என் மலர்
விளையாட்டு
இந்த தொடரில் அஸ்வின் பல சாதனைகளை புரிந்தார். டெஸ்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய வீரர்களில் 3-வது இடத்தில் இருந்த ஹர்பஜன் சிங்கை முந்தினார். சொந்த மண்ணில் 300 விக்கெட்டை தொட்டார். ஒரு ஆண்டில் அதிக முறை 50 விக்கெட்டுக்கு மேல் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். 9-வது தடவையாக தொடர் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
இந்திய வீரர்களில் டெஸ்டில் அதிக விக்கெட் கைப்பற்றியவர் கும்ப்ளே. சுழற்பந்து வீரரான அவர் 132 போட்டியில் 619 விக்கெட் வீழ்த்தி உள்ளார். அதற்கு அடுத்த படியாக வேகப்பந்து வீச்சாளரான கபில்தேவ் 434 விக்கெட் (131 டெஸ்ட் ) கைப்பற்றி 2-வது இடத்தில் உள்ளார்.
தற்போது கபில்தேவின் சாதனையை நோக்கி அஸ்வின் செல்கிறார். அதற்கு அவருக்கு இன்னும் 8 விக்கெட் தான் தேவை. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெறும் 3 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் அவர் கபில் தேவின் சாதனையை முறியடித்து 2-வது இடத்துக்கு முன்னேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அஸ்வின் 81 டெஸ்டில் 427 விக்கெட் கைப்பற்றி 3-வது இடத்தில் உள்ளார்.
புதுடெல்லி:
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் ஆர்.அஷ்வின். தமிழகத்தை சேர்ந்த 35 வயதான அவர் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்து வீசினார். அவர் 14 விக்கெட் கைப்பற்றி தொடர் நாயகன் விருதை பெற்றார்.
அஸ்வின் 81 டெஸ்டில் விளையாடி 427 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். சொந்த மண்ணில் சிறப்பாக பந்து வீசிய அவருக்கு இங்கிலாந்து பயணத்தின்போது ஒரு டெஸ்டில் கூட விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இந்திய அணி கடந்த ஆகஸ்டு மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. 5 டெஸ்ட் தொடரில் 2 போட்டியில் வெற்றிபெற்றது. ஒரு டெஸ்டில் இங்கிலாந்து வெற்றிபெற்றது. ஒரு டெஸ்ட் டிரா ஆனது. கடைசி டெஸ்ட் போட்டி தள்ளி வைக்கப்பட்டது. இந்திய அணி விளையாடிய 4 டெஸ்டிலும் அஸ்வின் ஆடவில்லை.

நியூசிலாந்து தொடரில் அபாரமாக பந்துவீசிய அஷ்வினுக்கு இங்கிலாந்து தொடரில் வாய்ப்பு கொடுக்காதது குறித்து கேப்டன் விராட் கோலி, அப்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சல்மான் பட் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
அஷ்வின் போன்ற மேட்ச் வின்னரை இங்கிலாந்து தொடரில் விளையாட வாய்ப்பு கொடுக்காததை இன்னும் நம்ப முடியவில்லை. அவர் ஒரு சிறந்த சுழற்பந்து வீரர். அவருக்கு விளையாட வாய்ப்பு கொடுக்காதது ஏன்? என்பது பற்றி அப்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, விராட் கோலி ஆகியோர் மட்டுமே பதில் அளிக்க முடியும். அவர்கள் இதுகுறித்து பதில் அளிக்க வேண்டும்.
அணிக்கு மீண்டும் திரும்பிய அஷ்வின் தனது திறமையை நிரூபித்தார். தனது முக்கியத்துவத்தை அவர் மற்றவர்களுக்கு வெளிப்படுத்தினார்.
இவ்வாறு சல்மான் பட் கூறியுள்ளார்.
இந்திய அணி அடுத்து தென் ஆப்பிரிக்காவுடன் விளையாடுகிறது. அந்நாட்டுக்கு சென்று 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் நான்கு 20 ஓவர் ஆட்டத்தில் விளையாட திட்டமிட்டு இருந்தது. இதற்கான போட்டி அட்டவணையும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் காரணமாக இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையேயான போட்டி அட்டவணையில் மாறுதல் செய்யப்பட்டது.
வருகிற 17-ந்தேதி தொடங்க இருந்த டெஸ்ட் தொடர் 26-ந்தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதேபோல 20 ஓவர் தொடர் பின்னர் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. திருத்தி அமைக்கப்பட்ட போட்டி அட்டவணையை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இந்திய அணி வருகிற 16-ந்தேதி தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்று 3 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது.
தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்ட ரோகித் சர்மா, ரிஷப்பண்ட் அணிக்கு திரும்புகிறார்கள். இதேபோல காயத்தில் இருந்து குணமடைந்த லோகேஷ் ராகுலும் தேர்வு பெறுகிறார்.
அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருக்கும் ரகானேயின் பேட்டிங் கடந்த காலங்களில் மிகவும் மோசமாக உள்ளது. இதனால் அவர் தென் ஆப்பிரிக்க தொடரில் நீக்கப்படலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
ஸ்ரேயாஸ் அய்யர், மயங்க் அகர்வால், சுப்மன்கில் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால், சீனியர் வீரரான ரகானேயின் எதிர்காலம் கேள்வி குறியாக உள்ளது. அணியின் துணை கேப்டனான அவர் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் கேப்டனாகவும் பணியாற்றினார். ரகானே நீக்கப்படும் பட்சத்தில் துணை கேப்டன் பொறுப்பு ரோகித் சர்மாவுக்கு கிடைக்கும்.
நியூசிலாந்து தொடருக்கு ஓய்வு கொடுக்கப்பட்ட வேகப்பந்து வீரர்கள் முகமது ஷமி, பும்ரா ஆகியோர் அணிக்கு மீண்டும் திரும்புகிறார்கள். வீரர்கள் தேர்வு மிகவும் கடினமாக இருக்கும் என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தனது கருத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
தென் ஆப்பிரிக்க தொடருக்கு தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் வீரர்கள் விவரம் வருமாறு:-
விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால், சுப்மன்கில், புஜாரா, ரகானே அல்லது விகாரி, ஸ்ரேயாஸ் அய்யர், அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், ரிஷப்பண்ட், விர்த்திமான் சகா, பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், பிரசித் கிருஷ்ணா அல்லது இஷாந்த் சர்மா.






