என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 19.3 ஓவரில் 125 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • ஆப்கானிஸ்தான் 18 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    ஹராரே:

    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் போட்டியை ஜிம்பாப்வே வென்றது.

    இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 ஆட்டத்தில் 53 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 ஆட்டம் ஹராரேவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 19.3 ஓவரில் 125 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் சிக்கந்தர் ரசா 37 ரன்னில் அவுட் ஆனார்.

    ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான் 3 விக்கெட்டும், முஜிப் உர் ரகுமான், அஹமத்சாய் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் இப்ராகிம் ஜட்ரன் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து அணியை வெற்றிபெற வைத்தார்.

    இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 18 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன் டி 20 தொடரை கைப்பற்றியது.

    • ஹாங்காங் ஓபன் டென்னிஸ் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது.
    • இதன் காலிறுதி சுற்றில் ரஷியாவின் அன்னா கலின்ஸ்கயா காயத்தால் வெளியேறினார்.

    ஹாங்காங்:

    ஹாங்காங் ஓபன் டென்னிஸ் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் ரஷியாவின் அன்னா கலின்ஸ்கயா, கனடா வீராங்கனை விக்டோரியா எம்போகா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய எம்போகா 6-1 என முதல் செட்டை வென்றார். அடுத்த செட்டில் 3-1 என முன்னிலை பெற்றிருந்தபோது கலின்ஸ்கயா காயத்தால் விலகினார். இதையடுத்து, எம்போகா அரையிறுது சுற்றுக்கு முன்னேறினார்.

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி 125 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
    • இந்த போட்டியில் ஷிவம் துபே 4 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 2-வது போட்டி, மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 18.4 ஓவரில் 125 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டும் எல்லீஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 18.4 ஓவரில் 126 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் (1-0) முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில் 2019-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய ஆடும் லெவனில் ஷிவம் துபே இருந்து முதல் முறையாக இந்தியா தோல்வியை தழுவியுள்ளது.

    2019-ம் ஆண்டில் இருந்து ஷிவம் துபே 60 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். இதில் 3 போட்டிகள் முடிவில்லாமல் போனது. 56 போட்டிகள் வெற்றி பெற்றுள்ளது. ஒரே ஒரு தோல்வி அடங்கும். துபேவின் தொடர் வெற்றியை ஆஸ்திரேலிய அணி முடிவுக்கு கொண்டுவந்துள்ளது.  

    • அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்ஷ் 46 ரன்னில் ஆட்டமிழந்தார்.
    • இந்திய தரப்பில் வருண், குல்தீப், பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 2-வது போட்டி, மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில்- அபிஷேக் சர்மா களமிறங்கினர். முதல் ஓவரில் சுப்மன் கில் 6 பந்துகள் சந்தித்து 1 ரன் மட்டுமே எடுத்தார். அதனை தொடர்ந்து 10 பந்துகளில் 5 எடுத்த நிலையில் அவர் ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த சஞ்சு சாம்சன் 2 ரன்னிலும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 1 ரன்னிலும் திலக் வர்மா டக் அவுட்டிலும் நடையை கட்டினார்.

    இதனால் பவர் பிளேயில் இந்திய அணி 40 ரன்களுக்கு 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    இதனையடுத்து அபிஷேக் சர்மாவும் அக்சர் படேலும் நிதானமாக விளையாடினர். இதில் அக்சர் படேல் தேவையில்லாமல் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

    ஹர்ஷித் ராணா - அபிஷேக் சர்மா ஜோடி நல்ல பாட்னர்ஷிப் அமைத்து ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். அதிரடியாக விளையாடிய அபிஷேக் அரைசதம் அடித்து அசத்தினார். ராணா 35 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த துபே 4 ரன்னில் வெளியேறினார்.

    ஒரு முனையில் போராடிய அபிஷேக் 68 ரன்னில் அவுட் ஆனார். இதனால் இந்திய அணி 18.4 ஓவரில் 125 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டும் எல்லீஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்திய அணியில் அபிஷேக் சர்மா, ராணா இவர்களை தவிர மற்ற எந்த வீரரும் இரட்டை இலக்க ரன்களை எடுக்கவில்லை.

    இதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட்- மிட்செல் மார்ஷ் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். 28 ரன்கள் இருக்கும் போது டிராவிஸ் ஹெட் அவுட் ஆனார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்ஷ் 46 ரன்னில் ஆட்டமிழந்தார். அவர் குல்தீப் யாதவின் ஒரே ஓவரில் 20 ரன்கள் குவித்து அதே ஓவரில் ஆட்டமிழந்தார்.

    அதனை தொடர்ந்து டிம் டேவிட் 1, இங்கிலீஸ் 20, என விக்கெட்டுகளை இழந்தனர். அதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 14, ஷார்ட் 0 என அடுத்தடுத்து பும்ரா வீசிய பந்தில் விக்கெட்டுகளை இழந்தனர்.

    இறுதியில் ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் வருண், குல்தீப், பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது ஒருநாள் போட்டி நவம்பர் 2-ந் தேதி நடக்கவுள்ளது.

    • பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடைபெற்று வருகிறது.
    • இதன் 2வது சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் வெற்றி பெற்றார்.

    பாரிஸ்:

    பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், இத்தாலியின் லாரென்சோ சொனேகா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய சொனேகா முதல் செட்டை 6-3 என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட மெத்வதேவ் அடுத்த இரு செட்களை 7-6 (7-5), 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னர் 7-5, 6-1 என்ற நேர் செட்களில் அர்ஜெண்டினாவின் பிரான்சிஸ்கோ செரண்டலோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    • ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
    • ஜெமிமா ரோட்ரிக்ஸ் 127 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

    மகளிர் உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை அதிரடியாக வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்திய அணி 48.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 341 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பரான வெற்றியோடு 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்த போட்டியில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 127 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

    அவரது புகைப்படம் மற்றும் அவரது தந்தையுடன் வெற்றியை கொண்டாடிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான எம் எஸ் தோனியிடம் ஜெமிமா வெற்றி கோப்பையை வாங்கும் சிறிய வயது புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    ஆட்டத்தை இறுதிவரை கொண்டு சென்று முடிப்பதில் வல்லவரான எம்எஸ் தோனியுடன் மகளிர் அணியின் பினிஷர் என ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    • சஞ்சு சாம்சன் 2 ரன்னிலும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 1 ரன்னிலும் திலக் வர்மா டக் அவுட் ஆனார்கள்.
    • ஆஸ்திரேலியா தரப்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 2-வது போட்டி, மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில்- அபிஷேக் சர்மா களமிறங்கினர். முதல் ஓவரில் சுப்மன் கில் 6 பந்துகள் சந்தித்து 1 ரன் மட்டுமே எடுத்தார். அதனை தொடர்ந்து 10 பந்துகளில் 5 எடுத்த நிலையில் அவர் ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த சஞ்சு சாம்சன் 2 ரன்னிலும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 1 ரன்னிலும் திலக் வர்மா டக் அவுட்டிலும் நடையை கட்டினார்.

    இதனால் பவர் பிளேயில் இந்திய அணி 40 ரன்களுக்கு 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    இதனையடுத்து அபிஷேக் சர்மாவும் அக்சர் படேலும் நிதானமாக விளையாடினர். இதில் அக்சர் படேல் தேவையில்லாமல் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

    இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஹர்ஷித் ராணா களமிறங்கினார். இருவரும் நல்ல பாட்னர்ஷிப் அமைத்து ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். அதிரடியாக விளையாடிய அபிஷேக் அரைசதம் அடித்து அசத்தினார். ராணா 35 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த துபே 4 ரன்னில் வெளியேறினார்.

    ஒரு முனையில் போராடிய அபிஷேக் 68 ரன்னில் அவுட் ஆனார். இதனால் இந்திய அணி 18.4 ஓவரில் 125 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டும் எல்லீஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்திய அணியில் அபிஷேக் சர்மா, ராணா இவர்களை தவிர மற்ற எந்த வீரரும் இரட்டை இலக்க ரன்களை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • சஞ்சு சாம்சன் 2 ரன்னிலும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 1 ரன்னிலும் திலக் வர்மா டக் அவுட் ஆனார்கள்.
    • ஆஸ்திரேலியா தரப்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 2-வது போட்டி, மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில்- அபிஷேக் சர்மா களமிறங்கினர். முதல் ஓவரில் சுப்மன் கில் 6 பந்துகள் சந்தித்து 1 ரன் மட்டுமே எடுத்தார். அதனை தொடர்ந்து 10 பந்துகளில் 5 எடுத்த நிலையில் அவர் ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த சஞ்சு சாம்சன் 2 ரன்னிலும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 1 ரன்னிலும் திலக் வர்மா டக் அவுட்டிலும் நடையை கட்டினார்.

    இதனால் பவர் பிளேயில் இந்திய அணி 40 ரன்களுக்கு 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. அபிஷேக் சர்மாவும் அக்சர் படேலும் விளையாடி வருகின்றனர். ஆஸ்திரேலியா தரப்பில் ஹேசில்வுட் 3 ஓவர்களில் 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    • இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
    • இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யவில்லை.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 2-வது போட்டி, மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இந்தப் போட்டியில், கேப்டன்கள் சூர்யகுமார் யாதவ் மற்றும் மிட்செல் மார்ஷ் உட்பட இரு அணி வீரர்களும் தங்களது கைகளில் கருப்புப் பட்டை அணிந்து களமிறங்கியுள்ளனர்.

    ஏனென்றால் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 17 வயது இளம் கிரிக்கெட் வீரரான பென் ஆஸ்டின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், அவரது குடும்பத்தினருக்குத் தங்கள் இரங்கலைத் தெரிவிக்கும் வகையிலும் இரு அணி வீரர்களும் கருப்புப் பட்டை அணிந்து விளையாடுகின்றனர்.

    மெல்போர்னைச் சேர்ந்த 17 வயது இளம் வீரரான பென் ஆஸ்டின், ஃபெர்ன்ட்ரீ கல்லி கிரிக்கெட் கிளப் வலைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது அவரது கழுத்துப் பகுதியில் அதிவேகமாகத் தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவர், உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, 2 நாட்கள் தீவிர சிகிச்சை அளித்தும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்த போட்டியில் மட்டுமில்லாமல் நேற்று நவி மும்பையில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியிலும், ஆஸ்திரேலிய மகளிர் அணி வீராங்கனைகள் பென் ஆஸ்டினின் நினைவாகக் கருப்புப் பட்டைகளை அணிந்து விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கான்பெர்ராவில் நடந்த முதலாவது ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது
    • இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி இன்று நடக்கிறது.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் இன்று நடக்கிறது.

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரை (1-2) இழந்தது. அடுத்து 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கான்பெர்ராவில் நடந்த முதலாவது ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியங்களில் ஒன்றான மெல்போர்னில் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    • இந்த இலக்கை நிர்ணித்த போது பாதி வேலை முடிந்து விட்டது என்று தான் நினைத்தேன்.
    • தோல்வி அடைந்து பேசும் இடத்தில் நான் இருப்பது கொஞ்சம் வினோதமாக தான் இருக்கின்றது.

    மும்பை:

    ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆன ஆஸ்திரேலிய அணி இந்தியாவிடம் தோல்வியை தழுவி தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறது. ஆஸ்திரேலிய அணி 339 ரன்களை இலக்காக நிர்ணயித்தும் இந்திய அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருக்கிறது.

    இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணி கேப்டன் அலிசா ஹெலி,

    இந்த போட்டி மிகவும் அற்புதமாக இருந்தது. ஆனால் இந்த தோல்விக்கு நாங்கள் தான் காரணம் எங்களுடைய அணியின் பேட்டிங்கை நாங்கள் சிறப்பாக முடிக்கவில்லை. இதே போல் எங்களுடைய பந்துவீச்சும் சிறப்பாக இல்லை. சில கேட்ச்களையும் நாங்கள் தவறவிட்டோம்.

    இறுதியில் தோல்வியை தழுவியது மிகவும் ஏமாற்றமாக இருக்கின்றது. பல வாய்ப்புகளை உருவாக்கினோம். ஆனால் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள தெரியவில்லை. அதற்கு நானும் ஒரு காரணம் என்று தான் சொல்வேன்.

    இந்த இலக்கை நிர்ணித்த போது பாதி வேலை முடிந்து விட்டது என்று தான் நினைத்தேன். கூடுதலாக சில ரன்ளை அடித்திருக்க வேண்டும். இந்தியா வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டார்கள். நெருக்கடியான சமயத்தில் அபாரமாக பேட்டிங் செய்து வெற்றியை தாண்டி விட்டார்கள்.

    தோல்வி அடைந்து பேசும் இடத்தில் நான் இருப்பது கொஞ்சம் வினோதமாக தான் இருக்கின்றது. இனி அடுத்த உலக கோப்பை நோக்கி திட்டங்களை தீட்ட வேண்டியது தான். அடுத்த உலகக்கோப்பை நிச்சயம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் என்று நினைக்கின்றேன். ஆனால் கண்டிப்பாக அடுத்த உலகக் கோப்பையில் நான் விளையாட மாட்டேன்.

    மகளிர் கிரிக்கெட் விளையாடுவதில் எங்களுக்கு பெருமை . ஆனால் இந்த போட்டியில் தோல்விக்கு நாங்கள்தான் காரணம். கண்டிப்பாக எங்கள் தவறிலிருந்து பாடம் கற்றுக் கொள்வோம்.

    என்று அலிசா ஹெலி தெரிவித்துள்ளார்.

    • ஜெமிமா மற்றும் ஹாமன்பிரீத் கவுர் ஆகியோருக்கு வாழ்த்துக்கள் என சச்சின் கூறினார்.
    • ஆஸ்திரேலியா போன்ற வலிமையான எதிராளியை எதிர்த்து இந்திய அணி சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது என கோலி கூறினார்.

    மும்பை:

    இந்தியாவில் நடந்து வரும் 13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 49.5 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 338 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மெகா இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 48.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 341 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியோடு 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

    இந்திய தரப்பில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் தனது 3-வது சதத்தை அடித்தார். அட்டகாசமாக ஆடிய அவர் அணியை வெற்றிகரமாக கரைசேர்க்க வித்திட்டார்.

    இந்த நிலையில், இந்திய மகளிர் அணிக்கு சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக சச்சின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    அற்புதமான வெற்றி. முன்னணியில் இருந்து வழிநடத்தியதற்காக ஜெமிமா மற்றும் ஹாமன்பிரீத் கவுர் ஆகியோருக்கு வாழ்த்துக்கள். ஸ்ரீ சரணி மற்றும் தீப்தி சர்மா , நீங்கள் பந்தைக் கொண்டு ஆட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருந்தீர்கள். மூவர்ணக் கொடியை உயரே பறக்க விடுங்கள். என தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக விராட் கோலி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    ஆஸ்திரேலியா போன்ற வலிமையான எதிராளியை எதிர்த்து இந்திய அணி சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது. ஒரு பெரிய ஆட்டத்தில் ஜெமிமாவின் சிறப்பான ஆட்டம், உண்மையான மன உறுதி, நம்பிக்கை மற்றும் ஆர்வத்தின் வெளிப்பாடு. சபாஷ் இந்தியா. என தெரிவித்துள்ளார். 

    ×