்றி, 4 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று, புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அந்த அணி 2-வது வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது.

    ஐதராபாத் அணி பஞ்சாப்பை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. கொல்கத்தா, பெங்களூர், மும்பை, டெல்லி அணிகளிடம் தோற்று இருந்தது.

    நான் விளையாடிய காலத்திலும், ஓய்வு பெற்ற பிறகும் இந்திய மக்கள் என் மீது காட்டிய அன்பும், பாசமும் சிறப்பானதாகும் என பிரெட்லீ கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் மருத்துவ சிகிச்சைக்கு தேவையான ஆக்சிஜனை ஆஸ்பத்திரிகள் வாங்குவதற்கு உதவும் வகையில், ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் 50 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலரை (இந்திய மதிப்பில் ரூ.29 லட்சம்) பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்குவதாக நேற்று முன்தினம் அறிவித்தார். இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், ஐ.பி.எல். போட்டியில் வர்ணனையாளராக பணியாற்றி வருபவருமான 44 வயதான பிரெட்லீ ஒரு பிட்காயினை (தற்போதைய வர்த்தக மதிப்பு ரூ.40 லட்சம்) கொரோனா தடுப்பு மருத்துவ சிகிச்சைக்கு தேவையான ஆக்சிஜனை வாங்க வழங்குவதாக நேற்று அறிவித்தார்.

    இது குறித்து பிரெட்லீ தனது டுவிட்டர் பதிவில், ‘எனக்கு இந்தியா எப்போதும் 2-வது வீடு போன்றதாகும். நான் விளையாடிய காலத்திலும், ஓய்வு பெற்ற பிறகும் இந்திய மக்கள் என் மீது காட்டிய அன்பும், பாசமும் சிறப்பானதாகும். கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டு வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. தற்போதைய இந்த கடினமான சூழ்நிலையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து தேவைப்படுபவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்வதை உறுதி செய்ய வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
    ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்றுள்ள வெளிநாட்டு வீரர்கள் பத்திரமாக வீடு திரும்ப அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் உறுதி அளித்துள்ளது
    மெல்போர்ன்:

    ஐ.பி.எல். போட்டி தொடரில் பங்கேற்றுள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களது சொந்த ஏற்பாட்டில் நாடு திரும்ப வேண்டும் என்று அந்த நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியுள்ளார்.

    தற்போது இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஐ.பி.எல். போட்டி தொடரில் பங்கேற்றுள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா (இருவரும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்), ஆண்ட்ரூ டை (ராஜஸ்தான் ராயல்ஸ்) ஆகியோர் போட்டியில் இருந்து விலகி நாடு திரும்புகிறார்கள். இன்னும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஸ்டீவன் சுமித் (டெல்லி கேப்பிட்டல்ஸ்), டேவிட் வார்னர் (ஐதராபாத் சன்ரைசர்ஸ்), கம்மின்ஸ் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்), மேக்ஸ்வெல் (பெங்களூரு) உள்பட 14 வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள், வர்ணனையாளர்கள் தொடர்ந்து ஐ.பி.எல். தொடரில் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில் இந்திய பயணிகள் விமானங்கள் தங்கள் நாட்டுக்கு நேரடியாக வருவதற்கு மே 15-ந் தேதி வரை ஆஸ்திரேலிய அரசு தடை விதித்துள்ளது. இதனால் ஐ.பி.எல். போட்டி முடிந்து ஆஸ்திரேலிய வீரர்கள் நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள ஆஸ்திரேலிய வீரர் கிறிஸ் லின் கருத்து தெரிவிக்கையில், ‘ஒவ்வொரு ஆஸ்திரேலிய வீரர்களின் ஐ.பி.எல். ஒப்பந்தத்தில் இருந்தும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் 10 சதவீத தொகையை பெறுகிறது. இந்த முறை ஐ.பி.எல். போட்டி முடிந்த பிறகு நாங்கள் தனி விமானம் மூலம் நாடு திரும்புவதற்கு அந்த தொகையை செலவழிக்கலாம் என்று கோரிக்கை விடுத்துள்ளேன். நாங்கள் மிகவும் கட்டுப்பாடான கொரோனா பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கிறோம். அடுத்த வாரம் தடுப்பூசி செலுத்தி கொள்ளப்போகிறோம். எனவே நாங்கள் நாடு திரும்ப ஆஸ்திரேலிய அரசு தனி விமானம் அனுப்பும் என்று நம்புகிறோம். போட்டி முடிந்த பிறகு நாங்கள் பாதுகாப்பாக நாட்டுக்கு திரும்ப வேண்டும்’ என்றார்.

    ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிச


    இது குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனிடம் கருத்து கேட்ட போது, ‘ஆஸ்திரேலிய வீரர்கள் தனிப்பட்ட முறையில் பயணம் மேற்கொண்டுள்ளனர். இது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் சுற்றுப்பயணம் அல்ல. ஆஸ்திரேலிய வீரர்கள் தங்கள் சொந்த ஏற்பாட்டின் பேரில் தான் இந்தியாவுக்கு சென்றுள்ளனர். எனவே அவர்கள் தங்கள் சொந்த ஏற்பாடு மூலம் தான் நாடு திரும்ப வேண்டும்’ என்று பதிலளித்தார்.

    இதற்கிடையில் ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்றுள்ள வெளிநாட்டு வீரர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பத்திரமாக வீடு திரும்ப அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் மீண்டும் உறுதி அளித்துள்ளது.

    இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரிய தற்காலிக தலைமை செயல் அதிகாரி ஹேமங் அமின் ஐ.பி.எல். அணிகளுக்கு அனுப்பி இருக்கும் இ-மெயிலில், ‘இந்தியாவில் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக சிலருக்கு தயக்கங்கள் ஏற்பட்டு இருப்பதை அறிகிறோம். போட்டியில் இருந்து விலக சில வீரர்கள் எடுத்துள்ள முடிவை மதிக்கிறோம். அவர்களுக்கு எல்லாவிதமான ஆதரவையும் அளிப்போம். அதேநேரத்தில் அனைவரும் கொரோனா பாதுகாப்பு வளையத்தில் பத்திரமாக இருக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்துகிறோம். கொரோனா தடுப்பு நடைமுறைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 5 நாட்களுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வந்த கொரோனா பரிசோதனை தற்போது 2 நாளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. முன்பு வெளியே உள்ள ஓட்டல்களில் இருந்து உணவு வாங்க அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது அந்த அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. போட்டி முடிந்த பிறகு சொந்த நாட்டுக்கு எப்படி திரும்புவது என்று பலரும் கவலை கொள்வதை நாங்கள் அறிவோம். இதற்காக யாரும் கவலைப்பட வேண்டாம். உங்களுடைய இடத்துக்கு பாதுகாப்பாக திரும்ப அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய கிரிக்கெட் வாரியம் எடுக்கும். இதற்கான ஏற்பாடுகளை அரசுடன் இணைந்து செய்வோம். கடினமான சூழ்நிலையில் இருந்து மக்களை சிறிது நேரம் திசைதிருப்பினாலும் அது சிறந்த பணியே. ஆடுகளத்தில் களம் இறங்கும் போது லட்சக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கை அளிக்கிறீர்கள். ஒருவரது முகத்தில் ஒரு நிமிடம் மகிழ்ச்சியை உண்டாக்கினாலும் நீங்கள் நன்றாக செயல்பட்டீர்கள் என்று அர்த்தமாகும். வழக்கமாக நீங்கள் வெற்றி பெறுவதற்காக விளையாடுவீர்கள். ஆனால் இந்த முறை அதைவிடவும் மிகவும் முக்கியமான மனிதநேயத்துக்காக விளையாடுகிறீர்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
    ஐபிஎல் கிரிக்கெட்டில் டேவிட் வார்னருக்குப் பிறகு 5 ஆயிரம் ரன்களை கடந்த 2-வது வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை ஏபி டி வில்லியர்ஸ் பெற்றுள்ளார்.
    டெல்லி கேப்பிட்டல்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணிகளுக்கு இடையிலான போட்டியில் அகமதாபாத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் விளாசியது. இதற்கு ஏபி டி வில்லியர்ஸின் அதிரடி முக்கிய காரணம். அவர் 42 பந்தில் 3 பவுண்டரி, 5 சிக்சருடன் 75 ரன்கள் விளாசினார்.

    12 ரன்கள் எடுத்திருந்தபோது, ஐபிஎல் கிரிக்கெட்டில் 5 ஆயிரம் ரன்களை பதிவு செய்தார். இதன்மூலம் 5 ஆயிரம் ரன்கள் அடித்த 2-வது வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் டேவிட் வார்னர் 5 ஆயிரம்  ரன்கள் அடித்துள்ளார்.

    டி வில்லியர்ஸ்

    மேலும், குறைந்த பந்துகளில் 5 ஆயிரம் ரன்கள் அடித்த வீரர்கள் என்ற சாதனையையும் படைத்துள்ளார். 37 வயதாகும் டி வில்லியர்ஸ் 3288 பந்துகளில் 5 ஆயிரம் ரன்கள் அடித்துள்ளார். டேவிட் வார்னர் 3554 பந்துகளில் 5 ஆயிரம் ரன்கள் அடித்துள்ளார்.

    சுரேஷ் ரெய்னா 3620 பந்துகளில் அடித்துள்ளார். ரோகித் சர்மா 3817 பந்துகளிலும், விராட் கோலி 3827 பந்துகளிலும் 5 ஆயிரம் ரன்கள் அடித்துள்ளனர்.
    கடைசி ஓவரை சிராஜ் சிறப்பாக பந்து வீச டெல்லியை ஒரு ரன்னில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி.
    அகமதாபாத்:

    ஐபிஎல் தொடரின் 22-வது லீக் ஆட்டம் அகமதாபாத்தில் நடைபெற்றது. ஆர்சிபி-க்கு எதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி ஆர்சிபி முதலில் பேட்டிங் செய்தது. விராட் கோலி, தேவ்தத் படிக்கல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். விராட் கோலி 12 ரன்னிலும், தேவ்தத் படிக்கல் 17 ரன்னிலும் வெளியேறினர். மேக்ஸ்வெல் 25 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    3-வது வீரராக களமிறங்கிய ராஜத் படிதார் 31 ரன்னில் ஆட்டமிழந்தார். வாஷிங்டன் சுந்தர்  6 ரன்னில் வெளியேறினார்.

    கடைசி வரை நின்று அதிரடி காட்டிய ஏபி டி வில்லியர்ஸ் 3 பவுண்டரி, 5 சிக்சருடன் 75 ரன்கள் விளாசி அவுட்டாகாமல் இருந்தார்.

    இறுதியில், ஆர்சிபி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்துள்ளது.

    டெல்லி அணி சார்பில் இஷாந்த் சர்மா, ரபடா, அவேஷ் கான், அமித் மிஷ்ரா, அக்சார் பட்டேல் ஆகியோர் தலா ஒரு  விக்கெட் வீழ்த்தினர்.

    172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான பிரித்வி ஷா 21 ரன்னும், ஷிகர் தவான் 6 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். ஸ்டீவ் ஸ்மித் 4 ரன்னும், ஸ்டோய்னிஸ் 22 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் கேப்டன் ரிஷப் பண்ட் நிதானமாக ஆடினார். அவருக்கு ஹெட்மயர் ஒத்துழைப்பு கொடுத்தார்.

    அதிரடியாக ஆடிய ஹெட்மயர்

    கடைசி 4 ஓவரில் 56 ரன்கள் தேவைப்பட்டது. ஹெட்மயர் கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். இதனால் 23 பந்தில் அரை சதமடித்தார்.

    இறுதியில், டெல்லி அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்தது. ஹெட்மயர் 53 ரன்களும், பண்ட் அரை சதமடித்து 58 ரன்களும் எடுத்து அவுட்டாகாமல் உள்ளனர்.

    இதனால் ஒரு ரன் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.ஆர்சிபி அணி. 5வது வெற்றி பெற்ற ஆர்சிபி அணி புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தது.
    விராட் கோலி, தேவ்தத் படிக்கல் சொதப்ப ஏபி டி வில்லியர்ஸ் அதிரடியாக விளையாடி 75 ரன்கள் விளாச ஆர்சிபி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் சேர்த்துள்ளது.
    ஐபிஎல் தொடரின் 22-வது லீக் ஆட்டம் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. ஆர்சிபி-க்கு எதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி ஆர்சிபி முதலில் பேட்டிங் செய்தது. விராட் கோலி, தேவ்தத் படிக்கல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். விராட் கோலி 12 ரன்னிலும், தேவ்தத் படிக்கல் 17 ரன்னிலும் வெளியேறினர்.

    மேக்ஸ்வெல் 25 ரன்னில் ஆட்டமிழந்தார். 3-வது வீரராக களம் இறங்கிய ராஜத் படிதார் நம்பிக்கையுடன் விளையாடினார். அடுத்து வந்த டி வில்லியர்ஸ் அதிரடியாக விளையாடினார். படிதார் 22 பந்தில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். வாஷிங்டன் சுந்தர்  6 ரன்னில் வெளியேறினார்.

    மேக்ஸ்வெல்

    ஏபி டி வில்லியர்ஸ் 3 பவுண்டரி, 5 சிக்சருடன் 75 ரன்கள் விளாச ஆர்சிபி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் அடித்துள்ளது. மேக்ஸ்வெல்- படிதார் ஜோடி 30 ரன்களும், படிதார்- ஏபிடி வில்லியர்ஸ் ஜோடி 54 ரன்களும் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

    டெல்லி அணி சார்பில் இஷாந்த் சர்மா, ரபடா, அவேஷ் கான், அமித் மிஷ்ரா, அக்சார் பட்டேல் ஆகியோர் தலா ஒரு  விக்கெட் வீழ்த்தினர்.
    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இரண்டு மாற்றங்கள் செய்துள்ள நிலையில், டெல்லிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்கிறது.
    ஐபிஎல் தொடரின் 22-வது லீக் ஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பண்ட் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    ஆர்சிபி அணியில் டேனியல் கிறிஸ்டியன், சைனி நீக்கப்பட்டு டேனியல் சாம்ஸ், ராஜத் படிதார் சேர்க்கப்பட்டுள்ளனர். டெல்லி அணியில் அஷ்வினுக்குப் பதிலாக இஷாந்த் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார்.

    ஆர்சிபி அணி:

    1. விராட் கோலி, 2. தேவ்தத் படிக்கல், 3. ராஜத் படிதார், 4. மேக்ஸ்வெல், 5. ஏபி டி வில்லியர்ஸ், 6. வாஷிங்டன் சுந்தர், 7. டேனியல் சாம்ஸ்  8. கைல் ஜேமிசன், 9. ஹர்ஷல் பட்டேல், 10. முகமது சிராஜ், 11, சாஹல்.

    விராட் கோலி, ரிஷப் பண்ட்

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி:

    1. பிரித்வி ஷா, 2. ஷிகர் தவான், 3. ஸ்டீவ் ஸ்மித், 4. ரிஷப் பண்ட், 5. ஹெட்மையர், 6. ஸ்டாய்னிஸ், 7. அக்சார் பட்டேல், 8. இஷாந்த் சர்மா, 9. ரபடா, 10. அமித் மிஷ்ரா, அவேஷ் கான்.
    ஆடம் ஜம்பா, கேன் ரிச்சர்ட்சன், ஆண்ட்ரூ டை சொந்த நாடு திரும்பியுள்ள நிலையில், மற்ற வீரர்களும் ஐபிஎல் தொடரில் இருந்து விலக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    ஐபிஎல் 2021 கிரிக்கெட் சீசன் கடந்த 9-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே இந்தியாவில் 2-ம் கட்ட கொரோனா வைரஸ் அலை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. தினந்தோறும் பாதிப்பு 3.5 லட்சத்தை எட்டியுள்ளது. மே 2-வது வாரம் உச்சத்தை தொடும் என கணித்துள்ளனர்.

    இந்தியாவின் உருமாறிய கொரோனா தொற்று, தங்கள் நாடுகளுக்குள் ஊடுருவி விடக்கூடாது என்பதில் மற்ற நாடுகள் மிகக் கவனமாக உள்ளன.

    குறிப்பாக ஆஸ்திரேலியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மே 15-ந்தேதி வரை இந்தியாவில் இருந்து   விமானங்கள் வர தடைவிதித்துள்ளது.

    இதற்கிடையில் ஐபிஎல் போட்டியில் விளையாடி வந்த ஆடம் ஜம்பா, கேன் ரிச்சர்ட்சன், ஆண்ட்ரூ டை ஆகியோர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகி சொந்த நாடு திரும்பிவிட்டனர்.

    ஒருவேளை ஆஸ்திரேலியா நாட்டின் எல்லையை மூடிவிட்டால், ஐபிஎல் தொடர் முடிந்த பின்னர் ஆஸ்திரேலியா வீரர்கள் சொந்த நாடு திரும்புவதில் கடும் சிக்கல் ஏற்பட்டு விடும். இதனால் டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித்தும் சொந்த நாடு திரும்ப விரும்புவதாக ஆஸ்திரேலியா மீடியா ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

    ஆனால், மே 15-ந்தேதி வரை இந்தியாவில் இருந்து விமானங்கள் வர ஆஸ்திரேலியா தடைவிதித்துள்ளது. இதனால் இருவரும் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வீரர்கள், பயிற்சியாளர்கள், வர்ணனையாளர்கள் என சுமார் 30 பேர் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் ஆஸ்திரேலியா செல்ல இருப்பதாகவும் அந்த மீடியா தெரிவித்துள்ளது.

    ஆஸ்திரேலியா வீரர்கள் சென்றுவிட்டால், ஐபிஎல் தொடரின் விறுவிறுப்பில் சறுக்கல் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.
    ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் விளையாடிய டி நடராஜன் காயம் காரணமாக தொடரில் இருந்து முழுவதுமாக விலகினார்.
    இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக வளர்ந்து வருபவர் தமிழகத்தைச் சேர்ந்த டி. நடராஜன். இடது கை பந்து வீச்சாளரான இவர், கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலமாக, நெட் பவுலராக சென்று, அதன்பின் இந்திய அணிக்காக மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் அறிமுகமாகி முத்திரை படைத்தார்.

    இங்கிலாந்து தொடரின்போது காயம் காரணமாக சில போட்டிகளில் விளையாடவில்லை. கடைசி நேரத்தில் அணியில்  இணைந்தார். ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக முதல் போட்டியில் விளையாடினார். அதன்பின் காயம் காரணமாக தொடர் முழுவதிலும் இருந்து வெளியேறினார்.

    இந்த நிலையில் முழங்கால் காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இன்று நடராஜன் டுவிட்டர் பக்கத்தில் ‘‘இன்று, நான் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். மருத்துவக்குழு, அறுவை சிகிச்சை நிபுணர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நன்றி. அதேபோல் காயத்தில் இருந்து விரைவாக மீண்டு வர வாழ்த்து தெரிவித்த பிசிசிஐ மற்றும் அனைவருக்கும் நன்றி’’ எனத் தெரிவித்துள்ளார்.
    ×