என் மலர்tooltip icon

    செய்திகள்

    மும்பை இந்தியன்ஸ்
    X
    மும்பை இந்தியன்ஸ்

    ஐபிஎல் புள்ளிகள் பட்டியல்: முதல் மூன்று இடங்களுக்கு கடும் போட்டி- 4-வது இடத்தில் மும்பை

    கொல்கத்தா நைட் ரைடரஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் எளிதாக வெற்றி பெற்றதுடன், புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
    ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதலில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 171 ரன்கள் எடுத்தது. பின்னர் மும்பை இந்தியன்ஸ் 18.3 ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    மற்றொரு ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 154 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய டெல்லி 16.3 ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    டெல்லி கேப்பிட்டல்ஸ்

    மும்பை இந்தியன்ஸ் இந்த வெற்றியின் மூலம் 6 போட்டிகளில் 3-ல் வெற்றி பெற்று 4-வது இடத்தை பிடித்துள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் 7 போட்டிகளில் 5-ல் வெற்றி பெற்று 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஆர்சிபி 5 வெற்றிகள் பெற்றிருந்தாலும் 3-வது இடத்திற்கு சரிந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் 5 வெற்றிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது.

    ஐபிஎல் அணிகளின் புள்ளிகள் பட்டியல் முழு விவரம்:

    வ.எ.அணிகள்போட்டிகள்வெற்றிகள்புள்ளிகள்நெ.ர.ரேட்
    1சி.எஸ்.கே.65101.475
    2டெல்லி75100.466
    3ஆர்.சி.பி.65100.089
    4மும்பை6360.071
    5கே.கே.ஆர்724-0.494
    6பஞ்சாப்624-0.608
    7ஆர்.ஆர்.624-0.690
    8ஐதராபாத்612-0.264
    Next Story
    ×