என் மலர்
விளையாட்டு

புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர் வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது.
இந்த நிலையில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை வெல்ல வாய்ப்பு இருப்பதாக முன்னாள் சுழற்பந்துவீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும் போது, கடந்த முறை இந்திய அணி தென் ஆப்பிரிக்கா சென்றபோது டிவில்லியர்ஸ், டுபெலிசிஸ் போன்ற வீரர்கள் தொடரை வெல்ல தடையாக இருந்தார்கள்.
தற்போதுள்ள தென் ஆப்பிரிக்கா அணி வலுவாக இல்லை. இதனால் முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்ற நல்ல வாய்ப்பு இருக்கிறது. இந்திய அணி புதிய வரலாறு படைக்கும் என்று நம்புகிறேன் என்றார்.
துபாய்:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இரு அணிகள் இடையேயான 2 டெஸ்ட் போட்டி தொடரில் முதல் டெஸ்டில் பாகிஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஏற்கனவே வெற்றி பெற்று இருந்தது.
இந்தநிலையில் டாக்காவில் நடந்த 2-வது டெஸ்டிலும் அந்த அணி இன்னிங்ஸ் மற்றும் 8 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் பாகிஸ்தான் 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
ஏற்கனவே 20 ஓவர் தொடரை அந்த அணி முழுமையாக 3-0 என்ற கணக்கில் வென்று இருந்தது.
வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியதால் பாகிஸ்தான் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.
66.66 சதவீத புள்ளிகளில் இருந்த அந்த அணி தற்போது 75 சதவீத புள்ளிகளை பெற்று உள்ளது. அந்த அணி அடுத்து இலங்கையுடன் விளையாட இருக்கிறது.

இலங்கை முதல் இடத்திலும் (100 சதவீத புள்ளிகள்), இந்தியா 3-வது இடத்திலும் (58.33 சதவீத புள்ளிகள்) உள்ளன. இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, வங்காளதேசம் ஆகிய அணிகள் முறையே 4 முதல் 8-வது இடங்களில் உள்ளன.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியில் 3 வடிவிலான போட்டிகளுக்கும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) விராட் கோலி கேப்டனாக பணியாற்றினார்.
டோனிக்கு பிறகு அவர் 3 போட்டிகளுக்கும் கேப்டனாக செயல்பட்டு வந்தார். உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான விராட் கோலியின் பேட்டிங் திறன் சமீப காலமாக மிகவும் பாதிக்கப்பட்டது.
இதனால் கேப்டன் பதவியில் இருந்து அவர் விலகுவது நல்லது என்று கருத்து எழுந்தது. விமர்சனங்கள் காரணமாக 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்தார்.
சமீபத்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு பிறகு கேப்டன் பதவியை துறப்பதாக அவர் போட்டிக்கு முன்பே தெரிவித்தார். ஆனால் 20 ஓவர் உலக கோப்பையில் இந்திய அணியின் செயல்பாடு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.
இதற்கிடையே ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்தும் விராட் கோலி விலகுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
2023-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் போட்டி உலக கோப்பையை கருத்தில் கொண்டு இந்திய அணிக்கு புதிய கேப்டனை நியமிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்து உள்ளது.
இதைத்தொடர்ந்து கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுமாறு விராட் கோலியை கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தி வந்தது. ஆனால் அவர் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலக மறுத்து விட்டார்.
இதைத்தொடர்ந்து கேப்டன் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரோகித்சர்மா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
விராட் கோலி தானாக முன்வந்து ஒருநாள் போட்டி கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கிரிக்கெட் வாரியம் விரும்பியது. இதற்காக அவருக்கு 48 மணி நேரம் கெடு விதிக்கப்பட்டது.
ஆனால் கோலியோ கேப்டன் பதவியைவிட்டு செல்ல விரும்பவில்லை. கிரிக்கெட் வாரியத்தின் கெடுவை நிராகரித்தார்.
இதைத்தொடர்ந்து 49-வது மணி நேரத்தில் ரோகித்சர்மாவை கேப்டனாக நியமித்து கிரிக்கெட் வாரியம் அதிரடி முடிவை எடுத்தது. விராட் கோலியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது. கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் இந்த தகவலை தெரிவித்தது.
மேலும் கேப்டன் பதவியில் விராட் கோலியின் செயல்பாடுகள் தொடர்பாக பல்வேறு அதிருப்திகள் தெரிவிக்கப்பட்டன. தொடக்கத்தில் நன்றாக இருந்த அவர் போகப்போக தனது அதிகார போக்கை கடைபிடித்ததாக தெரிகிறது. அவரால் குல்தீப் யாதவ் உள்ளிட்ட வீரர்கள் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் இந்திய அணியில் பிளவு இருந்ததாகவும் இதற்கு கோலியின் ஆதிக்கம்தான் காரணம் என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் அவரது கேப்டன் பதவி பறிக்கப்பட்டு உள்ளதாக கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
டெஸ்ட் அணிக்கு மட்டுமே 33 வயதான கோலி கேப்டனாக இருப்பார். “ஒயிட் பால்” போட்டிகளுக்கு (ஒருநாள் போட்டி, 20 ஓவர்) ரோகித்சர்மா கேப்டனாக பணியாற்றுவார்.
விராட் கோலி 95 ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக இருந்துள்ளார். இதில் 65-ல் வெற்றி கிடைத்தது. 27 போட்டியில் தோல்வி ஏற்பட்டது. ஒரு ஆட்டம் டையில் முடிந்தது. 2 போட்டி முடிவு இல்லை.
ஐம்பது 20 ஓவரில் கேப்டனாக இருந்து 30-ல் வெற்றி பெற்றார். 16-ல் தோல்வி ஏற்பட்டது. 2 ஆட்டம் டையில் முடிந்தது. 2 போட்டி முடிவு இல்லை.
இதையும் படியுங்கள்...ஐ.பி.எல். அணிக்கு பயிற்சியாளர் ஆகிறார் ஹர்பஜன் சிங்

புதுடெல்லி:
இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீரர் ஹர்பஜன் சிங் சர்வதேச போட்டியில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டார். ஐ.பி.எல். போட்டியில் கடந்த சீசனில் கொல்கத்தா அணிக்காக ஆடினார்.
தற்போது ஐ.பி.எல்.லில் விளையாடுவதில் இருந்தும் அவர் ஓய்வு பெற்று உள்ளார். 41 வயதான அவர் ஐ.பி.எல். போட்டியில் ஒருஅணிக்கு ஆலோசகராக, பகுதி நேர பயிற்சியாளராக அல்லது வழிகாட்டியாக செயல்பட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் எந்த அணிக்கு ஆலோசகராக இருப்பார் என்பது தெரியவில்லை.
ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீரர் ஸ்டார்க் ஆட்டத்தின் முதல் பந்தில் இங்கிலாந்து வீரர் ரோரி பர்ன்சை அவுட் செய்தார்.
ஆஷஸ் டெஸ்ட் தொடர் வரலாற்றில் 85 ஆண்டுகளுக்கு பிறகு முதல் பந்திலேயே விக்கெட் கைப்பற்றி ஸ்டார்க் சாதனை புரிந்து உள்ளார்.
1936-ம் ஆண்டு ஆஷஸ் டெஸ்ட் தொடரில் முதல் பந்தில் விக்கெட் கைப்பற்றப்பட்டு இருந்தது. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீரர் மெக்ரோமிக், இங்கிலாந்து வீரர் வொர்த்திக்டெனை பிரிஸ்பேனில் முதல் பந்தில் அவுட் செய்தார்.






