என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிவேகமாக 5 ஆயிரம் ரன்களை கடந்து டி வில்லியர்ஸ் சாதனை
Byமாலை மலர்27 April 2021 6:04 PM GMT (Updated: 27 April 2021 6:04 PM GMT)
ஐபிஎல் கிரிக்கெட்டில் டேவிட் வார்னருக்குப் பிறகு 5 ஆயிரம் ரன்களை கடந்த 2-வது வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை ஏபி டி வில்லியர்ஸ் பெற்றுள்ளார்.
டெல்லி கேப்பிட்டல்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணிகளுக்கு இடையிலான போட்டியில் அகமதாபாத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் விளாசியது. இதற்கு ஏபி டி வில்லியர்ஸின் அதிரடி முக்கிய காரணம். அவர் 42 பந்தில் 3 பவுண்டரி, 5 சிக்சருடன் 75 ரன்கள் விளாசினார்.
12 ரன்கள் எடுத்திருந்தபோது, ஐபிஎல் கிரிக்கெட்டில் 5 ஆயிரம் ரன்களை பதிவு செய்தார். இதன்மூலம் 5 ஆயிரம் ரன்கள் அடித்த 2-வது வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் டேவிட் வார்னர் 5 ஆயிரம் ரன்கள் அடித்துள்ளார்.
மேலும், குறைந்த பந்துகளில் 5 ஆயிரம் ரன்கள் அடித்த வீரர்கள் என்ற சாதனையையும் படைத்துள்ளார். 37 வயதாகும் டி வில்லியர்ஸ் 3288 பந்துகளில் 5 ஆயிரம் ரன்கள் அடித்துள்ளார். டேவிட் வார்னர் 3554 பந்துகளில் 5 ஆயிரம் ரன்கள் அடித்துள்ளார்.
சுரேஷ் ரெய்னா 3620 பந்துகளில் அடித்துள்ளார். ரோகித் சர்மா 3817 பந்துகளிலும், விராட் கோலி 3827 பந்துகளிலும் 5 ஆயிரம் ரன்கள் அடித்துள்ளனர்.
Next Story
×