என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இங்கிலாந்து மற்றும் சர்வதேச கால்பந்து சங்கங்கள்
    X
    இங்கிலாந்து மற்றும் சர்வதேச கால்பந்து சங்கங்கள்

    ரஷியாவுக்கு எதிரான அனைத்து கால்பந்து போட்டிகளையும் புறக்கணிப்போம் - இங்கிலாந்து கால்பந்து சங்கம் அறிவிப்பு

    ரஷிய கால்பந்து அணி பங்கேற்கும் போட்டிகளில் அந்நாட்டு கொடி அல்லது தேசிய கீதம் பயன்படுத்தப் படாது என்று சர்வதேச கால்பந்து சங்கம் தெரிவித்துள்ளது.
    உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இருப்பதன் எதிரொலியாக ஐரோப்பிய கிளப் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் ரஷியாவில் இருந்து இடமாற்றம் செய்து பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெறும் என ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு அறிவித்தது.

    இதன் தொடர்ச்சியாக, ரஷியாவில் எந்த ஒரு சர்வதேச கால்பந்து போட்டியும் நடத்தப்படாது என்று சர்வதேச கால்பந்து சங்கம் அறிவித்துள்ளது.

    அந்த நாட்டு கால்பந்து உறுப்பினர் சங்கம் இனி கால்பந்து யூனியன் ஆஃப் ரஷியா என்ற பெயரில் அழைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் ரஷியாவுக்கு எதிரான உலக கோப்பை தகுதி சுற்று போட்டியில் விளையாட முடியாது என்று சுவிடன், போலந்து கால்பந்து சங்கங்கள் அறிவித்துள்ளன.  

    இதனை அடுத்து, ரஷியாவுக்கு எதிரான அனைத்து சர்வதேச கால்பந்து போட்டிகளையும் இங்கிலாந்து புறக்கணிக்கும் என அந்நாட்டு கால்பந்து சங்கம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×