என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராஜஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
Byமாலை மலர்29 April 2021 1:44 PM GMT (Updated: 29 April 2021 1:44 PM GMT)
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் வீரர் டிகாக் அரை சதம் அடித்து அசத்தினார்.
டெல்லி:
ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சாம்சன் 42 ரன்கள் எடுத்திருந்தார். மும்பை தரப்பில் ராகுல் சாஹர் 2 விக்கெட்டும் போல்ட், பும்ரா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. ரோகித் சர்மா 14 சூர்ய குமார் யாதவ் 16 ரன்கள் எடுத்து வெளியேறினர். டிகாக் குர்ணால் பாண்ட்யா ஜோடி சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். குர்ணால் பாண்ட்யா 39 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
இறுதியில் 9 பந்துகள் மீதமுள்ள நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடி டிகாக் 50 பந்துகளில் 70 ரன்கள் எடுத்திருந்தார். பொல்லார்டு 8 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இது மும்பை அணிக்கு 3-வது வெற்றி ஆகும்.
ராஜஸ்தான் தரப்பில் மோரிஸ் 2 விக்கெட்டும் முஸ்பிகுர் ரகுமான் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
Next Story
×