என் மலர்
செய்திகள்

நியூசிலாந்துடன் தன்னம்பிக்கையுடன் விளையாடுவது முக்கியம் - புதிய கேப்டன் ரோகித் சர்மா சொல்கிறார்
ஜெய்ப்பூர், நவ. 17-
நியூசிலாந்து கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் ஆட்டம் மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.
இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று நடக்கிறது.
வீராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகிய தால் இந்திய அணிக்கு ரோகித் சர்மா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல பயிற்சியாளர் பதவிக்கு ரவி சாஸ்திரி இடத்தில் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.
ரோகித் சர்மா- ராகுல் டிராவிட்டின் புதிய கூட்டணி இன்றைய 20 ஓவர் போட்டியில் வெற்றியுடன் தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப் படுகிறது.
வீராட் கோலி நியூசிலாந் துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் விளையாட வில்லை. அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல முதல் டெஸ்டிலும் ஆடவில்லை.
வீராட் கோலி குறித்து செய்தியாளர்கள் சந்திப் பில் புதிய கேப்டன் ரோகித் சர்மாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
வீராட் கோலியின் பங்களிப்பு அப்படியே இருக்கும். இதற்கு முன்பு அவர் அணியில் எப்படி இருந்தாரோ அதே பணியை தொடர்ந்து செய்வார். அவர் மிக முக்கியமான வீரர். பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர். ஒவ்வொரு போட்டியிலும் ஒரு அடையாளத்தை விட்டு செல்கிறார்.
வீராட் கோலி திரும்பும் போது அணிக்கு பலம் மட்டுமே கிடைக்கும். பேட்ஸ்மேனாக அவரது அனுபவம் அணிக்கு மிகவும் முக்கியமானது.
அணியில் சிறு சிறு ஓட்டைகள் இருக்கிறது. அதை சரி செய்வது மிகப் பெரிய சவாலாக இருக்கும். அனைத்து அணிகளிலும் இதேபோல் ஒரு பிரச்சினை இருக்கத்தான் செய்யும். எந்த அணியையும் பின் பற்றும் எண்ணம் எங்களுக்கு இல்லை. தனி அடை யாளத்தை உருவாக்கவே விரும்புகிறோம்.
முதலில் பேட்டிங் செய்யும்போதும், 2-வது பேட்டிங் செய்யும்போதும் உள்ள ஒப்பீடு மாறுபட்டது. ஒவ்வொரு வீரரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக வெளிப்படுத்துவார்கள்.
20 ஓவர் போட்டியை பொறுத்தவரை அச்சமின்றி விளையாடுவது அவசிய மாகும். அதற்கு தன்னம் பிக்கை ஏற்படுத்துவது மிகவும் முக்கியமானது. நாம் எப்போதுமே வெற்றிபெற முடியாது. தோல்வியும் ஏற்படும். ஆனால் அதே நேரத்தில் நமது பங்களிப்பு முக்கியமாக இருக்க வேண்டும்.
சையது முஸ்தாக் அலி மற்றும் ஐ.பி.எல். ஆகிய இரண்டு 20 ஓவர் தொடரில் வீரர்கள் விளையாடி உள்ளனர். இதிலிருந்து அவர்கள் அனுபவங்களை பெற்றிருப்பார்கள். அதே மாதிரி பங்களிப்பில் விளை யாடுவது அவசியமாகும்.
இவ்வாறு ரோகித் சர்மா கூறியுள்ளார்.
நியூசிலாந்து அணி கேப் டன் வில்லியம்சன் 20 ஓவர் தொடரில் விளையாட வில்லை. அதனால் அவருக்கு பதிலாக சவுத்தி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். வில்லியம்சன் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளார். * * * பிரதமர் மோடியை உலக பொருளாதார அமைப்பின் தலைவர் போர்ஜ் பிரெண்டே சந்தித்து பேசினார். * * * அம்மா நவமி பூஜையையொட்டி பாட்னாவில் பெண்கள் அம்மா மரத்தை வழிபட்ட காட்சி.






