search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஷிஷ் நெஹ்ரா, கேஎல் ராகுல்
    X
    ஆஷிஷ் நெஹ்ரா, கேஎல் ராகுல்

    195 ரன்கள் அடித்தும் பஞ்சாப் தோல்வி: கேஎல் ராகுல் மீது ஆஷிஷ் நெஹ்ரா சாடல்

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் பந்து வீச்சாளர்களை தவறாக கேஎல் ராகுல் கையாண்டார் என ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.
    மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 195 ரன்கள் விளாசியது. இருந்தாலும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஷிகர் தவான் 49 பந்தில் 92 ரன்கள் விளாச 18.2 ஓவரிலேயே 4 விக்கெட்டை மட்டுமே இழந்து டெல்லி கேப்பிட்டல்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    195 ரன்கள் அடித்தும் பஞ்சாப் அணி தோல்வியடைந்ததற்கு பந்து வீச்சாளர்களை கேஎல் ராகுல் தவறாக கையாண்டதே காரணம் என ஆஷிஷ் நெஹ்ரா குற்றம்சாட்டியுள்ளார்.

    இதுகுறித்து ஆஷிஷ் நெஹ்ரா கூறுகையில் ‘‘டி20 விளையாட்டில் ஒவ்வொரு வீரர்களும் செய்ய வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. நீங்கள் சிறப்பாக பந்து வீச வேண்டும், பேட்டிங் செய்ய வேண்டும். சிறப்பாக பீல்டிங் செய்ய வேண்டும் என விரும்புவீர்கள்.

    உங்களுக்கு நல்லது அல்லது கெட்ட நாட்கள் இருக்கும். விளையாட்டில் இது பொதுவான விசயம்தான். ஆனால் குறைந்த பட்சம், அதை உங்களால் செய்ய முடியும் என்ற  குறிப்பிட்ட விசயங்கள் உங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும்.

    அதிக ரன்கள் விட்டுக்கொடுக்கும் வெளிநாட்டு பந்து வீச்சாளர்களுக்கு தொடக்கத்திலேயே ஓவர்கள் வழங்கக் கூடாது. மெரிடித் 10 ஓவர்களுக்கு பின் வந்தார். முதல் ஓவரிலேயே ஸ்மித்தை அவுட்டாக்கினார். ஷாமி கூட நான்கு ஓவர்களை நான்கு மாறுப்பட்ட ஸ்பெல்லில் வீசினார். அர்ஷ்தீப் உடன் போட்டியை தொடங்க தயார் செய்து இருந்தனர். ஆகவே, போட்டியை நீங்கள் தொடக்கத்தில் கட்டுப்பாட்டில் வைக்க இருந்தீர்களா? அல்லது போட்டியின் இறுதியிலா?.

    சில யுக்திகளை பயன்படுத்துவதற்கான கேஎல் ராகுல் கூட தொடக்க வீரராக களம் இறங்காமல் இருக்கலாம். மாறாக சக்சேனா, ஷமி அல்லது ஷாருக்கான என யாரை வேண்டுமென்றாலும் களம் இறக்கலாம். ஆகவே, கேப்டனாக கேஎல் ராகுல், அனில் கும்ப்ளே உடன் உட்கார்ந்து ஆலோசனை நடத்த வேண்டும். ஏனென்றால், ஒரு யுக்திடன் போட்டியில் களம் இறங்க வேண்டும். டெல்லிக்கு எதிரான அதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

    பந்து வீச்சு திட்டத்தில் குழப்பம் அடைந்து விட்டனர். நான்கு வெவ்வேறு பந்து வீச்சாளருடன் தொடங்கினர். பெரும்பாலும் குறைபாடு உள்ள அணிகளே இவ்வறு செயல்படும். ஆகவே, மிகப்பெரிய தவறை செய்து விட்டனர்’’ என்றார்.
    Next Story
    ×