search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    RCB
    X
    RCB

    ஐபிஎல் புள்ளிகள் பட்டியல்: ஆர்சிபி முதல் இடம், சிஎஸ்கே-வுக்கு 3-வது இடம்

    ஐபிஎல் கிரிக்கெட்டில் இதுவரை முடிவடைந்த போட்டிகள் அடிப்படையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஒரு வெற்றி கூட பெறாமல் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
    ஐபிஎல் 2021 சீசன் கிரிக்கெட்டில் நேற்று மும்பை இந்தியன்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாடிய போட்டியுடன் இதுவரை 13 ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன.

    இதில் விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி 3 போட்டிகளில் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் நான்கு போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.

    CSK

    சென்னை சூப்பர் கிங்ஸ் 3 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் 4-ல் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது.

    கொல்கத்தா, ராஜஸ்தான் ராயல்ஸ், பங்சாப் கிங்ஸ் அணிகள் 3-ல் தலா ஒரு வெற்றியுடன் முறையே 5 முதல் 7 இடங்களை பெற்றுள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெற்றி ஏதும் பெறாமல் கடைசி இடத்தில் உள்ளது.

    SRH

    ரெட் ரன்ரேட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் +1.194 பெற்று முன்னணியில் உள்ளது. ஆர்சிபி +0.750 பெற்று 2-வது இடத்திலும், டெல்லி கேப்பிட்டல்ஸ் +0.426 பெற்று 3-வது இடத்திலும் உள்ளது.
    Next Story
    ×