என் மலர்tooltip icon

    விளையாட்டு

    24 பந்தில் 23 ரன்கள் தேவை என்ற நிலையில், இந்திய அணியால் 2 பந்துகள் மீதமுள்ள நிலையிலேயே நியூசிலாந்தை வீழ்த்த முடிந்தது.
    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய நியூசிலாந்து 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் சேர்த்தது.

    தொடக்க வீரர் மார்ட்டின் கப்தில் 42 பந்தில் 70 ரன்களும், 3-வது வீரராக களம் இறங்கிய சாப்மேன் 50 பந்தில் 63 ரன்களும் விளாசினர். இந்திய அணி சார்பில் புவனேஷ்வர் குமார் மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். தீபக் சாஹர், முகமது சிராஜ் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    பின்னர் 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. தொடக்க வீரர் கே.எல். ராகுல் 14 பந்தில் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து ரோகித் சர்மா உடன் சூர்யாகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ரோகித் சர்மா 36 பந்தில் 48 ரன்கள் எடுத்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். சூர்யகுமார் 40 பந்தில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இருவரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா எளிதில் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஒரு கட்டத்தில் கடைசி நான்கு  ஓவரில் 23 ரன்கள் தேவைப்பட்டது. 17-வது ஓவரை டிரென்ட் பவுல்ட் வீசினார். இந்த ஓவரில் இரண்டு ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து சூர்யகுமார் யாதவை வீழ்த்தினார்.

    இதனால் கடைசி 3 ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரில் பெர்குசன் 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் கடைசி 2 ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 19-வது ஓவரை சவுத்தி வீசினார். இந்த ஓவரில் 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

    டிரென்ட் பவுல்ட்

    இதனால் கடைசி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது. டேரில் மிட்செல் அந்த ஓவரை வீசினார். முதல் பந்தில் வைடு மூலம் ஒரு ரன் கிடைத்தது. அதற்குப் பதிலாக வீசப்பட்ட பந்தில் வெங்கடேஷ் அய்யர் பவுண்டரி அடித்தார். இதனால் 5 பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டது.

    அடுத்த பந்தில் வெங்கடேஷ் அய்யர் ஆட்டமிழந்தார். இதனால் 4 பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டது. 3-வது பந்தில் அக்சார் பட்டேல் ஒரு ரன் எடுத்தார். 4-வது பந்தை ரிஷாப் பண்ட் பவுண்டரிக்கு விரட்ட, இந்தியா 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    புவனேஷ்வர் குமார், அஸ்வின் சிறப்பாக பந்து வீசி தலா 2 விக்கெட் வீழ்த்த தீபக் சாஹர் 42 ரன்களும், முகமது சிராஜ் 39 ரன்களும் வாரி வழங்கினர்.
    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் வெங்கடேஷ் அய்யர் அறிமுகம் ஆனார்.

    நியூசிலாந்து அணியின் மார்ட்டின் கப்தில், டேரில் மிட்செல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மிட்செல் சந்தித்த முதல் பந்திலேயே ரன்ஏதும் எடுக்காமல் புவி வீசிய முதல் ஓவரில் க்ளீன் போல்டானார். அடுத்து மார்ட்டின் கப்தில் உடன் மார்க் சாம்மேன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதலில் நிதானமாக விளையாடிய இந்த ஜோடி, அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    சாப்மேன் 50 பந்தில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மார்ட்டின் கப்தில் 42 பந்தில 70 ரன்கள் எடுத்து வெளியேறினார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 109 ரன்கள் விளாசியது. இதனால் நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன் அடித்துள்ளது. 

    இந்திய அணி வீரர்கள்

    புவனேஷ்வர் குமார் 4 ஓவரில் 24 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டும், அஸ்வின் 4 ஓவரில் 23 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    முகமது சிராஜ் 39 ரன்களும், தீபக் சாஹர் 42 ரன்களும் விட்டுக்கொடுத்தனர்.
    நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியில் வெங்கடேஷ் அய்யருக்கு இடம் கிடைத்துள்ளது.
    ஜெய்ப்பூர்:

    இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார்.

    இன்றைய போட்டிக்கான இரு அணியின் பட்டியல் வருமாறு:-

    இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), லோகேஷ் ராகுல், சூர்யகுமார் யாதவ், வெங்கடேஷ் அய்யர், ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷாப் பண்ட், அக்‌ஷர் பட்டேல், ஆர்.அஸ்வின், புவனேஷ்வர் குமார், முகமது சிராஜ், தீபக் சாஹர். 

    நியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், டேரில் மிட்செல், மார்க் சாப்மன், கிளைன் பிலிப்ஸ், டிம் செய்பெர்ட், ரச்சின் ரவிந்தர், மிட்செல் சான்ட்னெர், டிம் சவுதி (கேப்டன்), டாட் ஆஸ்டில், பெர்குசன், போல்ட், 

    கும்ப்ளே வகித்து வந்த ஐ.சி.சி. கிரிக்கெட் கமிட்டியின் தலைவர் பதவி தற்போது, பி.சி.சி.ஐ. தலைவராக இருக்கும் சவுரவ் கங்குலிக்கு வழங்கப்பட்டுள்ளது
    இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராக திகழ்ந்தவர் சவுரவ் கங்குலி. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதும் மேற்கு வங்காள கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்தார். அதன்பின் பி.சி.சி.ஐ. தலைவராக நியமிக்கப்பட்டார். தற்போது அந்த பதவியில் இருந்து வருகிறார்.

    சவுரவ் கங்குலிக்கு ஐ.சி.சி. தலைவர் ஆகும் வாய்ப்பு இருந்தது. ஆனால், சில விசயங்களால் தலைவர் பதவியை வகிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், ஐ.சி.சி. கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    அனில் கும்ப்ளே

    அனில் கும்ப்ளே கடந்த 2012-ல் இருந்து மூன்று முறை மூன்று வருட பதவிக்காலம் அடிப்படையில் அப்பதவியை வகித்து வந்தார். அவரது பதவிக்காலம் முடிவடைந்ததையொட்டி, தற்போது அவருக்குப் பதிலாக சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார்.

    சவுரவ் கங்குலியை கிரிக்கெட் கமிட்டியின் சேர்மன் பதவிக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என ஐ.சி.சி. தலைவர் கிரேக் பார்கிளே தெரிவித்துள்ளார்.
    தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள அர்ஜெண்டினா, ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நெதர்லாந்து ஆகிய அணிகள் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

    சான்ஜூயான்:

    உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2022) நவம்பர் 21-ந் தேதி முதல் டிசம்பர் 18-ந் தேதி வரை கத்தாரில் நடக்கிறது.

    இந்த போட்டியில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் கத்தார் மட்டுமே நேரடியாக விளையாடும். மீதியுள்ள 31 நாடுகளும் தகுதி சுற்று மூலமே முன்னேற முடியும்.

    உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது.

    4 முறை சாம்பியனான ஜெர்மனி, டென்மார்க், 5 முறை கோப்பையை வென்ற பிரேசில், 2 தடவை சாம்பியனான பிரான்ஸ், பெல்ஜியம், குரோஷியா, 2010-ம் ஆண்டு சாம்பியனான ஸ்பெயின், செர்பியா, 1966- ம் ஆண்டு சாம்பியனான இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் முறையே வரிசைப்படி தகுதி பெற்று இருந்தன.

    இந்த நிலையில் தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள அர்ஜெண்டினா, ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நெதர்லாந்து ஆகிய அணிகள் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

    சான்ஜூயான் நகரில் நடந்த தகுதி சுற்று ஆட்டம் ஒன்றில் அர்ஜெண்டினா- பிரேசில் அணிகள் மோதின. இந்த ஆட்டம் கோல் எதுமின்றி டிரா ஆனது. நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சியால் கோல் போட முடியவில்லை.

    இந்த போட்டி டிராவில் முடிந்தாலும், அர்ஜெண்டினா அணி உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது. தென் அமெரிக்க கண்டத்தில் தகுதி சுற்றில் முதல் 4 இடங்களில் அந்த அணி உள்ளது.

    அர்ஜெண்டினா உலக கோப்பை போட்டிக்கு 18-வது முறையாக தகுதி பெற்றுள்ளது. இதில் 2 முறை (1978, 1986) சாம்பியன் பட்டம் பெற்று இருந்தது.

    இதேபோல ஐரோப்பிய கண்டத்தில் நடந்த தகுதி சுற்று ஆட்டத்தில் நெதர்லாந்து 2-0 என்ற கணக்கில் நார்வேயை வீழ்த்தியது. இதன் மூலம் அந்த அணி உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது.

    ஐரோப்பிய கண்டத்தில் வலுவான அணிகளில் ஒன்றான நெதர்லாந்து கடந்த உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெறவில்லை. தற்போது அந்த அணி வீரர்கள் தகுதி சுற்றில் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

    நெதர்லாந்து அணி 10-வது முறையாக உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. அந்த அணி 3 முறை 2-வது இடத்தை பிடித்துள்ளது.

    உலக கோப்பை போட்டிக்கு இதுவரை 12 நாடுகள் தகுதி பெற்றுள்ளன. இன்னும் 19 நாடுகள் தகுதிபெற வேண்டியுள்ளது. 


    2025-ம் ஆண்டுக்கான ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான் நடத்துவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவரும், முன்னாள் கேப்டனுமான ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒருநாள் போட்டி உலக கோப்பை, 20 ஓவர் உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 போட்டிகளை நடத்துகிறது.

    2024 முதல் 2031-ம் ஆண்டுவரையிலான கால கட்டத்தில் நடைபெறவுள்ள ஐ.சி.சி. போட்டி விவரங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று அறிவித்தது.

    2025-ம் ஆண்டுக்கான ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி போட்டியை நடத்தும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 30 ஆண்டுகளுக்கு பிறகு ஐ.சி.சி.யின் பெரிய போட்டியை அந்த நாடு நடத்துகிறது.

    கடைசியாக 1996-ம் ஆண்டு ஒருநாள் போட்டி உலக கோப்பையை இந்தியா, இலங்கையுடன் இணைந்து பாகிஸ்தான் நடத்தி இருந்தது.

    இந்த நிலையில் 2025 ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான் நடத்துவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவரும், முன்னாள் கேப்டனுமான ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறி இருப்பதாவது:-

    2025 ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி போட்டியை பாகிஸ்தான் நடத்துவது மிகவும் பெருமையும், மகிழ்ச்சியும் அளிக்கிறது. இந்த செய்தி பாகிஸ்தான் ரசிகர்கள் மற்றும் உலக ரசிகர்களை நிச்சயம் உற்சாகப்படுத்தும். நாங்கள் இந்த போட்டியை மிகவும் சிறப்பான முறையில் நடத்தி எங்களது திறமையை வெளிப்படுத்துவோம்.

    இவ்வாறு ரமீஸ் ராஜா கூறியுள்ளார். 

    இந்தியாவின் நட்சத்திர வீரர் ஸ்ரீகாந்த் தனது துவக்க ஆட்டத்தில் பிரான்ஸ் வீரர் கிறிஸ்டோ பாபோவை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
    பாலி:

    பாலியில் இந்தோனேசிய மாஸ்டர்ஸ் சூப்பர்-750 பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியாவின் நட்சத்திர வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் மற்றும் முன்னணி வீரர், வீராங்கனைகள் முதல் தடையை கடந்துள்ளனர்.

    முன்னாள் நம்பர்-1 வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்த் தனது துவக்க ஆட்டத்தில் (ஒற்றையர் முதல் சுற்று) பிரான்ஸ் வீரர்  கிறிஸ்டோ பாபோவை 21-18 15-21 21-16 என்ற செட்கணக்கில் வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார். அடுத்த சுற்றில் ஸ்ரீகாந்த் அநேகமாக இந்தோனேசிய வீரர் ஜோனாதனை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

    கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் துருவ் கபிலா-சிக்கி ரெட்டி ஜோடி, இந்தோனேசியாவின் பிரவீன் ஜோர்டான்-மெலாட்டி தேவா ஜோடியை 21-11 22-20 என்ற நேர்செட்களில் வீழ்த்தி, அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

    பி.வி.சிந்து

    மற்றொரு முன்னணி இந்திய வீரரான பருபள்ளி காஷ்யப், தனது முதல் ஆட்டத்தில் டென்மார்க் வீரர் ஹன்ஸ் கிறிஸ்டியனிடம் 10-21 19-21 என்ற செட்கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார். 

    பி.வி.சிந்து, லக்சயா சென் ஆகியோர் ஏற்கனவே 2ம் சுற்றுக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
    ரோகித் சர்மா- ராகுல் டிராவிட்டின் புதிய கூட்டணி இன்றைய 20 ஓவர் போட்டியில் வெற்றியுடன் தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    ஜெய்ப்பூர், நவ. 17-

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் ஆட்டம் மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.

    இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று நடக்கிறது.

    வீராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகிய தால் இந்திய அணிக்கு ரோகித் சர்மா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல பயிற்சியாளர் பதவிக்கு ரவி சாஸ்திரி இடத்தில் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.

    ரோகித் சர்மா- ராகுல் டிராவிட்டின் புதிய கூட்டணி இன்றைய 20 ஓவர் போட்டியில் வெற்றியுடன் தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப் படுகிறது.

    வீராட் கோலி நியூசிலாந் துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் விளையாட வில்லை. அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல முதல் டெஸ்டிலும் ஆடவில்லை.

    வீராட் கோலி குறித்து செய்தியாளர்கள் சந்திப் பில் புதிய கேப்டன் ரோகித் சர்மாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    வீராட் கோலியின் பங்களிப்பு அப்படியே இருக்கும். இதற்கு முன்பு அவர் அணியில் எப்படி இருந்தாரோ அதே பணியை தொடர்ந்து செய்வார். அவர் மிக முக்கியமான வீரர். பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர். ஒவ்வொரு போட்டியிலும் ஒரு அடையாளத்தை விட்டு செல்கிறார்.

    வீராட் கோலி திரும்பும் போது அணிக்கு பலம் மட்டுமே கிடைக்கும். பேட்ஸ்மேனாக அவரது அனுபவம் அணிக்கு மிகவும் முக்கியமானது.

    அணியில் சிறு சிறு ஓட்டைகள் இருக்கிறது. அதை சரி செய்வது மிகப் பெரிய சவாலாக இருக்கும். அனைத்து அணிகளிலும் இதேபோல் ஒரு பிரச்சினை இருக்கத்தான் செய்யும். எந்த அணியையும் பின் பற்றும் எண்ணம் எங்களுக்கு இல்லை. தனி அடை யாளத்தை உருவாக்கவே விரும்புகிறோம்.

    முதலில் பேட்டிங் செய்யும்போதும், 2-வது பேட்டிங் செய்யும்போதும் உள்ள ஒப்பீடு மாறுபட்டது. ஒவ்வொரு வீரரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக வெளிப்படுத்துவார்கள்.

    20 ஓவர் போட்டியை பொறுத்தவரை அச்சமின்றி விளையாடுவது அவசிய மாகும். அதற்கு தன்னம் பிக்கை ஏற்படுத்துவது மிகவும் முக்கியமானது. நாம் எப்போதுமே வெற்றிபெற முடியாது. தோல்வியும் ஏற்படும். ஆனால் அதே நேரத்தில் நமது பங்களிப்பு முக்கியமாக இருக்க வேண்டும்.

    சையது முஸ்தாக் அலி மற்றும் ஐ.பி.எல். ஆகிய இரண்டு 20 ஓவர் தொடரில் வீரர்கள் விளையாடி உள்ளனர். இதிலிருந்து அவர்கள் அனுபவங்களை பெற்றிருப்பார்கள். அதே மாதிரி பங்களிப்பில் விளை யாடுவது அவசியமாகும்.

    இவ்வாறு ரோகித் சர்மா கூறியுள்ளார்.

    நியூசிலாந்து அணி கேப் டன் வில்லியம்சன் 20 ஓவர் தொடரில் விளையாட வில்லை. அதனால் அவருக்கு பதிலாக சவுத்தி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். வில்லியம்சன் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளார். * * * பிரதமர் மோடியை உலக பொருளாதார அமைப்பின் தலைவர் போர்ஜ் பிரெண்டே சந்தித்து பேசினார். * * * அம்மா நவமி பூஜையையொட்டி பாட்னாவில் பெண்கள் அம்மா மரத்தை வழிபட்ட காட்சி.

    இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜெய்ப்பூரில் இன்று நடக்கிறது.
    ஜெய்ப்பூர்:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.

    இதில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) இரவு நடக்கிறது.

    ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்ட நியூசிலாந்து அணி அங்கிருந்து நேரடியாக ஜெய்ப்பூர் வந்துள்ளது. இதேபோல் உலக கோப்பை போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறாமல் வெளியேறிய இந்திய அணி ஜெய்ப்பூர் சென்று பயிற்சியில் ஈடுபட்டது.

    20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து 20 ஓவர் உலக கோப்பையுடன் விராட்கோலி விலகினார். இதனை அடுத்து 20 ஓவர் அணியின் புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரியியின் பதவி காலம் முடிந்ததை தொடர்ந்து புதிய தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டு இருக்கிறார். புதிய தலைமையின் கீழ் இந்திய அணி களம் காணும் முதல் போட்டி என்பதால் வழக்கத்தை விட அதிகமான எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    இந்திய அணியில் விராட்கோலி, வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக செயல்பட்ட வெங்கடேஷ் அய்யர், ஹர்ஷல் பட்டேல், அவேஷ்கான் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

    20 ஓவர் உலக கோப்பை போட்டியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் நேர்த்தியாக செயல்பட்டு இறுதிப்போட்டி வரை முன்னேறிய நியூசிலாந்து அணி லீக் சுற்று ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. அதனால் அந்த அணி கூடுதல் நம்பிக்கையுடன் இந்த போட்டியில் களம் இறங்கும். ஆனால் கேப்டன் கேன் வில்லியம்சன் கடைசி நேரத்தில் 20 ஓவர் தொடரில் இருந்து விலகி இருப்பது அந்த அணிக்கு பெருத்த பின்னடைவாகும். அவர் டெஸ்ட் போட்டியில் கவனம் செலுத்துவதற்கு வசதியாக ஒதுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக மூத்த வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். காயத்தில் இருந்து மீண்டு வரும் பெர்குசன் ஆடுவது சந்தேகம் தான்.

    நியூசிலாந்து அணியில் பேட்டிங்கில் மார்ட்டின் கப்தில், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், கிளைன் பிலிப்ஸ் ஆகியோரும், பந்து வீச்சில் டிம் சவுதி, கைல் ஜாமிசன், சோதி ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    உலக கோப்பையில் வெளிப்படுத்திய உத்வேகத்தை தொடர நியூசிலாந்து அணி முழுமுயற்சி மேற்கொள்ளும். அதேநேரத்தில் உலக கோப்பையில் தங்களது அரையிறுதி வாய்ப்புக்கு ஆப்பு வைத்த நியூசிலாந்து அணிக்கு தகுந்த பதிலடி கொடுக்க இந்திய அணி எல்லா வகையிலும் வரிந்து கட்டும். இதனால் இந்த போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

    இவ்விரு அணிகளும் சர்வதேச 20 ஓவர் போட்டியில் 17 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் இந்திய அணி 6 முறையும், நியூசிலாந்து அணி 9 தடவையும் வென்று இருக்கிறது. ‘டை’யில் முடிந்த 2 ஆட்டங்களில் சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றியை ருசித்ததும் இதில் அடங்கும்.

    இந்த போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு கொரோனா தடுப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. 8 ஆண்டுகளுக்கு பிறகு ஜெய்ப்பூரில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெறுவதால் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும் என்று தெரிகிறது.

    இன்றைய போட்டிக்கான இரு அணியின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), லோகேஷ் ராகுல், இஷான் கிஷன், வெங்கடேஷ் அய்யர் அல்லது ஸ்ரேயாஸ் அய்யர் அல்லது ருதுராஜ் கெய்க்வாட், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், அக்‌ஷர் பட்டேல், ஆர்.அஸ்வின், புவனேஷ்வர் குமார், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.

    நியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், டேரில் மிட்செல், கிளைன் பிலிப்ஸ், மார்க் சாப்மன், டிம் செய்பெர்ட், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னெர், கைல் ஜாமிசன், டிம் சவுதி (கேப்டன்), ஆடம் மில்னே அல்லது பெர்குசன், சோதி.

    இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
    இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
    பாலி:

    இந்தோனேசிய மாஸ்டர்ஸ் சூப்பர் 750 பேட்மிண்டன் தொடர் இந்தோனேசியாவில் நடந்து வருகிறது. 

    இத்தொடரில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்துவும், தாய்லாந்தின் சுபநிதா கடேதாங்கும் மோதினர்.

    இதில், பி.வி.சிந்து 21-15, 21-19 எனும் செட் கணக்கில் சுபநிதா கடேதாங்கை வீழ்த்தினார். இதன்மூலம் அவர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    அடுத்த சுற்று போட்டியில் ஸ்பெயினின் கிளேரா அசர்மெண்டிசை சிந்து எதிர்கொள்கிறார். 

    இதேபோல், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் உலகின் 10-ம் நிலை வீரரான ஜப்பானின் கண்டா சுநேயாமாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    அடுத்த போட்டியில் 2 முறை உலக சாம்பியனான ஜப்பானின் கெண்டோ மொமோடாவை எதிர் கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
    பாகிஸ்தான் நாட்டில் 2025-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது.
    துபாய்:

    ஐசிசி தொடர்கள் நடைபெறும் நாடுகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நேற்று வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு

    அதன்படி, இந்தியாவில் 2 உலக கோப்பை உள்பட 3 தொடர்கள் நடைபெற உள்ளன. பாகிஸ்தானில் 2025-ம் ஆண்டில் சாம்பியன்ஸ் டிராபி நடைபெறுகிறது.

    2024 - 20 ஓவர் உலக கோப்பை- ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ்
    2025 - சாம்பியன்ஸ் டிராபி  -பாகிஸ்தான்

    2026 -  20 ஓவர் உலக கோப்பை-  இந்தியா,  இலங்கை
    2027 - 50 ஓவர் உலக கோப்பை- தென் ஆப்பிரிக்கா, நமீபியா, ஜிம்பாப்வே

    2028 - 20 ஓவர் உலக கோப்பை - ஆஸ்திரேலியா, நியூசிலாந்து
    2029 - சாம்பியன்ஸ் டிராபி - இந்தியா

    2030 - 20 ஓவர் உலக கோப்பை- இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து,
    2031 - 50 ஓவர் உலக கோப்பை -இந்தியா, வங்களதேசம்

    பாகிஸ்தானில் சுமார் 25 ஆண்டுகளுக்கு பின் ஐசிசி தொடர் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.
    இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரை நடத்தி வருகிறது. 2021 சீசன் இந்தியாவில் தொடங்கியது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதன்பின் டி20 உலக கோப்பைக்கு முன்னதாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதி போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

    சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா நடத்தப்படும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் தெரிவித்திருந்தார்.

    இந்தநிலையில், வருகிற 20-ந்தேதி (சனிக்கிழமை) பாராட்டு விழா நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    ×