search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மார்கன்
    X
    மார்கன்

    கொல்கத்தா அணி 4-வது தோல்வி - பேட்ஸ்மேன்கள் மீது மார்கன் பாய்ச்சல்

    கடந்த 5 போட்டிகளிலும் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.

    மும்பை:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பையில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் தோற்கடித்தது.

    முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 133 ரன் எடுத்தது. அதிகபட்சமாக திரிபாதி 36 ரன் எடுத்தார். ராஜஸ்தான் தரப்பில் கிறிஸ்மோரிஸ் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    அடுத்து விளையாடிய ராஜஸ்தான் 18.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 134 ரன் எடுத்து வென்றது. கேப்டன் சஞ்சு சாம்சன் 42 ரன்னும், டேவிட் மில்லர் 24 ரன்னும், ஷிலம் துபே, ஜெய்ஸ்லால் தலா 22 ரன்னும் எடுத்தனர்.

    ராஜஸ்தான் பெற்ற 2-வது வெற்றி (5 ஆட்டம்) இதுவாகும். கொல்கத்தா 4-வது தோல்வியை (5 ஆட்டம்) சந்தித்தது.

    இந்த வெற்றி குறித்து அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியதாவது:-

    இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. பந்துவீச்சாளர்கள் பணி சிறப்பாக இருந்தது. கடந்த 5 போட்டிகளிலும் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். சீனியர் வீரர்களை போல் இளம் வீரர்களும் நன்றாக வீசினார்கள். கிரிஸ் மோரிஸ் விக்கெட்டுகளை வீழ்த்தும் வேட்கையில் இருந்தார். அவரது பந்துவீச்சு மிகவும் அபாரமாக இருந்தது.

    எனது பேட்டிங்கை ரசித்து விளையாடினேன். இனிவரும் ஆட்டங்களில் தொடர்ந்து வெற்றி பெற விரும்புகிறோம். அடுத்த போட்டியிலும் திட்டமிட்டு விளையாடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தொடர்ந்து 4வது தோல்வியை தழுவியது. இந்தத் தோல்வி குறித்து அந்த அணி கேப்டன் மார்கன் கூறியதாவது:-

    எங்களது பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. ஒட்டு மொத்த இன்னிங்சும் நோக்கம் இல்லாமல் இருந்தது. 40 ரன்கள் வரை குறைவாக எடுத்துவிட்டோம். மோசமான பேட்டிங்கால் தோல்வி அடைந்தோம்.

    முந்தைய ஆடுகளம் போல் இந்த பிட்ச் இல்லை. இதனால் எங்களால் சவாலை சமாளிக்க முடியவில்லை. இனிவரும் போட்டிகளில் சிறப்பாக விளையாட முயற்சிப்போம்.

    இவ்வாறு மார்கன் கூறி உள்ளார்.

    Next Story
    ×