search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிரடி காட்டிய ராகுல்
    X
    அதிரடி காட்டிய ராகுல்

    ராகுல், ஹர்பிரீத் அபாரம் - ஆர்சிபி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது பஞ்சாப்

    ராகுல் 91 ரன்கள் விளாச, ஹர்பிரீத் 3 விக்கெட் வீழ்த்த ஆர்சிபி அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது பஞ்சாப் கிங்ஸ் அணி.
    அகமதாபாத்:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அகமதாபாத்தில் 26-வது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் நடைபெற்றது. டாஸ் வென்ற விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    தொடக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் சிங் 7 ரன்னில் வெளியேறினார். அடுத்து ஆடிய கெய்ல் ராகுலுடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினார்.

    கெய்ல் 46 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் பூரன் 0, ஹூடா 5, ஷாருக்கான் 0, என அடுத்தடுத்து வெளியேறினார்.
     
    இதனையடுத்து ராகுலுடன் ஹர்பிரீத் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினர். இந்த ஜோடி கடைசி ஓவரில் 22 ரன்கள் குவித்தது. ராகுல் 51 பந்துகளில் 91 ரன்களும் ஹர்பிரீத் 17 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    இறுதியில், பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது.

    ஆர்சிபி தரப்பில் ஜேமிசன் 2, சாம்ஸ், சாஹல், அகமது தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி அணி களமிறங்கியது. விராட் கோலி, தேவ்தத் படிக்கல் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

    3 விக்கெட் வீழ்த்திய ஹர்பிரீத் பிரார்

    பஞ்சாப் அணியினர் சிறப்பாக பந்து வீசியதால் குறிப்பிட்ட இடைவெளியில் ஆர்சிபி விக்கெட்டுகள் வீழ்ந்தன.

    ஆர் சிபி அணியில் விராட் கோலி 35 ரன்னும்,  ரஜத் பட்டிதார் 31 ரன்னும், ஹர்ஷல் படேல் 31 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். மற்றவர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், ஆர் சி பி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இது பஞ்சாப் அணி பெற்ற 3வது வெற்றி.

    பஞ்சாப் அணி சார்பில் ஹர்பிரீத் பிரார் 3 விக்கெட்டும், ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ஆர்சிபி அணி பெற்ற 2வது தோல்வி இதுவாகும்.
    Next Story
    ×