என் மலர்
விளையாட்டு

சிட்னி:
கொரோனா 2-வது அலையின் தாக்கம் இந்தியாவில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. தினசரி பாதிப்பு நாள்தோறும் உயர்ந்த வண்ணமாய் உள்ளது. பலி எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது.
தடுப்பூசி, ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் இந்தியா திணறுகிறது. பல்வேறு நாடுகள் இந்தியாவுக்கு கொரோனா உதவிகளை அளித்து வருகிறது.

இந்தநிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும், அந்த நாட்டு யுனிசெப் அமைப்பும் இணைந்து இந்தியாவுக்கு கொரோனா உதவித் தொகையாக ரூ.37 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளது.
புதுடெல்லி:
ஐ.பி.எல். போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேவிட் வார்னர் கேப்டனாக பணியாற்றினார்.
ஐதராபாத் அணி தொடர்ச்சியாக தோல்வியை தழுவியது. அவரது தலைமையில் இந்த சீசனில் 5 ஆட்டத்தில் தோற்றது. ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது.
இதை தொடர்ந்து ஐதராபாத் அணியின் கேப்டன் பதவியில் இருந்து வார்னர் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக நியூசிலாந்தை சேர்ந்த வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
வில்லியம்சன் தலைமையிலும் ராஜஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஐதராபாத் தோற்றது. அந்த அணி ஒரு வெற்றி, 6 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது.
நேற்றைய ஆட்டத்தில் வார்னர் 11 பேர் கொண்ட அணியிலும் இடம்பெறவில்லை.
இந்தநிலையில் ஐதராபாத் அணி 11 பேர் கொண்ட லெவனில் இருந்து வார்னரை நீக்கியது கடினமான முடிவாகும் என்று அந்த அணியின் பயிற்சியாளர் டிரெவர் பயாலிஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, ‘‘வார்னர் ஒரு சிறந்த வீரர். அவரை அணியில் இருந்து நீக்கியது மிகவும் கடினமானது தான். இந்த நீக்கம் ஏமாற்றத்தை தருகிறது. அணியின் நலன் கருதி மாற்று வீரர் தேவை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனான லோகேஷ் ராகுல் நேற்று முன்தினம் இரவு கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்டார். மருந்து சாப்பிட்டும் சரியாகவில்லை. இதையடுத்து ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவபரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் அவர் குடல்வால் அழற்சியால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. குடல்வால், ஆபரேஷன் மூலம் அகற்றப்பட உள்ளது. எனவே அவர் இப்போதைக்கு ஐ.பி.எல். போட்டிகளில் ஆட முடியாது. அவருக்கு பதிலாக நேற்றைய டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் மயங்க் அகர்வால் அணியை வழிநடத்தினார்.
லோகேஷ் ராகுல் 7 ஆட்டங்களில் ஆடி 4 அரைசதம் உள்பட 331 ரன்கள் குவித்துள்ளார். அவர் இல்லாதது பஞ்சாப் அணிக்கு நிச்சயம் பின்னடைவு தான்.
அகமதாபாத்:
ஐ.பி.எல். போட்டியில் 24-வது நாளான இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது.
டெல்லியில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்- வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
ராஜஸ்தான் அணி 2 வெற்றி, 4 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது. அந்த அணி டெல்லி, கொல்கத்தாவை வீழ்த்தி இருந்தது. பஞ்சாப், சென்னை, பெங்களூர், மும்பை அணிகளிடம் தோற்றது. ஐதராபாத்தை வீழ்த்தி 3-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் ராஜஸ்தான் உள்ளது.
ஐதராபாத் அணி ஒரு வெற்றி, 5 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது. அந்த அணி பஞ்சாப்பை மட்டும் தோற்கடித்து இருந்தது. கொல்கத்தா, பெங்களூர், மும்பை, டெல்லி , சென்னை அணிகளிடம் தோற்றது.
இதனால் கேப்டன் பதவியில் இருந்து வார்னர் நீக்கப்பட்டு வில்லியம்சனுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஐதராபாத் அணி ராஜஸ்தானை வீழ்த்தி 2-வது வெற்றி பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் நடைபெறும் 2-வது ஆட்டத்தில் ரிஷப்பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் - லோகேஷ் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
டெல்லி அணி 5 வெற்றி, 2 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. அந்த அணி பஞ்சாப்பை வீழ்த்தி 6-வது வெற்றியுடன் முதலிடத்துக்கு முன்னேறும் ஆர்வத்தில் உள்ளது. பஞ்சாப்பை ஏற்கனவே 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்ததால் டெல்லி அணி நம்பிக்கையுடன் விளையாடும்.
பஞ்சாப் அணி 3 வெற்றி, 4 தோல்விகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. அந்த அணி ஏற்கனவே டெல்லியிடம் தோற்றதற்கு இன்றைய ஆட்டத்தில் பதிலடி கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரு அணிகளும் மோதிய ஆட்டத்தில் பஞ்சாப் 18-ல், டெல்லி 12-ல் வெற்றி பெற்றுள்ளன.
புதுடெல்லி:
ஐ.பி.எல். போட்டியில் பரபரப்பான ஆட்டத்தில் மும்பையிடம் சென்னை அணி தோல்வியை தழுவியது.
டெல்லியில் நடந்த 27-வது லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் களில் 4 விக்கெட் இழப்புக்கு 218 ரன் குவித்தது.
அம்பதி ராயுடு ஆட்டம் அதிரடியாக இருந்தது. அவர் 27 பந்தில் 72 ரன் (அவுட் இல்லை) எடுத்தார். இதில் 4 பவுண்டரிகளும், 7 சிக்சர்களும் அடங்கும். மொய்ன் அலி 36 பந்தில் 58 ரன்னும் (5 பவுண்டரி, 5 சிக்சர்), டுபிளசிஸ் 28 பந்தில் 50 ரன்னும் (2 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர்.
பொல்லார்ட் 2 விக்கெட் டும், டிரென்ட் போல்ட், பும்ரா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி ஆட் டத்தின் கடைசி பந்தில் வெற்றி பெற்றது.20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பொல்லார்ட் அதிரடியாக விளையாடி வெற்றிக்கு காரணமாக இருந்தார். அவர் 34 பந்தில் 87 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 6 பவுண்டரிகளும், 8 சிக்சர்களும் அடங்கும். ரோகித் சர்மா 28 பந்தில் 38 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்), குயின்டன் டி காக் 24 பந்தில் 35 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். சாம் கரண் 3 விக்கெட்டும், ஷர்துல் தாகூர், ஜடேஜா, மொய்ன் அலி தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
சென்னை சூப்பர் கிங்ஸ் 2-வது தோல்வியை தழுவியது. ஆனாலும் தொடர்ந்து புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
இந்த தோல்வி குறித்து சி.எஸ்.கே.கேப்டன் டோனி கூறியதாவது:-
இந்த ஆடுகளம் மிகவும் அற்புதமானதாக இருந்தது. இரு அணிகளுக்கு இடையிலான வித்தியாசம் செயல்படுத்துவதில்தான் இருந்தது. பந்து வீச்சாளர்களுக்கு சவால் விடும் வகையில் பிட்ச் இருந்தது.
அவர்களுக்கு கேட்ச்சுகள் உதவுகின்றன. ஆனால் முக்கியமான கட்டத்தில் நாங்கள் கேட்சுகளை தவற விட்டோம். திட்டத்தை செயல்படுத்துவது முக்கியமானது. அதில் நாங்கள் தவறி விட்டோம்.
புள்ளிகள் பட்டியலில் நாங்கள் முதலிடத்தில் இருந்ததால் இந்த தோல்வி அதிகம் பாதிக்காது. திட்டங்களை செயல்படுத்துவது முக்கியம். இந்த தோல்வியால் நாங்கள் துவண்டு விடவில்லை. ஆனால் சில விஷயங்களில் வீரர்கள் பாடம் கற்று இருப்பார்கள்.
இவ்வாறு டோனி கூறினார்.
சென்னை அணி 8-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை வருகிற 5-ந்தேதி டெல்லியில் சந்திக்கிறது.
மும்பை இந்தியன்ஸ் பெற்ற 4-வது வெற்றி இதுவாகும். அந்த அணி புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. மும்பை அணி அடுத்த ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை 4-ந்தேதி எதிர்கொள்கிறது.






