என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இஷான் கிஷன் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
    ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் (மதியம் 3.30 மணிக்கு தொடக்கம்) மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

    மும்பை இந்தியன்ஸ் அணி:

    1. டி காக், 2. ரோகித் சர்மா, 3. சூர்யகுமார் யாதவ், 4. ஜெயந்த் யாதவ், 5. ஹர்திக் பாண்ட்யா, 6. பொல்லார்டு, 7. குருணால் பாண்ட்யா, 8. ராகுல் சாஹர், 9. பும்ரா,  10. போல்ட், 11. நாதன் கவுல்டர் நைல், 

    மும்பை இந்தியன்ஸ் அணி

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

    1. பட்லர், 2. ஜெய்ஸ்வால், 3. சஞ்சு சாம்சன், 4. டேவிட் மில்லர், 5. கிறிஸ் மோரிஸ், 6. சேத்தன் சக்காரியா, 7. முஷ்டாபிஜுர் ரஹ்மான், 8. ராகுல் டெவாட்டியா, 9. ஷிவம் டுபே, 10. ரியான் பராக், 11. ஜெய்தேவ் உனத்கட்.
    இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஐ.பி.எல். போட்டியில் இருந்து ஏற்கனவே 5 வீரர்கள் விலகி உள்ளனர்.

    புதுடெல்லி:

    14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தற்போது டெல்லி, அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. சென்னை, மும்பையில் ஏற்கனவே போட்டிகள் முடிந்துவிட்டது. இனி பெங்களூர், கொல்கத்தாவில் போட்டிகள் நடைபெறும்.

    இந்தியாவில் தற்போது கொரோனாவின் 2-வது அலையின் தாக்கம் உச்சத்தில் இருக்கிறது. இதன் காரணமாக ஐ.பி.எல். போட்டியில் இருந்து 5 வீரர்கள் விலகி இருந்தனர்.

    ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆன்ட்ரூ டை, கானே ரிச்சர்ட்சன், ஆடம் சம்பா ஆகியோர் அவசரமாக நாடு திரும்பினார்கள். இதேபோல இங்கிலாந்து வீரர் லிவிங்ஸ்டோன் பாதுகாப்பு வளையத்துக்கு தாக்கு பிடிக்க முடியாமல் விலகினார். இந்திய வீரர்களில் சென்னையை சேர்ந்த அஸ்வின் பாதியிலேயே விலகினார்.

    இதைதொடர்ந்து ஐ.பி.எல். போட்டி தொடர்ந்து நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனாலும் போட்டி தொடர்ந்து நடைபெறும் என்று கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.

    இந்தநிலையில் ஐ.பி.எல். போட்டியில் இருந்து 2 நடுவர்கள் விலகி உள்ளனர்.

    இந்தியாவை சேர்ந்த நிதின்மேனன், ஆஸ்திரேலியாவை சேர்ந்த பால்ரீபல் ஆகியோர் ஐ.பி.எல். போட்டியில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக அறிவித்துள்ளனர்.

    ஆஸ்திரேலியாவை சேர்ந்த பால்ரீபல்

    நடுவர் நிதின் மேனனின் சொந்த ஊர் இந்தூர் ஆகும். அவரது மனைவிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதன் காரணமாக அவர் விலகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    போட்டியில் இருந்து விலகிய மேனன், பால் ரீபலுக்கு பதிலாக மாற்று நடுவர்களை கிரிக்கெட் வாரியம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    தோல்விக்கு நானே முழு பொறுப்பு ஏற்றுக் கொள்கிறேன் என சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். போட்டியில் சி.எஸ்.கே. அணி ஐதராபாத்தை வீழ்த்தி 5-வது வெற்றியை பெற்றது.

    டெல்லியில் நடந்த 23-வது லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 171 ரன் எடுத்தது. இதனால் சென்னை அணிக்கு 172 ரன் இலக்காக இருந்தது.

    மனிஷ் பாண்டே 46 பந்தில் 61 ரன்னும் (5பவுண்டரி, 1 சிக்சர் ), கேப்டன் டேவிட் வார்னர் 55 பந்தில் 57 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். நிகிடி 2 விக்கெட்டும், சாம் கரண் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 9 பந்துகள் எஞ்சி இருந்த நிலையில் 172 ரன் இலக்கை எளிதில் எடுத்தது. அந்த அணி 18.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ருதுராஜ் கெய்க்வாட் 44 பந்தில் 75 ரன்னும் (12 பவுண்டரி), டுபெலிசிஸ் 38 பந்தில் 56 ரன்னும் (6 பவுண்டரி,1 சிக்சர்) எடுத்தனர். ரஷீத்கான் 3 விக்கெட் கைப்பற்றினார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் பெற்ற 5 -வது வெற்றியாகும். இந்த 5 வெற்றியையும் தொடர்ச்சியாக பெற்று சாதித்தது. இதன் மூலம் சி.எஸ்.கே. மீண்டும் முதல் இடத்துக்கு முன்னேறியது.‌

    இந்த வெற்றி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி கூறியதா வது:-

    எங்களது பேட்டிங் செயல்பாடு மிகவும் சிறப்பாக இருந்தது. ஆனால் அதற்காக பந்துவீச்சு நன்றாக இல்லை என்பது அர்த்தமில்லை.

    டெல்லி ஆடுகளம் ஆச்சரியமளிக்கும் வகையில் சிறப்பாக இருந்தது. இதை நாங்கள் எதிர்பார்க்க வில்லை. இதற்கு முன்பு இங்குள்ள பிட்ச் இப்படி இருந்ததில்லை. பேட்டிங் செய்வது எளிதாக இருந்தது‌. பனித்துளிகள் எதுவுமில்லை.

    தொடக்க ஜோடியின் பார்ட்னர்ஷிப் மிகவும் பிரமாதமாக இருந்தது. கடந்த சீசனில் அப்படி அமையவில்லை. நீண்ட நாள் தனிமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் அப்போது இருந்தது.

    இந்த சீசனில் வீரர்கள் அதிக பொறுப்பை ஏற்று உள்ளனர். கடந்த 8 முதல் 10 ஆண்டாக பார்த்தால் நாங்கள் அணியில் இருந்து வீரர்களை மாற்றவில்லை. வாய்ப்பு கிடைக்காத வீரர்களையும் நாங்கள் பாராட்டி உள்ளோம்.

    நம்பிக்கை வைத்து முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் போது அதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும். வீரர்களின் அறை சிறப்பாக இருப்பது முக்கியமானது. விளையாடாத வீரர்களுக்கு கூடுதலாக பாராட்டுக்களையும் நாங்கள் தெரிவிப்பது அவசியமாகும்.

    இவ்வாறு டோனி கூறியுள்ளார்.

    ஐதராபாத் அணி 5-வது தோல்வியை தழுவியது. இந்த தோல்வி குறித்து அந்த அணி கேப்டன் வார்னர் கூறும்போது, “தோல்விக்கு நானே முழு பொறுப்பு ஏற்றுக் கொள்கிறேன். என்னால் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. சி.எஸ்.கே. அணியின் தொடக்கம் மிகவும் சிறப்பாக இருந்தது” என்றார்.

    சி.எஸ்.கே. அணி 7-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சுடன் வருகிற 1-ந் தேதி மோதுகிறது. ஐதராபாத் அடுத்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை வருகிற 2-ந் தேதி சந்திக்கிறது. 


    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தியதன் மூலம் ஐ.பி.எல். புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.
    ஐ.பி.எல். 2021 சீசன் கடந்த 9-ந்தேதி தொடங்கியது. 10-ந்தேதி மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் 188 ரன்கள் அடித்தும், 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

    அதன்பின் வீறுகொண்டு எழுந்த சி.எஸ்.கே. பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஆர்சிபி அணிகளை வீழ்த்தி தொடர்ந்து நான்கு வெற்றிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்தது.

    அதன்பின் டெல்லி- ஆர்.சி.பி. இடையிலான போட்டியில் ஆர்.சி.பி. வெற்றி பெற, சென்னை சூப்பர் கிங்ஸ் 2-வது இடத்திற்கு சறுக்கியது. நேற்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக டாப் கிளஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பாயிண்ட் டேபிள்

    அத்துடன் புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. நெட் ரன்ரேட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் (+1.475) அசைக்க முடியாத அளவிற்கு உள்ளது. 2-வது இடத்தில் இருக்கும் ஆர்சிபி-யின் ரன்ரேட் +0.089 ஆகும். 3-வது இடத்தில் இருக்கும் டெல்லி +0.269 ரன்ரேட் வைத்துள்ளது. மற்ற அணிகள் அனைத்து மைனஸில் ரன்ரேட் வைத்துள்ளது.
    ஐ.பி.எல்.லில் 50 அரை சதங்கள் அடித்த முதல் வீரர், 200 சிக்சர்கள் உள்பட பல சாதனைகளை டேவிட் வார்னர் படைத்துள்ளார்.
    புதுடெல்லி:

    14வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் டெல்லியில் நேற்றிரவு நடந்த 23வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் விளையாடின.

    இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பல சாதனைகளை புரிந்துள்ளார். தனது 148-வது ஐ.பி.எல். போட்டியில் விளையாடி ஐ.பி.எல்.லில் 50 அரை சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

    டி20 கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களையும் அவர் கடந்துள்ளார். நேற்றைய போட்டியில் விளையாடுவதற்கு முன் இந்த சாதனையை புரிவதற்கு அவருக்கு 40 ரன்கள் தேவைப்பட்டது.

    வார்னருக்கு அடுத்து அதிக எண்ணிக்கையில் அரை சதங்கள் அடித்த வீரர்கள் வரிசையில் டெல்லி அணியின் ஷிகர் தவான் (43) 2வது இடத்திலும், பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி (40) 3வது இடத்திலும் உள்ளனர்.

    சென்னை அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் அவர் அடித்த 2 சிக்சர்கள் அவரது சாதனை வரலாற்றில் மற்றொரு மைல்கல்லாக அமைந்தது. ஐ.பி.எல்.லில் 200 சிக்சர்களை அவர் விளாசியுள்ளார். இதனால் 200 அல்லது அதற்கு மேற்பட்ட சிக்சர்களை அடித்த வீரர்களின் வரிசையில் 8வது இடத்தில் வார்னர் உள்ளார்.

    இதுதவிர வெளிநாட்டு வீரர்களில் கிறிஸ் கெய்ல் (354 சிக்சர்கள்), ஏபி டி வில்லியர்ஸ் (245 சிக்சர்கள்) மற்றும் கீரன் பொல்லார்டு (202) ஆகியோருக்கு அடுத்து 4வது இடத்தில் உள்ளார்.
    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 5-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜூன் 4-ந் தேதி முதல் ஜூலை 4-ந் தேதி வரை நடத்தப்படுகிறது.
    சென்னை:

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 5-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜூன் 4-ந் தேதி முதல் ஜூலை 4-ந் தேதி வரை நடத்தப்படுகிறது. நெல்லை, திண்டுக்கல், சேலம், கோவை ஆகிய இடங்களில் இந்த போட்டி நடைபெறுகிறது. தொடக்க ஆட்டம் நெல்லையிலும், இறுதிப்போட்டி சேலத்திலும் அரங்கேறுகிறது. கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடைபெறும் இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், கோவை கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், திருச்சி வாரியர்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் ஆகிய 8 அணிகள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

    இதற்கான போட்டி அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி தினசரி போட்டிகள் இரவு 7.30 மணிக்கு தொடங்கும். இரண்டு ஆட்டங்கள் இருக்கும் நாளில் முதல் ஆட்டம் மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறும் நாட்களில் (அதாவது ஜூன் 19, 20, 22-ந் தேதிகளில்) போட்டிகள் காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெறும்.

    தொடக்க லீக் ஆட்டத்தில் (ஜூன் 4) திண்டுக்கல் டிராகன்ஸ்-திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தனது லீக் ஆட்டங்களில் ஜூன் 5-ந் தேதி நெல்லை ராயல் கிங்சையும், ஜூன் 10-ந் தேதி திண்டுக்கல் டிராகன்சையும், ஜூன் 12-ந் தேதி திருப்பூர் தமிழன்சையும், ஜூன் 15-ந் தேதி சேலம் ஸ்பார்டன்சையும், ஜூன் 17-ந் தேதி கோவை கிங்சையும், ஜூன் 23-ந் தேதி திருச்சி வாரியர்சையும், ஜூன் 27-ந் தேதி மதுரை பாந்தர்சையும் எதிர்கொள்கிறது.
    உலக தடகள தொடர் ஓட்ட சாம்பியன்ஷிப் போட்டி போலந்து நாட்டில் உள்ள சிலிசியாவில் மே 1 மற்றும் 2-ந் தேதிகளில் நடக்கிறது. இது டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்று போட்டியாகும்.
    புதுடெல்லி:

    உலக தடகள தொடர் ஓட்ட சாம்பியன்ஷிப் போட்டி போலந்து நாட்டில் உள்ள சிலிசியாவில் மே 1 மற்றும் 2-ந் தேதிகளில் நடக்கிறது. இது டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்று போட்டியாகும். இந்த போட்டியில் முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும். இந்த தகுதி சுற்று போட்டியில் பெண்களுக்கான 100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் ஹிமா தாஸ், டுட்டீ சந்த், தனலட்சுமி (தமிழ்நாடு), அர்ச்சனா சுசீந்திரன், தனேஷ்வரி, ஹிமாஸ்ரீ ராய் ஆகியோர் அடங்கிய இந்திய அணியும், ஆண்களுக்கான 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் முகமது அனாஸ், ஆரோக்ய ராஜீவ் (தமிழ்நாடு), அமோஜ் ஜேக்கப், நிர்மல் நோக் டாம், சர்தாக் பாம்ப்ரி ஆகியோர் அடங்கிய இந்திய அணியும் கலந்து கொள்ள திட்டமிட்டு இருந்தது. இந்திய அணியினர் இன்று (வியாழக்கிழமை) டெல்லியில் இருந்து ஆம்ஸ்டர்டாம் (நெதர்லாந்து) வழியாக செல்லும் விமானம் மூலம் போலந்து செல்ல டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து இருந்தனர். ஆனால் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு நெதர்லாந்து அரசு திடீரென தடை விதித்துள்ளது. இதனால் டெல்லியில் இருந்து ஆம்ஸ்டர்டாம் செல்ல வேண்டிய விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே ஒலிம்பிக் தகுதி சுற்று உலக தொடர் ஓட்ட பந்தயத்தில் இந்திய அணியினர் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து இந்திய தடகள சம்மேளன தலைவர் சுமரிவாலா கூறுகையில் ‘இந்த தருணத்தில் நாங்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளோம். இந்தியாவில் இருந்து போலந்துக்கு நேரடி விமான போக்குவரத்து எதுவும் கிடையாது. மாற்று விமானங்கள் மூலம் இந்திய அணியை அனுப்ப எடுத்த முயற்சிகளுக்கு இதுவரை பலன் கிடைக்கவில்லை. கடந்த 24 மணி நேரமாக இந்த பயணத்துக்கான மாற்று வழியை கண்டுபிடிக்க நாங்கள் தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். போட்டி அமைப்பாளர்கள், உலக தடகள சம்மேளனம் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் விமான நிறுவனங்களிடம் எல்லாம் கலந்து ஆலோசித்து விட்டோம். தற்போதைய சூழ்நிலையில் யாரிடம் இருந்தும் எங்களுக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை’ என்றார்.
    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக 56 ரன்கள் விளாசியதன் மூலம், தவானை விட ஐந்து ரன்கள் முன்னிலைப் பெற்று ஆரஞ்ச் தொப்பியை கைப்பற்றினார் டு பிளிஸ்சிஸ்.
    ஐபிஎல் 2021 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க பேட்ஸ்மேனான டு பிளிஸ்சிஸ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 6 போட்டிகளில் இரண்டு முறை ஆட்டமிழக்காமல் 270 ரன்கள் குவித்துள்ளார். இன்று நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக 56 ரன்கள் விளாசினார். இதன்மூலம் கடைசியாக விளையாடிய மூன்று போட்டிகளிலும் அரைசதம் விளாசி அசத்தினார்.

    ஐபிஎல் அசத்திய வீரர்கள்

    இத்தொடரில் தவான் 6 போட்டிகளில் 265 ரன்கள் விளாசி ஆரஞ்ச் தொப்பியை தன்வசம் வைத்திருந்தார். அதை இன்று டு பிளிஸ்சிஸ் கைப்பற்றியுள்ளார்.
    ருத்துராஜ் கெய்க்வாட், டு பிளிஸ்சிஸ் அபாரமான தொடக்கம் கொடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் எளிதாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தியது.
    சென்னை சூப்பர் கிங்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 23-வது லீக் ஆட்டம் இன்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் பேட்டிங் தேர்வு செய்தது.

    அந்த அணியின் டேவிட் வார்னர், பேர்ஸ்டோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பேர்ஸ்டோவ் 7 ரன் எடுத்த நிலையில் சாம் கர்ரன் பந்தில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து டேவிட் வார்னர் உடன் மணிஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. மணிஷ் பாண்டே 35 பந்திலும், வார்னர் 50 பந்திலும் அரைசதம் அடித்தனர். டேவிட் வார்னர் 55 பந்தில் 57 ரன்களும், மணிஷ் பாண்டே 46 பந்தில் 64 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    4-வது வீரராக களம்இறங்கிய கேன் வில்லியம்சன் 10 பந்தில் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 26 ரன்கள் அடிக்க சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் லுங்கி நிகிடி 2 விக்கெட்டும், சாம் கர்ரன் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் செய்தது. ருத்துராஜ் கெய்க்வாட்- டு பிளிஸ்சிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கெய்க்வாட் 36 பந்திலும், டு பிளிஸ்சிஸ் 32 பந்திலும் அரைசதம் அடித்தனர். இந்த ஜோடி விக்கெட்டை இழக்காமல் இலக்கை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரஷித் கான் பந்து வீச்சில் ருத்துராஜ் 44 பந்தில் 12 பவுண்டரியுடன் 75 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 

    ஜடேஜா, ரெய்னா

    டு பிளிஸ்சிஸ் - கெய்க்வாட் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 13 ஓவரில் 129 ரன்கள் குவித்தது. அடுத்து வந்த மொயீன் அலி 8 பந்தில் 15 ரன்கள் எடுத்த நிலையிலும், டு பிளிஸ்சிஸ் 38 பந்தில் 6 பவுண்டரி, 1 சிக்சருடன் 56 ரன்கள் எடுத்த நிலையிலும் ரஷித் கான் பந்தில் ஆட்டமிழந்தனர்.

    4-வது விக்கெட்டுக்கு சுரேஷ் ரெய்னாவுடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் 18.3 ஓவரில் இலக்கை எட்டி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரெய்னா 17 ரன்களுடனும், ஜடேஜா 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி சார்பில் ரஷித் கான் 36 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.
    மணிஷ் பாண்டே, டேவிட் வார்னர் அரைசதம் அடிக்க லுங்கி நிகிடி 2 விக்கெட் வீழ்த்த, சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு 172 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.
    சென்னை சூப்பர் கிங்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 23-வது லீக் ஆட்டம் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் பேட்டிங் தேர்வு செய்தது.

    அந்த அணியின் டேவிட் வார்னர், பேர்ஸ்டோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பேர்ஸ்டோவ் 7 ரன் எடுத்த நிலையில் சாம் கர்ரன் பந்தில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து டேவிட் வார்னர் உடன் மணிஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. வார்னர் வழக்கத்திற்கு மாறாக நிதானமாக விளையாடினார். மணிஷ் பாண்டே ஆட்டத்தில் வேகத்தை கூட்டினர். இதன்காரணமாக மணிஷ் பாண்டே 35 பந்திலும், வார்னர் 50 பந்திலும் அரைசதம் அடித்தனர்.

    டேவிட் வார்னர் 55 பந்தில் 57 ரன்களும், மணிஷ் பாண்டே 46 பந்தில் 64 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 4-வது வீரராக களம்இறங்கிய கேன் வில்லியம்சன் ஷர்துல் தாகூர் வீசிய 19-வது ஓவரில் தொடர்ந்து 4,6,4,4 என விரட்டினர். இதனால் சிஎஸ்கே அந்த ஓவரில் 20 ரன்கள் விட்டுக்கொடுத்தது. இதனால் ஐதராபாத் 150 ரன்களை தாண்டியது.

    பேர்ஸ்டோ அவுட்

    கடைசி ஓவரை சாம் கர்ரன் வீசினார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடிக்க சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்துள்ளது.

    கேன் வில்லியம்சன் 10 பந்தில் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கேதர் ஜாதவ் 4 பந்தில் 12 ரன்கள் எடுத்தார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் லுங்கி நிகிடி 2 விக்கெட்டும், சாம் கர்ரன் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
    ஐபிஎல் தொடரின் 23-வது லீக் ஆட்டம் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் சந்தீப் சர்மா, மணிஷ் பாண்டே சேர்க்கப்பட்டுள்ளனர்.

    சென்னை அணியில் பிராவோ, இம்ரான் தாஹிர் நீக்கப்பட்டு லுங்கி நிகிடி, மொயீன் அலி சேர்க்கப்பட்டுள்ளனர்.

    ஐதராபாத் அணி

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி:

    1. டேவிட் வார்னர், 2. பேர்ஸ்டோ, 3. கேன் வில்லியம்சன், 4. மணிஷ் பாண்டே, 5. கேதர் ஜாதவ்,  6. விஜய் சங்கர், 7. ரஷித் கான், 8. சுசித், 9. சந்தீப் சர்மா, 10. கலீல் அகமது, 11 சித்தார்த் கவுல்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி:

    1. ருத்துராஜ் கெய்க்வாட், 2. டு பிளிஸ்சிஸ், 3. மொயீன் அலி, 4. சுரேஷ் ரெய்னா, 5. அம்பதி ராயுடு, 6. எம்எஸ் டோனி, 7. ஜடேஜா, 8. சாம் கர்ரன், 9. ஷர்துல் தாகூர், 10. லுங்கி நிகிடி, 11. தீபக் சாஹர்.
    ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஆண்டு போட்டி நடைபெற்றபோது, மிகவும் பாதுகாப்பானதாக உணர்ந்தேன் என்று ஆடம் ஜம்பா தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆர்சிபி அணியில் இடம் பிடித்திருந்தார். அவர் சொந்த காரணத்திற்கான ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். உடனடியான ஆஸ்திரேலியா சென்றார்.

    நேற்று  சிட்னி மார்னிங் ஹெரால்டு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ‘‘நாங்கள் சில பபுள்களை பெற்றிருந்தோம். அது மிகவும் பாதிக்கக்கூடியதாக நான் உணர்ந்தேன். இப்படி உணர்ந்ததற்கு, போட்டி இந்தியாவில் நடப்பதுதான் காரணம். நான் எப்போதுமே இந்தியாவின் சுகாதாரம் மற்றும் கூடுதல் கவனம் குறித்து பேசுகிறேன். அதனால் இது மிகவும் பாதிக்கக்கூடியதாக உணர்ந்தேன்.

    ஐபிஎல் போட்டி ஆறு மாதத்திற்கு முன்பு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. அப்போது நான் இதுபோன்று உணர்ந்ததில்லை. மிகவும் பாதுகாப்பானதாக உணர்ந்தேன். தனிப்பட்ட முறையில், இந்த ஐபிஎல் போட்டியை மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தியிருக்க வேண்டும் என உணர்கிறேன். ஆனால் உண்மையிலேயே, ஏராளமான அரசியல் உள்ளன.

    இந்த வருடத்தின் கடைசியில் ஐபிஎல் போட்டியில் இந்தியாவில் நடைபெற இருக்கிறது. கிரிக்கெட் உலகத்தில் இது அடுத்த விவாதமாக இருக்கும். ஆறு மாதம் என்பது நிண்ட நாட்களை கொண்டது.

    கொரோனா சூழ்நிலை மிகவும் மோசமான உள்ளது. நான் அணியில் விளையாடவில்லை. பயிற்சி மேற்கொண்டேன். அதனால் உத்வேகத்தை நான் காணவில்லை. பபுள் கடினம், சொந்த நாட்டிற்கு  செல்லும் வாய்ப்பு, விமானத்தடை என பலவிதமான பேச்சுக்கள் எழுகின்றன. அதனால் இது சிறந்த நேரம் என்று நினைத்தேன்.

    ஏராளமான வீரர்கள், பயிற்சியாளர்கள், இக்கட்டான இந்த நிலையில் கிரிக்கெட் ஒரு நிவாரணமாக இருக்கும் என்கிறார்கள். இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம். குடும்பத்தில் ஒருவர் மரண படுக்கையில் இருக்கும்போது கிரிக்கெட் பற்றி கவலைப்பட மாட்டார்கள்’’ என்றார்.
    ×