என் மலர்tooltip icon

    விளையாட்டு

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் நியூசிலாந்தின் டேவன் கான்வே 92 ரன்கள் எடுத்தார்.
    கிறிஸ்ட்சர்ச்:

    தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில்  பேட்டிங் தேர்வு செய்தது .

    தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 364 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரர் சரேல் எர்வீ சதமடித்து 108 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜேன்சன் 37 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தார்.

    நியூசிலாந்து சார்பில் வாக்னர் 4 விக்கெட், மேட் ஹென்றி 3 விக்கெட், ஜேமிசன் 2 விக்கெட், டிம் சவுத்தி 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அடுத்து ஆடிய நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 293 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கிராண்ட் ஹோம் 120 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 5 விக்கெட்டும், ஜேன்சன் 4 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    71 ரன்கள் முன்னிலை பெற்ற தென் ஆப்பிரிக்கா அணி இரண்டாவது இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 354 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. கைல் வெரைன் 136 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    நியூசிலாந்து சார்பில் சவுத்தி, ஹென்றி, ஜேமிசன், வாக்னர் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்

    இதையடுத்து, 426 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது.

    தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் வெளியேறினார். டேவன் கான்வே பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவருக்கு பிளெண்டல் ஓரளவு ஒத்துழைப்பு கொடுத்தார். சதமடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் கானே 92 ரன்னில் வெளியேறினார். பிளெண்டல் 44 ரன்னில் அவுட்டானார். மற்ற வீரர்கள் விரைவில் வெளியேறினர்.

    இறுதியில், நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 227 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 198 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று, தொடரை 1-1 என சமன் செய்தது.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா, ஜேன்சன், மகாராஜ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    ஆட்ட நாயகன் விருது தென் ஆப்பிரிக்காவின் ரபாடாவுக்கும், தொடர் நாயகன் விருது நியூசிலாந்தின் மாட் ஹென்றிக்கும் வழங்கப்பட்டது.
    சர்வதேச கால்பந்து சங்கம் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கால்பந்து சங்கம் கூட்டாக நடவடிக்கை எடுத்துள்ளன.
    உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பை அடுத்து, ரஷியா மற்றும் அதன் ஆதரவு நாடான பெலாரஸ் ஆகிய நாடுகளின் விளையாட்டு அணிகள் சர்வதேச அளவில் நடைபெறும் அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என்று, விளையாட்டு அமைப்புகளுக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. 

    இந்நிலையில், ரஷியாவின் தேசிய மற்றும் உள்ளூர் கால்பந்து அணிகள் சர்வதேச கால்பந்து போட்டிகளில் பங்கேற்க இடைக்கால தடை விதிக்கப் படுவதாக சர்வதேச கால்பந்து சங்கம் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கால்பந்து சங்கம் கூட்டாக அறிவித்துள்ளன. 

    அடுத்த அறிவிப்பு வரும் வரை இது அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

    ஃபிஃபா உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் ரஷியாவுடன், போலந்து விளையாடாது என அந்நாட்டு கால்பந்து சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்

    முடிவெடுக்கும் திறன் அடிப்படையில் நான் இப்போது அனுபவமுள்ளவனாக இருக்கிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
    மும்பை:

    இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20  தொடரை இந்திய அணி ஓயிட் வாஷ் செய்தது. இந்த மூன்று ஆட்டங்களில் மும்பை வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக விளையாடியதுடன் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    மேலும் நடப்பாண்டு ஐ.பி.எல். தொடரில் ஸ்ரேயாஸ் அய்யரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 12.25 கோடிக்கு வாங்கியதுடன் அவரை கேப்டனாக நியமித்துள்ளது.

    இந்நிலையில் தாம் ஒரு வீரர்களின் கேப்டன் என்று ஸ்ரேயாஸ் கூறியுள்ளார். 

    இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: 

    நான் அடுத்தது வித்தியாசமான மனநிலையுடன் விளையாடுவேன். முடிவெடுக்கும் திறன் மற்றும் கேப்டன்ஷிப் திறன்களின் அடிப்படையில் நான் இப்போது மிகவும் முதிர்ச்சியடைந்து அனுபவமுள்ளவனாக இருக்கிறேன்.

    அணியில் உள்ள ஒவ்வொரு தனிநபருடனும் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன். உண்மையில் அணிக்கு வேறு மட்டத்தில் செயல்பட்டு உதவுகிறேன். 

    உங்களுக்கு தெரியும், நான் கே.கே.ஆர். குடும்பத்தின் ஒரு பகுதியாக இருப்பது ஒரு மகத்தான உணர்வு. அனைத்து சிறந்த வீரர்களும் செய்த பணியை நான் மிகவும் பாராட்ட விரும்புகிறேன். கே.கே.ஆருக்காக அவர்கள் உருவாக்கிய அதே அடிச்சுவடுகளைப் பின்பற்ற விரும்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 
    புள்ளிப் பட்டியலில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 10-வது இடத்தில் உள்ளது.
    கோவா:

    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் அணி, நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை எதிர்கொண்டது.

    ஈஸ்ட் பெங்கால் அணி சார்பில் ஆண்டனியோ ஒரு கோல் அடித்தார். நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி வீரர் மார்கோ சகாநெக்,  தமது அணி சார்பில் ஒரு கோல் அடித்தார். 

    இதையடுத்து இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. 

    இரு அணிகளுக்கும் புள்ளிகள் பகிர்ந்தளிக்கப் பட்டன. இதன் மூலம் புள்ளி பட்டியலில் ஈஸ்ட் பெங்கால் அணி கடைசியில் 11-வது இடத்திலும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 10-வது இடத்திலும் உள்ளது.

    குடி போதையில் கார் விபத்து ஏற்படுத்தியதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் சச்சின் தெண்டுல்கரின் நண்பருமான வினோத் காம்ப்ளி கைது செய்யப்பட்டார்.
    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி. இவரும், கிரிக்கெட்டின் சகாப்தமான தெண்டுல்கரும் பள்ளி கிரிக்கெட் போட்டியில் புதிய சாதனை படைத்து இருந்தனர்.

    தெண்டுல்கரின் நண்பரான இவரால் சர்வதேச போட்டிகளில் சாதிக்க முடியவில்லை.

    இடது கை பேட்ஸ்மேனான வினோத்காம்ப்ளி எப்போதுமே சர்ச்சையில் சிக்கி கொள்வார்.

    இந்தநிலையில் அவர் குடித்து விட்டு வாகனம் ஓட்டி உள்ளார். மும்பை பாந்த்ரா சொசைட்டி பகுதியில் வினோத் காம்ப்ளி குடித்து விட்டு காரை ஓட்டி சென்றுள்ளார். இந்த கார் விபத்துக்குள்ளானது. அவரது கார், மற்றொரு கார் மீது மோதியது.

    இதுதொடர்பாக அவர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின்பேரில் வினோத் காம்ப்ளியை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

    இந்த சம்பவத்துக்கு பிறகு காம்ப்ளி தனது வளாகத்தில் உள்ள காவலாளி மற்றும் குடியிருப்பு வாசிகளுடன் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.

    50 வயதான வினோத் காம்ப்ளி 17 டெஸ்டில் விளையாடி 4 சதம் உள்பட 1,084 ரன்கள் எடுத்துள்ளார். 104 ஒருநாள் போட்டியில் விளையாடி 2 செஞ்சூரி உள்பட 2477 ரன் எடுத்துள்ளார்.

    1991-ம் ஆண்டு சர்வதேச போட்டியில் அவர் அறிமுகமானார். 2000-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அவர் கடைசி சர்வதேச போட்டியில் விளையாடினார். 
    20 ஓவர் போட்டியில் இந்திய அணி தொடர்ச்சியாக 12 ஆட்டங்களில் வெற்றி பெற்று ஆப்கானிஸ்தான் அணியின் சாதனையை சமன் செய்தது.
    தர்மசாலா:

    இலங்கைக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றியது.

    தர்மசாலாவில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய இலங்கை அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 146 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் இந்தியாவுக்கு 147 ரன் இலக்காக இருந்தது.

    கேப்டன் தசுன் ‌ஷனகா அதிகபட்சமாக 38 பந்தில் 74 ரன் (9 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். அவேஷ்கான் 2 விக்கெட்டும் , முகமது சிராஜ் , ஹர்சல் படேல், ரவி பிஷ்னோய் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் விளையாடிய இந்திய அணி 19 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் 16.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 148 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    ஸ்ரேயாஸ் அய்யர் 45 பந்தில் 73 ரன்னும் (9 பவுண்டரி, 1 சிக்சர்), ஜடேஜா 15 பந்தில் 22 ரன்னும் ( 3 பவுண்டரி ) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    இந்த வெற்றி மூலம் இந்திய அணி 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது. கொல்கத்தாவில் நடந்த முதல் ஆட்டத்தில் 62 ரன் வித்தியாசத்திலும், தர்மசாலாவில் நடந்த 2-வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இருந்தது.

    20 ஓவர் போட்டியில் இந்திய அணி தொடர்ச்சியாக 12 ஆட்டங்களில் வெற்றி பெற்று ஆப்கானிஸ்தான் அணியின் சாதனையை சமன் செய்தது.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அபுதாபியில் நடந்த 20 ஓவர் உலக கோப்பையில் இந்திய அணி ஆப்கானிஸ்தானை 66 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அதன் பிறகு ஸ்காட்லாந்து, நமீபியா அணிகளையும், அதைத்தொடர்ந்து நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை அணிகளை தலா 3 முறையும் வீழ்த்தியது.

    ஆப்கானிஸ்தான் அணியும் தொடர்ச்சியாக 12 ஆட்டங்களில் 20 ஓவர் போட்டியில் வெற்றி பெற்று உள்ளது. ஆப்கானிஸ்தான் சாதனையை தற்போது இந்தியா சமன் செய்து உள்ளது. இன்னும் ஒரு 20 ஓவர் போட்டியில் வெற்றி பெற்றால் இந்தியா புதிய சாதனை படைக்கும்.

    அதிக 20 ஓவர் சர்வதேச போட்டியில் விளையாடி இந்திய கேப்டன் ரோகித்சர்மா புதிய சாதனை படைத்தார்.

    நேற்றைய ஆட்டம் அவருக்கு 125-வது போட்டியாகும். இதன்மூலம் அதிக போட்டியில் விளையாடி இருந்த பாகிஸ்தானை சேர்ந்த சோயிப் மாலிக்கை ரோகித்சர்மா முறியடித்தார். சோயிப் மாலிக் 124 ஆட்டங்களில் விளையாடி உள்ளார். ரோகித்சர்மா 125 போட்டியில் 3313 ரன்னும், சோயிப் மாலிக் 124 போட்டியில் 2345 ரன்னும் எடுத்தனர்.

    அடுத்து இந்தியா- இலங்கை அணியினரிடையே 2 டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டி வருகிற 4-ந் தேதி மொகாலியில் தொடங்குகிறது. 

    பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஷப்னிம் இஸ்மாயில் வீசிய பவுன்சர் பந்து மந்தனா ஹெல்மெட்டை பலமாக தாக்கியது.
    கிறைஸ்ட்சர்ச்:

    இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 12-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 4-ந்தேதி நியூசிலாந்தில் தொடங்குகிறது. இதையொட்டி தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடக்கின்றன.பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி நேற்று தென்ஆப்பிரிக்காவுடன் ரங்கியாரா நகரில் மோதியது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 9 விக்கெட்டுக்கு 244 ரன்கள் சேர்த்தது. ஹர்மன்பிரீத் கவுர் சதம் (103 ரன், 114 பந்து, 9 பவுண்டரி) அடித்தார். கேப்டன் மிதாலிராஜ் (0) ரன்-அவுட் ஆனார். தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்க அணியால் 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 242 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் இந்தியா 2 ரன் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை ருசித்தது.

    முன்னதாக இந்திய தொடக்க வீராங்கனை ஸ்மிர்தி மந்தனாவை (12 ரன், 23 பந்து) பந்து தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஷப்னிம் இஸ்மாயில் வீசிய ‘பவுன்சர்’ பந்து அவரது ஹெல்மெட்டை பலமாக தாக்கியது. உடனடியாக இந்திய அணியின் மருத்துவர் அவரை பரிசோதித்தார். 

    ஸ்மிர்தி மந்தனா
    அவரது பார்வையில் தடுமாற்றம் தெரிந்தது. ஆனால் தலையில் பாதிப்பு இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று அவர் கூறியதால் தொடர்ந்து பேட் செய்தார். இருப்பினும் சிறிது நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் ‘ரிட்டயர்ட்ஹர்ட்’ ஆகி பாதியிலேயே வெளியேறினார். இந்திய அணி தனது 2-வது பயிற்சி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசை நாளை சந்திக்கிறது.

    கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய அணி 24 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் சென்றுள்ளது.
    இஸ்லாமாபாத்:

    3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரே ஒரு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியினர் தனி விமானத்தில் நேற்று பாகிஸ்தான் சென்றனர். தலைநகர் இஸ்லாமாபாத் சென்றடைந்த வீரர்கள் பலத்த பாதுகாப்புடன் ஓட்டலுக்கு அழைத்து செல்லப்பட்டனர். ஒரு நாள் தனிமைப்படுத்தலுக்கு பிறகு அவர்கள் பயிற்சியில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள்.

    கடைசியாக 1998-ம் ஆண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தானில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் ஆடிய ஆஸ்திரேலிய அணி அதன் பிறகு பாதுகாப்பு அச்சுறுத்தலை காரணம் காட்டி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்தது. இந்த நிலையில் 24 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு பயணித்து இருப்பதால் இந்த போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் வருகிற 4-ந்தேதி ராவல்பிண்டியில் தொடங்குகிறது.

    பாகிஸ்தான் அதிபர், பிரதமருக்கு வழங்கப்படுவது போன்ற உயரிய பாதுகாப்பு ஆஸ்திரேலிய அணியினருக்கு வழங்கப்படும் என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். வீரர்கள் தங்கியுள்ள ஓட்டல் மற்றும் போட்டி நடக்கும் மைதானத்தை சுற்றி ஏறக்குறைய 4 ஆயிரம் போலீசார் மற்றும் ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். வீரர்கள் ஓட்டலில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மைதானத்திற்கு பஸ்சில் செல்லும் போது சாலையில் போக்குவரத்து நிறுத்தப்படும். பாதுகாப்புக்கு ராணுவ ஹெலிகாப்டரும் சுற்றி வரும். ஆஸ்திரேலிய வீரர்கள் 6 வார காலமும் பலமான பாதுகாப்பு வளையத்தில் இருப்பார்கள்.

    ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறுகையில், ‘பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்திகரமாக உள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நன்றாக கவனிக்கிறது. போட்டி மற்றும் பயிற்சி தவிர மற்ற நேரங்களில் நாங்கள் ஓட்டலிலேயே அடைப்பட்டு கிடக்க வேண்டி உள்ளது. அதிர்ஷ்டவசமாக எங்களுடன் நிறைய வீரர்கள், உதவியாளர்கள் உள்ளனர்’ என்றார்.

    இந்திய வீராங்கனை நிஹாத் ஜரீன் 4-1 என்ற கணக்கில் 3 முறை ஐரோப்பிய சாம்பியனான டெடியானோ காப்பை (உக்ரைன்) தோற்கடித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.
    சோபியா:

    73-வது ஸ்ட்ராண்ட்ஜா நினைவு சர்வதேச குத்துச்சண்டை போட்டி பல்கேரியாவின் சோபியா நகரில் நடந்தது. இதில் நேற்று பெண்களுக்கான 52 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை நிஹாத் ஜரீன் 4-1 என்ற கணக்கில் 3 முறை ஐரோப்பிய சாம்பியனான டெடியானோ காப்பை (உக்ரைன்) தோற்கடித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். 

    எதிராளிக்கு சரமாரி குத்துகளை விட்ட மற்றொரு இந்திய வீராங்கனையும், முன்னாள் இளையோர் உலக சாம்பியனுமான நித்து (48 கிலோ பிரிவு) 5-0 என்ற கணக்கில் இத்தாலியின் எரிக்கா பிரிஸ்சின்ட்ராவோவை பதம்பார்த்து தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார்.

    ‘நான் ஏற்கனவே இங்கு தங்கம் வென்றுள்ளேன். அதனால் என்னை ‘ஸ்ட்ராண்ட்ஜாவின் ராணி’ என்று நீங்கள் அழைக்கலாம். இதனால் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று ஐதராபாத்தை சேர்ந்த 25 வயதான ஜரீன் குறிப்பிட்டார். இந்த தொடரை இந்தியா 2 தங்கம், ஒரு வெண்கலப் பதக்கத்துடன் முடித்துள்ளது.
    பாகிஸ்தான் சூப்பர் லீக் இறுதிப்போட்டியில் லாகூர் குவாலண்டர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தியது.
    லாகூர்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு ஆண்டுதோறும் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரை நடத்தி வருகிறது.
     
    இந்நிலையில், பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் மொகமது ரிஸ்வான் தலைமையிலான முல்தான் சுல்தான்ஸ், ஷஹீன் அப்ரிடி தலைமையிலான லாகூர் குவாலண்டர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லாகூர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. 

    அதன்படி, முதலில் பேட் செய்த லாகூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது. முகமது ஹபீஸ் 46 பந்துகளில் 1 சிக்சர், 9 பவுண்டரி உள்பட 69 ரன்கள் எடுத்தார். அதிரடியாக ஆடிய புரூக் 22 பந்துகளில் 3 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 41 ரன்னும், வெய்ஸ் 8 பந்தில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 28 ரன்னும் எடுத்தனர். 

    முல்தான் அணி சார்பில் ஆசிப் அப்ரிடி 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் முல்தான் அணி களமிறங்கியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் அந்த அணி 138 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 42 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. முல்தான் அணியில் குஷ்தில் ஷா அதிகபட்சமாக 32 ரன்கள் எடுத்தார்.

    லாகூர் அணி சார்பில் ஷஹீன் அப்ரிடி 3 விக்கெட்டும், ஹபீஸ், சமான் கான் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதன்மூலம் லாகூர் குவாலண்டர்ஸ் அணி முதல் முறையாக பாகிஸ்தான் சூப்பர் லீக் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. 

    முகமது ஹபீஸ் ஆட்ட நாயகன் விருதையும், முகமது ரிஸ்வான் தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.
    நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் தென் ஆப்பிரிக்காவின் கைல் வெரைன் சதமடித்து அசத்தினார்.
    கிறிஸ்ட்சர்ச்:

    தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில்  பேட்டிங் தேர்வு செய்தது .

    தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 364 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரர் சரேல் எர்வீ சதமடித்து 108 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜேன்சன் 37 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார்

    நியூசிலாந்து சார்பில் வாக்னர் 4 விக்கெட், மேட் ஹென்றி 3 விக்கெட், ஜேமிசன் 2 விக்கெட், டிம் சவுத்தி 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அடுத்து ஆடிய நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 293 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கிராண்ட் ஹோம் 120 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 5 விக்கெட்டும், ஜேன்சன் 4 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    71 ரன்கள் முன்னிலை பெற்ற தென் ஆப்பிரிக்கா அணி இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்து ஆடியது. முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர். 114 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை தென் ஆப்பிரிக்கா அணி இழந்தது.

    அடுத்து இறங்கிய விக்கெட் கீப்பர் கைல் வெரைன் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவருக்கு ரபாடா, முல்டர் ஆகியோர் ஒத்துழைப்பு அளித்தனர்.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட் இழப்புக்கு 354 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. கைல் வெரைன் 136 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    நியூசிலாந்து சார்பில் சவுத்தி, ஹென்றி, ஜேமிசன், வாக்னர் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்

    இதையடுத்து, 426 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் தொடர்ந்து விளையாடி வருகிறது.
    அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களின் வளர்ச்சிக்கு இது உதவும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் வெற்றிகரமான அணியாக வலம் வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் சார்பில் தமிழகம் முழுவதும் கிரிக்கெட் அகாடமி தொடங்க திட்டமிடப் பட்டுள்ளது. 

    முதற்கட்டமாக சென்னை துரைப்பாக்கத்திலும், சேலம் அருகே வாழப்பாடியிலும் சூப்பர் கிங்ஸ் என்ற பெயரில் கிரிக்கெட் அகாடமி நேற்று தொடங்கப்பட்டது. 

    இதில் இணைய விரும்பும் சிறுவர், சிறுமியர், இளைஞர்கள் ‘சூப்பர் கிங்ஸ் அகாடமி’ இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். 

    ஏப்ரல் மாதத்தில் இருந்து கிரிக்கெட் வாரியத்தின் அங்கீகாரம் பெற்ற பயிற்சியாளர்கள் மூலம் இந்த அகாடமிகளில் கிரிக்கெட்  பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இது குறித்து சென்னை சூப்பர் கிங்சின் தலைமை செயல் அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன் தெரிவித்துள்ளதாவது:

    நாங்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக கிரிக்கெட் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளோம். அந்த விளையாட்டுக்கு இந்த வகையில் எங்களது பங்களிப்பை திருப்பி வழங்குவதை சிறப்பானதாக கருதுகிறோம். 

    எங்களது அனுபவத்தை பகிர்ந்து கொள்வதற்கும், அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களின் வளர்ச்சிக்கு உதவுவதற்கும் இது சரியான வாய்ப்பாகும். 

    அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்களும், மிகச்சிறந்த வசதி வாய்ப்புகளும் இங்கு கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    ×