என் மலர்tooltip icon

    விளையாட்டு

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    இளம் வீரர்-வீராங்கனைகளுக்கு கிரிக்கெட் அகாடமி: சென்னை, சேலத்தில் தொடக்கம்

    அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களின் வளர்ச்சிக்கு இது உதவும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் வெற்றிகரமான அணியாக வலம் வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் சார்பில் தமிழகம் முழுவதும் கிரிக்கெட் அகாடமி தொடங்க திட்டமிடப் பட்டுள்ளது. 

    முதற்கட்டமாக சென்னை துரைப்பாக்கத்திலும், சேலம் அருகே வாழப்பாடியிலும் சூப்பர் கிங்ஸ் என்ற பெயரில் கிரிக்கெட் அகாடமி நேற்று தொடங்கப்பட்டது. 

    இதில் இணைய விரும்பும் சிறுவர், சிறுமியர், இளைஞர்கள் ‘சூப்பர் கிங்ஸ் அகாடமி’ இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். 

    ஏப்ரல் மாதத்தில் இருந்து கிரிக்கெட் வாரியத்தின் அங்கீகாரம் பெற்ற பயிற்சியாளர்கள் மூலம் இந்த அகாடமிகளில் கிரிக்கெட்  பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இது குறித்து சென்னை சூப்பர் கிங்சின் தலைமை செயல் அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன் தெரிவித்துள்ளதாவது:

    நாங்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக கிரிக்கெட் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளோம். அந்த விளையாட்டுக்கு இந்த வகையில் எங்களது பங்களிப்பை திருப்பி வழங்குவதை சிறப்பானதாக கருதுகிறோம். 

    எங்களது அனுபவத்தை பகிர்ந்து கொள்வதற்கும், அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களின் வளர்ச்சிக்கு உதவுவதற்கும் இது சரியான வாய்ப்பாகும். 

    அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்களும், மிகச்சிறந்த வசதி வாய்ப்புகளும் இங்கு கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×