என் மலர்
விளையாட்டு
- தசைப் பிடிப்பு காரணங்களால் பிரண்டன் டெய்லர் விலகியுள்ளார்.
- இங்கிலாந்து நட்சத்திர வீரர்களான சாம் கரண், டாம் கரண் ஆகியோரின் சகோதரர் பென் கரண்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் நடத்துகின்றன. இந்த தொடரில் ஜிம்பாப்வே அணி 2 போட்டிகளில் விளையாடி 2 போட்டியிலும் வெற்றி பெற்று அந்த குரூப்-ல் 2-வது இடத்தில் உள்ளது. இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று உலகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து நட்சத்திர வீரர்களான சாம் கரண் மற்றும் டாம் கரண் ஆகியோரின் சகோதரரான பென் கரண் ஜிம்பாப்வே அணியில் இணைந்துள்ளார். விக்கெட் கீப்பர் பேட்டரான பிரெண்டன் டெய்லருக்கு பதிலாக பென் கரண் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஜிம்பாப்வே அணி தனது முதல் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்றபோது விளையாடிய பிரண்டன் டெய்லர் (40 வயது) தற்போது தசைப் பிடிப்பு காரணங்களால் விலகியுள்ளார்.
கடந்த 2004-ல் அறிமுகமான பிரண்டன் டெய்லர் இதுவரை 36 டெஸ்ட், 207 ஒருநாள், 59 டி20 போட்டிகளில் ஜிம்பாப்வே அணிக்காக விளையாடியுள்ளார்.
பென் கரண் நல்ல ஆல்ரவுண்டர் என்பதால், ஜிம்பாப்வே அணிக்கு கூடுதல் பலத்தைச் சேர்ப்பார் எனக் கருத்தப்படுகிறது.
- அமெரிக்கா தரப்பில் சைதேஜா முக்கமல்லா 51 பந்திகளில் 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- நெதர்லாந்து தரப்பில் பாஸ் டி லீட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
டி20 உலகக் கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் அமெரிக்கா- நெதர்லாந்து அணி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய அமெரிக்கா அணி தொடக்க முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
அதிரடியாக விளையாடிய சைதேஜா முக்கமல்லா 51 பந்திகளில் 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் மோனாங்க் படேல் 36 ரன்னில் வெளியேறினார். கடைசி நேரத்தில் போராடிய சுபம் ரஞ்சனே 48 ரன்கள் எடுத்தார்.
இதனால் அமெரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 196 ரன்கள் குவித்தது. நெதர்லாந்து தரப்பில் பாஸ் டி லீட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- கனடா தரப்பில் ஹர்ஷ் அரை சதம் எடுத்து ஆட்டமிழந்தார்.
- யுஏஇ தரப்பில் ஜுனைத் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் நடத்துகின்றன. இதில் இன்று 19-வது லீக் ஆட்டத்தில் யுஏஇ- கனடா அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற கனடா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய கனடா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் எடுத்தது. யுஏஇ தரப்பில் ஜுனைத் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து யுஏஇ அணியின் தொடக்க வீரர்களாக ஆர்யஷ் சர்மா, கேப்டன் வசீம் ஆகியோர் களமிறங்கினர். இதில் வசீம் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர்.
இந்நிலையில் ஆர்யஷ் உடன் ஷோயப் கான் ஜோடி பொறுப்புடன் விளையாடிய ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். இறுதிவரை போராடிய இருவரும் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். யுஏஇ அணி 19.4 ஓவரில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 151 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
- சஞ்சுவுக்கு பதிலாக ஜடேஜாவை ரூ.14 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டிரேடிங் செய்திருந்தது.
- சஞ்சு சாம்சனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.18 கோடிக்கு டிரேடிங் முறையில் வாங்கியது.
இந்தியாவின் டி20 கிரிக்கெட் திருவிழா என்றழைக்கப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 19-வது சீசன் வரும் மார்ச் மாதம் இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த தொடருக்கான வீரர்கள் மினி ஏலமும் கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த சஞ்சு சாம்சன் ஏலத்திற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ரூ.18 கோடிக்கு டிரேடிங் முறையில் வாங்கப்பட்டார்.
அதே சமயம் சஞ்சுவுக்கு பதிலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சிஎஸ்கே ஆல் ரவுண்டர்கள் ரவீந்திர ஜடேஜாவை ரூ.14 கோடிக்கும், சாம் கரணை ரூ.2.4 கோடிக்கும் டிரேடிங் செய்திருந்தது. இதனால் எதிர் வரும் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக யார் செயல்படுவார் என்ற கேள்விகளும் அதிகரித்திருந்தன.
இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய கேப்டனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ரியான் பராக் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை ராஜஸ்தான் அணிக்காக 84 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 7 அரைசதங்களுடன் 1,566 ரன்களைச் சேர்த்துள்ளார்.
மேலும் கடந்தாண்டு சஞ்சு சாம்சன் காயம் காரணமாக முதல் சில போட்டிகளை தவறவிட்ட நிலையில், ரியான் பராக் பொறுப்பு கேப்டனாக சில போட்டிகளில் செயல்பட்ட நிலையில், தற்சமயம் அணியின் முழு நேர கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
- அபிஷேக் சர்மா வயிற்று போக்கு, அஜீரணம் போன்ற சில பிரச்சனைகளால் சிகிச்சை பெற்று வந்தார்.
- பாகிஸ்தானுடன் வரும் 15-ம் தேதி இந்திய அணி மோதுகிறது.
டி20 உலகக்கோப்பை இந்தியா மற்றும் இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா 2 போட்டிகளில் விளையாடி 2 போட்டியிலும் வெற்றி பெற்றது. இதனையடுத்து இந்திய அணி பரம எதிரியான பாகிஸ்தானை வரும் 15-ம் தேதி எதிர்கொள்ள உள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா வயிற்று போக்கு, அஜீரணம் போன்ற சில பிரச்சனைகளால் அவதிப்பட்டதால் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார்.
அபிஷேக் சர்மா முழுமையாக குணமடைந்து விட்டபோதிலும் அவர் உடல் பலவீனமாக உள்ளதாக கூறப்படுகிறது. வயிற்று போக்குக்கு பிறகு உடல் எடை சில கிலோ குறைந்து விட்டதாக அபிஷேக் சர்மாவே தெரிவித்து இருக்கிறார்.
இதனால் அவர் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் வாய்ப்புகள் மிகவும் குறைவு என தகவல்கள் கூறுகின்றன. நமீபியாவுக்கு எதிரான போட்டி தொடங்குவதற்கு முன்பு அபிஷேக் சர்மா ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் மிஸ் ஆகலாம் என கேப்டன் சூர்யகுமார் கூறியிருந்தார்.
இதனால் அபிஷேக் சர்மா பாகிஸ்தானுக்கு எதிராக 100% விளையாட வாய்ப்பில்லை. அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் களமிறங்குவார் என தகவல் வெளியாகி உள்ளது. நமீபியாவுக்கு எதிராக சஞ்சு சாம்சன் சொதப்பினாலும் 3 சிக்சர்களுடன் 8 பந்துகளில் 22 ரன்கள் விளாசினார். இதனால் அவரை கிஷான் கிஷனுடன் ஒப்பனிங்கில் விளையாட வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- ஆஸ்திரேலியா தரப்பில் மேட் ரென்ஷா 65 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- ஜிம்பாப்வே தரப்பில் முசரபானி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் நடத்துகின்றன. இந்தத் தொடரின் 19வது போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதியது.
இதில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 2 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 19.3 ஓவரில் 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் ஜிம்பாப்வே அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே தரப்பில் முசரபானி 4 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.
இந்நிலையில் இந்த வெற்றிக்கு நாங்கள் தகுதியானவர்கள் என ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராஸா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
மிகவும் மகிழ்ச்சியாகவும், எல்லாவற்றிற்கும் மேலாக, மிகவும் பெருமையாகவும் இருக்கிறது. தம்பிகள் சேர்ந்து சாதித்ததை பார்க்கும் ஒரு அண்ணனை போல உணர்கிறேன்.
நீண்ட காலமாக நாங்கள் உருவாக்கி வந்த ஒற்றுமையை எப்படிச் செயல்படுத்துகிறது என்பதைப் பார்ப்பதும் மகிழ்ச்சியாக இருந்தது. வெளியில் இருந்து பார்ப்பது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது, அதற்கு மேல், ஒரு வெற்றி. இது நம்பமுடியாதது.
நாங்கள் வந்த விதம், பந்து வீசிய விதம், நாங்கள் தொடங்கிய விதம், ஒவ்வொரு கேட்சை எடுத்த விதம், சில பவுண்டரி தடுத்தது. இது நம்பமுடியாதது. அதாவது, சிறுவர்களைக் குறை சொல்ல எந்த காரணமும் இல்லை. அவர்கள் இன்று வெற்றி பெறத் தகுதியானவர்கள் என்று நான் நினைக்கிறேன்.
ஒரு பெரும் வெற்றியைப் பெற்றுவிட்டோம் என்பதற்காக நிதானத்தை இழக்காமல், ஒவ்வொரு போட்டியாகக் கவனம் செலுத்தி முன்னேறுவோம். தனக்கு ஏற்பட்ட தசைப்பிடிப்பு கவலைப்படத்தக்கது அல்ல. ஓரிரு நாட்களில் சரியாகிவிடும் என கூறினார்.
- கனடா தரப்பில் ஹர்ஷ் அரை சதம் எடுத்து ஆட்டமிழந்தார்.
- யுஏஇ தரப்பில் ஜுனைத் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் நடத்துகின்றன. இதில் இன்று 19-வது லீக் ஆட்டத்தில் யுஏஇ- கனடா அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற கனடா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய கனடா அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தது.
ஹர்ஷ் தாக்கர்- நவ்னீத் தலிவால் ஆகியோர் சிறப்பாக விளையாடிய ரன்களை குவித்தனர். இதில் நவ்னீத் தலிவால் தேவையில்லாமல் ரன் அவுட் ஆகி வெளியேறினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்ஷ் அரை சதம் அடித்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் கனடா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் எடுத்தது. யுஏஇ தரப்பில் ஜுனைத் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- ஆஸ்திரேலியா தரப்பில் மேட் ரென்ஷா 65 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- ஜிம்பாப்வே தரப்பில் முசரபானி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் நடத்துகின்றன. இந்தத் தொடரின் 19வது போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. கொலம்போவில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 2 விக்கெட் இழப்புக்கு 169 ரன்களை குவித்துள்ளது. ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர் ப்ரியன் ஆட்டமிழக்காமல் 56 பந்துகளில் 64 ரன்களை (7 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) அடித்து அசத்தினார்.
இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 19.3 ஓவரில் 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் ஜிம்பாப்வே அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே தரப்பில் முசரபானி 4 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.
டி20 உலகக் கோப்பை தொடரில் இருமுறை நேருக்கு நேர் சந்தித்த 2 போட்டிகளில் ஆஸ்திரேலியாவை ஜிம்பாப்வே அணி வீழ்த்தி சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் மிகப்பெரிய அணியான ஆஸ்திரேலியா வீழ்த்திய ஜிம்பாப்வே அணிக்கு பல கிரிக்கெட் பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அதன்படி தமிழக வீரர் அஸ்வின் கூறியதாவது:- பேட்டிங் மற்றும் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது, ஆனால் டோனி முன்யோங்காவின் பீல்டிங் அழுத்தத்தை அதிகப்படுத்தியுள்ளது. அவர் குறைந்தது 12-15 ரன்களையாவது சேமித்துள்ளார். மேலும் டீப் மிட் விக்கெட்டில் ஒரு அற்புதமான கேட்ச் மூலம் ஒப்பந்தத்தை நிறைவு செய்கிறார். இந்த டி20 உலகக் கோப்பையில் ஆடுகளங்கள் மிகவும் சமநிலையில் இருந்த விதம் மிகவும் பிடித்திருந்தது.
இர்பான் பதான்
சிக்கந்தர் ராசா தலைமையில் இந்த ஜிம்பாப்வே டி20 அணி சிறப்பாக உருவாகி வருகிறது. ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது ஒருபோதும் எளிதானது அல்ல, ஆனால் ஜிம்பாப்வே இப்போது 120 உலகக் கோப்பை வரலாற்றில் இரண்டு முறை சாதித்துள்ளது.
- ஆஸ்திரேலியா தரப்பில் மேட் ரென்ஷா 65 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- ஜிம்பாப்வே தரப்பில் முசரபானி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் நடத்துகின்றன. இந்தத் தொடரின் 19வது போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. கொலம்போவில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 2 விக்கெட் இழப்புக்கு 169 ரன்களை குவித்துள்ளது. ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர் ப்ரியன் ஆட்டமிழக்காமல் 56 பந்துகளில் 64 ரன்களை (7 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) அடித்து அசத்தினார்.
இதனையடுத்து ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களாக ஜோஸ் இங்கிலிஸ் மற்றும் டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். இதில் இங்கிலிஸ் 8 ரன்னிலும் அடுத்து வந்த கேமரூன் கிரீன், டிம் டேவிட் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தனர். அதனை தொடர்ந்து டிராவிஸ் ஹெட் 17 ரன்னில் வெளியேறினர்.
இதனையடுத்து மேக்ஸ்வெல்- மேட் ரென்ஷா ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். நிதானமாக விளையாடிய மேக்ஸ்வெல் 32 பந்தில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ஸ்டோய்னிஸ் 6, பென் த்வார்ஷுயிஸ் 6 என ஆட்டமிழந்தனர். ஒரு முனையில் அதிரடியாக விளையாடிய மேட் ரென்ஷா அரை சதம் எடுத்து அணிக்கு நம்பிக்கை அளித்தார். தொடர்ந்து போராடிய அவர் 65 ரன்னில் வெளியேறினார்.
இதனால் ஆஸ்திரேலியா அணி 19.3 ஓவரில் 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் ஜிம்பாப்வே அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே தரப்பில் முசரபானி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீசியது.
- ரியான் புரி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் நடத்துகின்றன. இந்தத் தொடரின் 19வது போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. கொலம்போவில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீசியது.
இதனால் பேட்டிங்கை தொடங்கிய ஜிம்பாப்வே அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்க வீரர்களான ப்ரியன் பென்னெட், தடிவனஷெ ரன்குவிப்பில் கவனம் செலுத்தினர். தடிவனஷெ 21 பந்துகளில் 35 ரன்கள் (7 பவுண்டரிகள்) அடித்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரியான் புரி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 30 பந்துகளில் 35 ரன்களை (4 பவுண்டரிகள்) அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் சிக்கந்தர் ராஸா தன் பங்கிற்கு 25 ரன்களை சேர்த்தார். போட்டி முடிவில் ஜிம்பாப்வே அணி 2 விக்கெட் இழப்புக்கு 169 ரன்களை குவித்துள்ளது. ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர் ப்ரியன் ஆட்டமிழக்காமல் 56 பந்துகளில் 64 ரன்களை (7 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) அடித்து அசத்தினார்.
- ஹாட்ரிக் வெற்றியை பெறப்போவது தென் ஆப்பிரிக்காவா? நியூசிலாந்தா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
- 2-வது போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்சை 10 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தியது.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாளை (14-ந்தேதி) இரவு 7 மணிக்கு அகமதாபாத்தில் நடைபெறும் ஆட்டத்தில் டி பிரிவில் உள்ள தென் ஆப்பிரிக்கா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளும் இரண்டு ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. இதனால் ஹாட்ரிக் வெற்றியை பெறப்போவது தென் ஆப்பிரிக்காவா? நியூசிலாந்தா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
மர்க்ராம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி முதல் போட்டியில் கனடாவை 57 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 2-வது ஆட்டத்தில் கடும் போராட்டத்துக்கு பிறகு ஆப்கானிஸ்தானை தோற் கடித்தது. 2-வது சூப்பர் ஓவரில் தான் வெற்றி பெற முடிந்தது.
சான்ட்னெர் தலைமையிலான நியூசிலாந்து அணி முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்சை 10 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தியது.
இரு அணிகளும் சம பலம் வாய்ந்தவை என்பதால் இந்தப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
நாளை நடைபெறும் மற்ற ஆட்டங்களில் அயர்லாந்து- ஓமன் (கொழும்பு, காலை 11 மணி), இங்கிலாந்து-ஸ்காட்லாந்து (கொல்காத்தா, மாலை 3 மணி) அணிகள் மோதுகின்றன.
அயர்லாந்து, ஓமன் அணிகள் முதல் 2 ஆட்டங்களில் தோற்றன. இதனால் முதல் வெற்றி யாருக்கு என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து, ஸ்காட்லாந்து அணிகள் தலா 2 புள்ளிகளுடன் உள்ளன. இதனால் 2-வது வெற்றி யாருக்கு ? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- கடைசியாக 2016-ல் பெங்களூருவில் ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெற்றது.
- கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து மைதானத்தில் போட்டிகள் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது.
பெங்களூரு எம். சின்னசாமி மைதானத்தில் மீண்டும் ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்த கர்நாடக அமைச்சரவை நேற்று (பிப்.12) ஒப்புதல் வழங்கியுள்ளது.
கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் முதல்முறையாக ஆர்சிபி அணி வென்றதையடுத்து, ஜுன் மாதம் சின்னசாமி மைதானத்தில் வெற்றிவிழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து மைதானத்தில் போட்டிகள் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது.
தற்போது நீதிபதி டி'குன்ஹா அறிக்கையின் பரிந்துரைகளை ஏற்று, பாதுகாப்பு விதிமுறைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மைதானத்தின் முழு கொள்ளளவையும் பயன்படுத்தாமல், அதிகபட்சமாக 30,000 முதல் 35,000 பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என அரசு நிபந்தனை விதித்துள்ளது.
மைதானத்தின் நுழைவு வாயில்களை அகலப்படுத்துதல், கூட்டத்தை ஒழுங்குபடுத்த AI கண்காணிப்பு கேமராக்களைப் பயன்படுத்துதல் போன்ற மேம்பாடுகளைச் செய்ய கர்நாடக கிரிக்கெட் சங்கத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது மைதானத்தில் விளையாட அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், வழக்கமான நடைமுறைப்படி நடப்பு சாம்பியன் ஆர்சிபி அணியின் சொந்த மைதானமான இதில், ஐபிஎல் தொடரின் முதல் போட்டியும், குவாலிபையர் 2 மற்றும் இறுதிப் போட்டி நடைபெறும்.
கடைசியாக 2016-ல் பெங்களூருவில் ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெற்றது. அதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் ஆர்சிபி அணி தோல்வியை தழுவியது.






