என் மலர்
விளையாட்டு
ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி டி 20 மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
முதலில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-1 என கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
பாகிஸ்தான்-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹராரேயில் நடைபெற்றது.
டாஸ் ஜெயித்த ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால், பாகிஸ்தான் வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 59.1 ஓவர்களில் 176 ரன்னில் சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக ராய் கையா 48 ரன்கள் எடுத்தார்.
பாகிஸ்தான் அணி சார்பில் ஷகீன் ஷா அப்ரிடி, ஹசன் அலி தலா 4 விக்கெட் வீழ்த்தினார்கள்.
இதையடுத்து, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சை தொடர்ந்தது. அபித் அலி 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அசார் அலி 36 ரன்னும், கேப்டன் பாபர் அசாம் ரன் எதுவும் எடுக்காமலும் அவுட்டாகினர். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இம்ரான் பட் 91 ரன்னில் வெளியேறினார்.
அடுத்து இறங்கிய ரிஸ்வான் 45 ரன்னிலும், பஹீம் அஷ்ரப் டக் அவுட்டாகி வெளியேறினர். ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் சிறப்பாக ஆடிய பவாத் ஆலம் சதமடித்து அசத்தினார்.
இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 120 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 374 ரன்கள் எடுத்துள்ளது.

இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. ஹசன் அலி 30 ரன்னில் அவுட்டானார். பொறுப்புடன் ஆடிய பவாத் ஆலம் 140 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், பாகிஸ்தான் அணி 133 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 426 ரன்கள் எடுத்தது.
ஜிம்பாப்வே அணி சார்பில் முசராபானி 4 விக்கெட்டும், டொனால்ட் டிரிபனோ 3 விக்கெட்டும் வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து 250 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஜிம்பாப்வே அணி இரண்டாவது இன்னிங்சை ஆடியது.
பாகிஸ்தான் பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் ஜிம்பாப்வே அணி 134 ரன்களில் சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக முசகண்டா 43 ரன்கள் எடுத்தார். பிரெண்டன் டெய்லர் 29 ரன்னும், கெவின் கசூவா 28 ரன்னும் எடுத்தனர்.
பாகிஸ்தான் சார்பில் ஹசன் அலி 5 விக்கெட்டும், நுமன் அலி 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனால் பாகிஸ்தான் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 116 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3-வது நாளிலேயே ஆட்டம் முடிவுக்கு வந்தது.
ஆட்ட நாயகன் விருது இரு இன்னிங்சிலும் சேர்த்து 9 விக்கெட் வீழ்த்திய ஹசன் அலிக்கு வழங்கப்பட்டது.
ஐபிஎல் 2021 தொடரின் 27-வது லீக் ஆட்டம் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர் கெய்க்வாட் 4 ரன்னில் ஆட்டமிழந்தார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான டூ பிளெசிசுடன் மொயீன் அலி ஜோடி சேர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இருவரும் மும்பை பந்துவீச்சாளர்களை திணறடித்தனர். டூ பிளெசிஸ் 50 ரன்களும், மொயீன் அலி 58 ரன்களும் குவித்தனர். ரெய்னா 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
அதன்பின் இறங்கிய அம்பதி ராயுடு அதிரடியில் மிரட்டினார். பந்துகளை பவுண்டரி மற்றும் சிக்சர்களாக தெறிக்க விட்டார். அவருக்கு ரவீந்திர ஜடேஜா கம்பெனி கொடுக்க, ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இந்த ஜோடியை மும்பை பவுலர்களால் கடைசி வரை பிரிக்க முடியவில்லை.

20 பந்துகளில் விரைவாக அரை சதம் கடந்த அம்பதி ராயுடு, மொத்தம் 27 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டரி, 7 சிக்சர்களுடன் 72 ரன்கள் விளாசினார். ஜடேஜா 22 பந்துகளில் 2 பவுண்டரி உள்பட 22 ரன்கள் சேர்த்தார்.
இதையடுத்து, 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக், ரோகித் சர்மா இறங்கினர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்தனர்.
ரோகித் சர்மா 35 ரன்னிலும், டி காக் 38 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய சூர்யகுமார் யாதவ் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது மும்பை அணி 3 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்திருந்தது.
அடுத்து இறங்கிய குருணால் பாண்ட்யாவுடன், பொல்லார்டு ஜோடி சேர்ந்தார். பொல்லார்டு ஆரம்பம் முதலே ருத்ர தாண்டவம் ஆடினார். கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். இதனால் அவர் 17 பந்துகளில் அரை சதம் கடந்தார். இந்த ஜோடி 49 பந்தில் 89 ரன்கள் சேர்த்தது. 17வது ஓவரில் குருணால் பாண்ட்யா 32 ரன்னில் அவுட்டனார்.
மும்பை அணி வெற்றி பெற கடைசி 2 ஓவரில் 31 ரன்கள் தேவைப்பட்டது. 19வது ஓவரில் சாம் கர்ரன் 15 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் மும்பை வெற்றிபெற கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது.
இறுதியில், மும்பை அணி 20 ஓவரில் 219 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. பொல்லார்டு 34 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இது மும்பை அணி பெற்ற 4வது வெற்றி ஆகும்.
சென்னை சார்பில் சாம் கர்ரன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

சென்னை:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் அஸ்வின். 34 வயதான அவர் டெஸ்ட் அணியில் மட்டுமே ஆடி வருகிறார்.
சென்னையை சேர்ந்த அஸ்வின் ஐ.பி.எல். போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகாக விளையாடி வந்தார்.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு அஸ்வின் ஐ.பி.எல். போட்டியில் இருந்து பாதியில் விலகினார். கொரோனா வைரசுக்கு எதிராக என்னுடைய குடும்பத்தார் போராடி வரும் நிலையில் அவர்களுக்காக உடன் இருப்பது அவசியம் என்பதால், ஐ.பி.எல்.லில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் அஸ்வின் குடும்பத்தில் 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை அஸ்வினின் மனைவி பிரீத்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
எங்கள் குடும்பத்தில் பெரியவர்கள் 6 பேருக்கும், சிறியவர்கள் 4 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 முதல் 8 நாட்கள் மிகவும் மோசமாக இருந்தது. கொரோனா நோய் மிகவும் தனிமையில் இருக்கக்கூடிய ஒன்றாகும். அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொள்வது சிறந்தது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஐ.பி.எல். போட்டியில் இருந்து 5-க்கும் மேற்பட்ட வீரர்கள் விலகியுள்ளனர். சில வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து போட்டிகளில் விளையாடி வருகிறார்கள்.
இந்தியாவின் மூத்த துப்பாக்கி சுடுதல் வீராங்கனை சந்திரா தோமர் (89) கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மரணம் அடைந்தார்.
சந்திரா தோமர் 60 வயதுக்கு பிறகு தான் முதல்முறையாக துப்பாக்கி சுடுதலில் பங்கேற்றார். மூத்தோருக்கான தேசிய அளவிலான பல போட்டிகளில் வெற்றி பெற்று கவனத்தை ஈர்த்தார்.
அவரது மறைவுக்கு மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி டி 20 மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
முதலில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-1 என கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
பாகிஸ்தான்-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹராரேயில் நேற்று முன்தினம் தொடங்கியது.
டாஸ் ஜெயித்த ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால், பாகிஸ்தான் வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 59.1 ஓவர்களில் 176 ரன்னில் சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக ராய் கையா 48 ரன்கள் எடுத்தார்.
பாகிஸ்தான் அணி சார்பில் ஷகீன் ஷா அப்ரிடி, ஹசன் அலி தலா 4 விக்கெட் வீழ்த்தினார்கள்.
இதையடுத்து, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சை தொடர்ந்தது. முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 30 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 103 ரன்கள் எடுத்தது. இம்ரான் பட் 43 ரன்னுடனும், அபித் அலி 56 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில், 2-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. அபித் அலி 60 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 115 ரன்கள் சேர்த்தது.

அடுத்து இறங்கிய பவாத் ஆலம் நிதானமாகவும் பொறுப்புடனும் ஆடினார். அவருக்கு மொகமது ரிஸ்வான் ஒத்துழைப்பு கொடுத்தார்.
ரிஸ்வான் 45 ரன்னிலும், பஹீம் அஷ்ரப் டக் அவுட்டாகி வெளியேறினர். சிறப்பாக ஆடிய பவாத் ஆலம் சதமடித்து அசத்தினார்.
இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 120 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 374 ரன்கள் எடுத்துள்ளது. பவாத் ஆலம் 108 ரன்னுடனும், ஹசன் அலி 21 ரன்னுடனும் அவுட்டாகாமல் களத்தில் உள்ளனர். ஜிம்பாப்வே அணியை விட 198 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது பாகிஸ்தான்.
ஜிம்பாப்வே அணி சார்பில் டொனால்ட் டிரிபனோ 3 விக்கெட் வீழ்த்தினார்.
வங்காளதேசம் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பல்லகெலேவில் நேற்று முன்தினம் தொடங்கியது.
டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் கருணரத்னே, லஹிரு திரிமானே ஆகியோர் களமிறங்கினர். இருவரும் நிதானமாகவும், நேர்த்தியாகவும் ஆடி அணிக்கு சிறப்பான தொடக்கம் அமைத்து கொடுத்தனர்.
அணியின் ஸ்கோர் 209 ரன்னாக உயர்ந்த போது 12-வது சதத்தை அடித்து இருந்த கருணரத்னே (118 ரன், 190 பந்து, 15 பவுண்டரி) கேட்ச் ஆனார். திரிமன்னே 212 பந்துகளில் தனது 3-வது சதத்தை பூர்த்தி செய்தார்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 291 ரன்கள் குவித்துள்ளது.
திரிமானே 131 ரன்னுடனும், ஒஷாடா பெர்னாண்டோ 40 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

அடுத்து இறங்கிய ஏஞ்சலோ மேத்யூஸ் 5 ரன்னிலும், தனஞ்செய டி சில்வா 2 ரன்னிலும், பதும் நிசங்கா 30 ரன்னிலும் வெளியேறினர்.
இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 469 ரன்கள் குவித்துள்ளது. டிக்வெலா 64 ரன்னுடனும், ரமேஷ் மெண்டிஸ் 22 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
வங்காளதேசம் அணி சார்பில் தஸ்கின் அகமது 3 விக்கெட்டும், மெஹிதி ஹசன், ஷோரிபுல் இஸ்லாம், தஜுல் இஸ்லாம் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அகமதாபாத்தில் 26-வது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் நடைபெற்றது. டாஸ் வென்ற விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.
தொடக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் சிங் 7 ரன்னில் வெளியேறினார். அடுத்து ஆடிய கெய்ல் ராகுலுடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினார்.
கெய்ல் 46 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் பூரன் 0, ஹூடா 5, ஷாருக்கான் 0, என அடுத்தடுத்து வெளியேறினார்.
இதனையடுத்து ராகுலுடன் ஹர்பிரீத் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினர். இந்த ஜோடி கடைசி ஓவரில் 22 ரன்கள் குவித்தது. ராகுல் 51 பந்துகளில் 91 ரன்களும் ஹர்பிரீத் 17 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இறுதியில், பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது.
ஆர்சிபி தரப்பில் ஜேமிசன் 2, சாம்ஸ், சாஹல், அகமது தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி அணி களமிறங்கியது. விராட் கோலி, தேவ்தத் படிக்கல் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

ஆர் சிபி அணியில் விராட் கோலி 35 ரன்னும், ரஜத் பட்டிதார் 31 ரன்னும், ஹர்ஷல் படேல் 31 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். மற்றவர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், ஆர் சி பி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இது பஞ்சாப் அணி பெற்ற 3வது வெற்றி.
பஞ்சாப் அணி சார்பில் ஹர்பிரீத் பிரார் 3 விக்கெட்டும், ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
ஆர்சிபி அணி பெற்ற 2வது தோல்வி இதுவாகும்.






