என் மலர்tooltip icon

    விளையாட்டு

    நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் இந்தியா 1-0 எனக் கைப்பற்றியதன் மூலம், ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் இந்தியா முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
    டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி கடந்த ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் வென்றது. இதன் மூலம் அந்த அணி ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்தது. மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவை  நியூசிலாந்து வென்றதன் மூலம், இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் 2-வது இடத்தில் நீடித்து வந்தது.

    இந்த நிலையில் மும்பையில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 372 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை பட்டியலில் 124 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடம் பிடித்தது. 121 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி 2-வது இடத்திலும்,  108 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா 3-வது இடத்திலும் உள்ளன.

    ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் இங்கிலாந்து அணி 4-வது இடத்திலும், பாகிஸ்தான் ஐந்தாவது இடத்திலும் நீடிக்கின்றன.
    வான்கடே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் 10 விக்கெட்டுகளை கைப்பற்றிய நியூசிலாந்து வீரர் அஜாஸ் படேலுக்கு மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மும்பையில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியாவின் 10 விக்கெட்டுகளையும் நியூசிலாந்து சுழற்பந்து வீரர் அஜாஸ் பட்டேல் கைப்பற்றியிருந்தார்.

    மேலும், 2-வது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் இந்தியாவிற்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட் கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார்.

    இந்நிலையில் மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பில் அவருக்கு இன்று பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 2-வது டெஸ்ட் போட்டியின் முடிவில் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அஜாஸ் படேலுக்கு மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவர் விஜய் பாட்டீல் பாராட்டு தெரிவித்தார்.  மேலும், இந்த போட்டியின் முதன் இன்னிங்ஸ் அதிகாரப்பூர்வ ஸ்கோர் ஷீட்டையும் அவர் வழங்கினார். 
    அப்போது கிரிக்கெட் பந்து மற்றும் விளையாட்டின்போது அவர் பயன்படுத்திய டீசர்ட் ஆகியவற்றை மும்பை கிரிக்கெட் சங்க அருங்காட்சியகத்திற்கு அஜாஸ் பட்டேல் வழங்கினார்.
    ரஷியா அணி 15 ஆண்டுகளுக்கு பிறகு டேவிஸ் கோப்பையை வென்று உள்ளது. ஒட்டு மொத்தத்தில் அந்த அணி 3-வது முறையாக பட்டம் பெற்று உள்ளது.

    மாட்ரிட்:

    டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி கடந்த 25-ந் தேதி தொடங்கியது. 18 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டியின் இறுதி ஆட்டம் ஸ்பெயினில் உள்ள மாட்ரிட்டில் நடந்தது.

    ரஷியா-குரோஷியா அணிகள் இறுதிப்போட்டியில் மோதின. இதில் ரஷியா 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று டேவிஸ் கோப்பையை கைப்பற்றியது.

    2-வது ஒற்றையர் ஆட்டத்தில் டேனில் மெட்வதேவ் (ரஷியா) 7-6 (9-7), 6-2 என நேர் செட் கணக்கில் சிலிச்சை (குரோஷியா) வீழ்த்தினார். இதன்மூலம் ரஷியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

    அந்த அணி 15 ஆண்டுகளுக்கு பிறகு டேவிஸ் கோப்பையை வென்று உள்ளது. ஒட்டு மொத்தத்தில் ரஷியா 3-வது முறையாக பட்டம் பெற்று உள்ளது. இதற்கு முன்பு 2002, 2006-ம் ஆண்டுகளில் வெற்றி பெற்று இருந்தது.

    டேவிஸ் கோப்பையை அதிகபட்சமாக அமெரிக்கா 32 முறை கைப்பற்றியது.

    வான்கடே மைதானத்தில் நியூசிலாந்தை வீழ்த்திய இந்திய அணி, டெஸ்ட் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 14 தொடர்களை வென்றுள்ளது.
    மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரை 1-0  என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. மேலும், சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 14 டெஸ்ட் தொடர்களை வென்று சாதனைப் படைத்துள்ளது.

    அதேபோல் இந்திய டெஸ்ட் அணி விராட் கோலி தலைமையில் ஆதிக்கும் செலுத்தி வருகிறது. 2014-ம் ஆண்டு முதல் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி கேப்டனாக பொறுப்பேற்று 66 போட்டிகளில் அணியை வழி நடத்தியுள்ளார். இதில் 39 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 16 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. 11 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது.
    இரு நாடுகள் இடையேயான டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து வேகப்பந்து வீரர் ரிச்சர்டு ஹேட்லி அதிக விக்கெட் கைப்பற்றி இருந்தார்.

    இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையே முதல் டெஸ்ட் தொடர் 1956-ம் ஆண்டு நடைபெற்றது. இதுவரை 23 தொடர் முடிந்து உள்ளது.

    இரு நாடுகள் இடையேயான டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து வேகப்பந்து வீரர் ரிச்சர்டு ஹேட்லி அதிக விக்கெட் கைப்பற்றி இருந்தார். அவர் 14 டெஸ்டில் 24 இன்னிங்சில் 65 விக்கெட் வீழ்த்தி முதல் இடத்தில் இருந்தார்.

    ஹேட்லியின் இந்த சாதனையை அஸ்வின் இன்று முறியடித்தார். மும்பை டெஸ்டில் 2-வது இன்னிங்சில் அவர் 4 விக்கெட் கைப்பற்றினார். நிகோலசை அவுட் செய்ததன் மூலம் அவர் இந்த சாதனையை முறியடித்தார்.

    அஸ்வின் 9 டெஸ்டில் 17 இன்னிங்சில் 66 விக்கெட் கைப்பற்றி முதல் இடத்தில் உள்ளார். 59 ரன் கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தியது அவரது சிறந்த பந்து வீச்சாகும்.

    இந்த டெஸ்டில் முதல் இன்னிங்சில் அஸ்வின் 4 விக்கெட் வீழ்த்தி இருந்தார். கான்பூரில் நடந்த முதல் டெஸ்டில் 6 விக்கெட் கைப்பற்றி இருந்தார்.

    அஸ்வின் முதல் இடத்திலும், ஹேட்லி 2-வது இடத்திலும் உள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக பி‌ஷன் சிங் பெடி 57 விக்கெட்டும், பிரசன்னா 55 விக்கெட்டும், சவுத்தி 52 விக்கெட்டும் கைப்பற்றி உள்ளனர்.

    மேலும் இந்த ஆண்டில் அஸ்வின் 50 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்து உள்ளார். அவர் 4-வது முறையாக ஒரு ஆண்டில் 50 விக்கெட்டுக்கு மேல் கைப்பற்றி உள்ளார். இதற்கு முன்பு 2015, 2016, 2017-ல் 50 விக்கெட்டுக்குமேல் எடுத்து இருந்தார்.

    இதன் மூலம் அவர் புதிய சாதனை புரிந்தார். இதற்கு முன்பு கும்ப்ளேயும் (1999, 2004, 2006), ஹர்பஜன்சிங்கும் (2001, 2002, 2008) தலா 3 முறை 50 விக்கெட்டுக்கு மேல் எடுத்து இருந்தனர். அவர்களது சாதனையை அஸ்வின் முறியடித்தார்.

    அஷ்வின், ஜயந்த் யாதவ் தலா நான்கு விக்கெட் வீழ்த்த நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 167 ரன்னில் சுருண்டது.
    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 325 ரன்கள் குவித்தது. பின்னர் நியூசிலாந்து அணி 62 ரன்னில் சுருண்டது.

    263 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தாலும் இந்தியா பாலோ-ஆன் கொடுக்காமல் 2-வது இன்னிங்சை தொடங்கியது. 7 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. மொத்தமாக 539 ரன்கள் முன்னிலை பெற்றிருந்ததால், நியூசிலாந்துக்கு 540 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    மிகப்பெரிய இலக்கை நோக்கி நியூசிலாந்து களம் இறங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து 5 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்திருந்தது. நிக்கோல்ஸ் 36 ரன்களுடனும், ரச்சின் ரவீந்திரா 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    மகிழ்ச்சியில் இந்திய வீரர்கள்

    இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. நிக்கோல்ஸ் 44 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜேமிசன் (0), டிம் சவுத்தி (0), சோமர்வில் (1) அடுத்தடுத்து ஆட்டமிழக்கவும், ரவீந்திரா 18 ரன்னில் வெளியேறவும் நியூசிலாந்து 167 ரன்னில் சுருண்டது.

    இதனால் இந்தியா 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் அஷ்வின், ஜயந்த் யாதவ் ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

    இந்த வெற்றியின் மூலம் இந்தயா 2 போட்டிகள் கொண்ட தொடரை 1-0 எனக் கைப்பற்றியது.
    ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை தொடரில் ஜெர்மனியை வீழ்த்தி அர்ஜென்டினா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை தொடர் நடைபெற்றது.

    கலிங்கா ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியா, பிரான்ஸ் அணிகள் மோதின.

    தொடக்கம் முதல் பிரான்ஸ் வீரர்கள் சிறப்பாக ஆடினர். இதனால் முதல் பாதி முடிவில் நடப்பு சாம்பியனான இந்திய அணி 0-2 என பின்தங்கி இருந்தது. 

    இறுதியில், பிரான்ஸ் அணி 3-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றது.
    நடப்பு ஆண்டில் அதிக விக்கெட் வீழ்த்திய முதல் 10 வீரர்கள் பட்டியலில் இந்திய வீரர் அக்‌சர் படேல் 4வது இடத்திலும், முகமது சிராஜ் 9வது இடத்திலும் உள்ளனர்.
    மும்பை:

    இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு 540 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. மூன்றாம் நாள் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்துள்ளது.

    நியூசிலாந்து அணியின் முக்கியமான 3 விக்கெட்டுகளையும் இந்திய பந்துவீச்சாளர் அஷ்வின் வீழ்த்தினார். இதன்மூலம் நடப்பு ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 50க்கும் அதிகமான விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். அஷ்வின் 81 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 426 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 

    அஷ்வின் நடப்பு ஆண்டில் 8 டெஸ்ட் போட்டிகளில் ஆடி இதுவரை 51 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் ஷாகின் ஷா அப்ரிடி 44 விக்கெட்டுகளுடனும், 3வது இடத்தில் பாகிஸ்தானின் ஹசன் அலி 39 விக்கெட்டுகளுடனும் நீடிக்கின்றனர்.

    மேலும், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ரவிச்சந்திரன் அஷ்வின் 12-வது இடத்தில் உள்ளார்.

    வங்காளதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் 2வது நாளில் வெறும் 6.2 ஓவர்கள் மட்டுமே பந்து வீசப்பட்டது.
    டாக்கா:

    வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி டாக்காவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 

    பாகிஸ்தான் தொடக்க வீரர்களான அபித் அலி 39 ரன்னிலும், ஷபிக் 25 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய அசார் அலி, கேப்டன் பாபர் அசாம் ஜோடி நிதானமாக விளையாடியது. பாபர் அசாம் பொறுப்புடன் அரை சதமடித்தார்.

    முதல் நாள் முடிவில், பாகிஸ்தான் அணி 57 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அசார் அலி 36 ரன்னும், கேப்டன் பாபர் அசாம் 60 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இந்நிலையில், இரண்டாவது நாள் நேற்று நடைபெற்றது. 6.2 ஓவர்கள் வீசிய நிலையில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. அசார் அலி 52 ரன்னுடனும், பாபர் அசாம் 71 ரன்னிடனும் அவுட்டாகாமல் உள்ளனர்.

    மழை தொடர்ந்து பெய்ததால் இரண்டாம் நாள் ஆட்டம் முழுமையாக பாதிக்கப்பட்டது. 
    இந்தியா, பிரான்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பிரான்ஸ் வெற்றி பெற்று மூன்றாம் இடத்தை தக்கவைத்தது.
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை தொடர் நடைபெற்றது.

    கலிங்கா ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா, ஜெர்மனி அணிகள் மோதின.

    இதில் அர்ஜெண்டினா 4-2 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது. இதன்மூலம் அர்ஜென்டினா அணி இரண்டாவது முறையாக ஜூனியர் ஹாக்கி உலக கோப்பையின் சாம்பியன் பட்டத்தை வென்றது.
    மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் தோல்வியை தவிர்க்க நியூஸிலாந்து அணி போராடி வருகிறது.
    மும்பை

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்ஸில் 325 ரன்கள் குவித்தது. மயங்க் அகர்வால் அதிகபட்சமாக 150 ரன்கள் விளாசினார். நியூசிலாந்து அணி சார்பில் அஜாஸ் பட்டேல் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

    பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 62 ரன்களில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. இந்திய அணியில் முகமது சிராஜ் 3 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும், அக்சார் பட்டேல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    263 ரன்கள்  முன்னிலைப் பெற்ற போதிலும் இந்தியா பாலோ-ஆன் கொடுக்காமல் 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் சேர்த்திருந்தது. புஜாரா 29 ரன்களுடனும், மயங்க் அகர்வால் 38 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. மயங்க் அகர்வால் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 62 ரன்னில் வெளியேறினார். புஜாரா 47 ரன்களும், ஷுப்மான் கில் 47 ரன்களும், விராட் கோலி 36 ரன்களும் சேர்த்தனர்.

    அக்சர் பட்டேல் ஆட்டமிழக்காமல் 26 பந்தில் 41 ரன்கள விளாச, இந்தயா 7 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் எடுத்திருந்தபோது 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. 2-வது இன்னிங்சில் நியூசிலாந்து வீரர் அஜாஸ் பட்டேல் 4 விக்கெட்டும், ரவீந்திரா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    விக்கெட் எடுத்த அஷ்வினை பாராட்டும் புஜாரா

    இந்தியா 2 இன்னிங்ஸிலும் சேர்த்து மொத்தமாக 539 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.  540 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் 2வது இன்னிங்ஸை விளையாடிய நியூசிலாந்து அணி 3வது நாள் ஆட்ட நேர முடிவில் 5  விக்கெட் இழப்பிற்கு    140 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக டேரில் மிட்செல் 60 ரன்கள் அடித்து அவுட்டானார். ஹென்றி நிக்கோல்ஸ் 36 ரன்கள் எடுத்தார். இந்த இன்னிங்சில் அஷ்வின் 3 விக்கெட் எடுத்து அசத்தினார். 

    நியூஸிலாந்து அணி வெற்றி பெற இன்னும் 400 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் 5  விக்கெட்கள் அந்த அணிக்கு உள்ளன. இன்னும் 2 நாட்கள் ஆட்டம் பாக்கி இருப்பதால் தற்போதைய நிலையில் இந்தியா அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
    தங்கப் பதக்கத்துக்கான இறுதிப் போட்டியில் பி.வி.சிந்து, தென்கொரிய வீராங்கனை ஆன் சியோங்கிடம் தோல்வி அடைந்தார்.
    பாலி:

    இந்தோனேசியாவின் பாலி நகரில் உலக டூர் பைனல்ஸ் பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் குரூப்-ஏ பிரிவில் இடம்பெற்ற இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சியை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

    இந்நிலையில், தங்கப் பதக்கத்துக்கான இறுதிப் போட்டியில் பி.வி.சிந்து, தென்கொரிய வீராங்கனை ஆன் சியோங் பலப்பரீட்சை நடத்தினர். நடப்பு உலக சாம்பியனான சிந்து, உலகின் ஆறாவது இடத்தில் உள்ள கொரிய வீராங்கனையின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறினார். இறுதியில் பி.வி.சிந்து 16-21, 12-21 என்ற நேர்செட்களில் தோல்வியடைந்தார். இதனால் அவர் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.

    உலக டூர் பைனல்சில் மூன்றாவது முறையாக இறுதிச்சுற்று வரை முன்னேறிய சிந்து, 2018ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
    ×