search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பந்தை விளாசும் அம்பதி ராயுடு
    X
    பந்தை விளாசும் அம்பதி ராயுடு

    தெறிக்க விட்ட ராயுடு... மும்பை அணிக்கு 219 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சென்னை

    டெல்லி மைதானத்தில் அதிரடியில் மிரட்டிய அம்பதி ராயுடு, பந்துகளை பவுண்டரி மற்றும் சிக்சர்களாக தெறிக்க விட்டார்.
    புதுடெல்லி:

    ஐபிஎல் 2021 தொடரின் 27-வது லீக் ஆட்டம் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ்  வென்ற மும்பை அணி, பந்துவீச்சை தேர்வு செய்ய, சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.

    தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கும் சென்னை அணி, தனது இடத்தை தக்க வைக்கும் முனைப்பில் கவனமாக ஆடியது.

    துவக்க வீரர் கெய்க்வாட், 4 ரன்களில் ஆட்டமிழந்தபோதும், டூ பிளெசிஸ், மொயீன் அலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி மும்பை பந்துவீச்சாளர்களை திணறடித்தனர். டூ பிளெசிஸ் 50 ரன்களும், மொயீன் அலி 58 ரன்களும் குவித்தனர். ரெய்னா 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். 

    பார்ட்னர்ஷிப்பில் 108 ரன்கள் குவித்த மொயீன் அலி, டூ பிளெசிஸ்

    அதன்பின்னர் அம்பதி ராயுடு அதிரடியில் மிரட்டினார். பந்துகளை பவுண்டரி மற்றும் சிக்சர்களாக தெறிக்க விட்டார். அவருக்கு ரவீந்திர ஜடேஜா கம்பெனி கொடுக்க, ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இந்த ஜோடியை மும்பை பவுலர்களால் கடைசி வரை பிரிக்க முடியவில்லை. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் சென்னை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் குவித்தது.

    20 பந்துகளிலேயே விரைவாக அரை சதம் கடந்த அம்பதி ராயுடு, மொத்தம் 27 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டரி, 7 சிக்சர்களுடன் 72 ரன்கள் விளாசினார். ஜடேஜா 22 பந்துகளில் 2 பவுண்டரி உள்பட 22 ரன்கள் சேர்த்தார். 

    இதையடுத்து, 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது.
    Next Story
    ×