என் மலர்
விளையாட்டு

இலங்கை அணி கேப்டன் சனகா
மூன்றாவது டி20 கிரிக்கெட்- 146 ரன்களில் இலங்கையை கட்டுப்படுத்தியது இந்தியா
இலங்கை அணியின் முன்னணி விக்கெட்டுகள் சரிந்த நிலையில் கேப்டன் சனகா அதிரடியாக ஆடி ஸ்கோரை உயர்த்தினார்.
தரம்சாலா:
இந்தியா-இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி உள்ளது. இந்நிலையில் 3வது மற்றும் கடைசி போட்டி இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறிய இலங்கை அணி, முன்வரிசை வீரர்களை அடுத்தடுத்து இழந்தது. குணதிலக ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினா. நிசங்கா (1), அசலங்கா (4), ஜனித்லியாங்கே (9) ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அதன்பின்னர் சண்டிமல், கேப்டன் சனகா இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். சண்டிமல் 22 ரன்கள் சேர்த்தார். மறுமுனையில் அதிரடியாக ஆடிய சனகா அரை சதம் கடந்தார். தொடர்ந்து ஆடிய சனகா 74 ரன்கள் (நாட் அவுட்), குணரத்ன 12 ரன்கள் (நாட் அவுட்) சேர்க்க, இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் சேர்த்தது. இந்தியா தரப்பில் ஆவேஷ் கான் 2 விக்கெட் வீழ்த்தினார். முகமது சிராஜ், ஹர்ஷல் பட்டேல், ரவி பிஷ்னோய் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.
Next Story






