என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ரஷிய கால்பந்து அணி பங்கேற்கும் போட்டிகளில் அந்நாட்டு கொடி அல்லது தேசிய கீதம் பயன்படுத்தப் படாது என்று சர்வதேச கால்பந்து சங்கம் தெரிவித்துள்ளது.
    உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இருப்பதன் எதிரொலியாக ஐரோப்பிய கிளப் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் ரஷியாவில் இருந்து இடமாற்றம் செய்து பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெறும் என ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு அறிவித்தது.

    இதன் தொடர்ச்சியாக, ரஷியாவில் எந்த ஒரு சர்வதேச கால்பந்து போட்டியும் நடத்தப்படாது என்று சர்வதேச கால்பந்து சங்கம் அறிவித்துள்ளது.

    அந்த நாட்டு கால்பந்து உறுப்பினர் சங்கம் இனி கால்பந்து யூனியன் ஆஃப் ரஷியா என்ற பெயரில் அழைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் ரஷியாவுக்கு எதிரான உலக கோப்பை தகுதி சுற்று போட்டியில் விளையாட முடியாது என்று சுவிடன், போலந்து கால்பந்து சங்கங்கள் அறிவித்துள்ளன.  

    இதனை அடுத்து, ரஷியாவுக்கு எதிரான அனைத்து சர்வதேச கால்பந்து போட்டிகளையும் இங்கிலாந்து புறக்கணிக்கும் என அந்நாட்டு கால்பந்து சங்கம் தெரிவித்துள்ளது.

    இந்த வெற்றியின் மூலம் அரையிறுதி போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பு மோகன் பகான் அணிக்கு அதிகரித்துள்ளது
    கோவா:

    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி தொடர் கோவாவில் நடைபெற்று வருகிறது. 

    மார்ச் மாதம் வரை நடைபெறும் இந்த போட்டிகளை நேரடியாக பார்வையிட 
    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப் பட்டுள்ளது.

    நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஏடிகே மோகன் பகான் அணி மற்றும் பெங்களூரு எப்.சி அணியை எதிர்கொண்டது.

    ஆட்டத்தின் 45 வது நிமிடத்தில்  மோகன் பகான் வீரர் லிஸ்டன் கோலகோ முதல் கோல் அடித்து அணியை முன்னிலை பெறச் செய்தார். ஆட்டத்தின் 85 வது நிமிடத்தில் அந்த அணியின் மற்றொரு வீரர்  மன்விர் சிங் ஒரு கோல் அடித்தார். 

    ஆட்டம் நிறைவு பெறும் வரை பெங்களூரு அணி ஒரு கோல் கூட அடிக்க வில்லை. இதையடுத்து ஏடிகே மோகன் பகான் அணி 2-0 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. 

    இதன் மூலம் அரையிறுதி போட்டிக்குள் நுழையும் வாய்ப்பு அந்த அணிக்கு
    அதிகரித்துள்ளது. 
    இலங்கைக்கு எதிரான 3வது டி20 போட்டியில் ஸ்ரேயாஸ் அய்யர் 45 பந்துகளில் 9 பவுண்டரி 1 ஒரு சிக்சருடன் 73 ரன்கள் குவித்தார்.
    தரம்சாலா:

    இந்தியா-இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி உள்ளது. இந்நிலையில் 3வது மற்றும் கடைசி போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் சனகா 74 ரன்கள் குவித்தார். சண்டிமல் 22 ரன்கள் சேர்த்தார்.

    இதையடுத்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 2வது ஓவரில் முதல் விக்கெட்டை இழந்தது. கேப்டன் ரோகித் சர்மா 5 ரன்களில் ஆட்டமிழந்தார். 

    அதன்பின்னர் சஞ்சு சாம்சன் (18 ரன்கள்), தீபக் ஹூடா (21 ரன்கள்), வெங்கடேஷ் அய்யர் (5 ரன்கள்) ஆகியோரும் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தனர். 

    அதேசமயம் மறுமுனையில் அதிரடி காட்டிய ஸ்ரேயாஸ் அய்யர் அரை சதம் கடந்தார். அவருடன் ஜடேஜா தனது பங்களிப்பை வழங்க, இந்தியா 19 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டியது. ஸ்ரேயாஸ் அய்யர் 45 பந்துகளில் 9 பவுண்டரி 1 ஒரு சிக்சருடன் 73 ரன்கள் (நாட் அவுட்), ஜடேஜா 15 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 22 ரன்கள் (நாட் அவுட்) சேர்த்தனர்.

    16.5 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்தது. இதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று, தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது.  
    இலங்கை அணியின் முன்னணி விக்கெட்டுகள் சரிந்த நிலையில் கேப்டன் சனகா அதிரடியாக ஆடி ஸ்கோரை உயர்த்தினார்.
    தரம்சாலா:

    இந்தியா-இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி உள்ளது. இந்நிலையில் 3வது மற்றும் கடைசி போட்டி இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறிய இலங்கை அணி, முன்வரிசை வீரர்களை அடுத்தடுத்து இழந்தது. குணதிலக ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினா. நிசங்கா (1), அசலங்கா (4), ஜனித்லியாங்கே (9) ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    அதன்பின்னர் சண்டிமல், கேப்டன் சனகா இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். சண்டிமல் 22 ரன்கள் சேர்த்தார். மறுமுனையில் அதிரடியாக ஆடிய சனகா அரை சதம் கடந்தார். தொடர்ந்து ஆடிய சனகா 74 ரன்கள் (நாட் அவுட்), குணரத்ன 12 ரன்கள் (நாட் அவுட்) சேர்க்க, இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் சேர்த்தது. இந்தியா தரப்பில் ஆவேஷ் கான் 2 விக்கெட் வீழ்த்தினார். முகமது சிராஜ், ஹர்ஷல் பட்டேல், ரவி பிஷ்னோய் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். 

    இதையடுத்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.
    இலங்கை அணிக்கு எதிராக இன்று நடைபெறும் கடைசி 20 ஓவர் போட்டியில் காயம் காரணமாக இஷான் கி‌ஷனுக்கு ஓய்வு கொடுக்கப்படலாம் என தெரிகிறது.
    தர்மசாலா:

    இந்தியா- இலங்கை அணிகள் இடையேயான 2-வது 20 ஓவர் போட்டி தர்மசாலாவில் நேற்று நடந்தது.

    இந்த போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் இஷான் கி‌ஷன் 15 பந்தில் 16 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். போட்டியின்போது 4-வது ஓவரில் அவரது தலையில் பந்து தாக்கியது.

    லகீரு குமாரா வீசிய பவுன்சர் பந்து அவரது ஹெல்மட்டை தாக்கியது. உடனடியாக அவர் ஹெல்மட்டை கழற்றினார். இந்திய மருத்துவக்குழு அவரது உடல்நிலை குறித்து ஆய்வு செய்தது.

    இந்த நிலையில் தலையில் பட்ட காயத்துக்காக இஷான் கி‌ஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது மூளையில் ஸ்கேன் எடுக்கப்பட்டது.

    இது தொடர்பாக கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இஷான் கி‌ஷன் நேற்று இரவு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மூளையில் ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான முடிவுக்காக காத்திருக்கிறோம்‘ என்றார்.

    இந்த காயம் காரணமாக இன்று நடைபெறும் கடைசி 20 ஓவர் போட்டியில் இஷான் கி‌ஷனுக்கு ஓய்வு கொடுக்கப்படும் என்று தெரிகிறது. இதனால் ரோகித் சர்மாவுடன் வெங்கடேஷ் அய்யர் அல்லது மயங்க் அகர்வால் தொடக்க வீரராக களம் இறங்கலாம். ஏற்கனவே காயம் காரணமாக சூர்யகுமார் யாதவ், தீபக் சாஹர், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடரில் இருந்து விலகி இருந்தனர்.

    பிரிட்டன் வீரரை வீழ்த்தி ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் மெக்சிகோவின் அகபல்கோ கோப்பையை நான்காவது முறையாக கைப்பற்றியுள்ளார்.
    மெக்சிகோ:

    மெக்சிகோவின் அகபல்கோவில் ஏடிபி டென்னிஸ் தொடர் நடைபெற்றது. 

    இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், பிரிட்டனின் கேமரான் நோரியை எதிர்கொண்டார்.  
     
    போட்டியின் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நடால், 6-4, 6-4 என வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

    பிரிட்டனைச் சேர்ந்த நோரி, கடந்த வாரம் டெல்ரே பீச் கோப்பையை கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.
    தொடக்க ஜோடி எளிதில் ஆட்டம் இழந்த பிறகு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என இந்திய கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
    தர்மசாலா:

    இலங்கைக்கு எதிரான 2-வது போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று 20 ஓவர் தொடரை கைப்பற்றியது.

    தர்மசாலாவில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன் குவித்தது. இதனால் இந்தியாவுக்கு 184 ரன் இலக்காக இருந்தது.

    தொடக்க வீரர் நிஷான்கா 53 பந்தில் 75 ரன்னும் (11 பவுண்டரி), கேப்டன் தசுன் ‌ஷனகா 19 பந்தில் 47 ரன்னும் (2 பவுண்டரி, 5 சிக்சர்), குணதிலகா 29 பந்தில் 38 ரன்னும் (4 பவுண் டரி, 2 சிக்சர் ) எடுத்தனர்.

    புவனேஸ்வர் குமார், பும்ரா, ஹர்சல் படேல், யசுவேந்திர சாஹல் , ஜடேஜா தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள்.

    பின்னர் விளையாடிய இந்திய அணி 17 பந்துகள் எஞ்சி இருந்த நிலையில் 17.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 186 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    ஸ்ரேயாஸ் அய்யர் 44 பந்தில் 74 ரன்னும் (6 பவுண்டரி, 4 சிக்சர்), ஜடேஜா 18 பந்தில் 45 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்சர் ), சஞ்சு சாம்சன் 25 பந்தில் 39 ரன்னும் (2 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர்.

    இந்த வெற்றி மூலம் இந்திய அணி 20 ஓவர் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. கொல்கத்தாவில் நடந்த முதல் ஆட்டத்தில் 62 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.

    இந்த வெற்றிக்காக பேட்ஸ்மேன்களை கேப்டன் ரோகித் சர்மா பாராட்டி உள்ளார். மிடில் ஆர்டர் வரிசை மெய்சிலிர்க்க வைத்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக ரோகித் சர்மா கூறியதாவது:-

    ரோகித் சர்மா

    தொடக்க ஜோடி எளிதில் ஆட்டம் இழந்த பிறகு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்கள் பொறுப்பை ஏற்று ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து கொடுத்தது என்னை மெய்சிலிர்க்க வைத்தது.

    அவர்களது பணி பாராட்டும் வகையில் இருந்தது. ஜடேஜாவும், ஸ்ரேயாஸ் அய்யரும் அபாரமான பேட்டிங் திறனை வெளிப்படுத்தினார்கள்.

    கடைசி 5 ஓவர்களில் பந்து வீச்சாளர்கள் ரன்களை அதிகமாக விட்டு கொடுத்து விட்டனர். இதற்காக நான் அவர்களிடம் கடுமையாக நடந்துகொள்ள மாட்டேன்.ஏனென்றால் ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருந்தது.

    முதல் 15 ஓவர்களில் பந்துவீச்சு நன்றாக இருந்தது. கடைசியில்தான் ரன் போனது. ஆட்டத்தில் இதுமாதிரியும் நடக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தோல்வி குறித்து இலங்கை கேப்டன் தசுன் ‌ஷனகா கூறும்போது, எங்களது தொடக்கம் சிறப்பாக இருந்தது. ஆனால் பவர்பிளே ஓவர்களில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் செயல்பாடு சரியாக இல்லை. பவர் பிளேயில் இன்னொரு விக்கெட் கிடைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்றார்.

    இந்தியா - இலங்கை அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி தர்மசாலாவில் இன்று நடக்கிறது. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    இந்த ஆட்டத்திலும் வெற்றிபெற்று இந்திய அணி தொடரை முழுமையாக கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது. அதே நேரத்தில் இலங்கை அணி ஆறுதல் வெற்றிக்காக காத்திருக்கிறது.

    இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் 100-வது டெஸ்ட் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
    மொகாலி:

    இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் வருகிற 4-ந் தேதி தொடங்குகிறது. இது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட்கோலி பங்கேற்கும் 100-வது டெஸ்ட் போட்டியாகும். இந்த டெஸ்ட் போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்று பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் நேற்று அறிவித்தது. 

    இதுகுறித்து பஞ்சாப் கிரிக்கெட் சங்க பொருளாளர் ஆர்.பி.சிங்லா கூறுகையில், ‘இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அறிவுறுத்தலின்படி டெஸ்ட் போட்டிக்கான பணியில் ஈடுபடுபவர்களை தவிர போட்டியை நேரில் காண பொதுவான பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள். மொகாலி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் கொரோனா தொற்று பாதிப்புகள் இன்னும் அதிகமாக உள்ளன. எனவே நாங்கள் கொரோனா தடுப்பு நடைமுறைகள் அனைத்தையும் பின்பற்றி போட்டியை நடத்துவதே நல்லது. 
    ஏறக்குறைய 3 ஆண்டுக்கு பிறகு மொகாலியில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் போட்டியை நேரில் காணும் வாய்ப்பை ரசிகர்கள் தவறவிடுகிறார்கள். 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் விராட்கோலியின் பேனர்கள் மைதானத்தின் சுற்றுபுறங்களில் வைக்கப்படும். அத்துடன் இந்த போட்டியின் போது விராட்கோலிக்கு பாராட்டு விழா நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.’ என்றார். அதே சமயம் மார்ச் 12-ந் தேதி பெங்களூருவில் தொடங்கும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியை (பகல்-இரவு) காண 50 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி அளிக்க கர்நாடக கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது.

    இதற்கிடையே, மார்ச் 26-ந்தேதி மராட்டிய தலைநகர் மும்பையில் தொடங்கும் 15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. ‘தற்போது கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருவதை பார்க்கையில் ஐ.பி.எல். போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்க முடியும்’ என்று மராட்டிய மாநில விளையாட்டு துறை மந்திரி சுனில் கேதார் நேற்று நம்பிக்கை தெரிவித்தார். எவ்வளவு ரசிகர்களை அனுமதிக்கலாம் என்பது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார். மராட்டிய அரசின் வழிகாட்டுதல் நடைமுறையின்படி 40 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்கும் இந்திய இளம் வீராங்கனைகள் நெருக்கடி இல்லாமல் உற்சாகமாக ஆட வேண்டும் என்று கேப்டன் மிதாலிராஜ் அறிவுரை வழங்கியுள்ளார்.
    கிறைஸ்ட்சர்ச்:

    12-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 4-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 3-ந்தேதி வரை நியூசிலாந்தில் நடக்கிறது. இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி தனது முதல் லீக்கில் மார்ச் 6-ந்தேதி பாகிஸ்தானுடன் மோதுகிறது. தொடர்ந்து 6-வது முறையாக உலக கோப்பை போட்டியில் அடியெடுத்து வைக்க உள்ள இந்திய கேப்டன் மிதாலிராஜ் நேற்று காணொலி வாயிலாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது 39 வயதான மிதாலி ராஜ் கூறியதாவது:-

    கடந்த ஆண்டு சில இளம் வீராங்கனைகளை அணியில் சேர்த்து நிறைய தொடர்களில் சோதித்து பார்த்தோம். அதில் பெரும்பாலானவர்கள் குறிப்பாக ரிச்சா கோஷ், ஷபாலி வர்மா, மேக்னா சிங், பூஜா வஸ்ட்ராகர் போன்ற வீராங்கனைகள் உயரிய அளவுக்கு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். போட்டியில் அவர்களுக்கு போதுமான வாய்ப்புகளை வழங்கி இருக்கிறோம். இந்த தொடர்கள் அவர்களுக்கு உதவிகரமாக இருந்தது மட்டுமின்றி ஒரு கேப்டனாக எனக்கும் ஆடும் லெவன் அணிக்கு யார்-யார் பொருத்தமாக இருப்பார்கள் என்பதையும் அடையாளம் காட்டியது.

    இளம் வீராங்கனைகளுக்கு இதற்கு முன்பு உலக கோப்பை போட்டியில் விளையாடிய அனுபவம் கிடையாது. இது அவர்களுக்கு புதிய தொடக்கம். அவர்களுக்கு நான் சொல்லும் ஒரே அறிவுரை இது தான். ‘இது போன்ற மிகப்பெரிய போட்டிகளில் உற்சாகமாக அனுபவித்து விளையாடுங்கள். உங்களுக்குள் நெருக்கடியை உள்வாங்கிக் கொண்டால், நீங்கள் உங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் போகலாம்’ என்பது தான்.

    சமீபத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் நான் விளையாடிய விதமும், ரன் சேர்ப்பும் (3 அரைசதம் உள்பட 232 ரன்) மகிழ்ச்சி அளிக்கிறது. அதே பார்மை உலக கோப்பை போட்டியிலும் தொடர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நியூசிலாந்து தொடரில் சில ஆட்டங்களுக்கு தீப்தி ஷர்மா துணை கேப்டனாக இருந்தார். ஆனால் உலக கோப்பை தொடரில் ஹர்மன்பிரீத் கவுர் துணை கேப்டனாக செயல்படுவார். அனுபவமும், இளமையும் கலந்த அணியாக இந்தியா உள்ளது.

    ஒரு வேளை அணிகளுக்குள் கொரோனா பாதிப்பு அதிகரித்தால் இந்த உலக கோப்பையில் அனைத்து ஆட்டங்களையும் தலா 9 வீராங்கனைகளுடன் நடத்தலாம் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கூறியது பற்றி கேட்கிறீர்கள். அது பற்றி நான் அதிகமாக சிந்திக்க விரும்பவில்லை. வலுமிக்க முழுமையான அணியாக விளையாடவே விரும்புகிறேன்.

    இவ்வாறு மிதாலி கூறினார்.
    உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் ரஷியாவுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடமாட்டோம் என போலந்து கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது.
    வார்சா:

    32 அணிகள் பங்கேற்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து திருவிழா கத்தாரில் வருகிற நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் நடக்கிறது. இந்த போட்டிக்கு இதுவரை 15 நாடுகள் தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 17 இடங்களுக்கான தகுதி சுற்று போட்டிகள் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் ஐரோப்பிய மண்டல அணிகளுக்கான தகுதி சுற்றின் ‘பிளே-ஆப்’ அரைஇறுதியில் போலந்து-ரஷியா அணிகள் மோதும் ஆட்டம் மாஸ்கோவில் மார்ச் 24-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் வெற்றி பெறும் அணி அடுத்த ஆட்டத்தில் சுவீடன் அல்லது செக்குடியரசு அணியுடன் மோத வேண்டியது வரும். இதில் வெற்றி பெறும் அணி உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறும். இந்த நிலையில் ரஷியாவுக்கு எதிரான உலக கோப்பை தகுதி சுற்று போட்டியில் விளையாட முடியாது என்று போலந்து கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது.

    இது குறித்து போலந்து கால்பந்து சம்மேளன தலைவர் சிஜாரி குலேசா தனது டுவிட்டர் பதிவில், ‘உக்ரைன் மீது போர் தொடுத்து இருக்கும் ரஷியாவுக்கு எதிரான உலக கோப்பை தகுதி சுற்று போட்டியில் எங்கள் அணி பங்கேற்காது. இனிமேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை. செயல்பட வேண்டிய நேரம் இது. இந்த விஷயத்தில் ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை சர்வதேச கால்பந்து சம்மேளனத்திடம் முன்வைக்க நாங்கள் மற்ற நாட்டு சம்மேளனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    போலந்து அணியின் முன்னணி வீரர் ராபர்ட் லெவாண்டவ்ஸ்கி கருத்து தெரிவிக்கையில், ‘இது சரியான முடிவாகும். ரஷியா ஆயுதங்களுடன் உக்ரைனுக்குள் ஊடுருவி தாக்குதலில் ஈடுபட்டுள்ள இந்த சூழலில் அந்த நாட்டின் தேசிய அணிக்கு எதிராக விளையாடுவதை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது’ என்றார்.
    புரோ ஆக்கி லீக் தொடரில் இந்திய ஆண்கள், பெண்கள் அணி ஸ்பெயின் அணியை வீழ்த்தியது. இந்த போட்டி தொடரில் இந்திய பெண்கள் அணி தொடர்ச்சியாக ருசித்த 3-வது வெற்றி இதுவாகும்.
    புவனேஸ்வர்:

    9 அணிகள் இடையிலான 3-வது புரோ ஆக்கி லீக் தொடர் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நேற்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. மாலையில் நடந்த பெண்கள் பிரிவு லீக் ஆட்டத்தில் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது. ஸ்பெயின் அணியில் செகு மார்டா 18-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இந்திய தரப்பில் ஜோதி 20-வது நிமிடத்திலும், நேஹா 52-வது நிமிடத்திலும் கோல் திருப்பினர். இந்த போட்டி தொடரில் இந்திய பெண்கள் அணி தொடர்ச்சியாக ருசித்த 3-வது வெற்றி இதுவாகும். இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்திய அணி மீண்டும் ஸ்பெயினுடன் (மாலை 5 மணி) மோதுகிறது.

    இரவில் நடந்த ஆண்கள் பிரிவு ஆட்டத்தில் இந்தியா-ஸ்பெயின் அணிகள் மல்லுக்கட்டின. இதில் ஒரு கட்டத்தில் 1-4 என்ற கோல் கணக்கில் பின்தங்கிய இந்தியா அதன் பிறகு ஆக்ரோஷமாக விளையாடி எழுச்சி பெற்றது. கடைசி நிமிடத்தில் கிடைத்த பெனால்டி ஸ்டிரோக் வாய்ப்பை பயன்படுத்தி ஹர்மன்பிரீத் சிங் அடித்த கோல் மூலம் இந்தியா 5-4 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை சாய்த்தது. ஸ்பெயின் கேப்டன் மார்க் மிராலஸ் ‘ஹாட்ரிக்’ கோல் அடித்தும் அந்த அணிக்கு பலன் இல்லை. இந்த தொடரில் 5-வது ஆட்டத்தில் ஆடிய இந்தியாவுக்கு இது 4-வது வெற்றியாகும். இவ்விரு அணிகளும் இதே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு மறுபடியும் சந்திக்கின்றன.

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்தின் தென் ஆப்பிரிக்காவின் கிராண்ட்ஹோம் சதமடித்து அசத்தினார்.
    கிறிஸ்ட்சர்ச்:

    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலாவது டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 276 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது

    இந்நிலையில், 2வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில்  பேட்டிங் தேர்வு செய்தது .

    தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 364 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரர் சரேல் எர்வீ சதமடித்து 108 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜேன்சன் 37 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார்

    நியூசிலாந்து சார்பில் வாக்னர் 4 விக்கெட், மேட் ஹென்றி 3 விக்கெட், ஜேமிசன் 2 விக்கெட், டிம் சவுத்தி 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை ஆடியது. முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர். இதனால் நியூசிலாந்து 91 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

    6-வது விக்கெட்டுக்கு மிட்செல், கிராண்ட்ஹோம் ஜோடி சேர்ந்தது. 133 ரன்கள் சேர்த்த நிலையில் மிட்செல் 60 ரன்னில் அவுட்டானார்.
    பொறுப்புடன் ஆடிய கிராண்ட் ஹோம் சதமடித்தார்.

    இறுதியில், நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 293 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கிராண்ட் ஹோம் 120 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 5 விக்கெட்டும், ஜேன்சன் 4 விக்கெட்டும் கைப்பற்றினர்.
    ×