search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித்
    X
    டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித்

    டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் சொந்த நாடு திரும்புகிறார்களா?: ஆஸி. மீடியா தகவல்

    ஆடம் ஜம்பா, கேன் ரிச்சர்ட்சன், ஆண்ட்ரூ டை சொந்த நாடு திரும்பியுள்ள நிலையில், மற்ற வீரர்களும் ஐபிஎல் தொடரில் இருந்து விலக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    ஐபிஎல் 2021 கிரிக்கெட் சீசன் கடந்த 9-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே இந்தியாவில் 2-ம் கட்ட கொரோனா வைரஸ் அலை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. தினந்தோறும் பாதிப்பு 3.5 லட்சத்தை எட்டியுள்ளது. மே 2-வது வாரம் உச்சத்தை தொடும் என கணித்துள்ளனர்.

    இந்தியாவின் உருமாறிய கொரோனா தொற்று, தங்கள் நாடுகளுக்குள் ஊடுருவி விடக்கூடாது என்பதில் மற்ற நாடுகள் மிகக் கவனமாக உள்ளன.

    குறிப்பாக ஆஸ்திரேலியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மே 15-ந்தேதி வரை இந்தியாவில் இருந்து   விமானங்கள் வர தடைவிதித்துள்ளது.

    இதற்கிடையில் ஐபிஎல் போட்டியில் விளையாடி வந்த ஆடம் ஜம்பா, கேன் ரிச்சர்ட்சன், ஆண்ட்ரூ டை ஆகியோர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகி சொந்த நாடு திரும்பிவிட்டனர்.

    ஒருவேளை ஆஸ்திரேலியா நாட்டின் எல்லையை மூடிவிட்டால், ஐபிஎல் தொடர் முடிந்த பின்னர் ஆஸ்திரேலியா வீரர்கள் சொந்த நாடு திரும்புவதில் கடும் சிக்கல் ஏற்பட்டு விடும். இதனால் டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித்தும் சொந்த நாடு திரும்ப விரும்புவதாக ஆஸ்திரேலியா மீடியா ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

    ஆனால், மே 15-ந்தேதி வரை இந்தியாவில் இருந்து விமானங்கள் வர ஆஸ்திரேலியா தடைவிதித்துள்ளது. இதனால் இருவரும் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வீரர்கள், பயிற்சியாளர்கள், வர்ணனையாளர்கள் என சுமார் 30 பேர் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் ஆஸ்திரேலியா செல்ல இருப்பதாகவும் அந்த மீடியா தெரிவித்துள்ளது.

    ஆஸ்திரேலியா வீரர்கள் சென்றுவிட்டால், ஐபிஎல் தொடரின் விறுவிறுப்பில் சறுக்கல் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.
    Next Story
    ×