search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட் கோலி - படிக்கல்
    X
    விராட் கோலி - படிக்கல்

    படிக்கல் ஆட்டம் அற்புதமாக இருந்தது - கேப்டன் விராட் கோலி பாராட்டு

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பையில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை 10 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தோற்கடித்து அபார வெற்றி பெற்றது.

    மும்பை:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பையில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை 10 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தோற்கடித்து அபார வெற்றி பெற்றது.

    முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 177 ரன் எடுத்தது. ஷிவம் துபே 46 ரன்னும், ராகுல் திவேதியா 40 ரன்னும் எடுத்தனர்.

    பெங்களூர் தரப்பில் முகமது சிராஜ், ஹர்‌ஷல் பட்டேல் தலா 3 விக்கெட்டை கைப்பற்றினர். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூர் அணியில் தொடக்க வீரர்கள் தேவ்தத் படிக்கல், விராட் கோலி ஜோடி சிறப்பாக விளையாடியது. ராஜஸ்தான் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறித்தனர்.

    படிக்கல் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை அடித்தார். பெங்களூரு 16.3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 181 ரன் எடுத்து வெற்றி பெற்றது. படிக்கல் 101 ரன்னும், கோலி 72 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். பெங்களூர் அணி தொடர்ந்து 4-வது வெற்றியை பெற்றுள்ளது. அந்த அணி இதுவரை தோல்வியை சந்திக்கவில்லை.

    ராஜஸ்தான் 3-வது தோல்வியை (4 ஆட்டம்) சந்தித்தது. வெற்றி குறித்து பெங்களூரு கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

    தேவ்தத் படிக்கலின் ஆட்டம் ஒரு சிறந்த இன்னிங்ஸ். கடந்த ஆண்டு முதல் சீசனிலும் சிறப்பாக விளையாடி இருந்தார். அவரிடம் சிறந்த திறமை இருக்கிறது. சிறந்த எதிர்காலத்தை நோக்கி ஒருவர் செல்வது சிறப்பாக உள்ளது.

    20 ஓவர் கிரிக்கெட் என்பது பார்ட்னர்ஷிப் பேட்டிங்கை பற்றியது என்று நான் நினைக்கிறேன். நீங்கள் எப்போதும் ஆதிக்கம் செலுத்துபவராக இருக்க முடியாது. ஒருவர் சிறப்பாக விளையாடும் போது அவருக்கு பேட்டிங் வாய்ப்பைதருவது எனக்கு முக்கியம். இன்று எனது பங்களிப்பு வேறுபட்டு இருந்தது. அதை நான் தேர்ந்தெடுத்தேன்.

    சதத்தை பற்றி நானும் படிக்கல்லும் பேசினோம். அவர் என்னிடம் ஆட்டத்தை முடிக்கவிடுங்கள். இன்னும் நிறைய (சதம்) வரும் என்றார். உடனே நான் அவரிடம், இப்படி சொன்ன பிறகு நீ சதம் அடிக்க வேண்டும் என்றேன். அவர் சதத்துக்கு தகுதியானவர். இது குறை பாடற்ற இன்னிங்ஸ் ஆகும்.

    பந்து வீச்சாளர்களில் எங்களுக்கு பல தனித்துவமான பெயர்கள் இல்லை. ஆனால் எங்களிடம் திறமையான பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.

    கடைசி கட்ட ஓவர்களில் தனித்து நிற்கும் அணியாக இருக்கிறோம். உண்மையில் நாங்கள் 30 முதல் 35 ரன்களை கட்டுப்படுத்தினோம்.

    படிக்கலின் ஆட்டம் மிகச்சிறந்ததாக இருந்தாலும் என்னை பொறுத்தவரை ஆக்ரோ‌ஷமான, நம்பிக்கையாக பந்துவீச்சு முக்கியமானது என்றார்.

    Next Story
    ×