search icon
என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் - 3வது சுற்றில் ரஷிய வீரர் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி
    X

    சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் - 3வது சுற்றில் ரஷிய வீரர் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி

    • சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இதில் உலகின் 3-ம் நிலை வீரரான மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. கடந்த 12-ம் தேதி தொடங்கிய இத்தொடர், 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று போட்டிகள் நடந்தன. இதில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவுடன் மோதினார்.

    இதில் ஸ்வெரேவ் 6-4, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் மெத்வதேவை வீழ்த்தினார்.

    Next Story
    ×