என் மலர்
விளையாட்டு

அகமதாபாத்:
14-வது ஐ.பி.எல். போட்டியில் அகமதாபாத்தில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் வீழ்த்தியது.
முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன் எடுத்தது. ஆந்த்ரே ரசல் 45 ரன்னும், சுப்மன்கில் 43 ரன்னும் எடுத்தனர். டெல்லி தரப்பில் அக்சர் படேல், லலித் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணியின் தொடக்க வீரர்கள் பிரித்வி ஷா, ஷிகர் தவான் நல்ல அடித்தளம் அமைத்தனர். குறிப்பாக பிரித்விஷா அதிரடியாக விளையாடினார்.
ஷிவம் மாவி வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரில் பிரித்விஷா 6 பவுண்டரி அடித்து அசத்தினார். அவர் 41 பந்தில் 82 ரன் எடுத்தார். இதில் 11 பவுண்டரி, 3 சிக்சர் அடங்கும். டெல்லி அணி 16.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 156 ரன் எடுத்து வென்றது.
ஷிகர் தவான் 46 ரன் எடுத்தார். டெல்லி பெற்ற 5-வது வெற்றி (7 ஆட்டம்) இதுவாகும். கொல்கத்தா 5 தோல்வியை (7 ஆட்டம்) சந்தித்தது.
தோல்வி குறித்து கொல்கத்தா கேப்டன் மார்கன் கூறியதாவது:-
தோல்வி அடைந்தது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. நாங்கள் மெதுவாக ஆடினோம். ஒரு ஓவரில் விக்கெட்டுகளை இழந்தோம். இறுதி கட்டத்தில் ஆந்த்ரே ரசல் 150 ரன்னுக்கு கொண்டு சென்றார்.
ஆனால் நாங்கள் மீண்டும் பந்து வீச்சில் மெதுவாகவே செயல்பட்டு விட்டோம்.
இந்த போட்டித் தொடரில் இதுவரை ஒரு ஆட்டத்தில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் ஒன்றாக இணைந்து சிறப்பாக செயல்படுவதில் சிரமப்பட்டு வந்துள்ளோம்.
முன்னோக்கி நகரும் போது, அணியில் பெரிய வீரர்கள் சிறப்பாக செயல்படுவது எங்களது தேவை. நீங்கள் நேர்மையாகவும், யதார்த்தமாகவும் இருக்க வேண்டும்.
எங்களிடம் பெரிய அளவில் திறமைகள் உள்ளன. ஆனால் திறமைகள் மட்டும் உங்களை அழைத்து செல்லாது. நீங்கள் திறமைகளை செயல்திறனாக மாற்ற வேண்டும். நாங்கள் அதை செய்யவில்லை. அதிலிருந்து மீண்டு வருவோம் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர்கூறினார்.
வெற்றி குறித்து ரிஷப் பண்ட் கூறியதாவது:-
பிரித்விஷாவிடம் உங்களது இயல்பான ஆட்டத்தை விளையாடுமாறு கூறினேன். இந்த ஆட்டத்தில் ரன்-ரேட்டை உயர்த்த முயற்சித்தோம். இதுபோன்ற ஆட்டங்களில்தான் நிகர ரன்-ரேட்டை பற்றி சிந்திக்க முடியும்.
எல்லோரிடமும் கிரிக்கெட்டை அனுபவித்து விளையாடுமாறும், அவர்களால் முடிந்ததை செய்யுமாறும் கூறினோம்.
கடந்த ஆட்டத்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்றோம். ஆனாலும் எங்கள் செயல்முறையை மாற்ற வேண்டாம் என்று நினைத்தோம். செயல் முறையை நீங்கள் நம்பினால், நீங்கள் முடிவை (வெற்றி) பெறுவீர்கள் என்றார்.
அகமதாபாத்:
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அகமதாபாத்தில் இன்று இரவு நடக்கும் 26-வது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் லேசஞ்சர்ஸ் பெங்களூரு- லோகேஷ் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
பெங்களூரு அணி 6 ஆட்டத்தில் 5 வெற்றி, ஒரு தோல்வி பெற்றுள்ளது. அந்த அணியில் தேவ்தத் படிக்கல், டிவில்லியர்ஸ், மேக்ஸ்வெல் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர்.
பந்துவீச்சில் முகமது சிராஜ், ஹர்ஷல் படேல், ஜேமிசன் ஆகியோர் உள்ளனர். பெங்களூரு அணி 6-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
பஞ்சாப் அணி 6 ஆட்டத்தில் 2 வெற்றி மட்டுமே பெற்றுள்ளது. 4 போட்டியில் தோற்றது. அந்த அணியில் லோகேஷ் ராகுல், கிறிஸ் கெய்ல், மயங்க் அகர்வால், பூரன் போன்ற பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.
ஆனாலும் பேட்டிங்கில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. பந்துவீச்சில் முகமது சமி, அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய், கிறிஸ் ஜோர்டன் ஆகியோர் உள்ளனர்.
தோல்வியில் இருந்து மீண்டு வர பஞ்சாப் அணி முயற்சிக்கும், அதற்கு பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். இப்போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
பிரபல கால்பந்து நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த இவர் மீது அமெரிக்காவை சேர்ந்த மாடல் அழகி கேத்ரீன் மையோர்கா பாலியல் புகார் தெரிவித்தார்.
2009-ம் ஆண்டு லாஸ் வேகாசில் உள்ள ஓட்டல் ஒன்றில் தன்னை ரொனால்டோ பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றம் சாட்டினார். இந்த புகாரை கேத்ரீன் மையோர்கா 2018-ம் ஆண்டு தெரிவித்தார்.
இதை ரொனால்டோ மறுத்தார். இருதரப்பின் விருப்பத்துடன் கூடிய உறவு தான் என்று ரொனால்டோ தரப்பினர் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் ரொனால்டோவை விடுவிப்பதாக கடந்த 2019-ம் ஆண்டு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
இந்தநிலையில் இவ்விவகாரத்தை கேத்ரீன் மையோர்கா மீண்டும் கிளப்பி உள்ளார். அவர் ரொனால்டோவிடம் 56 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் ரூ.579 கோடி) நஷ்டஈடு கோரி உள்ளார்.
கடந்த கால வலி மற்றும் துன்பங்கள், எதிர்கால வலி மற்றும் துன்பங்கள், சட்ட ரீதியான கட்டணம் ஆகியவற்றுக்காக நஷ்டஈட்டை கேத்ரீன் மையோர்கா கேட்டுள்ளதாக இங்கிலாந்தின் மிரர் பத்திரிகையில் செய்தி வெளியாகி இருக்கிறது.

| வ.எ. | அணிகள் | போட்டிகள் | வெற்றிகள் | புள்ளிகள் | நெ.ர.ரேட் |
| 1 | சி.எஸ்.கே. | 6 | 5 | 10 | 1.475 |
| 2 | டெல்லி | 7 | 5 | 10 | 0.466 |
| 3 | ஆர்.சி.பி. | 6 | 5 | 10 | 0.089 |
| 4 | மும்பை | 6 | 3 | 6 | 0.071 |
| 5 | கே.கே.ஆர் | 7 | 2 | 4 | -0.494 |
| 6 | பஞ்சாப் | 6 | 2 | 4 | -0.608 |
| 7 | ஆர்.ஆர். | 6 | 2 | 4 | -0.690 |
| 8 | ஐதராபாத் | 6 | 1 | 2 | -0.264 |
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் 25-வது லீக் ஆட்டம் அகமதாபாத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக நிதிஷ் ரானா மற்றும் சுக்மன் கில் ஆகியோர் களமிறங்கினர்.
ராணா 15 ரன்னிலும், ராகுல் திரிபாதி 19 ரன்னிலும் வெளியேறினர். அடுத்து இறங்கிய கேப்டன் இயன் மோர்கன், சுனில் நரைனும் டக் அவுட்டாகினர்.
தொடர்ந்து களமிறங்கிய ஆந்தரே ரசல், துவக்க வீரர் ஷுப்மான் கில்லுடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஷுப்மான் கில் 43 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
அதிரடி காட்டிய ரசல் டெல்லி பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். 27 பந்துகளில் 4 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 45 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில், 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 154 ரன்கள் எடுத்தது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சார்பில் அக்சர் பட்டேல், லலித் யாதவ் அதிகபட்சமாக தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து, 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி களமிறங்கியது. பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

அரை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஷிகர் தவான் 46 ரன்னில் வெளியேறினார். முதல் விக்கெட்டுக்கு 132 ரன்கள் சேர்த்தனர்.
41 பந்தில் 82 ரன்கள் குவித்த நிலையில் பிரித்வி ஷா அவுட்டானார். அடுத்து இறங்கிய பண்ட் 8 பந்தில் 16 ரன் அடித்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், டெல்லி அணி 16.3 ஓவரில் 156 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இது டெல்லி அணி பெற்ற 5வ்து வெற்றி ஆகும். அத்துடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாமிடம் பிடித்துள்ளது. ஆட்ட நாயகன் விருது பிரித்வி ஷாவுக்கு வழங்கப்பட்டது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பெற்ற 5வது தோல்வி இதுவாகும்.








