search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டு பிளிஸ்சிஸ் - ருத்துராஜ் கெய்க்வாட்
    X
    டு பிளிஸ்சிஸ் - ருத்துராஜ் கெய்க்வாட்

    டு பிளிஸ்சிஸ், ருத்துராஜ் கெய்க்வாட் அபாரம்: கொல்கத்தாவுக்கு 221 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது சிஎஸ்கே

    டு பிளிஸ்சிஸ் 60 பந்தில் 95 ரன்களும், ருத்துராத் கெய்க்வாட் 42 பந்தில் 64 ரன்களும் விளாச சென்னை சூப்பர் கிங்ஸ் 3 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் குவித்துள்ளது.
    மும்பை:

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- சிஎஸ்கே இடையிலான ஐபிஎல் தொடரின் 15-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற கொல்கத்தா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ருத்துராஜ் கெய்க்வாட், டு பிளிஸ்சிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடினர். முதல் மூன்று போட்டிகளில் சொதப்பிய ருத்துராஜ் இந்த போட்டியில் கொல்கத்தா பந்து வீச்சை துவம்சம் செய்தார். பவர்- பிளேயில் விக்கெட் இழப்பின்றி 54 ரன்கள் அடித்தது.

    ருத்துராஜ் கெய்க்வாட் 33 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் அடித்தார். சென்னை அணி 11.2 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. டு பிளிஸ்சிஸ் 35 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் அடித்தார். சென்னை அணி 15.1 ஓவரில் 150 ரன்னைத் தொட்டது.

    ருத்துராஜ் 42 பந்தில் 6 பவுண்டரி, 4 சிக்சருடன் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மொயீன் அலி 12 பந்தில் 25 ரன்களும், டோனி 8 பந்தில் 17 ரன்களும் விளாசினர்.

    டு பிளிஸ்சிஸ் 60 பந்தில் 8 பவுண்டரி, 4 சிக்சருடன் 95 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் குவித்துள்ளது.
    Next Story
    ×