என் மலர்tooltip icon

    விளையாட்டு

    சதமடித்த கிராண்ட்ஹோம்
    X
    சதமடித்த கிராண்ட்ஹோம்

    கிராண்ட்ஹோம் சதமடித்து அசத்தல் - நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 293 ரன்னுக்கு ஆல் அவுட்

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்தின் தென் ஆப்பிரிக்காவின் கிராண்ட்ஹோம் சதமடித்து அசத்தினார்.
    கிறிஸ்ட்சர்ச்:

    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலாவது டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 276 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது

    இந்நிலையில், 2வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில்  பேட்டிங் தேர்வு செய்தது .

    தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 364 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரர் சரேல் எர்வீ சதமடித்து 108 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜேன்சன் 37 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார்

    நியூசிலாந்து சார்பில் வாக்னர் 4 விக்கெட், மேட் ஹென்றி 3 விக்கெட், ஜேமிசன் 2 விக்கெட், டிம் சவுத்தி 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை ஆடியது. முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர். இதனால் நியூசிலாந்து 91 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

    6-வது விக்கெட்டுக்கு மிட்செல், கிராண்ட்ஹோம் ஜோடி சேர்ந்தது. 133 ரன்கள் சேர்த்த நிலையில் மிட்செல் 60 ரன்னில் அவுட்டானார்.
    பொறுப்புடன் ஆடிய கிராண்ட் ஹோம் சதமடித்தார்.

    இறுதியில், நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 293 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கிராண்ட் ஹோம் 120 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 5 விக்கெட்டும், ஜேன்சன் 4 விக்கெட்டும் கைப்பற்றினர்.
    Next Story
    ×