என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் 7 டைபிரேக் ஆட்டங்களுக்குப் பிறகு பிரக்ஞானந்தா வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
    • அரையிறுதி சுற்றில் உலகின் 3-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பேபியானோ கருணாவை பிரக்ஞானந்தா எதிர்கொள்ள உள்ளார்.

    உலகக் கோப்பை செஸ் போட்டி அசர்பைஜான் நாட்டின் பெக்கு நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 30ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் வரும் 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 206 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

    இந்த தொடரில் காலிறுதி சுற்றில் சக இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசியுடன் தமிழக வீரர் பிரக்ஞானந்தா மோதினார். பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் 7 டைபிரேக் ஆட்டங்களுக்குப் பிறகு பிரக்ஞானந்தா வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

    உலகக் கோப்பை செஸ் போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறிய 2வது இந்திய வீரர் என்ற சாதனையை பிரக்ஞானந்தா படைத்தார். அடுத்து நடைபெறும் அரையிறுதி சுற்றில் உலகின் 3-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பேபியானோ கருணாவை பிரக்ஞானந்தா எதிர்கொள்ள உள்ளார்.

    இந்நிலையில், உலகக் கோப்பை செஸ் போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய வீரர் பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், அர்ஜூன் எரிகைசியும் சிறப்பாக தன்னுடைய ஆட்டத்தை வெளிப்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.

    • பும்ரா தலைமையில் இந்திய அணி அயர்லாந்து தொடரில் பங்கேற்கிறது.
    • இன்றைய ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

    டப்ளின்:

    இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தில் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

    கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், சஹல் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்திய அணிக்கு வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தலைமை தாங்குகிறார்.

    ருதுராஜ் கெய்க்வாட், ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே, ஷபாஸ் அகமது, சஞ்சு சாம்சன், ஜிதேஷ் ஷர்மா, ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப்சிங், முகேஷ்குமார், அவேஷ்கான் ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.

    இந்நிலையில், இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. இதனையொட்டி இந்திய அணி வீரர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர்.

    பால்பிரீன் தலைமையிலான அயர்லாந்து அணி இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்து முதல் முறையாக வெற்றி பெறும் ஆர்வத்தில் இருக்கிறது. இன்றைய ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

    • பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று போட்டிகள் நடந்தன.
    • இதில் உலகின் 3-ம் நிலை வீராங்கனையான ஜெசிகா பெகுலா தோற்றார்.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. கடந்த 12-ம் தேதி தொடங்கிய இத்தொடர் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று போட்டிகள் நடந்தன. இதில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, செக் நாட்டு வீராங்கனை மேரி போஸ்கோவாவுடன் மோதினார்.

    இதில் போஸ்கோவா 6-4, 6-0 என்ற செட் கணக்கில் எளிதாக வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    • டாஸ் வென்ற யுஏஇ அணி பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 155 ரன்கள் எடுத்தது.

    துபாய்:

    நியூசிலாந்து அணி ஐக்கிய அரபு எமிரேட்சில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று துபாயில் நடைபெற்றது. டாஸ் வென்ற யுஏஇ அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டிம் சைபர்ட் 55 ரன்கள் எடுத்தார். கோல் மெக்கன்சி 31 ரன்னும், நீஷம் 25 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் யு.ஏ.இ. அணி களமிறங்கியது. விக்கெட் கீப்பர் அயனாஷ் ஷர்மா ஓரளவு போராடி 60 ரன்கள் சேர்த்தார். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், யு.ஏ.இ. அணி 136 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் நியூசிலாந்து அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனல் டி20 தொடரில் நியூசிலாந்து 1-0 என முன்னிலை பெற்றது.

    5 விக்கெட் வீழ்த்திய டிம் சவுத்தி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

    • சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இதில் உலகின் 3-ம் நிலை வீரரான மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. கடந்த 12-ம் தேதி தொடங்கிய இத்தொடர், 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று போட்டிகள் நடந்தன. இதில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவுடன் மோதினார்.

    இதில் ஸ்வெரேவ் 6-4, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் மெத்வதேவை வீழ்த்தினார்.

    • இந்திய ஆண்கள் மற்றும் மகளிர் அணியினர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
    • டை பிரேக்கில் இந்தியா வெற்றி பெற்றது.

    பாரீஸ்:

    பிரான்சில் நடைபெற்று வரும் உலக கோப்பை 4-ம் நிலை வில்வித்தை போட்டியின் காம்பவுண்ட் அணிகள் பிரிவில் இந்திய ஆண்கள் மற்றும் மகளிர் அணியினர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர். இதனால் இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள் உறுதியானது.

    ஆண்கள் அணிகள் பிரிவில் இந்தியாவின் ஒஜாஸ் தியோடெல், பிரத மேஷ் ஜவகர், அபிஷேக் வர்மா ஆகியோர் அடங்கிய அணி தென் கொரியாவை எதிர் கொண்டது. இந்த ஆட்டம் 235-235 என்ற கணக்கில் 'டிரா' ஆனது. டை பிரேக்கில் இந்தியா வெற்றி பெற்றது. இறுதிப் போட்டியில் அமெரிக்காவை சந்திக்கிறது.

    மகளிர் அணிகள் பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் ஜோதி சுரேகா, அதிதி சுவாமி, பர்னீத்கபூர் ஆகியோர் அடங்கிய அணி 234-233 என்ற கணக்கில் இங்கி லாந்தை தோற்கடித் தது. இறுதிப் போட்டியில் மெக்சிகோவுடன் மோதுகிறது.

    • இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீரரான ஜஸ்பிரீத் பும்ரா 11 மாதங்க ளுக்கு பிறகு சர்வதேச போட்டியில் ஆடுகிறார்
    • முழு உடல் தகுதி பெற்றதால் பும்ரா அயர்லாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

    டுப்ளின்:

    ஜஸ்பிரீத் பும்ரா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக அயர்லாந்து சென்று உள்ளது.

    இந்தியா-அயர்லாந்து அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் டுப்ளின் நகரில் நாளை (வெள்ளிக் கிழமை) நடக்கிறது.

    இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீரரான ஜஸ்பிரீத் பும்ரா 11 மாதங்க ளுக்கு பிறகு சர்வதேச போட்டியில் ஆடுகிறார்.

    முதுகின் அடிப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கு பிறகு அவர் எந்தவித போட்டியிலும் விளையாடவில்லை. கடந்த ஆண்டு நடந்த ஆசிய கோப்பை ( 20 ஓவர்) மற்றும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிகளை தவறவிட்டார். காயத்துக்காக பும்ரா ஆபரேஷன் செய்து கொண்டார். இதனால் அவர் கடந்த ஐபிஎல் சீசனிலும் , உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் ஆடவில்லை.

    முழு உடல் தகுதி பெற்றதால் பும்ரா அயர்லாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார். அயர்லாந்து தொடரில் 2-வது கட்ட இந்திய அணியே விளையாடுகிறது. கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட முன்னனி வீரர்கள் ஆடவில்லை.

    ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம்துபே, அவேஷ்கான், ஜிதேஷ்சர்மா, ரிங்குசிங், ஷபாஸ் அகமது உள்ளிட்ட வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. சமீபத் தில் இந்திய அணி வெஸ்ட் இண்டீசிடம் 20 ஓவர் தொடரை இழந்து இருந்தது.

    இந்திய அணி அயர்லாந்தில் 3-வது முறையாக விளையாடுகிறது. 2018-ம் ஆண்டு 2 போட்டிக்கொண்ட 20 ஓவர் தொடரை 2-0 என்ற கணக்கிலும், கடந்த ஆண்டு 2-0 என்ற கணக்கிலும் கைப்பற்றி இருந்தது.

    அயர்லாந்துக்கு எதிராக இதுவரை நடந்த 5 போட்டி யிலும் இந்தியா வெற்றி பெற்று இருக்கிறது. 2009-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பையில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி இருந்தது. அயர்லாந்துக்கு எதிராக தோல்வியை சந்திக்காததால் அந்த அணியை இந்தியா நம்பிக்கையுடன் எதிர்க்கொள்ளும்.

    பால்பிரீன் தலைமையிலான அயர்லாந்து அணி இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்து முதல் முறையாக வெற்றி பெறும் ஆர்வத்தில் இருக்கிறது.

    நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. ஜியோ சினிமா, ஸ்போர்ட்ஸ் 18 ஆகியவற்றில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    இரு அணி வீரர்கள் வருமாறு:-

    இந்தியா:- ஜஸ்பிரீத் பும்ரா (கேப் டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஜெய்ஷ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே, ஷபாஸ் அகமது, சஞ்சு சாம்சன், ஜிதேஷ் சர்மா, ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா, அர்தீப்சிங், முகேஷ்குமார், அவேஷ்கான்.

    அயர்லாந்து:- ஆண்டி பால்பிரீன், ஹேரி டெக்டர், ரோஸ் ஆதிர், லார்கன் டக்கரி, மார்க் ஆதிர், கேம்பர், கேரீத் டெலினி, டாக்ரெல், பின்ஹோண்ட், ஜோஸ் லிட்டில், பென் ஒயிட், கிரேங்யங், வோயர் காம், மெக்கார்த்தி.

    • இந்திய அணி நிர்வாகம் பல வீரர்களை வைத்து பரிசோதனை நடத்தி வருகிறது.
    • உலக கோப்பை போட்டியில் இந்திய அணி சீனியர் வீரர்களை நம்பிதான் இருக்கிறது.

    லாகூர்:

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணிக்கு வரும் காலங்களில் சவால்கள் காத்திருக்கின்றன. ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை (50 ஓவர்) போட்டிகளில் விளையாடுகிறது.

    ஆசிய கோப்பை போட்டி வருகிற 30-ந்தேதி முதல் தொடங்கி செப்டம்பர் 17-ந்தேதி வரை பாகிஸ்தான், இலங்கையில் நடக்கிறது. உலக கோப்பை போட்டி அக்டோபர் 5-ந் தேதி முதல் நவம்பர் 19-ந் தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடக்கிறது.

    இந்நிலையில் வீராட் கோலியை கேப்டன் பதவியில் நீடிக்க அனுமதித்து இருந்தால் இந்திய அணி உலக கோப்பைக்கு 100 சதவீதம் தயாராக இருக்கும் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்திய அணி நிர்வாகம் பல வீரர்களை வைத்து பரிசோதனை நடத்தி வருகிறது. புதிய வீரர்களை நிலை நிறுத்த அனுமதிக்காததால் தேர்வு முறையில் திணறி வருகிறது. அதனால் தான் சமீபத்தில் வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் தொடரை இழந்தது.

    உலக கோப்பை போட்டியில் இந்திய அணி சீனியர் வீரர்களை நம்பிதான் இருக்கிறது.

    கேப்டன்களின் மாற்றம் இந்திய அணிக்கு உதவவில்லை என்பது சந்தேகம் இல்லை. வீராட்கோலியை கேப்டனாக நீடிக்க அனுமதித்து இருந்தால் இந்தியா உலக கோப்பைக்கு 100 சதவீதம் தயாராக இருக்கும்.

    இவ்வாறு ரஷீத் லத்தீப் கூறியுள்ளார். அவர் 1996 மற்றும் 2003-ம் ஆண்டு உலக கோப்பைகளில் விளையாடி இருக்கிறார். உலக கோப்பை போட்டி தொடங்க இன்னும் 46 தினங்கள் உள்ள நிலையில் 4-வது வீரர் வரிசையை இந்திய அணியால் இன்னும் அடையாளம் காண இயலவில்லை.

    கடந்த 2 ஆண்டுகளில் 3 வடிவிலான போட்டிகளுக்கும் இந்திய அணி கேப்டன் பொறுப்பை ஏற்ற பிறகு ரோகித்சர்மா சர்வதேச அளவில் பெரிய வெற்றியை பெறவில்லை. இதனால் ஆசிய மற்றும் உலக கோப்பையில் அவர் தனிக்கவனம் செலுத்தி வருகிறார்.

    • ஆண்கள் பிரிவின் 48 சுற்றுகளில் பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, ஜப்பான் நாட்டு வீரர்கள் பங்கேற்று சாகசம்
    • போட்டிகள் வரும் 20-ம் தேதிவரை நடைபெறுகிறது

    தமிழ்நாடு அலைசறுக்கு சங்கம் மற்றும் இந்திய அலைசறுக்கு கூட்டமைப்பு இணைந்து, சர்வதேச லீக் போட்டியை கடந்த 14-ம் தேதி போட்டியின் இயக்குனர் டைராபர்ட் சோராட்டி போட்டியை துவக்கி வைத்தார்.

    இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், இந்தோனேசியா, மடகாஸ்கர், பிலிப்பைன்ஸ், ஜப்பான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மாலத்தீவு உள்ளிட்ட 10 நாடுகளில் இருந்து 70 வீரர்கள் வந்துள்ளனர்.

    இதில் 3-வது நாளான நேற்று ஆண்கள் பிரிவின் 48 சுற்றுகளில் பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, ஜப்பான் நாட்டு வீரர்கள் பங்கேற்று சாகசம் செய்தனர்.

    இதில் ஜப்பான் வீரர்கள் முன்னிலையில் உள்ளனர். இப்போட்டிகள் வரும் 20-ம் தேதிவரை நடைபெறுகிறது. கடற்கரை கோயில் வடபகுதியில் சுற்றுலா பயணிகள் அமர்ந்து போட்டியை பார்க்க பிரத்யேக மேடை அமைக்கப்பட்டுள்ளது. கட்டணம் ஏதும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

    • உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் (50 ஓவர்) அக்டோபர் 5-ம் தேதி இந்தியாவில் தொடங்குகிறது.
    • ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தற்காலிக இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    லண்டன்:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் (50 ஓவர்) அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை இந்தியாவில் நடைபெறுகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.

    அகமதாபாத்தில் நடைபெறும் உலக கோப்பை போட்டியின் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    இந்திய அணி முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை அக்டோபர் 8-ம் தேதி சென்னையில் சந்திக்கிறது.

    இந்நிலையில், உலக கோப்பை தொடருக்கான தற்காலிக இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வை அறிவித்த பென் ஸ்டோக்ஸ் தற்போது அந்த முடிவை திரும்பப் பெற்றுள்ளார் . இதனால் பென் ஸ்டோக்ஸ் உலக கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம்பெற்றுள்ளார்.

    இங்கிலாந்து அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர், பேட்ஸ்மேன் ஹாரி ப்ரூக் அணியில் இடம்பெறவில்லை.

    உலக கோப்பைக்கான தற்காலிக இங்கிலாந்து அணி:

    ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயீன் அலி, கஸ் அட்கின்சன், ஜானி பேர்ஸ்டோவ், சாம் கரன், லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் மலான், அடில் ரஷித், ஜோ ரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி, மார்க் வுட், கிறிஸ் வோக்ஸ்.

    • சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
    • இதில் பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த மாதம் 12-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை இந்த தொடர் நடைபெறுகிறது. பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று போட்டிகள் நேற்று நடந்தன. இதில் இத்தாலி நாட்டின் ஜானிக் சின்னர்,

    செர்பியாவின் லஜோவிக்குடன் மோதினார்.

    இதில் லஜோவிக் 6-4, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் கனடா ஓபன் டென்னிஸ் சாம்பியனை வெற்றார்.

    • மகளிர் உலக கோப்பை தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் வென்று ஸ்பெயின் இறுதி போட்டிக்கு முன்னேறியது.
    • மகளிர் உலக கோப்பை தொடரின் இறுதி போட்டி ஆகஸ்ட் 20-ம் தேதி நடைபெற இருக்கிறது.

    பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற முதல் இரண்டு காலிறுதி ஆட்டங்களில் நெதர்லாந்தை வீழ்த்தி ஸ்பெயின் அணியும், ஜப்பானை வீழ்த்தி சுவீடன் அணியும் அரையிறுதிக்கு முன்னேறின.

     

    முதல் அரையிறுதி போட்டியில் ஸ்பெயின் மற்றும் ஸ்வீடன் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஸ்பெயின் அணி 2-1 என்ற அடிப்படையில் ஸ்வீடனை வீழ்த்தி முதல் முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறியது. அந்த வகையில் 2023 மகளிர் கால்பந்து உலக கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.

    இந்த போட்டியில் 1-3 என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணி அமோக வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. இதன் மூலம் ஆகஸ்ட் 20-ம் தேதி நடைபெற இருக்கும் இறுதி போட்டியில் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

    ×