என் மலர்
விளையாட்டு

பாபா இந்திரஜித், வாஷிங்டன் சுந்தர் ஜோடி
விஜய் ஹசாரே டிராபி - 8 விக்கெட் வித்தியாசத்தில் தமிழக அணி அபார வெற்றி
விஜய் ஹசாரே தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பைக்கு எதிராக ஆடிய தமிழக அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
திருவனந்தபுரம்:
விஜய் ஹசாரே டிராபிக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் மும்பை, கவுகாத்தி, திருவனந்தபுரம், ஜெய்ப்பூர் உள்பட 7 நகரங்களில் நடைபெற்று வருகிறது.
இத்தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் தமிழ்நாடு, கர்நாடகா அணிகள் மோதின. டாஸ் வென்ற கர்நாடகா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கர்நாடக அணி தமிழக அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது .
இறுதியில், கர்நாடக அணி 36.3 ஓவர்களில் 122 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
தமிழக அணி சார்பில் சித்தார்த் 4 விக்கெட்டும், சாய் கிஷோர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து 123 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் தமிழக அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் சாய் சுதர்சன் 18 ரன்னும், ஜெகதீசன் 16 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். அடுத்து இறங்கிய பாபா இந்திரஜித், வாஷிங்டன் சுந்தர் ஜோடி தமிழக அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது.
இறுதியில், தமிழக அணி 28 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 123 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. பாபா இந்திரஜித் 51 ரன்னும், வாஷிங்டன் சுந்தர் 31 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இது தமிழக அணி பெற்ற 2வது வெற்றி.
Next Story






