என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்
- 18 வயதுக்கு கீழே, திருமணத்துக்கு முன்பு ஏற்படும் எந்த கர்ப்பமானாலும் போக்சோ சட்டத்தின் கீழ் வரும்.
- 45 சதவீதமான பெண்கள் கருத்தரித்து 6 வாரத்தில் கருக்கலைப்பு செய்கிறார்கள்.
பெண்கள் மத்தியில் தற்போது அதிகரித்து வரும் பிரச்சினைகளில் ஒன்று திருமணத்துக்கு முன்பே கருத்தரித்தல். இது இளம்பெண்கள் சந்திக்கும் மிக முக்கியமான பிரச்சினை ஆகும். ஒரு பெண் திருமணத்துக்கு முன்பு கருத்தரிப்பது என்பது சரியா அல்லது தவறா என்பது பற்றி நாம் பார்க்கப் போவதில்லை. அது அவர்களின் தனிப்பட்ட உரிமை ஆகும். அது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையுடன் தொடர்புடையது. அது நாம் தடுக்கக்கூடிய விஷயம் அல்ல.
18 வயதுக்கு மேல் கருக்கலைப்பு செய்ய சட்டத்தில் இடம் உண்டா?
பெண்கள் கருத்தரிப்பதற்கு என்று ஒரு குறிப்பிட்ட வயது என்பது இருக்கிறது. ஒரு பெண் திருமணம் ஆகாத நிலையில் 18 வயதுக்கு முன்பு கருத்தரித்தால் அது போக்சோ சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனைக்குரிய குற்றம் ஆகும். இதில் பாதிக்கப்படும் சிறுமிகள் ஆனாலும் சரி, பாதிப்புக்கு உட்படுத்திய ஆணாக இருந்தாலும் சரி, அவர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுகிறார்கள்.
மேலும் இந்த விவகாரத்தில் கருக்கலைப்புக்கு உடந்தையாக இருந்து உண்மையை மறைக்கும் அவர்களின் குடும்பத்தினர், இதை சட்டத்துக்கு தெரியப்படுத்தாமல் கருக்கலைப்பு மற்றும் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் என எல்லோருமே இதில் கண்டிப்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வருவார்கள்.
18 வயதுக்கு கீழே, திருமணத்துக்கு முன்பு ஏற்படும் எந்த கர்ப்பமானாலும் போக்சோ சட்டத்தின் கீழ் வரும். எனவே 18 வயதுக்கு கீழே கர்ப்பத்துடன் பரிசோதனைக்கோ அல்லது சிகிச்சைக்கோ அல்லது கருக்கலைப்புக்கோ வரும் சிறுமிகள் பற்றி மருத்துவர்கள் போலீசாரிடம் தகவல் தெரிவிப்பார்கள். இது எல்லாமே அனைத்து மருத்துவர்களுக்கும் தெரிந்த விஷயம் தான்.
ஒரு பெண் திருமணம் ஆகி கர்ப்பமாக இருந்தாலும் சரி, திருமணத்துக்கு முன்பு கர்ப்பமாக இருந்தாலும் சரி, அவருக்கு 18 வயதுக்கு கீழே இருந்தால், அவர் யாராக இருந்தாலும் சரி, மருத்துவர்களாகிய நாங்களும், போக்சோ சட்டப்படி இதை போலீசாரிடம் தெரியப்படுத்துவோம். இது மருத்துவர்களின் கடமை.
இதுவே 18 வயதை கடந்த ஒரு பெண் திருமணத்திற்கு முன்பு கருத்தரித்தால், அவர் அந்த கருவை கலைக்கலாமா என்றால் தாராளமாக கலைக்கலாம். அவர் கருக்கலைப்பு செய்வதற்கு சட்டத்தில் இடம் உண்டு. 18 வயதுக்கு மேல் யார் வேண்டுமானாலும் கருக்கலைப்பு செய்யலாம்.
கருக்கலைப்பு செய்வதற்கான சில வழிமுறைகள்?
ஆனால் இன்றைய காலகட்டத்தில் அதிகரித்து வருகிற இந்த கருத்தரித்தல் மற்றும் கருக்கலைப்பு பிரச்சினைகள் தான் ஒரு பெண்ணின் வாழ்க்கையில், குறிப்பாக இளம் பெண்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. திருமணத்துக்கு முன்பு கர்ப்பம் தரித்தலும், அதை செய்கிற கருக்கலைப்பு முறைகளும் இளம்வயது பெண்களின் இறப்பு, அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கிய பாதிப்புக்கு பெரிய அளவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இந்தியாவில் 1971-ம் ஆண்டு மருத்துவ கருக்கலைப்பு சட்டம் (எம்.டி.பி.) கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின் மூலம் கருக்கலைப்பு முறையானது. ஒரு வரையறைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி18 வயதை தாண்டிய பெண்கள் கண்டிப்பாக கருக்கலைப்பு செய்யலாம். அதற்கு அவர்கள் திருமணம் ஆகி இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. திருமணத்துக்கு முன்பு அவர்கள் கருக்கலைப்பு செய்வதற்கு சட்ட ரீதியாக இடம் இருக்கிறது. இது தவறு அல்ல, கண்டிப்பாக பண்ணலாம்.
ஆனால் இந்த கருக்கலைப்பை யார் செய்ய வேண்டும்? எந்த சூழ்நிலையில் செய்ய வேண்டும்? என்ன முறைகளில் செய்ய வேண்டும் என்பதற்கான சில வழிமுறைகள் இருக்கிறது. தகுதி பெற்ற ஒரு மருத்துவர் தான் இந்த கருக்கலைப்பை செய்ய வேண்டும். அந்த மருத்துவர்கள், மருத்துவ கருக்கலைப்பு சட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
கருக்கலைப்பு செய்வதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். இப்படிப்பட்ட எந்த மருத்து வரும் 18 வயதை கடந்த பெண்ணுக்கு திருமணமான பிறகு உருவான கருவையோ அல்லது திருமணத்திற்கு முன்பு ஏற்படுகின்ற கருவையோ கலைப்பதற்கு உரிமை உண்டு.

டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701
உலக அளவில் அதிகரித்து வரும் கருக்கலைப்பு?
ஆனால் இன்றைக்கும் உலக அளவில் பார்த்தால், கருக்கலைப்பு என்பது மிகவும் அதிகரித்து வருகிறது. 45 வயதுக்கு கீழே உள்ளவர்களில் நான்கில் ஒரு பெண், ஏதாவது ஒரு காரணத்தால், தேவையில்லாத கர்ப்பம் என்று கருக்கலைப்பு செய்கிறார். இது திருமணமான பிறகு உருவாகும் கர்ப்பம் மட்டுமின்றி, திருமணத்துக்கு முந்தைய கர்ப்பம் உள்பட அனைத்துமே அடங்கும்.
இதில் 45 சதவீதமான பெண்கள் கருத்தரித்து 6 வாரத்தில் கருக்கலைப்பு செய்கிறார்கள். அதுவே கிட்டத்தட்ட 50 சதவீதமான பெண்கள் 10 முதல் 15 வாரத்துக்குள் கருக்கலைப்பு செய்கிறார்கள். ஒரு பெண் 20 வாரங்கள் வரை கருக்கலைப்பு செய்வதில் எந்தவித தடையும் இல்லை.
இப்போது உள்ள ஒரு புதிய சட்ட திருத்தத்தின்படி சிறப்பு பிரிவாக, பெண்களுக்கு கருக்கலைப்பு செய்வது 20 வாரத்தில் இருந்து 24 வாரமாக உயர்த்தப்பட்டு உள்ளது. ஆனால் அதற்கு வலுவான காரணம் இருக்க வேண்டும். கருவில் குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டாலோ அல்லது தாய்க்கு ஆபத்து ஏற்பட நேரிட்டாலோ அந்த பெண்களுக்கு 24 வாரத்திலும் கருக்கலைப்பு செய்யலாம்.
ஆனால் ஒவ்வொரு கருக்கலைப்பையும் செய்வதற்கு சில வரைமுறைகள் இருக்கிறது. 12 வாரத்துக்குள் இருக்கும் கருவை கருக்கலைப்பு செய்தால் அதற்கான பயிற்சி பெற்று தகுதி சான்றிதழ் வைத்துள்ள ஒரு மருத்துவர், எல்லா வசதிகளும் இருக்கின்ற ஒரு சரியான மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்யலாம்.
ஆனால் அதுவே 12 வாரத்தை தாண்டிய கருவாக இருந்தால், அதை கருக்கலைப்பு செய்ய 2 மருத்துவர்கள் சான்றிதழ் வழங்க வேண்டும். இந்த கருவை ஏன் கருக்கலைப்பு செய்கிறார்கள்? அதற்கான காரணம் என்ன? இந்த கருவளர்ந்தால் கருவுற்ற பெண்ணுக்கு ஏதாவது பிரச்சினைகள் வரலாம், இதனால் அவர் மனதளவில் பாதிக்கப்படலாம், அவர்களின் குடும்பங்களில் பிரச்சினை ஏற்படக்கூடும், அதனால் அந்த பெண் பாதிக்கப்படலாம் என்று உறுதி செய்தால் மட்டுமே இதனை கருக்கலைப்பு செய்ய முடியும்.
மேலும் அந்த கரு வளரும்போது அந்த கருவுக்கு பிரச்சினை வரும். அது நல்ல கருவாக இல்லை, அந்த கரு வளர்ந்து குழந்தையாக பிறந்தாலும் ஆரோக்கியமாக வாழ முடியாது என்று அதை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள் சான்றிதழ் வழங்கினால் இந்த கருவை கருக்கலைப்பு செய்யலாம்.
இந்த காரணங்கள் இல்லாமல் கண்டிப்பாக மற்ற எந்த காரணத்துக்காகவும் 12 வாரம் தாண்டிய கருவை ஒரு பெண்ணால் கருக்கலைப்பு செய்வது என்பது இயலாத காரியம். இதெல்லாம் பாதுகாப்பான, சட்ட ரீதியான கருக்கலைப்பு முறைகள். சரியான மருத்துவரிடம் சென்று பாதுகாப்பாக கருக்கலைப்பு செய்வது என்பது பாதுகாப்பான சட்டரீதியான கருக்கலைப்பு ஆகும்.
சீரான முறையில் கருக்கலைப்பு செய்தாலும் பிரச்சினைகள் ஏற்படலாம்:
அதே நேரத்தில் இந்த பாதுகாப்பான, சட்ட ரீதியான கருக்கலைப்பும் முழுமையான பாதுகாப்பு கொண்டது தானா என்று கேட்டால் அதிலும் பிரச்சினைகள் வரலாம். அனைத்து வித பரிசோதனைகளையும் செய்து, முக்கியமாக எல்லாவித அடிப்படை பிரச்சினைகளையும் சரி செய்து சீரான முறையில் சிகிச்சை அளித்து கருக்கலைப்பு செய்தால் கூட பிரச்சினைகள் ஏற்படலாம். இந்த பிரச்சினைகள் யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். குறிப்பாக திருமணத்துக்கு முன்பு கர்ப்பம் அடையும் பெண்களுக்கு இந்த பாதிப்பானது மிகவும் அதிகமாக இருக்கிறது.
இன்றும், இளம்வயது பெண்களின் ஆரோக்கிய பாதிப்புக்கும், உயிர் இழப்புக்கும் பாதுகாப்பற்ற முறையில் செய்யப்படும் கருக்கலைப்பே மிகவும் முக்கியமான காரணமாக இருக்கிறது என்பது வருந்தத்தக்க விஷயம். எனவே இந்த கருக்கலைப்பை எப்படி பாதுகாப்பாக செய்வது? பாதுகாப்பாக கருக்கலைப்பை செய்யும் போது என்னென்ன பிரச்சினைகள் ஏற்படுகிறது? இந்த பிரச்சினைக்கு முழுமையாக தீர்வு காண்பது எப்படி என்பது பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்.
- சங்கரலிங்கம் முருகன் தலங்களை தேர்வு செய்து செல்லத் தொடங்கினார்.
- வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளுக்கு கடும் கோபம் வந்து விட்டது.
தமிழ்க் கடவுள் முருகன் பற்றி 16 ஆயிரம் பாடல்கள் பாடியவர் அருணகிரி நாதர். 14-ம் நூற்றாண்டில் வாழ்ந்தபோது அவர் பாடிய அந்த பாடல்கள் முருக பக்தர்களால் திருப்புகழாக பாடப்பட்டு வருகிறது. தேவாரம், திருவாசகத்துக்கு இணையான சிறப்புகள் திருப்புகழுக்கு உண்டு.
அருணகிரி நாதர் மறைந்த பின்னர் சுமார் 400 ஆண்டுகள் கழித்து 19-ம் நூற்றாண்டில் திருநெல்வேலியில் அவதரித்தவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்.
இவரை அருணாகிரி நாதரின் மறுபிறப்பு என்றே சொல்வது உண்டு. முருகனும் ஒரு தடவை அருணாகிரி நாதரின் மறுஉருவாக வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் திகழ்வதாக கூறியுள்ளார். அருணகிரி நாதர் எத்தனை முருகன் தலங்களில் பாடி இருந்தாலும் திருச்செந்தூரில் அவர் பாடிய பாடல்கள் தனித்துவம் வாய்ந்தவை. அதுபோல்தான் அவரது மறுபிறவியாக கருதப்படும் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளும் திருச்செந்தூர் முருகன் மீது பாடிய பாடல்கள் மிக மிக அருமையானவை.
திருச்செந்தூர் முருகன் தனது அடியார்களை வரவழைத்து ஆட்கொள்பவன் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளையும் திருச்செந்தூர் முருகன் வரவழைத்து ஆட்கொண்டது வரலாற்று நூல்களில் சிறப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் 1839-ம் ஆண்டு நவம்பர் மாதம் 28-ந்தேதி வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் பிறந்தார். பிறந்த ஒரு வாரம் வரை அவர் அழவில்லை. சிரிக்கவில்லை. அமைதியாகவே இருந்தார். இதனால் அவரது பெற்றோர் செந்திநாயகம்- பேச்சிமுத்து அம்மாள் கவலைப்பட்டனர்.
அன்று இரவு செந்திநாயகம் கனவில் தோன்றிய முருகன், "உன் குழந்தைக்கு சங்கரலிங்கம் என்று பெயர் வை" என்று சொன்னார். அதன்படி அந்த குழந்தைக்கு சங்கரலிங்கம் என்று பெயரிடப்பட்டது. அதன் பிறகு அந்த குழந்தை மிக மிக சிறு வயதிலேயே கவிபாடும் அளவுக்கு புலமைமிக்கதாக மாறியது.
9 வயதுக்குள் சங்கரலிங்கம் கல்வியில் சிறந்து விளங்கினான். ஆனால் அந்த பருவத்தில் அவனது தந்தை மரணம் அடைந்தார். இதனால் சங்கரலிங்கம் சுரண்டைக்கு சென்று வாழ்ந்து வந்தார். 9-ம் வகுப்புக்கு பிறகு படிக்க முடியாமல் போன அந்த சிறுவன் சீதாராம நாயுடுவிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களை கற்று பாடல்கள் இயற்றும் அளவுக்கு திறமை பெற்றார்.
அவரிடம் இருந்த பாடல் இயற்றும் திறமையை கண்ட சீதாராம நாயுடு பாராட்டி "ஓயாமாரி" என்ற பட்டத்தை வழங்கினார். ஒரு சமயம் சுரண்டையில் பூமிகாத்தாள் அம்மன் கோவில் திருவிழா நடந்தது. அப்போது சிறுவனாக இருந்த சங்கரலிங்கம் ஊர் பெரியவர்களிடம் பூமிகாத்தாள் என்ற பெயர் இந்த அம்மனுக்கு எப்படி வந்தது? என்று கேட்டார். ஊர்க்காரர்களுக்கு எதுவும் தெரியவில்லை. அதன் பிறகு அந்த அம்மனின் பெயர் வந்த விதத்தை சங்கரலிங்கம் அருமையாக விளக்கி கூறினார். இதை கண்டு சீதாராம நாயுடு பிரமித்துப் போனார். அவர் முருகப்பெருமானின் மந்திரங்களை சங்கரலிங்கத்துக்கு உபசேதித்தார். தினமும் சங்கரலிங்கத்தை வேல் வழிபாடு செய்ய அறிவுறுத்தினார்.
இதன் காரணமாக சங்கரலிங்கத்துக்கு முருகப்பெருமானை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. இந்த நிலையில் அவருக்கும் சுந்தரம்மை என்ற பெண்ணுக்கும் மயிலம் முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் பிறந்தனர்.
அதன் பிறகு சங்கரலிங்கத்தின் கவனம் முழுக்க முருகன் மீது திரும்பியது. முருகனை புகழ்ந்து ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதினார். முருகனை பாட தொடங்கி விட்டால் அவர் வாயில் இருந்து அருவி போல வார்த்தைகள் கொட்ட தொடங்கி விடும். பெரும்பாலான பாடல்கள் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டன. பல பாடல்கள் எழுதாமல் விடுபட்டு விட்டன.

இந்த நிலையில் சங்கரலிங்கம் தல யாத்திரை செல்ல தொடங்கினார். சிதம்பரம், ஸ்ரீரங்கம் ஆலயங்களில் நீண்ட நாட்கள் இருந்து பாடல்கள் பாடினார். அவையெல்லாம் இன்றும் மிகப்பெரிய பொக்கிஷமான நூல்களாக உள்ளன.
ஒரு முறை தென்காசி அருகில் உள்ள பைம்பொழில் என்று அழைக்கப்படும் திருமலையில் அருள் பாலிக்கும் குமாரசாமி முருகனின் புகழை பாடினார். அப்போது அவருக்கு முருகன் தனக்கு காட்சி கொடுக்க வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டது. முருகனை பார்த்து, "அருணகிரி நாதருக்கு காட்சி கொடுத்தது போல எனக்கும் காட்சி கொடு" என்றார்.
ஆனால் முருகப்பெருமான் காட்சி கொடுக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த சங்கரலிங்கம் மலையில் இருந்து விழுந்து புரண்டார். அவரது உடல் முழுக்க காயங்கள் ஏற்பட்டது. அந்த காயங்களுக்கு வள்ளி வந்து மருந்து போட்டதாக நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
அதன் பிறகு சங்கரலிங்கம் முருகன் தலங்களை தேர்வு செய்து செல்லத் தொடங்கினார். முதலில் வள்ளியூர் தலத்துக்கு சென்றார். அங்கு தனது உடைகளை கலைந்து விட்டு கோவணம் மட்டும் கட்டிக் கொண்டார். உடம்பு முழுக்க திருநீறு பூசினார். இதனால் அவரை முருக தாசர் மற்றும் தண்டபாணி சுவாமிகள் என்று அனைவரும் அழைக்க தொடங்கினார்கள்.
வண்ணசரபத்தை அதி விரைவாக பாடும் ஆற்றல் பெற்று இருந்ததால் நாளடைவில் அவருக்கு வண்ணசரபம் தண்டபாணி சுவாமிகள் என்ற பெயர் ஏற்பட்டது. அந்த திருநாமத்துடன் அவர் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்தார். அங்கு முருகனை பார்த்து வழிபட்டு மனம் உருகினார். திருச்செந்தூர் கோவிலிலேயே தங்கியிருந்து தினமும் முருகனை வழிபட்டு மனம் குளிர்ந்தார்.
அப்போது ஒருநாள் அவரது கனவில் முருகன் தோன்றினார். தண்டபாணி என்னைப் பற்றி 16 நூல்கள் பாட வேண்டும். நீ 11-வது நூல் பாடும் போது நான் உனக்கு கந்தலோகத்து திருநீறும் சிவகண்மணியும் தருவேன்" என்று கூறினார். இதைக் கேட்ட வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. திருச்செந்தூர் கோவில் பிரகாரத்தில் அமர்ந்து முருகனை பாடத் தொடங்கினார்.
10 நூல்களை பாடி முடித்த அவர் 11-வதாக கந்தமாலை எனும் பெயருடைய நூலை பாடி முடித்தார். ஆனால் அவருக்கு முருகன் சொன்னபடி திருநீறு கிடைக்கவில்லை. இதனால் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளுக்கு கடும் கோபம் வந்து விட்டது. தன்னால் பாடி முடிக்கப்பட்ட 11 நூல்களையும் கையில் எடுத்தார்.
முருகா, நீ எனக்கு திருநீறு தராததால் இந்த நூல்களை உனக்கு நான் தர மாட்டேன் என்று சொல்லியபடி 11 நூல்களையும் கிழித்து எறிந்து விட்டார். கடற்கரையோரம் சென்று உலாவியபடி இருந்தார். அப்போது அவர் மனதுக்குள் முருகன் மீது பாடிய பாடல்களை கிழித்து போட்டது தவறோ? என்ற கவலை தோன்றியது.
வேதனையோடு வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் கடலோரத்தில் நடந்து கொண்டே இருந்தார். அப்போது புனித நீர் விட வந்த ஒருவர் மீது முருகப்பெருமான் இறங்கி பேசினார். வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளை பார்த்து, "தண்டபாணி மீண்டும் என்னைப் பற்றி பாடு. நான் 16 நூல்கள் இயற்ற சொன்னேன். அதில் என்னைப் பற்றி மட்டும் 12 நூல்கள் பாடு. வள்ளிக்கு ஒரு நூல் பாடு. தெய்வானைக்கு ஒரு நூல் பாடு. வீரபாகுவுக்கு 2 நூல்கள் பாடு. மொத்தம் 16 நூல்கள் வந்து விடும். அவற்றை அரங்கேற்றம் செய்" என்று கூறினார்.
திருச்செந்தூர் முருகனின் இந்த அதிரடி உத்தரவுகளை கேட்டதும் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் மெய்சிலிர்த்தார். அன்றே முருகனைப் பற்றி பாட தொடங்கினார். பாடல்கள் வழக்கம் போல தண்டபாணி சுவாமிகளின் வாயில் இருந்து அருவிகளாக கொட்டின. 16 நூல்களையும் பாடி முடித்து திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் அரங்கேற்றம் செய்தார்.
திருச்செந்தூர் முருகன் பற்றி அவர் பாடிய 12 நூல்களில் "திருச்செந்தூர் சிேலடை வெண்பா" என்ற நூல் மிகவும் தனித்துவம் கொண்டது. 100 வெண்பா பாடல்களை கொண்ட அந்த நூலை படிப்பவர்களுக்கு பிறவிப்பிணி நீங்கும் என்று வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளி உள்ளார்.
இத்தகைய சிறப்புடைய வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் ஏராளமான முருகன் தலங்களுக்கு சென்று இருக்கிறார். அங்கு அவர் விரும்பியபடி எதுவும் நடக்கவில்லை என்றால் அந்த பாடல்களை கோபத்தில் கிழித்து போட்டு விடுவார். அவர் முருகன் மீது ஒரு லட்சம் பாடல்களுக்கு மேல் பாடி உள்ளார். ஆனால் முருகப்பெருமான் மீது கொண்ட ஊடல் காரணமாக சுமார் 50 சதவீதம் பாடல்களை கடலில் அள்ளி போட்டு விட்டார். சில பாடல்களை தீ வைத்து எரித்து விட்டார்.
மிஞ்சியது 49 ஆயிரத்து 722 பாடல்கள் மட்டுமே.
இப்படி முருகன் மீது உரிமையோடு சண்டை போட்ட வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் தனது இறுதிக் காலத்தில் விழுப்புரம் மாவட்டம் திருவாமாத்தூருக்கு வந்தார். அங்கு கவுமார மடம் அமைத்து வாழ்ந்தார். இவரை பக்தர்கள் திருப்புகழ்க்காரர், தண்டபாணி பரதேசி, தண்டபாணி அடிகளார், திருப்புகழ் அடிகளார் என்றெல்லாம் போற்றி அழைத்தனர். இவர் தனது பாடல் தரத்தால் முருகப்பெருமானை பல தடவை நேரில் பார்த்து தரிசனம் செய்துள்ளார். 1898-ம் ஆண்டு முக்தி பெற்றார். அவர் அமைத்த திருவாமாத்தூர் மடம் இன்றும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அங்கு அவர் வழிபட்ட விநாயகரையும், முருகனின் வேலையும் இன்றும் நாம் தரிசிக்கலாம்.
அங்கு பழனி தண்டாயுதபாணி சிலையும் இருக்கிறது. அதை வழிபட்டால் பழனிக்கு சென்ற பலன் கிடைக்கும் என்கிறார்கள். இந்த மடத்தில் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் எழுதிய ஓலைச்சுவடிகள் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் போல முருகனால் நடந்த மற்றொரு அற்புதத்தை அடுத்த வாரம் பார்க்கலாம்.
- வயிற்றின் வலது பக்கத்தில் உள்ள மிகப்பெரிய உள் உறுப்பு கல்லீரல்.
- நச்சுக்களை ரத்தத்தில் இருந்து நீக்குகின்றது.
கல்லீரல்: லிவர் என்று குறிப்பிடப்படும் கல்லீரல் பற்றி இன்றைய மருத்துவ உலகில் அதிகம் பேசப்படுகின்றது. ஆய்வு செய்யப்படுகின்றது. வயிற்றின் வலது பக்கத்தில் உள்ள மிகப்பெரிய உள் உறுப்பு கல்லீரல். அடர்ந்த சிகப்பு-பிரவுன் நிறம் கொண்டது. சுரப்பி என்றும் இதனை குறிப்பிடுவது உண்டு. ஏனெனில் புரதம் மற்றும் ஹார்மோன் போன்றவற்றினை உற்பத்தி செய்கின்றது. வலது மார்பு கூட்டின் அடியில் இருக்கும் உறுப்பு. சுமார் 500-க்கும் மேற்பட்ட வேலைகளைச் செய்வது. இதன் சில முக்கியமான வேலைகள் என்று பார்க்கும் போது
* நச்சுக்களை ரத்தத்தில் இருந்து நீக்குகின்றது
* பழைய சிகப்பணுக்களை அகற்றுகின்றது
* பைல் திரவத்தினை உருவாக்கி செரி மானத்திற்கு உதவுகின்றது
* ரத்த உறைவிற்கான பொருட்களை உருவாக்குகின்றது.
* கிளைகோஜன், வைட்டமின்கள் இவைகளை சேமித்து வைக்கின்றது.
* வளர்சிதை மாற்றங்களை கட்டுப்படுத்து கின்றது.
இப்படி பல்வேறு பணிகளை செய்யும் கல்லீரல் அதிக நச்சுகள், மது, உடலில் அதிகம் காப்பர் இவற்றால் பாதிப்படைகின்றது.
* கல்லீரல் புற்று நோய்.
* ஏ.பி. வைரஸ் தாக்குதல் போன்றவை கல்லீரலைத் தாக்குகின்றன.
மேலும் * வயிற்றில் நீர் தேக்கம் * சரும அரிப்பு * எளிதில் காயப்படுதல் * குறைந்த ரத்த அழுத்தம் * வயிற்றில் வலி * கணுக்கால் மற்றும் கால் வீக்கம் * நடுக்கம் * பலவீனம் * சோர்வு *குழப்பம் இவையும் கல்லீரல் பாதிப்பின் அறிகுறிகளாக இருக்கலாம்.
* கல்லீரல் பாதிப்பினை தவிர்க்கும் முறையாக மது, புகை, ரசாயனங்கள், போதைப் பொருட்கள் இவற்றினை அடியோடு தவிர்க்க வேண்டும்.
* பிறர் பயன்படுத்திய எந்த பொருளையுமே பயன்படுத்த வேண்டாம்.

* அளவான எடை, சத்தான உணவு அவசியம்.
* நீங்கள் ரசாயனப் பொருட்கள் இருக்கும் இடத்தில் இருப்பவராயின் கண்டிப்பாய் மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும்.
* வைரஸ், நீர்கட்டிகள், பரம்பரை, சிரோசிஸ், கொழுப்பு கல்லீரல், மஞ்சள் காமாலை, இன்சுலின் எதிர்ப்பினால் சர்க்கரை நோய் பிரிவு 2 ஆகியவை ஏற்படுகின்றன.
* சோர்வு, சிறுநீரில் மாற்றம், வாந்தி, குமட்டல், மஞ்சள் காமாலை, வெளிறிய (அ) தார் போன்ற வெளிப்போக்கு, அதிக சோர்வு ஆகியவை எளிதில் வெளிப்பட்டு அறிகுறிகளாக காட்டும்.
சில ஆரோக்கியமான உணவு பழக்கங்கள்
ஆரோக்கியமான உணவு பழக்கம் என்றால் உடனே அது கடுமையானதா என்ன? நம் அன்றாட உணவு முறைகளில் சின்ன சின்ன மாற்றங்களே அதனை ஆரோக்கியமானதாக ஆக்கி விடும்.
* பொதுவில் உணவுப் பொருட்களை வாங்கும் போது அதன் லேபிளை பார்ப்போம். கால வரையறைப் பற்றி குறிப்பாக பார்ப்போம். அத்தோடு மட்டுமல்லாது அதன் சத்துக்களை அட்டவணை இட்டு இருப்பார்கள். அதனையும் படித்து உப்பு, சர்க்கரை, கொழுப்பு இவற்றினைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.
* உணவில் சிறிது எலுமிச்சை சாறு உண்ணும் முன் சேர்த்து கலந்து உண்ணலாம். இது மாவு சத்து வேகமாய் சர்க்கரையாக மாறுவதனை சற்று கட்டுப்படுத்தும்.
* பூண்டினை பொடியாக நறுக்குவதனை விட பூண்டு பற்கள் நசுக்கி வைத்து 10-15 நிமிடம் சென்று சேர்ப்பது நல்லது. இது இருதய பாதிப்பு, பக்கவாதம் தடுப்பு சக்தியினை கூட்டும்.

கமலி ஸ்ரீபால்
* இனிப்பு, பிஸ்கட், நொறுக்கு தீனி இவற்றினை வீட்டிற்குள் சேர்க்காதீர்கள். நாளைய உணவினை இன்றே யோசித்து பொருட்களை வாங்கி விடுங்கள். அப்பொழுது தான் எதிரில் என்ன கண்ணில் படுகின்றதோ அதனை முறையற்று உண்ணாமல் இருப்பீர்கள்.
* ஒரே மாதிரி உணவினையே எப்பொழுதும் உட் கொள்ள வேண்டாமே. பல வகைகளில் காய்கறிகள், பழங்கள், புது விதமான சமையல் என்று உணவில் சுவாரஸ்யத்தினை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
* வீட்டு சமையல் மூலம் ஆரோக்கியமான உணவை சமைத்து தான் சாப்பிடுங்களேன்.
* தினமும் ஒரு டேபிள் ஸ்பூன் சியா விதைகளை நன்கு ஊற வைத்து தயிர், கஞ்சி இப்படி எதனுடனாவது கலந்து எடுத்துக் கொள்ளுங்கள். சியா விதைகள் சிறந்த நார்சத்தும், மக்னீசியமும் கொண்டது.
* வால்நட் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒமேகா-3 சத்து நிறைந்தது.
* பூசணி விதைகளை ஒரு டீஸ்பூன் அளவு எடுத்துக் கொள்ளலாம். சிங்க் சத்து நிறைந்தது. நோய் எதிர்ப்பு சக்தி கூட்டவல்லது. சிறிதளவு பட்டை சேர்க்க சர்க்கரை அளவு கட்டுப்படும். தேவையற்ற கொழுப்பு நீங்கும்.
* ஏதாவது ஒரு பழமாவது அன்றாடம் சாப்பிடுகின்றோமா?
* நீர் நன்கு குடியுங்கள்
* முட்டை சாப்பிடுபவர்கள் என்றால் அன்றாடம் காலை உணவில் சேர்த்துக்
கொள்ளலாமே.
* 2 முதல் 4 டேபிள் ஸ்பூன் அளவாவது ஓட்சை உணவில் சேர்க்க வேண்டும்.
* காலை உணவு அவசியம்.
* ஒரு ஆப்பிள் முடிந்தால் அன்றாடம் எடுத்துக் கொள்ளலாம்.
* காரட் சமைத்து உண்பது நல்லதே. 50 சதவீதம் கூடுதல் கரோட்டின் கிடைக்கும். ஆனால் அதிக நீரில் வேக வைத்து நீரை கொட்டுவது கூடாது.
* ஆவியில் வேக வைக்கலாம். கொட்டை வகைகளை சிறிதளவு 'ஸ்நாக்ஸ்' ஆக எடுத்துக் கொள்ளலாம்.
* சூப், ஸ்மூதி போன்றவைகளும் சாப்பிடலாமே.
* ரசித்து சமையுங்கள்
* எண்ணை கொட்டி சமைக்க கூடாது. தேவையான அளவே இருக்க வேண்டும். பாப்கார்ன் வீட்டிலேயே செய்து கொரிக்கலாமே.
* ஆலி விதைகளை ஊற வைத்து அரைத்து விடுங்கள். கொத்தமல்லி, புதினா, கறி வேப்பிலை இவையெல்லாம் தாராளமாய் இடம் பெறட்டும்.
* சர்க்கரை வள்ளி கிழங்கு வேக வைத்து உண்பது நல்லது. புரோகலியினை பழக்கப் படுத்திக் கொள்ளலாமே.
* பாதாம் ஊற வைத்தாலும் தோல் நீக்காமல் பயன்படுத்தலாம்.
* தோலில் உள்ள சத்து கெட்ட கொழுப்பினை நீக்கும். இருதய நோய்களை தவிர்க்க உதவும்.
* சமையலறை, பிரிட்ஜ் இவற்றினை எப்பொழுதும் படு சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அழுக்கு, பிசு பிசுப்பான டவல், துணிகளை அகற்றி விடுங்கள்.
* பாசுமதி அரிசி, குதிரவாலி, சிறுதானியங்கள் இவற்றினை அடிக்கடி பயன்படுத்தலாமே.
* மீன் சாப்பிடுபவர்கள் அவசியம் இதனை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* சிகப்பு அசைவம் வாரத்தில் சில நாட்களாவது தடுத்து விடுங்களேன்.
* பீட்ரூட் சேர்ப்பது உயர் ரத்த அழுத்தம் குறைய உதவும்.
* சில காய்கறிகளை எனக்கு பழக்கமே இல்லை. எங்களுக்கு பிடிக்காது என ஒதுக்காதீர்கள். ஜப்பானியர்கள் கூறுவது ஒரு புது காய்கறியினை சேர்த்துக் கொள்ளும் பொழுது வாழ்நாளில் ஏழு நாட்கள் கூடுகின்றதாம்.
* கிராம்பு, பட்டை, இலவங்கம், அன்னாசிபூ, சோம்பு, சீரகம் இவையெல்லாம் உடலுக்கு நன்மை பயப்பவையே.
* நொறுக்கு தீனி, தட்டை, முறுக்கு போன்றவை தேவையில்லை.
* முழு தானிய உணவு அவசியம் என உங்களுக்குத் தெரியுமே.
* உணவு உண்ணும் பொழுது உணவில் கவனம் செலுத்தி உண்ண வேண்டும். டி.வி. பார்த்து கொண்டும், போன் பேசிக் கொண்டும் சாப்பிடுபவர்கள் கூடுதலாக 15 சதவீதம் உணவு உட்கொள்கின்றார்கள்.
* மிளகாய் பொடி, பூண்டு தூள், எலுமிச்சைசாறு இவற்றினை தூவி சுவையினை கூட்டுங்கள். ஊறுகாய், அப்பளம், சிப்ஸ் போன்ற அதிக உப்புள்ள உணவுகளை தவிர்த்து விடுங்கள்.
* பல தடவை படித்து, கேட்டு நீங்கள் மனதில் பதிய வைத்துள்ளதை திரும்ப பார்ப்போம். அதிக சர்க்கரை சேர்த்த குளிர் பானங்கள் கூடாது என்பதுதான்.
* கடையில் குறைவாக வாங்குங்கள். அடிக்கடி கடைக்கு நடந்து சென்று கூட வாங்கலாமே.
* சிறிய தட்டு நிறைய காய்கறி, புரதம், குறைவான சாதம் எடுத்துக் கொள்வது அதிக ஆரோக்கியம்.
* வானவில் 7 நிறத்தில் உங்கள் காய்களும், பழங்களும் இருக்க வேண்டும்.
* ரசித்து, ருசித்து சாப்பிடுங்கள்.
* குறைவான, அளவான 3 வேளை உணவு, ஆரோக்கியமான தின்பண்டங்கள் இரு முறை. இவை சர்க்கரை அளவினை கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.
* வீட்டில் முடிந்தவரை தரையில் அமருங்கள். தரையில் அமர்ந்து உண்பது மிக நல்ல பழக்கம்.
* உங்கள் வயிறு உங்களோடு பேசும். அதனை காது கொடுத்து கேளுங்கள்.
* காலை இளம் வெய்யில் சற்று உடலின் மீது படட்டுமே.
* புன்னகையுங்கள்.
* ரூமிலேயோ (அ) வீட்டுக்குள்ளேயோ அடைந்து கிடக்க வேண்டாமே. வெளியே வரலாமே.
* உங்கள் மருத்துவர் பரிசோதனையானது நீங்கள் நன்றாகவே இருந்தாலும் முறைப்படி நடக்கட்டும்.
* உங்கள் கைப்பைகளை சுத்தமாக வைத்திருக்கலாமே.
* உடற்பயிற்சி, நடை பயிற்சியெல்லாம் நாம் தவறாமல் செய்ய வேண்டும்.
* தனிமை சிறிது நேரம் என்பது இனிமையே. * தியானம்- இதனை நாம்தான் பழக்கத்தில் கொண்டு வந்து விட்டோமே. ஒரு ஆய்வாளர் கொடுத்த இந்த குறிப்புகளைக் கொண்டு நாம் என்றும் ஆரோக்கியத்துடன் வாழலாமே!
- அறிவு நல்லது என்பதை ஏற்றுக்கொள்ளும் மனிதன் பணத்தை மட்டும் நல்லது என்று ஏற்றுக்கொள்ளத் தயங்குவது ஏன்?.
- ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி; இருவருக்கும் ஏழாம் பொருத்தம்; ஒருவர் வடக்கே திரும்பி நின்றால், மற்றவர் தெற்கே திரும்பி நிற்பார்.
எல்லாருக்கும் உதவுவதில் எப்போதும் அக்கறை காட்டும் இனிய வாசகப் பெருமக்களே! வணக்கம்!.
உதவுவதற்குப் பணமும் நல்ல குணமும் தேவை. ஆனால், 'பணம் இருப்பவர்களிடம் அறிவு இருப்பதில்லை! அறிவு இருப்பவர்களிடம் பணம் இருப்பதில்லை!' என்று இருவேறுபட்டதாக உலகம் எப்போதும் இருக்கிறது என்னும் நம்பிக்கை திருவள்ளுவர் காலம்தொட்டே இருக்கிறது.
''இருவே றுலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு"
வள்ளுவர் குறிப்பிட்டுச் சொல்லும் இந்தச் செல்வந்தர் குறித்த சிந்தனை, பொத்தம் பொதுவானதே யொழிய, ஒட்டுமொத்தச் செல்வந்தர் இனத்தையும் அறிவில்லாதவர்கள் என்று இழிவுபடுத்திக் காட்டுவது அல்ல. அப்படி இருந்திருந்தால், வரலாற்றில் இவ்வளவு நீளமான வள்ளல்கள் பட்டியலில் இத்தனை பணக்காரர்கள் இருந்திருக்க மாட்டார்கள் இன்றைக்குப் பணம் ஈட்டுவது எப்படி? என்பதைக் கற்பிக்கத், தனிப் படிப்புத் துறைகளும் பயிற்சிகளும் உருவாகிவிட்டன. பணம் வைத்திருப்பவர்கள் எல்லாம் முட்டாள்கள் அல்லர். அப்படி அவர்களை முட்டாள்கள் என்று வள்ளுவர் உறுதியாக நம்பியிருந்தால்,
"செய்க பொருளை செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரியது இல்"
என்று பணம் சம்பாதிக்கச் சொல்லும் கட்டளைக் குறளை அவர் உருவாக்கியிருக்க மாட்டார். திருவள்ளுவர், 'பொருள் செயல்வகை' எனவொரு தனி அதிகாரத்தையே உருவாக்கிச், செல்வத்தின் இன்றியமையாமையையும் அதை ஈட்ட வேண்டியதன் அவசியத்தையும் பத்துக் குறள்களில் வலியுறுத்தியுள்ளார். 'பொருள் என்னும் பொய்யா விளக்கம்' என்று குறிப்பிட்டு, இருளில் தவித்துக்கிடக்கும் ஒவ்வொருவர் வாழ்விலும் ஒளியேற்றி வைக்கும் அணையாத விளக்குப் போன்றது பணம் என்கிறார்.
"அறன் ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்"
என்னும் குறளில் திருக்குறளின் பாடுபொருளாகிய முப்பொருள் உண்மையில், அறம், இன்பம் ஆகிய வாழ்வின் இரண்டு உறுதிப் பொருள்களையும், பொருள் என்னும் உறுதிப் பொருள்கொண்டு நிச்சயம் அடைந்து விடலாம் என்கிறார்; ஒரே ஒரு நிபந்தனை; அந்தப் பொருள் என்னும் செல்வம் நல்வழியில் ஈட்டப்பட்டதாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே.
அறிவு நல்லது என்பதை ஏற்றுக்கொள்ளும் மனிதன் பணத்தை மட்டும் நல்லது என்று ஏற்றுக்கொள்ளத் தயங்குவது ஏன்?. அறிவின் துணை கொண்டு தீய செயல்களைத் தவறின்றிச் செய்து, மற்றவர்க்கும் உலகிற்கும் துயரமும் கெடுதல்களும் விளைவிக்க முடியும் என்றால் அந்த அறிவும் தீயது தானே!. அறிவோ அல்லது செல்வமோ இரண்டுமே நல்லதுதான். அவற்றை நாம் பயன்படுத்தும் நோக்கங்களின் அடிப்படையில் அவை தம்மீது நல்லது அல்லது கெட்டது என முகப்பூச்சுக்களைப் பூசிக்கொள்கின்றன.
எப்படி அறிவு பெறுகிற முயற்சியில் படிக்காதவர், படித்தவர் என்று எவரும் ஈடுபடலாமோ, அதைப்போலப் பணம் சம்பாதிக்கிற முயற்சியிலும் அறிவாளி, முட்டாள் என்று எவரும் ஈடுபடலாம். சேர்க்கின்ற அறிவையோ அல்லது ஈட்டுகின்ற செல்வத்தையோ எப்படி, எந்தெந்தச் செயல்களுக்காகச் சமூகத்தில் பயன்படுத்தப் போகிறோம்? அல்லது செலவு செய்யப் போகிறோம் என்பதைப் பொறுத்தே நாம் புத்தி சாலியா? இல்லையா? என்பது தீர்மானிக்கப் படுகிறது.

சுந்தர ஆவுடையப்பன்
நல்ல குணநலனும், அறிவுவளமும் உடையவனிடத்தில் பணம் இருப்பது, நோய் நீக்கப் பயன்படுகிற மருந்து மரம் ஊருக்கு நடுவுள் எல்லாருக்கும் பயன்படும் வகையில் வளர்ந்திருப்பது போலாகும் என்கிறார் திருவள்ளுவர்; மேலும் ஊர் உண்ணப் பயன்படுகிற ஊருணிக் குளம், நன்னீரால் நிறைந்திருப்பது போலவும் அது ஆகும் என்கிறார். ஊருக்கு நடுவில் கைக்கெட்டும் தூரத்தில், பசியமர்த்தப் பழம் தருகிற பழமரம் காய்த்துச் செழித்திருப்பது போலவும் இது அமையும் என்று வள்ளுவர் பாராட்டுகிறார்.
அறிவுடையார் வசமுள்ள செல்வம் அடுத்தவர்க்கு நிச்சயம் பயன்படுவதாக அமைய வேண்டும் என்பதே வள்ளுவர் கருத்து. சிலரிடம் அளவிட முடியாத செல்வம் குவிந்து கிடக்கும். அவர்களிடம் அவ்வளவு செல்வம் எப்படிச் சேர்ந்தது என்பதையே அறிந்து கொள்ள முடியாத பேதையாகவும் அவர்கள் இருப்பர்; அது மட்டுமல்ல; 'செல்வத்துப் பயனே ஈதல்!' என்கிற பொன்னான வாக்கைப் புரிந்து கொள்ளாதவர்களாகவும், புரிந்து கொண்டாலும் செயல்படுத்த மனம் வராத கருமிகளாகவும் அவர்கள் இருப்பர்.
இவர்களிடம் இருக்கும் செல்வம் இவர்களுக்கோ, இவர்களைச் சார்ந்தோருக்கோ எந்த வகையிலும் எந்தக் காலத்திலும் பயன்படப் போவதில்லை என்பது வள்ளுவர் விடுகின்ற நடப்பியல் சாபம்.
"ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை"
ஈட்டிய செல்வத்தை எல்லோருக்கும் உதவும்படியாகக் கையாளத் தெரியாத அறிவிலிகளிடத்தில் பணம் சேர்ந்திருந்தால், அது அவர்களுக்கோ அல்லது அவர்களைச் சார்ந்திருப்பவர்களுக்கோ பசியாறக் கூடப் பயன்படாது; மாறாக அந்தச் செல்வத்தை அந்த அறிவிலிக்கு எந்த வகையிலும் சம்பந்தமில்லாத யார்யாரோ அனுபவித்திருப்பார்களாம்.
ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி; இருவருக்கும் ஏழாம் பொருத்தம்; ஒருவர் வடக்கே திரும்பி நின்றால், மற்றவர் தெற்கே திரும்பி நிற்பார். எந்தச் செயல் செய்தாலும் ஏட்டிக்குப் போட்டி, ஏடாகூடம். இன்றைக்குப் பெரும்பாலான குடும்பங்கள் இப்படித்தானே இருக்கின்றன! இதில் ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது? என்று சிலர் கேட்கலாம். இப்படி இருப்பதும் சில குடும்பங்களில் நன்மையை விளைவிக்கவும் செய்கின்றது.
அந்தக் குடும்பத்தில் மனைவி மகா கருமி; தானாகவும் அடுத்தவர்க்கு எதுவும் தரமாட்டார்; தன் குடும்பத்தைச் சேர்ந்தோரையும் அடுத்தவர்க்கு ஒருபொருளையும் தருவதற்கு விடவும் மாட்டார். ஆனால், அவருடைய கணவரோ தயாள சிந்தனை உடையவர். உதவி என்று வந்து முகம் தெரியாதவர் கேட்டாலும் அடுத்தவர்க்குத் தெரியாமல் அள்ளிக் கொடுக்கும் வள்ளல். அவருடைய உதவும் படலம் மனைவிக்குத் தெரியாமல் நடந்து கொண்டிருந்தது.
ஒருநாள் மனைவி, தன் கணவரைப் பார்த்து, "என்கூடத் துணைக்கு வாருங்கள்! என் அம்மா வீடு வரை போய் வருவோம்" என்று அழைத்தார். 'எவ்வாறு செல்வது? ஆட்டோ, கார் ஏற்பாடு செய்யவா? என்று கேட்டால், இதோ பக்கத்தில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கிற வீட்டிற்கு எதற்கு ஆட்டோ, கார்? அதற்கு வேறு வாடகைக் காசு கொடுக்க வேண்டும்! என்று வழக்கம்போல மறுத்துவிடுவார்' என்பது கணவருக்குத் தெரியும். சரி கிளம்பு என்று மனைவியோடு நடந்து செல்லத் தொடங்கி விட்டார்.
மனைவி வாசலுக்கு வந்ததும் காலில் போட வேண்டிய செருப்புகளைக் கழற்றிக், கையில் வைத்திருந்த பைக்குள் போட்டுக்கொண்டார்; 'சாலைதான் சுத்தமாக இருக்கிறதே! செருப்பை வீணாகப் போட்டு, அதை ஏன் தேய விட வேண்டும்?. தேய்மானக் கூலியைச் சேமிக்கலாம்' என்கிற சிக்கனம், இல்லை இல்லை கருமித்தனம் அவரிடம்!.
கணவர் ஒன்றும் பேசாமல் மனைவியுடன் நடந்து கொண்டிருந்தார்; அவர் காலில் செருப்பு இருந்தது. நண்பகல் 11 மணி வெயில் மண்டையைப் பிளக்க ஆரம்பித்தது; அதன் எதிரொலியாய்த் தார்ச்சாலையும் வெப்பத்தில் கொதிக்க ஆரம்பித்தது. வெற்றுக் கால்களோடு நடந்து கொண்டிருந்த மனைவியால் சூடு தாங்க முடியவில்லை.
"என்ன சாலை அமைத்திருக்கிறார்கள்?. நடந்து போகிறவர்கள் வெயிலுக்கு ஒதுங்க, சாலையோரங்களில் ஒரு மரமும் இல்லை; மக்கள் ஒதுங்கிக் காத்திருக்க எந்த நிழல் இடங்களும் இல்லை!" என்று திட்டத் தொடங்கி விட்டார். மனைவியின் பரிதாப நிலையைப் பார்த்த கணவர், "நீதான் அளவுக்கு அதிகமாகக் குண்டாக இருக்கிறாயே! அப்படியே நின்று உன் உடம்பின் நிழலிலேயே கால்களின் சூடு போகத் தேய்த்து ஆற்றிக் கொள்ளலாமே!" என்று கூறினார்.
"என்னங்க புரியாமப் பேசுறீங்க?. நம்ம நிழல் எந்தக் காலத்தில நாம ஒதுங்குவதற்கு உதவியிருக்கு?; நம் நிழல் எப்போதும் நமக்கு உதவவே உதவாது!" என்று மனைவி கூறினார். உடனே கணவர் பேசினார், "அருமையாகச் சொன்னாய்!, இதைத்தான் ரொம்பக் காலத்திற்கு முன்பிருந்தே உன்னிடம் சொல்ல வேண்டும் என்று நான் காத்திருந்தேன்!.
நம்முடைய நிழல்கூட நமக்கு உதவப் போவதில்லை! என்றால், நாம் இதுவரை சம்பாதித்துக், கோடிக்கணக்கில் சேர்த்து வைத்துள்ள காசுபணம், வீடுவாசல், நில புலம், நகை நட்டு இவைகள் மட்டும் நமக்கு எப்படி வந்து உதவி செய்துவிடப் போகின்றன; அவற்றை எந்த நல்ல காரியத்திற்கும் பயன்படுத்தாமல், தேவைப்படுகிறவர்களுக்குக் கொடுத்தும் உதவாமல், கஞ்சத் தனமாய்ச் சேர்த்து வைத்துச், சேர்த்து வைத்து என்னத்தை அனுபவிக்கப் போகிறோம்!".
செலவழிக்கப்படாத பணம், பூதம் காத்து வைத்துள்ள புதையல் போன்றது; யாருக்கும் கிடைக்காமல் புதைந்து விடப் போவது. யாருக்கும் உதவாத பணம், நாயிடம் அகப்பட்ட தேங்காய் போன்றது; தமக்கும் பயன்படாது; அடுத்தவர்க்கும் உதவிடாது வீணாகிப் போவது.
வாழப் பிறக்கிற உயிர்கள் ஒவ்வொன்றும் வாழ்க்கையை வசதியாக அமைத்துக் கொள்வதற்கு உதவியாக இந்த உலகமும், உலகின் இயற்கைப்படைப்புகளும் படைக்கப் பட்டன. கடவுளின் படைப்பான இந்த
இயற்கைச் சாதனங்களுக்கு அப்பால், மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட கருவியே பணம் ஆகும்.
பண்டமாற்று முறை உள்ளவரை பணம் கண்டுபிடிக்கப்படவில்லை; பணம் கண்டுபிடிக்கப்பட்டவுடன் பொருள்களுக்கு விலைகள் நிர்ணயிக்கப்பட்டன; பணம், செலவழிக்கப்படாமல் சேமித்து வைக்கப்பட்டது; பணமுள்ளவன் பணக்காரன் ஆனான்; அவனால் எதனையும் விலைகொடுத்து வாங்கிச் சொத்துகள் குவித்து வைக்கமுடியும் என்ற நிலை வந்ததனால் அதிகார பலமும் மிக்கவனாகக் கருதப்பட்டான்.
நம்முடைய செல்வம் நம்மை மட்டுமல்லாமல், நம்முடைய எதிர்காலச் சந்ததியின் பாதுகாப்பிற்கும் உதவும் என்பது ஒருவகையில் உண்மை என்பதால், அதனைச் சம்பாதிப்பதை விடப் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்வதிலேயே மனிதன் அக்கறைகாட்டத் தொடங்கினான்; அதனால் அவனிடத்தில் கருமித் தனமும் அடுத்தவர்க்கு உதவாத சுயநலமும் பெருகிவிட்டது.
'செலவாவதுதான் செல்வம்' என்கிற செல்வத்தின் ரகசியம் புரிந்து கொண்டால் அதனை வீணாக இரும்புப் பெட்டிக்குள் சிறைவைத்திட மாட்டோம். விதைக்கப்படாத விதை விளைச்சலாவதில்லை; ஒன்றை விதைத்தால் அது பலவாகப் பெருகும் என்பதே விதைப்பின் தத்துவம்; இதுவே தருமத்தின் தத்துவமும்கூட. அதற்காகப் பயன்படாத நிலத்தில் யாரும் பயிர் வளர்ப்பதில்லை;
நமக்குக் கிடைக்கிற செல்வம் நாம் ஈட்டிய வரம்!: அவ்வரத்தை விதையாக்கி நமது சக மனிதர்க்கும், நாம் வாழும் சமூகத்திற்கும் மகிழ்ச்சி விளைச்சலைப் பெருகிடச் செய்வதே உண்மையான வாழ்வியல். உதவுவோம்; உதவ உதவ உதவிகள் பெருகிடும்.
தொடர்புக்கு 9443190098
- பொதுவாக சிகிச்சை என்பது இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது.
- மருத்துவரின் ஆலோசனையுடன் உபயோகப்படுத்தி மூக்கையும், உடலையும் ஆரோக்கியமாக பேணி பாதுகாப்போம்.
ஐம்புலன்கள் என்று அழைக்கப்படும் வாய், மெய், கண், காது, மூக்கு என்ற 5 உறுப்புகளும் அமைந்திருக்கும் இடம் தலை. இதில் மெய் எனப்படும் தோல் மட்டும் உடலெங்கும் பரவியிருக்கும், மீதமுள்ள 4 புலன்களும் தலையில் மட்டும் அமைந்திருக்கும். இதுவே நம் உடலின் அமைப்பு. அதன் காரணமாகவே தலை ஒரு மனிதனுக்கு மிக முக்கியமான உறுப்பு. அதை பேணிக்காக்கவேண்டும். எண் சாண் உடலுக்கு சிரசே பிரதானம் என்ற சொல்லாடல் மூலம் இதனை அறியலாம்.
தலையில் உள்ள 5 புலன்களில் மிக முக்கியமானது கண். இரண்டாவதாக மூக்கு. ஏன் என்றால் ஒரு மனிதன் உணவில்லாமல் சில நாட்கள் வாழலாம், ஆனால் பிராணவாயு இல்லாமல் சில நிமிடங்கள் கூட வாழமுடியாது. அந்த அளவுக்கு முக்கியமான பிராணவாயு மூக்கு வழியாகத்தான் செல்ல முடியும். ஏன் வாய்வழியாக சுவாசித்தால் உடலுக்கு போகாதா என்று கேட்கலாம், ஆனால் மூக்கு வழியாக சுவாசிப்பதே சாலச் சிறந்தது. ஏன் எனில் மூக்கில் வாயுவை சுத்திகரிப்பதற்கான செயல்பாடுகள் நடைபெறுகிறது. மூக்கு துவாரத்தில் உள்ள முடிகள் மற்றும் கோழைப்படலம் காற்றிலுள்ள தூசிகளை சுத்தம் செய்கின்றன. இதனால் மூக்கு வழியாக சுவாசிப்பதே சாலச்சிறந்தது. அதோடு மட்டுமல்லாமல் மூக்குதான் தலையின் துவாரம் என்கிறது ஆயுர்வேதம். அதாவது வாய் என்பது உடலின் துவாரம். தலையை ஒரு மருந்து சென்றடைய வேண்டுமெனில் அதற்கு மூக்குதான் துவாரம். மூக்கு சுவாசிப்பதற்கு மட்டுமா, மணத்தை அறிய முக்கிய பங்கு ஆற்றுகிறது அல்லவா... நுகர்தல் என்ற செயல்பாட்டிற்கு காரணமாக அமைகிறது.
ஒரு மனிதனின் இயல்பான மூக்கின் அமைப்பை மாற்றினால் முழுவதுமாக முக அமைப்பே மாறிவிடும். ஆக இவ்வளவு சிறப்பு வாய்ந்த, மூக்கை எவ்வாறு பராமரிப்பது என்பது பற்றி பார்ப்போம்.
நலமாய் வாழ ஆரோக்கியத்திட்டத்தில் தினமும் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளில் மூக்கும் இடம்பெறுகிறது. ஆம் மூக்கில் எண்ணையிடும்படி ஆயுர்வேதம் அறிந்திருக்கிறது. அதற்கு நஸ்யம் சிகிச்சை என்று பெயர். ஒரு விஷயத்தை சற்று கவனித்தால் ஆரோக்கியமாக வாழ தினசரி கடைபிடிக்கவேண்டியவை என்பது முகத்திலுள்ள 5 புலன்களை கவனிப்பாகவே இருக்கின்றது. ஆம் வாயிலுள்ள பல் பராமரிப்பு, வாய் கொப்பளித்தல், மூக்கை பராமரிக்க நஸ்ய சிகிச்சை, கண்ணை பராமரிக்க கண் மை, காதுகளை பராமரிக்க காதில் எண்ணெய் தேய்த்தல், காதில் மருந்து செலுத்துதல், முகத்தில் உள்ள தோலை பராமரிக்க எண்ணெய் தேய்த்தல் என்று நீள்கிறது.
ஏனெனில் இதன் மூலம் கிருமித்தொற்று தாக்க வழிவுள்ளது. எனவே இவற்றை ஆரோக்கியமாக பராமரிக்க அதிக அறிவுரைகளை ஆயுர்வேதம் வழங்கியுள்ளது. அவ்வாறு கூறப்பட்ட சிகிச்சை தான் நஸ்யம் என்பது.

Dr. ரா.பாலமுருகன்
அரசு ஆயுர்வேத மருத்துவர்
90257 44149
பொதுவாக சிகிச்சை என்பது இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. ஒன்று அதிகரித்துயிருக்கின்ற வாத, பித்த, கப தோஷங்களை சமப்படுத்துதல், மற்றொன்று அதிகரித்துயிருக்கின்ற தோஷங்களை உடலிலிருந்து வெளியேற்றி உடலை சுத்தப்படுத்துதல். ஆயுர்வேத மருத்துவ சிகிச்சையானது உடலை சுத்தப்படுத்தவே அதிக கவனம் செலுத்துகிறது. அவ்வாறு உடலை சுத்தப்படுத்த 5 வகை சிகிச்சைகள் கூறப்பட்டுள்ளன. அவற்றில் நஸ்யம் என்ற சிகிச்சையும் ஒன்று, இந்த சிகிச்சை தான் மிக எளிதானது. அதிக செலவில்லாதது. வீட்டிலேயே அனைவரும் செய்து கொள்ளலாம்.
இந்த சிகிச்சை உடலை சுத்தம் செய்வதோடு மட்டும் இல்லை. நோய் வராமல் தடுக்க தினமும் அனைவரும் செய்துகொள்ளலாம். அதுவே இந்த சிகிச்சையின் விசேஷம்.
சரி இந்த சிகிச்சையை தினமும் எடுத்துக்கொண்டால் அப்படி என்ன விசேஷம் நிகழப்போகிறது என்றுக் கேட்டால், அதற்கு மிக நீண்ட பதிலுரையை ஆயுர்வேதம் வழங்குகிறது. அது யாதெனில் கண், காது, மூக்கு போன்ற புலன்களில் கேடு வருவதில்லை. முடி தாடி மீசைகளில் எந்த தொந்தரவும் ஏற்படுவதில்லை. முடி உதிராது. நன்றாக வளரும். கழுத்து, தோள் பட்டை வலி ஏற்படாது. முக வாதம் ஏற்படாது. சைனஸ், ஜலதோஷம், தலைவலி, ஒன்றை தலை வலி ஏற்படாது. தலையிலுள்ள நரம்புகள், தமனிகள், சிரைகள் சந்திகள் நன்றாக இயங்கும். பல், தாடை தொண்டை போன்ற இடங்களில் அவ்வளவு எளிதாக நோய் உண்டாகாது, முக வசீகரம் ஏற்படும், நல்ல தூக்கம் ஏற்படும், கழுத்துக்கு மேலே உள்ள உறுப்புகளில் வயது முதிர்வு தென்படாது. சில வியாதிகளில் கழுத்து கீழே உள்ள உறுப்புகளில் கூட நஸ்யம் சிகிச்சை பயனுள்ளதாக இருக்கும்.
சரி இதனை எவ்வாறு மேற்கொள்ளுவது. இவற்றிக்கென ஒரு வரையறை ஆயுர்வேதம் மிக தெளிவாக வழங்குகிறது. அதாவது நஸ்யம் செய்வதற்கு முன் என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்து எல்லாம் ஓர் ஆயுர்வேத மருத்துவர் நன்கு அறிவுறுத்துவார். எனவே அருகிலுள்ள ஆயுர்வேத மருத்துவரை அணுகினாலே போதும். நஸ்ய சிகிச்சை குறித்து விவரிப்பார்.
இந்த சிகிச்சைக்கு அனு தைலம் என்ற மருத்து பயன்படுத்தப்படுகிறது. இதனை மருத்துவரின் ஆலோசனையுடன் உபயோகப்படுத்தி மூக்கையும், உடலையும் ஆரோக்கியமாக பேணி பாதுகாப்போம்.
- கடிபட்ட இடத்தில் இடத்தை சுத்தமாக தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும்.
- சில நேரங்களில் ரேபிஸ் தடுப்பூசியை போட்ட பிறகும் கூட ஒரு சிலருக்கு ரேபிஸ் வந்துள்ளது.
மருத்துவ கல்லூரியில் மூன்றாவது வருடம். அன்று மருத்துவமனையில் வகுப்பிற்காக அனைவரும் நின்று கொண்டிருந்தோம். அப்பொழுது ஒரு பெரியவரும் சிறுவனும் வந்தனர். சிறுவனுக்கு 14 வயது இருக்கும்.
எங்கள் ஆசிரியர் ஒரு காகிதத்தை எடுத்து அந்த சிறுவன் முகத்திற்கு முன்னால் காற்று வருவதைப் போல வேகமாக வீசினார். அடுத்த நொடி அந்த சிறுவன் நாய் போல ஊளையிட்டபடி வாயில் இருந்து எச்சில் ஒழுக நாய் போலவே வேகமாக சுற்றி சுற்றி ஓடினான்.
எங்கள் அனைவருக்கும் ஒன்றுமே புரியவில்லை. அதிர்ச்சியில் உறைந்து போய் பார்த்துக் கொண்டிருந்தோம். பிறகு அவனை கூட்டிக்கொண்டு சென்று விட்டார்கள்.
எங்கள் ஆசிரியர் கூறினார், சிறுவனை பிடித்திருந்தது நாய்க்கடியால் வரக்கூடிய ரேபிஸ் நோய் என்று.
அன்றுதான் முதன் முதலில் பார்த்தேன்.
ஆனால் இன்றுவரை மறக்கவில்லை. அந்த சிறுவனின் பாதிப்பும் அந்த தந்தையின் தவிப்பும் மனதை விட்டு அகலவில்லை.
காற்றைக் கண்டால் பயம்!, நீரை கண்டால் பயம் போன்றவற்றை ஏரோபோபியா, ஹைட்ரோபோபியா, என்று கூறுவோம்.
இதுபோன்ற அறிகுறிகள் முதலில் ஆரம்பித்து மொத்தமாக எல்லா தசைகளும் இறுகி அவர்கள் இறந்து போவார்கள்.
ரேபிஸ் என்பது ஒரு வைரஸ் நோயாகும்.
இது நமது மூளையை தாக்கி ஒருவரை உயிரிழக்க வைக்கும்.
ரேபிஸ் நோய் எப்படி பரவும்?
கடிக்கும் விலங்கின் எச்சிலில் உள்ள ரேபிஸ் வைரஸ் நம் உடலில் உள்ள காயத்தில் படும் பொழுது எச்சில் மூலமாக பரவும்.
அதிகமாக நாய்க்கடியிலிருந்தும், அது தவிர பூனை, எலி, குரங்கு, வௌவ்வால், போன்ற மற்ற பாலூட்டிகளின் மூலமும் பரவலாம். ஆனால் 90 சதவீதம் வரை நாய் கடியிலிருந்து தான் பரவும்.
அறிகுறிகள் என்ன?
பொதுவாக அறிகுறிகள் உடனே தெரியாது. ஒரு மாதம் கழித்து வெளிப்படும். ஒரு சிலருக்கு ஒரு வருடம் கழித்து கூட அறிகுறிகள் வரலாம்.
ஆரம்ப கட்ட முதல் நிலை அறிகுறிகளாக காய்ச்சல், தலைவலி, வாந்தி, உடல் அசதி போன்றவை தோன்றும்.
அடுத்த கட்டத்தில் மூளை பாதிக்கப்பட்டு காற்றைக் கண்டால் பயம்!, நீரை கண்டால் பயம்!, பதட்டம், காதில் யாரோ பேசுவது போல தோன்றுவது, வாயிலிருந்து எச்சில் ஒழுகுவது போன்றவை ஏற்படும்.
மொத்தத்தில் அவர்களுடைய செயல்பாடு முற்றிலுமாக மாறிவிடும்.
ஒரு கட்டத்தில் அனைத்து தசைகளும் செயலிழக்க ஆரம்பித்து இறப்பு ஏற்படும்.
நோய் வந்து விட்டால் எத்தனை நாட்கள் அவர்கள் உயிருடன் இருப்பர்?
சில நாட்களிலிருந்து அதிகபட்சம் ஒரு மாதம் வரை.
அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பு கடிபட்ட உடனே தடுப்பூசி எடுத்துக் கொள்வது மட்டுமே உயிர் பிழைக்க ஒரே ஒரு வழி.
ஏதாவது மருந்து உள்ளதா?
முதலில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது இன்றுவரை ரேபிஸ் நோய்க்கு மருந்தில்லை. வந்துவிட்டால் மரணம் நிச்சயம்!
அறிகுறிகள் தோன்றிவிட்டால் எந்த மருந்திற்கும் அவை கட்டுப்படாமல் அதிகமாகிக் கொண்டே போய் முடிவில் நெஞ்சு பகுதியில் உள்ள தசைகள் செயலிழந்து உயிரிழப்பர்.
முதல் உதவி எவ்வாறு செய்ய வேண்டும்?
கடிபட்ட இடத்தில் இடத்தை சுத்தமாக தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும். ரன்னிங் வாட்டர் என்று சொல்லப்படும், குழாயைத் திறந்து, வேகமாக வரும் தண்ணீரில் காண்பித்து சோப்பு உபயோகித்து நன்றாக கழுவி விட வேண்டும். உடனடியாக மருத்துவரிடம் சென்று காண்பித்து தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும்.
முகம், கை போன்றவற்றில் கடிபட்டிருந்தால் நேரடியாக விரைவாகவும் மூளை பாதிப்பதற்கு வாய்ப்பாகும். அப்போது கடிபட்ட காயத்திலேயே ஒரு தடுப்பூசியும் இம்மினோகுளோபின் என்று சொல்லப்படும் உடனடி நாய்க்கடி தடுப்பு மருந்தும் கொடுக்கப்படும்.
லேசான காயமாக இருந்தாலும், அதை லேசாக எடுத்துக் கொள்ளாது உடனடியாக மருத்துவரிடம் காண்பித்து தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும்.
பிறகு தடுப்பூசியை தொடர வேண்டும்.
ஐந்து தடுப்பூசிகள் குறிப்பிட்ட கால அளவுகளில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பொதுவாக நாய்க்கடி பட்ட காயம் பெரிதாக இருந்தாலும் கூட தையல் போட்டு மூடுவதில்லை. அதில் ஏதேனும் வைரஸ் இருந்தால் அது உள்ளேயே தங்கி விடுவதற்கான வாய்ப்பு என்பதால் இவ்வாறு செய்யப்படுகிறது.
எத்தனை தடுப்பூசிகள்?!
கடிபட்ட அன்று, மூன்றாவது நாள், ஏழாவது நாள், பதினான்காவது நாள்.
0,3,7,14, - அனைவருக்கும் பொதுவானது.
ஐந்தாவது தடுப்பூசி- 28வது நாள் - எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கு மட்டும் கொடுக்கப்படும்.
இத்துடன் டிடி ஊசியும் கொடுக்கப்படும்.
சில நேரங்களில் ரேபிஸ் தடுப்பூசியை போட்ட பிறகும் கூட ஒரு சிலருக்கு ரேபிஸ் வந்துள்ளது.
வயிற்றில் தொப்புளை சுற்றி ஊசி போடுவார்கள் என்று கூறுவார்களே அது உண்மையா?
முன்பு அது போல இருந்தது. இப்பொழுது நாய் கடிக்கான ஊசிகள் ஐந்து மட்டும்தான். சாதாரண ஊசிகளைப் போலவே இவற்றையும் இடுப்பிலோ அல்லது கையிலோ எடுத்துக் கொள்ளலாம். தடுப்பூசிகள் அரசு மருத்துவமனைகளில் இலவசம்.
இந்த நோயிலிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள என்ன வழி?

வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்துவது மிக மிக அவசியம்.
புதிய மிருகங்களை தொடுவதையோ அவற்றின் அருகில் செல்வதையோ தவிர்க்க வேண்டும். குறிப்பாக ஆக்ரோஷமாக இருக்கும் எந்த விலங்கிடமும் நெருங்க கூடாது.
குறிப்பாக குழந்தைகள் பழக்கமில்லாத எந்த மிருகங்களிடத்தும் விளையாடுவதை தவிர்க்க வேண்டும்.
மிருகங்களுடன் பணியில் இருப்பவர்கள் மற்றும் ரேபிஸ் அதிகமாக உள்ள பகுதிகளுக்கு செல்பவர்கள், காடுகளுக்கு அருகில் வசிப்பவர்கள், ரேபிஸ் தடுப்பூசியை, கடிபடும் முன்பே எடுத்துக் கொள்ளலாம்.
நாய்களில் இருந்து வேறு என்னென்ன தொற்று நோய்கள் நமக்கு வரும்?
நாய் நாடாப்புழு, வேறு சில தொற்றுப் புழுக்கள் மற்றும் சால்மோனெல்லா, லெப்டோஸ்பைரா பாக்டீரியாக்கலிருந்து வரும் நோய்களும் நாயிலிருந்து பரவலாம்.
ரேபிஸ் பாதித்த நாய் எவ்வளவு நாள் உயிரோடு இருக்கும்?
நாய் உயிருடன் இருக்கிறதா என்பதை கண்காணிக்கலாம். பொதுவாக ரேபிஸ் பாதித்த நாய்கள் பத்து நாட்களுக்குள் இறந்துவிடும்.
ரேபிஸ் இருக்கிறது என்று சந்தேகம் இருந்தால் உடனடியாக ஹெல்ப் லைனில் தெரிவிக்க வேண்டும். நாயை டெஸ்ட் செய்து பிறகு உடலை பெரிய பிளாஸ்டிக் கவரிலிட்டு ஆழமாக புதைக்க வேண்டும்.
இதை மருத்துவ அலுவலர்கள் மூலமாகத்தான் செய்ய வேண்டும், நாமாகவே செய்யக்கூடாது.
நாய் இருந்த இடத்தையும் முறைப்படி சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் மற்ற விலங்குகளுக்கு அந்த வீட்டில் உள்ளவர்களுக்கோ ரேபிஸ் வராமல் தடுக்கலாம்.

மகப்பேறு மருத்துவர், ஜெயஸ்ரீ சர்மா, வாட்ஸ்அப்: 8925764148
தமிழ்நாட்டில் உதவிக்கு அழைக்க வேண்டிய எண் - 1962.
இந்தியாவின் நாடு தழுவிய உதவி எண் - 15400.
ஒரு முறை ஒரு ரேபிஸ் நோயாளி படும்பாட்டை பார்த்துவிட்டால் நாய் என்ன?! நாய் பொம்மையை கண்டால் கூட பயத்தில் நடுங்குவோம். எனவே கவனமாக இருங்கள்! உங்கள் வீட்டு வளர்ப்பு பிராணிகளுக்கு தடுப்பூசி போடுங்கள். கண்காணியுங்கள்! அறிமுகமில்லாத எந்த மிருகங்களின் அருகிலும் செல்லாதீர்கள்!
தவிர்க்கக்கூடிய ஒரு நோய்க்கு எந்த ஒரு உயிரும் பலியாக கூடாது.
- மண்ணீரலைப் பலப்படுத்தத் தேவையான இனிப்பும் துவர்ப்பும் கலந்த சுவை சமைக்கப்படாத அரிசிக்கே உண்டு.
- அவுலை ஊற வைத்து, காய்ச்சிய வெல்லப்பாகில் போட்டு, தேங்காயத் துருவல், சுக்கு, ஏலக்காய் பொடியும் போட்டு கிளறினால் அற்புதமான இனிப்பு தயார்.
அவல் அன்றாட சிறுதீனியில் ஒன்றாகவும், சிற்றுண்டித் தயாரிப்பதற்கான ஒன்றாகவும் இருந்து வந்தது. இன்றைய உணவு உற்பத்திப் பெருக்கமும், மாவாட்டும், கிரைண்டரும், மாவினைப் பதப்படுத்துவதற்காக வீட்டிற்குள் நுழைந்த குளிர்சாதனப் பெட்டியான ப்ரிட்ஜும் பரவலாக ஆவதற்கு முன்னர் நடுத்தரக் குடும்பங்களில் அவசர சிற்றுண்டித் தயாரிப்பிற்கு வீட்டில் எந்த நேரமும் அவுலை வைத்திருப்பார்கள். ஆழாக்கு அவுலை எடுத்து நீரில் மூழ்கப்போட்டு அடுப்பில் வாணலி ஏற்றி வெங்காயம், பச்சை மிளகாய் தாளிப்புப் போட்டு ஊறின அவுலை எடுத்துப் போட்டுப்பிரட்டினால் அற்புதமான சத்துணவு தயார்.
இன்றைய தலைமுறையினருக்கு மெள்ளும் பழக்கம் அற்றுப் போனதால் அவல் பயன்பாடு அறுகி விட்டது. உலர் அவுலை நேரடியாக வாயிலிட்டு மென்றால் துவர்ப்பு, இனிப்பு, மென் கசப்பு ஆகிய சுவைகள் மாறி மாறி வாயில் தோன்றும். எந்தப் பொருளை வாயிலிட்டு மெள்ளும்போது சுவை மாறி மாறி வருகிறதோ அது சத்தான உணவு என்பதைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். மாம்பழத்தை எடுத்துத் தோலைக் கடித்தால் கசப்பும் துவர்ப்பும் சேர்ந்த சுவை. அடுத்து உள்ளே சதையைக் கடித்தால் நாவில் படரும் புளிப்பு, அடுத்த தேமதுரம் என்று சொல்லக் கூடிய தேனினிப்பு. இத்தேனினிப்பு நாவில் பட்ட நொடியில் உள்ளே சுரப்பிகள் சிலிர்த்தெழுந்து உடலின் ஆரோக்கியத்திற்கு உரிய நற்சுரப்பிகளைத் தூண்டும்.

பிள்ளைகள் மாங்காயை உப்பு, கார கலவையில் தொட்டுக்கடித்துத் தின்பார்கள். அது அவர்களுக்குச் சொர்க்கத்தை எட்டிய நிறைவைக் கொடுக்கும். பிள்ளைகளின் பள்ளிக் கூடத்திற்கு வெளியே உழைத்துத் தேய்ந்த தாய்மார்கள் பாட்டிகளாக சாக்கு விரித்து மாங்காய்க் கடைப் போட்டிருப்பார்கள். மாங்கீற்றையோ, மாங்காயையோ வாங்கிக் கடித்து வீடு சேறும் பிள்ளைகளுக்கு பள்ளி வகுப்பறையில் பெற்ற சலிப்பும், சோர்வும் கூடிய நிமிடத்தில் தொலைந்து சுறுசுறுப்படைந்து மீண்டும் விளையாட்டிற்குத் தயாராகி விடுவார்கள்.
ஆனால் சுத்தம், சுகாதாரம் என்ற பெயரில் அந்தப் பாட்டிக் கடைகள் அப்புறப்படுத்தப்பட்டு விட்டன. நமது பிள்ளைகள் தமது வகுப்பறைக் களைப்பைப் போக்க நேராக பேக்கரிகளை நோக்கி ஓடுகிறார்கள். மிகச் சுத்தமாகப் பளபளப்பாக அடுக்கி வைக்கப்பட்டுக் கண்களைச் சுண்டி இழுக்கும் வண்ணத்தில் நிரம்பி உள்ள தின்பண்டங்கள் பார்க்க என்னவோ அழகாய்த்தான் இருக்கின்றன. இவை நம்முடைய இளம் பிஞ்சு நாவின் சுவை மொட்டுக்களில் இருந்து சிறுநீரகம் வரை அனைத்தையும் காவு வாங்குபவை. பெற்றோரின் பணப் பையையும் பதம் பார்ப்பவை.
மாங்காய், கலாக்காய், நெல்லிக்காய், கொடிக்காய் என்று இன்றும் கிடைக்கிற வகைவகையான காட்டுக் காய்கள் பல்வேறு சுவைகளை நாவிற்குக் கொடுப்பதுடன் உடலின் சுரப்புகளையும் நிறைவு செய்பவை. ஆனால் அவற்றில் இருந்து வெகுதூரம் விலகி வந்து விட்டதால் தான் பதின்ம வயதுப் பிள்ளைகளுக்கும் சிறுநீரகக் கல், பித்தப்பைக் கல், தைராய்டு ஏற்ற இறக்கம், தோல்தடித்தல் மாதாந்திர உதிரப்போக்கு தள்ளிப் போதல் ஆகிய தொடர் உபாதைகளுக்குக் காரணமாக இருக்கின்றன.

பூப்பெய்திய பெண்கள் பலர் அடிக்கடி அரிசியை எடுத்து வாயில் போட்டு மெள்ளுவதைப் பார்த்திருப்போம். இது தவறான பழக்கம் என்றே நம்மில் பலரும் கருதுகிறோம். இவர்களுக்கு நுண் சத்துக்கள் பற்றாக்குறை, மண்ணீரல் பலமிழந்து விட்டது என்று பொருள். அதனை ஈடுசெய்யக் கூடிய சத்துகள் விட்டமின் மாத்திரைகளிலோ, பாதாம் – முந்திரிப் பருப்புகளிலோ, தொலைக்காட்சி விளம்பரங்களில் வரும் சத்துப் பானங்களிலோ இல்லை.
மண்ணீரலைப் பலப்படுத்தத் தேவையான இனிப்பும் துவர்ப்பும் கலந்த சுவை சமைக்கப்படாத அரிசிக்கே உண்டு. அதைக் காட்டிலும் சிவப்பு அவுலுக்கு உண்டு. சிவப்பான கெட்டி அவலை வாயில் இட்டு ஊற வைத்த உடன் இனிப்பும், துவர்ப்பும் கலந்த எச்சில் ஊறும். எச்சில் ஊற ஊற அவல் மெள்ளுவதற்கு ஏற்றதாக மாறும். இப்பொழுது நன்றாக மென்று மென்று அவுலைத் தின்னத் தின்ன மண்ணீரல் பலம் பெற்று இரத்த உற்பத்திப் பெருகும். பெண்களுக்கு உரிய மாதாந்திர உதிரப் போக்கு சீர்படும். இன்றைய தலைமுறைப் பெண்களில் கிட்டத்தட்டப் பாதிக்கும் மேற்பட்டோருக்கு மாதாந்திர உதிரப் போக்கு சீராக இல்லை. ஏனென்றால் இன்றைய உணவு எதை எடுத்துக் கொண்டாலும் அவற்றில் போதிய சத்துக்கள் இல்லை.
இப்படி இல்லாது போன சத்துக்களை உடனடியாக ஈடுசெய்ய வல்லது சிவப்பரிசி கெட்டி அவல். அவுலானது மற்ற தின்பண்டங்களைப் போல பளீரென்ற நிறத்தில் இல்லாமல் மங்கிய நிறத்தில் இருப்பதால் நம்மவர்கள் பலருக்கும் அதனைச் சாப்பிடத் தகுந்த பொருளாகக் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. சுவையும் நாவினை சுண்டி இழுப்பதில்லை. எனவே பலரும் அவுலை விரும்புவதில்லை. ஆனால் அவல் தரும் சத்துக்கள் வேறெந்த தின்பண்டத்திலும் இல்லை.
அவுலை ஊற வைத்து, காய்ச்சி வெல்லப்பாகில் போட்டு, தேங்காயத் துருவலும் சுக்கு ஏலக்காய்ப் பொடியும் போட்டுக் கிளறினால் உடலுக்கு உபத்திரவம் தராத அற்புதமான இனிப்பு தயார். இந்த இனிப்பு உடலுக்கு ஊக்கத்தைக் கொடுக்கும். நாட்பட்டக் காய்ச்சலில் கிடந்து தேறியவர்களுக்கு நல்லதோர் சத்தக் கொடுக்கும் உணவாகும் இது. சிலர் இயல்பிலேயே மெலிந்து காணப்படுவார்கள். எப்போதும் ரத்த சோகை பிடித்தது போல சோர்வாகவே காணப்படுவார்கள். அவர்களுக்கு அரிசி அவல் மட்டுமல்ல அனைத்துத் தானிய அவுலும் மாற்றி மாற்றிக் கொடுக்க ரத்த உற்பத்தி அதிகரித்து விரைவில் தேறுவார்கள்.

சிலருக்கு எதைத் தின்றாலும் அடுத்த சில நிமிடங்களிலேயே எதையாவது உண்ண வேண்டும் போலிருக்கும். இது கெட்ட பழக்கம் என்றே நம்மில் பலரும் புரிந்து கொண்டிருப்போம். இவர்களுக்கு சிவப்பரிசிக் கெட்டி அவுலை ஊற வைத்து உடன் தேங்காய்த்துருவல், நாட்டுச் சர்க்கரை, உலர் திராட்சை, உடன் ஒரு வாழைப்பழத்தை அரிந்து போட்டு கலக்கிக் கொடுத்தால் மிகவும் நல்லது.
மலச்சிக்கல் உள்ளவர்களுக்கும் இந்தக் கலவை மிகவும் பயன்தரும். நார்ச்சத்து மிகுந்திருப்பதால் செரிமானப் பாதையைச் சுத்தம் செய்யும் என்பதால் வாயுத்தொல்லை உள்ளவர்களுக்கும் அவல் வாழைப்பழக் கலவை பேருதவியாக இருக்கும்.
இட்லி, தோசை மாவு புளிப்பேறி விட்டால் அதனைச் சரிசெய்ய வெங்காயத்தை வெட்டிப்போடுவார்கள். புளிப்புமாவில் காரச் சுவைக் கூடுவதால் புளிப்பின் தன்மை குறைவாகத் தோன்றலாம். புளிப்பின் கேடுகள் வயிற்றைப் பாதிக்கவே செய்யும். குறிப்பாக வயிற்றில் அமிலத்தன்மை மிகுந்தவர்களுக்கு மேற்படி மாவு வயிற்றில் சேரும்போது வயிற்றுப் புண் அதிகரித்து அது பல்வரைப் பதம் பார்க்கும். அவுலை எடுத்து மிக்ஸியில் இட்டு அரைத்தால் ரவைப் பதத்திற்கு வரும் அதனை எடுத்துப் புளிப்பு மாவுடன் கலக்கி சற்றுநேரம் ஊறவைத்தால் புளிப்புக் குறைவதுடன் சுவையும் நன்றாக இருக்கும்.
குடல்புண், வயிற்றுப் புண் உள்ளவர்கள், சோறு குழம்பு என்று வழக்கமான உணவு உண்ணும்போது புண் ஆறுவதற்கு இடமில்லை. அந்தப் பிரச்சனை உள்ளவர்கள் அவுலுடன் தேங்காய்ப்பூ சேர்த்து உண்ணும் பொழுது அது நல்ல சத்தான உணவாகவும் இருக்கும். புண்ணும் விரைவில் ஆறும். பல் கூச்சம் உள்ளவர்கள் தங்களது பிரச்சனை பல்லில் தோன்றவில்லை வயிற்றில் அமிலத் தேக்கமே பிரச்சனைக்கு வேர்க் காரணம் என்பதைப் புரிந்து கொண்டால் அவல் சேர்ந்த உணவை சேர்த்துக் கொள்வதன் முக்கியத்துவத்தை உணர முடியும்.
அவுலுடன் சில சேர்மானங்களைச் சேர்த்து உண்பதன் மூலம் தொப்பையைக் குறைக்க முடிவதுடன் நெஞ்செரிச்சல் புளித்த ஏப்பம் போன்ற பல்வேறு நிரந்தர தொல்லைகளுக்குத் தீர்வுகாண முடியும்.
மிக விரைவில் தயாரிக்கும் எளிய அவல் உணவுகள் குறித்துத் தொடர்ந்து பார்ப்போம்.
- பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் இயற்கையாகவே ஹார்மோன்களின் மாற்றங்கள் ஏற்படும்.
- பெண்கள் கண்டிப்பாக ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
பெண்களுக்கு குழந்தையின்மை பிரச்சினை ஏற்பட பெரும்பாலும் உடல் பருமனே காரணமாக அமைகிறது. உடல் பருமன் அதிகமாக இருக்கும் பெண்களுக்கு கருத்தரிப்பதிலும் பிரச்சினை வரும், கரு உருவாகி தாயின் வயிற்றில் குழந்தை வளரும் போதும் பிரச்சினைகள் ஏற்படும்.
எனவே தான் உடல் பருமனாக இருக்கும் பெண்கள் கருத்தரிப்பதற்கு முன்பு கண்டிப்பாக உடல் எடையை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். எங்களிடம் சிகிச்சைக்கு வரும் பெண்களுக்கு நாங்கள் ஐ.வி.எப். முறையில் செயற்கை கருத்தரிப்பு செய்யும் போது கண்டிப்பாக உடல் எடையை குறைக்க சொல்வோம்.
செயற்கை கருத்தரிப்பு செய்தாலும் உடல் எடையை கண்டிப்பாக குறைக்க வேண்டும்:
பெண்களுக்கு உடல் எடை அதிகமாகும் போது, அவர்களுக்கு கொடுக்க வேண்டிய ஊசி மருந்தின் அளவும் அதிகமாகும். ஏனென்றால் எந்த ஒரு மருந்துகள் கொடுத்தாலும் பெண்களின் உடல் எடையை வைத்துதான் கணக்கீடு செய்வோம். பெண்களின் எடை அதிகமாகும் போது கொனாடோட்ரோபின் ஊசி அதிகமாக பயன்படுத்த வேண்டி இருக்கும். இதை தமிழில் கருவகவூக்கி என்று அழைப்பார்கள். இது ஹார்மோன் வகையை சேர்ந்த ஊசி ஆகும். இது இனப்பெருக்க உறுப்புகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது.
அதிகமாக கொனாடோட்ரோபின் ஊசி செலுத்தி முட்டைகள் வளர்ந்தால் அந்த முட்டைகளின் தன்மை மற்றும் தரம் கண்டிப்பாக பாதிக்கும். இதனால் கருத்த ரிக்கின்ற வாய்ப்பும் குறைவா கும். ஒருவேளை அந்த கரு வளர்ந்து 5 நாள் கருவாக (பிளாஸ்டோசிஸ்ட்) இருக்கும் நிலையில் அதை செயற்கை கருத்தரிப்பில் பரிமாற்றம் செய்வதும் ரொம்ப குறைவாகும்.
இது ஒரு நல்ல பிளா்ஸடோசிஸ்ட் போல தெரிந்தால் கூட, உடல் பருமனுடன் வந்த பிளாஸ்டோசிஸ்ட் என்பதால் அதனுடைய ஒட்டி வளரும் தன்மையும் குறைவாகிறது. பல நேரங்களில் கரு உருவாகும் போது கருச்சிதைவு ஏற்படும் வீதமும் அதிகமாகும். எனவே எந்த வகையான செயற்கை கருத்தரிப்பு செய்தாலும், அதற்கு முன்பாக பெண்கள் உடல் எடையை கண்டிப்பாக குறைக்க வேண்டும்.
அடுத்ததாக, ஐ.வி.எப். செயற்கை கருத்தரிப்பு செய்யும் போது உடல் பருமன் காரணமாக அந்த பெண்களுக்கு பல விஷயங்கள் பாதிப்பு அடையும். ஒன்று, இந்த பெண்ணுக்கு தொற்றுக்கள் ஏற்படலாம். இரண்டாவதாக, இந்த பெண்ணுக்கு ஏற்படுகின்ற பல வியாதிகளின் பாதிப்பு அதிகமாகலாம். மூன்றாவதாக, பருமனால் அவர்களின் உடல் பகுதி, சிறுநீரகம் ஆகிய அனைத்திலும் பிரச்சினைகள் ஏற்படலாம்.
எனவே உடல் பருமனை குறைப்பது மிக மிக முக்கியம். ஐ.வி.எப். செயற்கை கருத்தரிப்பு செய்ய வேண்டும் என்று உங்கள் டாக்டர் கூறும் நிலையில், 3 மாதங்கள் உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு ஆகியவற்றை எடுத்த பின்பு நீங்கள் ஐ.வி.எப். செயற்கை கருத்தரிப்பு செய்தால் வெற்றி விகிதம் அதிகமாகும். இதெல்லாம் கருத்தரிக்கும் முன்பு பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் ஆகும்.
உடல் பருமனால் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள்:
அடுத்ததாக உடல் பருமனால் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை பற்றி பார்ப்போம். உடல் பருமன் அதிகமாக இருக்கின்ற பெண்க ளுக்கு கண்டிப்பாக, கர்ப்பகால சிக்கல்கள் மற்றும் பிரச்சினைகள் 50 சதவீதம் அதிகமாகிறது. அவர்களுக்கு என்னென்ன சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது..?
உடல் பருமன் அதிகரிக்கும்போது சர்க்கரை பாதிப்பு வரும் என்று ஏற்கனவே சொன்னேன். சில பெண்கள் கருத்தரித்த பிறகு உடல்பருமனாக இருக்கும் நிலையில் கண்டிப்பாக அவர்களுக்கு சர்க்கரை அளவு அதிகரிக்கும். ஏனென்றால் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் இயற்கையாகவே ஹார்மோன்களின் மாற்றங்கள் ஏற்படும்.
முக்கியமாக கரு வளருவதற்கு ஹியூமன் பிளாசெண்டல் லாக்டோஜன், ஹியூமன் கோரியானிக் கொனாடோட்ரோபின், புரோஜெஸ்டிரோன், வளர்ச்சிக்கான ஹார்மோன் ஆகிய அனைத்தும் அதிகமாக இருக்கும்போது குளுக்கோஸ் அளவை அதிகப்படுத்தும். ஏனென்றால் கரு வளருவதற்கு குளுக்கோஸ் அதிகம் தேவை.
தாயின் ரத்த ஓட்டத்தில் இந்த குளுக்கோஸ் அளவை அதிகப்படுத்தும் முறைகள் இயற்கையாகவே கர்ப்பகாலத்தில் ஏற்படும். இதனோடு சேர்த்து இந்த காலகட்டத்தில் ஏற்படுகிற ஹார்மோன் மாற்றங்களினால் இந்த பெண்களுக்கு கண்டிப் பாக சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
அதனால் தான் உடல் பருமனாக இருக்கும் பெண்கள் உடல் எடையை குறைக்கும்போது சர்க்கரை பாதிப்பு வருவது குறைவாகும், உடல் ஆரோக்கியமும் சீராக இருக்கும், அவர்களின் கருத்தரிக்கும் திட்டமும் மிகவும் எளிதாக முடியும்.
குழந்தைக்கு செல்லும் ரத்த ஓட்ட தடையால் தாய்க்கு ரத்த அழுத்தம்:
இந்த பெண்களுக்கு உடல் பருமன் காரணமாக சர்க்கரை நோய் வருவது ஒரு விஷயம். இரண்டாவது, உடல் பருமனாக இருக்கும் பெண்களின் கருவில் உள்ள குழந்தைக்கு செல்கின்ற ரத்த ஓட்டத்தில் ரெசிஸ்டன்ஸ் சுகர் பிளட் ப்ளோ அதிகரிக்கி றது. அதாவது குழந்தைக்கு ரத்தம் செல்லும்போது அதில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதால் ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் தடைபடுகிறது.
இந்த ரத்த ஓட்ட தடையானது அதிகமாகும்போது, கர்ப்பப்பைக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைவாகிறது. அதுவும் ரத்தமானது ஒரு அழுத்தத்தோடு செல்கிறது. பல நேரங்களில் இதனால் தாய்க்கு ரத்த அழுத்தம் ஏற்படலாம். பல நேரங்களில் இந்த ரத்த அழுத்தம் அதிகமாகி கர்ப்பம் அடைந்த பெண்களுக்கு பிரச்சினைகளை உருவாக்கும்.
அந்த வகையில் ஒவ்வொரு பெண்ணுக்கும் உடல் பருமன் அதிகமாகும்போது, கரு வளர்ச்சிக்கான பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். அதனால் தான் உடல் எடை அதிகமாக இருக்கும் கர்ப்பிணிகளுக்கு சர்க்கரை நோய் வரலாம், ரத்த அழுத்தம் வரலாம், கரு வளராமல் கருச்சிதைவு ஏற்பட லாம், குறை மாதத்தில் வலி வரலாம், குறை மாதத்தில் குழந்தை பிறப்பு கூட ஏற்படலாம். பல நேரங்களில் இந்த பாதிப்பு கொண்ட பெண்களுக்கு குறைபாடு கொண்ட குழந்தை பிறப்பதற்கும் வாய்ப்பு அதிகம்.
எனவே கருத்தரிக்க இருக்கும் பெண்கள் உடற்பயிற்சி மூலம் தங்களின் உடல் பருமனை குறைப்பதன் காரணமாக இந்த மாதிரியான பிரச்சினைகளில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும்.
இன்னொரு முக்கியமான விஷயம், கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு ஏற்படுகின்ற ரத்த அழுத்தமும், உடல் பருமனாக இருக்கும் பெண்களுக்கு ரொம்பவும் அதிகமாகும். இந்த ரத்த அழுத்தம் அதிகமாகும்போது அவர்களுக்கு வலிப்பு நோய் கூட வரலாம்.
அந்த வகையில் பெண்கள் கண்டிப்பாக ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். பல நேரத்தில் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்காததால் வருகிற சிக்கல்கள் கூட இந்த கருத்தரித்தலின் வெற்றி விகிதத்தை குறைக்கும்.

டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701
உடல் பருமன் குறைந்தால் இயற்கையாக கருத்தரிக்கும் வாய்ப்பு:
அடுத்து ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த கர்ப்ப காலத்தில் உடல் பருமனாக இருக்கும் பெண்கள் பலருக்கும் ஏற்படுகின்ற மற்றொரு பிரச்சினை, குழந்தையின் தண்ணீர் சத்து குறைவாகும். மேலும் கர்ப்பப்பையை சுற்றியுள்ள நீரின் அளவு அதிகமாகி, அதனால் சில நேரங்களில் பிரச்சினைகளும் வரலாம். எனவே பெண்களின் உடல் எடை குறைவாகும்போது, கண்டிப்பாக ஆரோக்கியமாக குழந்தைபேறு ஏற்படும். கருச்சிதைவு ஏற்படாது. இந்த கொழுப்பு குறைவதன் காரணமாக கருவின் வளர்ச்சிக்கான எல்லாவிதமான உடல் மாற்றங்களும் ஏற்படும். ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி ஆகியவை கர்ப்பகாலத்தில் வருவது குறைவாகும். பருமன் குறைவதால் உடல், மனம் எல்லா விஷயத்திலும் ஆரோக்கியம் ஏற்படும். இது ஆரோக்கியமான குழந்தை பேறு வருவதற்கான வழிமுறையாக அமைகிறது.
மேலும் உடல் பருமன் குறைப்பு என்பது, பெண்களின் கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகப்படுத்துவது மட்டுமல்லாமல், அவர்கள் சிகிச்சைக்கு வராமல் இயற்கையாக கருத்தரிப்பதற்கான வாய்ப்புகளையும் அதிகப்படுத்தும்.
ஏனென்றால் சமீபத்தில் ஒரு ஆய்வு முடிவு வெளியானது. உடல் எடை சீராக இருப்பவர்கள் மற்றும் உடல் பருமனாக இருப்பவர்கள் ஆகிய இருவருக்கும் ஒரே நேரத்தில் ஐ.வி.எப். செய்யும்போது, உடல் பருமன் குறைவாக இருக்கும் பெண்களுக்கு குழந்தை பேறுக்கான வெற்றி விகிதம் அதிகமாக காணப்பட்டது.
அவர்களுக்கு கருவின் வளர்ச்சி சரியாக இருந்தது. கரு உருவாகும்போது வரும் கர்ப்பகால பிரச்சினைகளும் குறைவாக இருந்தது. எனவே இதனை தெளிவாக தெரிந்து கொண்டு, இனி நீங்கள் ஐ.வி.எப். முறையில் செயற்கை கருத்தரிப்பு செய்ய தயாரானால், அதற்கு முன்பு முதல் விஷயமாக, உடல் பருமன் குறைப்பில் கவனம் செலுத்த வேண்டும். அதற்கான உடற்பயிற்சி, சரியான அணுகுமுறை மற்றும் முறையான சிகிச்சை ஆகியவைகளை பற்றி தெளிவாக தெரிந்து, அதற்கு ஏற்ப செயல்பட்டால் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். கண்டிப்பாக இயற்கையாகவோ அல்லது ஐ.வி.எப். செயற்கை கருத்தரிப்பு மூலமாகவோ ஆரோக்கியமான குழந்தை பேறு பெற முடியும்.
- நவகிரகங்களில் தலைமை கிரகம் கேது பகவான்.
- சுய ஜாதகத்தில் கேதுவும் புதனும் பலம் பெற வேண்டும்.
ஆன்மீக வழிபாட்டில் முழு முதற் கடவுள் விநாயகருக்கே முன்னுரிமை உண்டு. விக்னங்களைக் களைவதில் விநாயகருக்கு இணையாக வேறு எந்த கடவுளையும் கூற முடியாது.
ஒருவரின் வாழ்க்கையில் ஏற்படும் சகல விதமான தடைகளையும் நீக்குவதில் வல்லவராக கருதப்படுபவர் விநாயகர். எந்த செயலையும் தொடங்குவதற்கு முன்பு விநாயகரை வழிபட்டால் வெற்றி நிச்சயம் என்பது அனுபவ உண்மை. இதை பலரும் உணர்ந்திருப்பீர்கள். வினைகளை களைவதில் இவருக்கு மேலாக வேறு யாரும் இல்லை என்பதை விநாயகர் என்ற பெயர் உணர்த்துகிறது. ஒரு ஜாதகத்தில் கேதுவால் ஏற்படக்கூடிய அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கக் கூடிய சக்தி படைத்தவர் விநாயகர்.
ஜோதிட சாஸ்திரத்தில் நவகிரகங்களில் வல்லமை வாய்ந்தவர் கேது பகவான். ஒருவரின் வாழ்க்கையில் முத்திக்கு காரணமாக இருப்பவர் கேது பகவான். வாழ்க்கையில் லவுகீக ஆசையில் எவ்வளவு தவறு செய்தாலும் முடிவில் சரணாகதியை அடைய வேண்டும் என்று உணர்த்துபவர். வெறுமையையும் வெறுப்பையும் ஞானம் என்ற அனுபவத்தையும் சேர்ந்தே கொடுப்பார் கேது. சுய ஜாதகத்தில் கேது வலுப்பெற்றவர்கள் ஞானிகளாக, சன்னியாசிகளாக, ஆன்மீக வாதியாக மாறுகிறார்கள். தடை, தாமதங்கள் மூலம் சோதனைகள் தந்து சாதனையாளராக மாற்றுபவர் கேது.
ஒரு ஜாதகத்தில் தனித்த கேதுவால் எந்த பிரச்சினையும் வராது. ஆனால் கேதுடன் சேர்ந்த கிரகங்கள் ஜாதகரின் வாழ்க்கையில் அந்த கிரகம் சார்ந்த காரகத்துவ பலன்களை முழுமையாக அனுபவிக்க விடாமல் வாழ்க்கை பாடம் கற்பித்துக் கொண்டே இருக்கும். இந்த கட்டுரையில் கேதுடன் இணைந்த கிரகங்களால் உண்டாகும் பலன்களையும் அதற்கான பரிகாரங்களையும் பார்க்கலாம்.
சூரியன்+கேது
நவகிரகங்களில் தலைமை கிரகம் கேது பகவான். சுய ஜாதகத்தில் சூரியனும் கேதுவும் பலம் பெற்றால் நிர்வாகத்திறன் நிறைந்தவர்கள். எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் தன்மை ஆர்வம் அதிகம். ஆயுள் அதிகம். அறிவும், தெளிவும் உண்டு. மற்றவர்களை மதிப்பவர்கள். பிரசித்தி பெற்ற சங்கங்கள், இயக்கங்களில் நிர்வாகியாக இருப்பார்கள். ஆரம்ப கால வாழ்க்கை வறுமையாகவும் 50 வயதுக்கு மேல் திடீர் தனலாபமும் அடைவார்கள். சொந்தத் தொழில் செய்யவே இவர்கள் விரும்புவார்கள். சூரியன் என்றால் அரசியல் அரசாங்கம். கேது என்றால் கொடி. வாழ்க்கையில் ஒரு முறையாவது கொடி வைத்த காரில் செல்வார்கள். சூரியன் கேது பலம் பொருந்திய நிலையில் இருந்தால் வாழ்நாள் முழுவதும் கொடி வைத்த காரில் செல்லக்கூடிய யோகம் பெற்றவர்களாக இருப்பார்கள்.
சூரியன் பலம் குறைந்து கேது பலம் பெற்றால் கண் பாதிப்பு, இருதயக் கோளாறு, எலும்பு தொடர்பான பிரச்சினைகள் இருக்கும். அரசாங்கத்தாலும் தந்தையாலும் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். இவரது தந்தை பல சிரமங்களை சந்திக்க நேரிடும். சூரியன் கேதுவுடன் இணைந்து கிரகண தோஷ பாதிப்பால் வாழ்க்கையில் முன்னேற முடிவதில்லை.
பரிகாரம்: சூரிய ஓரையில் விநாயகருக்கு வஸ்திரம் சாற்றி வழிபட வேண்டும்.
சந்திரன் + கேது
சுய ஜாதகத்தில் சந்திரன் கேது சம்பந்தம் இருந்தால் நேர்மை, நியாயம் நிறைந்தவர்கள். தான் வாழ பிறரை கெடுக்க விரும்பாதவர்கள். அமானுஷ்ய சக்தி நிறைந்தவர்கள். உள்ளுணர்வால் அனைவரின் எதிர்கால பலனையும் கூறுவார்கள். இவர்கள் எளிதில் காதல் வலையில் சிக்க கூடியவர்கள். இவர்களுக்கு குடும்ப வாழ்கையில் நிம்மதி இருக்காது. மேலும் குடும்ப வாழ்க்கை சுகம் தராது. கற்பனை பயம் அதிகம் உண்டு. இதனால் மன அமைதியின்மை மற்றும் அச்சம் அதிகமாக இருக்கும். தீயவழியில் சென்று தனக்கு தானே ஆபத்தையும் அசிங்கம் அவமானங்களையும் தேடிக்கொள்வார்கள்.
அனைத்து காரியங்களும் தடை தாமதத்துடன் தான் நடக்கும். மனம் அமைதி குறைவு. வாழ்வதற்காக உழைக்கலாம் ஆனால் உழைப்பே வாழ்க்கையாக இருக்க கூடாது என்ற எண்ணம் உடையவர்கள். இரவில் வேலை செய்து பகலில் உறங்குவார்கள். கிடைத்த வேலையைச் செய்து இருப்பதை உண்டு படுத்த இடத்தில் நிம்மதியாக தூங்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
பரிகாரம்: தினமும் விநாயகர் அகவல் படித்து வர வெற்றி மேல் வெற்றி வந்து சேரும்.
செவ்வாய்+கேது
ஒரு ஜாதகத்தில் செவ்வாய் மற்றும் கேது சேர்ந்து இருந்தால் உடன் பிறந்தவர்களால் ஏதேனும் மன உளைச்சல் இருந்து கொண்டே இருக்கிறது. மிகக் குறிப்பாக சொத்தால் பிரிவினை உண்டாகுகிறது. சிலருக்கு வில்லங்கமான சொத்தால் பண முடக்கம் ஏற்படும். சொத்து வாங்கி ஏமாறுவது அல்லது புறம் போக்கு நிலங்களை பட்டா போட்டு விற்பவர்களிடம் நிலம் வாங்கி ஏமாறுவார்கள். அதனால் சொத்து தொடர்பான வழக்கு, தொடர் சட்ட சிக்கல் இருந்து கொண்டே இருக்கும். பெண்களுக்கு இந்த கிரக சேர்க்கை 27 வயதிற்கு மேல் தான் திருமணத்தை நடத்துகிறது. திருமணம் ஆன பிறகு ஏன் திருமணம் நடந்தது என்று வருந்தும் வகையில் தான் வாழ்க்கை இருக்கும். கணவனை கடும் பகையாளியாக்கி நீதிமன்ற படி ஏறிய பெண்களே அதிகம். வெகு சில பெண்கள் குடும்பம், குழந்தைகள், மானம், மரியாதைக்கு அஞ்சி அனுசரித்து வாழ்கிறார்கள். வெகு சில தம்பதிகள் விதிவிலக்காக கருத்து வேறுபாடு இன்றி தொழில் நிமித்தம் அல்லது வேறு ஏதேனும் காரணத்தினால் வாழ்நாளின் பெரும் பகுதியில் பிரிந்தே வாழ்கிறார்கள்.
பரிகாரம்: தினமும் எமகண்ட நேரத்தில் விநாயகரை வழிபாடு செய்ய வேண்டும்.

ஐ.ஆனந்தி
புதன்+கேது
சுய ஜாதகத்தில் கேதுவும் புதனும் பலம் பெற வேண்டும். ஞானத்தை வாழ்க்கை தத்துவத்தை, ஆன்மீக நாட்டத்தை வழங்கக் கூடிய கேது.
தேவர்களில் அறிவுக்கும், புத்திக்கும், பெயர் பெற்ற விஷ்ணுபகவானின் முழுக்கடாட்சமும் பொருந்திய புதனுடன் சம்பந்தம் பெறுவது சிறப்பு. வலை கிரகமான கேதுவும், காதல் கிரகமான புதனும் சேருவதால் மக்களைக்கவர்வதில் இவர்களுக்கு நிகர் எவரும் இல்லை. எழுத்தாளர் பணியில் இவர்கள் நன்கு பிரகாசிப்பார்கள். பேனாநண்பர்கள் அதிகம் உடையவர்கள். அரசியல் துறையிலும், அதிர்ஷ்டம் உடையவர்கள். இவர்கள் எந்த வியாபாரமும் செய்யலாம். பொது ஜன ஆதரவு உண்டு. இவர்கள் இருக்கும் இடத்திற்குக் கூட்டம் அதிகம் வரும். சுய ஜாதகத்தில் கேது மற்றும் புதன் பலம் குறைந்தால் இவர்கள் சுயநலம் சூழ்நிலை வஞ்சகம் பொறாமை ஆகியவைகளால் எதிரிகளை வீழ்த்துவார்கள். இதுவே இவர்களுக்கு பெரும்பாலான எதிரிகளை உருவாக்கி விடும். கூட்டுத் தொழில் செய்யக் கூடாது. தீராத கடன், நோயை தந்து வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி விடுகிறது.
பலர் தரங்கெட்ட காதல் வாழ்க்கையில் சிக்குகிறார்கள். தங்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளக் கூடிய அன்பிற்கு ஆசைப்பட்டு தவறான காதலில் மாட்டுகிறார்கள்.
பரிகாரம்: சதுர்த்தி நாட்களில் விரதம் இருந்து விநாயகரை அருகம்புல் சாற்றி வழிபடவும்.
குரு+கேது
ஒரு ஜாதகத்தில் குருவும் கேதுவும் சேர்ந்து நின்று பலம் பெற்றால் ஆன்மீக மார்க்கத்தில் அதிக ஈடுபாடு உள்ளவர்களாக இருக்கிறார்கள். எல்லாவித வியாபாரமும் நிறைவேறும்.
வியாபாரத்தில் திடீர் லாபம் ஏற்படும். எப்போதும் இவரைச் சூழ்ந்து 10 பேர் இருப்பார்கள். இவர்களுக்கு அதிர்ஷ்டம், பொது ஜன ஆதரவு உண்டு.இவர்கள் இருக்கும் இடத்திற்குக் கூட்டம் அதிகம் வரும். வாக்கு சொல்லுதல், குறி சொல்லுதல், மத போதனை செய்தல், சமூக சீர்திருத்தம் செய்தல் போன்ற பணியில் தமக்கென்று தனி முத்திரை பதிக்கிறார்கள். தர்ம ஸ்தாபனங்கள், கோயில் நிர்வாகம், ஊர்த்தலைமை,
போன்றவற்றில் கவுரவப் பதவி வகிப்பார்கள். அரசியலில் நன்கு பிரகாசிப்பார்கள். நல்ல அரசு உத்தியோகங்கள் கிடைக்கும். இவர்கள் எந்தத் துறையில் ஈடுபட்டாலும் முன்னேற்றம் அடைவார்கள் குரு பலம் குறைந்து கேது பலம் பெற்றால் விசேஷமாக தொடங்கிய வாழ்க்கை போகப் போகச் சுமாரான நிலைக்கு வரும். புகழ் மட்டும் மிஞ்சும். இவர்களது வாழ்வில் பெரும ளவிற்கு பொருளாதாரம் பெருகாது.
வாழ்வில் குறிப்பிட்ட காலத்திற்கு கடனால் அவஸ்தை உண்டு. இவர்கள் பணத்திற்கு ஆசைப்பட்டுத் தாங்கள் செய்யும் தொழிலை அடிக்கடி மாற்றிக் கொள்வார்கள். ஆன்மீக போர்வையில் சுய நலவாதியாக, மதவாதிகளாக அதிகம் சம்பாதித்து அதிகம் இழக்கிறார்கள். குரு கேது சம்பந்தம் கோடீஸ்வரர் போர்வையில் வாழும் கடனாளிகள்.
பரிகாரம்: விநாயகருக்கு மஞ்சள் அபிஷேகம் செய்து வழிபட நல்ல மாற்றம் தெரியும்.
சுக்ரன்+கேது
ஒரு ஜாதகத்தில் சுக்கிரனும் கேதுவும் சேர்ந்து இருந்தால் அமைதியின்மை, கோபம், பிடிவாதம், சோகம், இயலாமை, உணர்ச்சி வசப்படுதல் போன்ற மனநிலை பாதிப்பு ஏற்படும். ஒரு தெளிவான சிந்தனை, முடிவு எடுக்க முடியாது. உண்மையான அன்பை அனுபவிக்க முடியாமல் ஏமாற்றமடைகிறார்கள். பல ஆண்களுக்கு திருமணத்தையே நடத்தி தராத கிரகச் சேர்க்கை. திருமணத்திற்கு முன்பு பெண் தேடியே திருமணத்தில் வெறுப்பை ஏற்படுத்தும்.
திருமணம் நடந்த பிறகு குடும்ப பிரச்சினைக்காக பஞ்சாயத்திற்கு நடந்தே வாழ்க்கை முடிந்து விடும். இந்த அமைப்பு பல கணவன், மனைவியை விரோதியாகவே வாழ வைக்கிறது. ஆண்களுக்கு எத்தனை திருமணம் செய்தாலும் திருமணத்தில் நிம்மதி இல்லாத நிலை. சிலருக்கு முதல் திருமணம் மாறுபட்டதாக அமைந்தாலும், இரண்டாவது திருமணம் நல்ல நிம்மதியைத் தருகிறது. பலர் சுக்கிரனின் பலவீனத்தால் தாம்பத்திய வாழ்க்கையில் பிரச்சிினைகளைச் சந்திக்கிறார்கள். பல சந்தர்ப்பங்களில், இந்த கிரகச் சேர்க்கையானது குழந்தை இல்லாமை, ஆண்மைக் குறைவு அல்லது தாமதமாகப் பிறந்த குழந்தை அல்லது பலவீனமான குழந்தைகளின் பிரச்சிினைகளை எதிர் கொள்வார்கள். பலர் போதைப் பழக்கங்களால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
பரிகாரம்: விநாயகருக்கு மாதுளை சாரால் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்
சனி+கேது
ஒரு ஜாதகத்தில் சனியும் கேதுவும் சேர்ந்து இருந்தால் மிகுதியான கர்ம வினைப்பதிவினை அனுபவிப்பார்கள். கேது தடை, தாமதம். சனி கர்ம வினை, தொழில். திருமணத் தடை அதிகம் உண்டு.
வியாபாரம், சுய தொழில் சிந்தனை அதிகம் இருக்கும். பெரிய முதலீட்டில் தொழில் செய்து வாழ்வாதாரத்தை இழந்த பலருக்கு இது போன்ற சம்பந்தம் இருக்கும். இவர்களுக்கு தொழிலில் நிதானமற்ற நிலையை ஏற்படுத்தி விடுகிறது. தொழிலில் இவர்களுக்கு வராக்கடனே அதிகம் இருக்கும். முதலாளி தொழிலாளி கருத்து வேறுபாடு அதிகம் இருக்கும். இந்த யோகம் உள்ளவர்கள் தனிபட்ட வாழ்க்கை அல்லது பொருளாதாரத்தில் தோற்றுப் போனாலும் நிச்சயம் புகழை அடைவார்கள். சிலர் 6 மாதம் தொழில், 6 மாதம் உத்தியோகம் என்ற நிலைப்பாட்டில் இருப்பார்கள் அல்லது ஒரு வருடத்திற்கு தேவையான பொருளாதாரத்தை 6 மாதத்தில் சம்பாதித்து விட்டு மீதமுள்ள ஆறுமாதம் ஓய்வு எடுப்பார்கள்.
தொழில் சார்ந்த நல்ல வாய்ப்புகள் இவர்களுக்கு வரும் போது அந்த வாய்ப்புகளை இவர்கள் பயன்படுத்திக் கொள்ள மாட்டார்கள். தொழிலில் இவர்களுக்கு நிரந்தரமான வருமானம் எப்போதும் இருக்காது வருமானம் வரும் ஆனால் வராது என்பது போல் தான் இவர்களுடைய வாழ்க்கை இருக்கும். முதலீடு இல்லாத தொழிலில் கொடி கட்டி பறப்பார்கள்.
பரிகாரம்: சனி ஓரையில் வன்னி மரத்தை 108 முறை வலம் வரவேண்டும். வாழும் வாழ்க்கை அர்த்தம் உள்ளது என்ற வாழ்வியல் தத்துவத்தை புரிய வைப்பவர் கேது. வாழ்க்கையே அர்த்தமாக்க விநாயகர் வழிபாடு மிக அவசியம்.கேதுவினால் இன்னல்களை அனுபவிப்பவர்கள் மேலே கூறிய பரிகாரங்களை பயன்படுத்தி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
செல்: 98652 20406
- நம் வாழ்வின் தீர்வை நாம் எப்படி காண முடியும்
- உங்களின் நல்ல செயல்கள் இறைவன் உங்களுக்கு அளித்த வாய்ப்பு. நன்றி சொல்லுங்கள்.
'மானிடராய் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திருக்க வேண்டும்' என்கின்றார்கள். நாம் வாழும் வாழ்க்கை தவம் செய்து கிடைத்த வாழ்க்கை மாதிரி இருக்கின்றது. மொத்த பாவங்களையும் சேர்த்து வைத்து அனுபவிக்க பிறந்தது போல் தானே இருக்கின்றது. இது அநேகரின் மனக்குமுறல் எனலாம்.
கடினமாக உழைக்கின்றேன். வேண்டாத தெய்வம் இல்லை. இருப்பினும் கண்ணுக்குத் தெரியாத தடைகள் நம் வாழ்க்கையை திக்கு முக்காடச் செய்கின்றன. இப்படியெல்லாம் அநேகர் மனதிலும் தோன்றத்தான் செய்கின்றது. இதற்கு மகான்கள் கூறுவது என்ன?
எந்த ஒரு செயலிலும் நாம் முதலில் நினைப்பது சமுதாயம் என்னைப் பற்றி என்ன நினைக்கும்? என்னை சுற்றி உள்ளவர்கள் என்னைப் பற்றி என்ன பேசுவார்கள்? என்பதனைப் பற்றிதான். அதற்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கின்றோம். அதற்கேற்ப செயல்படுகின்றோம்.
இப்படி புற உலகிற்கு முக்கியத்துவம் தரும்போது நம் வாழ்வின் தீர்வை நாம் எப்படி காண முடியும்?
நம்மால் நம்மின் உள் குரல் சொல்வதை கேட்க முடியவில்லை. நம்மிள் எழும் உள் குரலை சிலர் ஆழ் மனது கூறுவது என்றும் கூறுவர். இந்த உள் ஓசை நம்முடன் பேசிக் கொண்டுதான் இருக்கின்றது. அறிவுறுத்திக் கொண்டுதான் இருக்கின்றது. நாம் தான் அதனை கேட்க முடிவதில்லை. காரணம் டி.வி., போன், பேச்சு என்ற ஓயாத சத்தம் மிகுந்த உலகத்தில் இருந்து நாம் இம்மி அளவு கூட விலகாமல் அதிலேயே மூழ்கி இருக்கின்றோம். சற்று நேரம் கூட அமைதியான, சத்தமில்லாத சூழ்நிலையில் நாம் இருப்பதே இல்லை. நம் உள் உணர்வோடு பேசுவதில்லை. உணர்வதில்லை. அதன் பேச்சை மதிப்பதும் இல்லை. ஆக முறையான பாதையை விட்டு விலகும் போது வாழ்க்கை திக்கு முக்காடத் தானே செய்யும்.
இதனை சற்று மாற்ற முயற்சிப் போமா. சிறிது நேரம் சத்தமில்லாத இடத்தில் அமைதியாய் உட்காருங்கள். உங்கள் உள்மனது அல்லது உள் குரல் அல்லது உள் உணர்வு இப்படி எந்த வார்த்தையில் சொன்னாலும் சரி. அது உங்களின் பிரச்சினைக்கு நல்ல தீர்வினைச் சொல்லும். இதனை அன்றாட பழக்கமாக்கி விடுங்கள். உங்கள் வாழ்க்கையில் பல பிரச்சினைகள் வராது.
நம் வாழ்வில் பிரச்சினைகளுக்கு மற்றொரு காரணம் ஒருவரோடு ஒருவரை ஒப்பிட்டு பார்ப்பதும், நினைப்பதும், பேசுவதும்தான். ஒருவர் போல ஒருவர் தோற்றத்தில் இல்லை. குணத்தில் இல்லை. பழக்க வழக்கங்களில் இல்லை. உணவுமுறையில் இல்லை. வாழும் சூழ்நிலையில் இல்லை. பின் எதற்கு இப்படி ஒப்பிட்டு பார்க்கின்றோம். ஒவ்வொரு தனி மனிதனும் ஒரு பிரபஞ்சம். பிறகு ஏன் நான் அவரைப் போல் இல்லையே? என் பிள்ளை இவரைப் போல் இல்லையே? என்று ஒப்பிட்டு நாமே நமக்கு பிரச்சினையினை உருவாக்கிக் கொள்ள வேண்டுமா?

கமலி ஸ்ரீபால்
ஆகவே ஒப்பிடுதலை நிறுத்தி விட்டாலே அநேக பிரச்சினைகள் குறையும். அடுத்து நாம் தவிர்க்க வேண்டிய ஒன்று 24 மணி நேரத்தையும் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் செலவிடுவது. அவர்கள் மகிழ்ச்சி, கோபம் இது மட்டுமே உங்கள் பிறவியின் வேலை என்று நினைத்து உழைப்பது. இதனை நன்கு பயன்படுத்தி பின்னர் அவைகள் உங்களை காயப்படுத்தும் போது மனம் நொந்து போவது. எதற்கும் ஒரு அளவு கோல் வையுங்கள். உங்கள் உள் உறுப்புகள், உங்கள் ஆன்மாவோடு பேசுங்கள். அவைகள் வெளிப்படுத்தும் அறிகுறிகளை கூர்ந்து கவனியுங்கள். உங்கள் உடலும் மனமும் சிறந்து இருக்கும்.
இவற்றினை நீங்கள் உணர வேண்டும்.
* உங்களை அறிந்த எல்லோரும் நீங்கள் நன்றாக, மகிழ்ச்சியுடன் இருப்பதனையோ, முன்னேற்றம் அடைவதனையோ விரும்புவது இல்லை. நீங்கள் மற்றவர்களுக்காக காலத்தினையும், பணத்தினையும் யோசிக்காது செலவழிக்கும் போதே நீங்கள் ஏமாற்றப்படப் போகின்றீர்கள் என்பதனை உணர்ந்து கொள்ளுங்கள். ஏனெனில் இது கலி காலம். உங்களைச் சுற்றி அனைவரும் இருப்பர். ஆனால் நீங்கள் தனித்து இருப்பதாகவே உங்களுக்கு தோன்றும்.
* அனைத்தினையும் இம்மி தவறாது பிறரிடம் பகிர்வது என்பது அவ்வளவு சிறந்ததாகக் கூறப்படவில்லை. மகிழ்ச்சியினைக் கூட உங்கள் மனதுக்குள், உங்களுக்குள் வைத்துக் கொள்ளுங்கள்.
* பலர் உங்கள் மகிழ்ச்சி கண்டு பொறாமை கொள்ளலாம் என்பதனையும் நினைவில் கொள்ளுங்கள்.
* உங்கள் அடுத்தடுத்த வாழ்க்கை திட்டங்களை அக்குவேறு, ஆணி வேறாக பறைசாற்ற வேண்டாம். உங்கள் செயல்களின் வெற்றி அதனை பேசட்டுமே.
* நமக்கு சில குறைபாடுகள், போராட்டங்கள் இருக்கலாம். அவை உங்கள் உள்ளேயே இருக்கட்டுமே. பறைசாற்ற வேண்டுமா என்ன?
* வீட்டு சண்டைகளை நம் ஆபீசில் உள்ளவர்களுக்கு 'சிந்துபாத்' தொடர் கதை ஆக்க வேண்டாமே!
* நீங்கள் ஒரு சிறிய நல்ல காரியம் செய்தால் அதற்கு மேடை போட்டு மற்றவர் பாராட்ட வேண்டுமா என்ன? உங்களால் அதனைக் கூட உங்கள் உள்ளேயே வைத்துக் கொள்ள முடியாதா? நீங்களே கூட அதனை மேளம் அடித்து கூறுவீர்களா என்ன?
* உங்களின் நல்ல செயல்கள் இறைவன் உங்களுக்கு அளித்த வாய்ப்பு. நன்றி சொல்லுங்கள்.
* உங்களிடம் அதிக பணமோ, பணப்பற்றா குறையோ இருந்தால் தேவை இல்லாமல் பிறர் அறிய வேண்டாம். ஒன்று உங்களின் பணத்தினை எதிர்பார்ப்பார்கள் அல்லது பண மின்மையை கேலி செய்வார்கள்.
* உங்கள் கடந்த கால தவறுகள், வருங்கால திட்டங்கள் இவற்றினை ஏன் பிறர் அறிய வேண்டும்?
* உங்கள் பலமோ, பலவீனமோ நீங்கள் மட்டுமே அறிந்தால் போதும்.
* நீங்கள் பட்ட அவமானங்களை, வேதனைகளை படம் போட்டு காட்ட வேண்டாம்.
* உங்கள் உணர்ச்சிகளை முகத்திலோ, செயலிலோ வெளிப்படுத்தக் கூடாது. தனிமையில் அவற்றினை சுத்தம் செய்து விடுங்கள்.
* இவற்றினையெல்லாம் நாம் கடைபிடிக்கும் போது நம்மிடம் ஏற்படும் சில மாற்றங்களை நாமே உணர முடியும். எதிலும் சற்று நிதானமாய் இருப்பதனை நாமே உணர முடியும்.
* கண்டிப்பாக அனைவரும் தியான, மூச்சு பயிற்சி முறைகளையும், யோகா பயிற்சியினையும் அன்றாடம் பயில வேண்டும். இதுவே உங்களை அமைதிப்படுத்தி, படபடப்பினை நீக்கி உடலில் பிராண சக்தியினை அதிகரிக்கச் செய்யும். இந்த முறைகள் நம் 'பாட்டரி ரீ சார்ஜ்' செய்வது போல் என்று குறிப்பிடப்படுகின்றன. இவற்றினை பயிற்சியாளர்களின் மூலம் அறிவதே முறை.
எப்போதும் மகிழ்ச்சியாக இருப்போமே!
* மகிழ்ச்சியாக இருப்பவர்களைப் பற்றி ஆராய்ந்து டேவிட் என்ற விஞ்ஞானி எழுதியுள்ள கருத்துக்களின் தலைப்பினை மட்டுமே பார்ப்போம். இது நம்மைப் பற்றி நாம் சுய ஆய்வு செய்து கொள்ள உதவும்.
* ஒவ்வொருவர் வாழ்க்கைக்கும் ஒரு அர்த்தம் உள்ளது. குறிக்கோள் உள்ளது.
* மகிழ்ச்சிக்கான முறையினை நாம் தான் உருவாக்க வேண்டும்.
* ஒவ்வொரு முறையும் ஜெயித்தே ஆக வேண்டும் என்ற மிருகத்தனமான வெறி மகிழ்ச்சி தராது.
* நம் குறிக்கோள்கள், லட்சியங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து ஒருங்கிணைந்து இருக்க வேண்டும். சிதறி இருக்கக் கூடாது.
* நல்ல நட்புகள், எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும்- சிறந்ததே.
* நாம் எப்படி இருக்கின்றோமோ- அப்படியே நம்மை நாம் ஏற்றுக் கொள்வோம்.
* டி.வி. நேரம் குறைந்தால், போன் நேரம் குறைந்தால் மகிழ்ச்சி கூடும். முயற்சி செய்துதான் பாருங்களேன்.
* தூங்கச் செல்லும்போது மண்டை குழப்பி யோசிக்க வேண்டாமே.
* நல்ல நட்பு பணத்தினை விட உயர்ந்ததே.
* எதிர்பார்ப்புகள் நடைமுறையோடு ஒத்து இருக்க வேண்டும். கற்பனை உலகில் இருக்கக் கூடாது.
* புது சிந்தனைகள், கருத்துக்கள், எண்ணங்கள் இவற்றை வரவேற்று ஆராயுங்கள்.
* எல்லோரும் முக்கியமானவர்களே.
* ஆக்கப்பூர்வ சிந்தனைகள் எண்ணங்கள் அவசியம்.
* உங்களை நீங்களே நம்ப வேண்டும்.
* தனித்தே பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்று நினையுங்கள்.
* வயதாகி விட்டது. முதுமை வந்து விட்டது என்று மட்டும் சோர்ந்து விடாதீர்கள்.
* எதிலும் அதிகமாக கவனம் செலுத்துங்கள்.
* சொல்வதை செய்யுங்கள். செய்வதை சொல்லுங்கள்.
* யாரிடமும் கரடு முரடான போக்கில் இருக்காதீர்கள்.
* உடற்பயிற்சி செய்யுங்கள்.
* சிறிய விஷயங்களில் கூட அதிக பொருள் புதைந்து இருக்கும்.
* சிரியுங்கள், புன்னகையுங்கள்.
* கம்ப்யூட்டரை நன்கு பயன்படுத்த கற்றுக் கொள்ளுங்கள்
* எதற்கும் நம்மை நாமே குற்றம் சாட்டிக் கொள்ளக் கூடாது.
* இரவு உறக்கம் நன்கு இருக்க வேண்டும்.
* அக்கம் பக்கத்தினரை அறிந்து கொள்ளுங்கள்.
* தினமும் நல்ல புத்தகத்தினை படியுங்கள்.
* பணம் மிக அவசியம். ஆனால் அதனால் மகிழ்ச்சியினை வாங்க முடியாது.
இந்த கருத்துகளையும் சற்று யோசித்து பார்க்கலாமே:
60 வயதிற்குப் பிறகாவது பரபரப்பான உலக சூழலில் இருந்து ஒதுங்கி தனிமையில் சிறிது நேரமாவது இருக்க பழகுவோமே! இதனை இளம் வயதிலேயே பழக ஆரம்பித்தால் அதிக நன்மைகளைப் பெறலாம்.
* முதலில் உங்கள் மீது அன்பு செலுத்த கற்றுக் கொள்ளுங்கள்.
* நாம் நாமாக மட்டுமே இருப்போம். கலர் பூச்சுகள் வேண்டாமே!
* பெரிதாக சிந்திக்கவும்.
* நம் ஆழ்மனம், உள்ளுணர்வு சொல்லும் செய்தியினைக் கேளுங்கள்
* தனிமை ஒரு பரிசு.
* டிவி, போன், அரட்டை இவற்றிலிருந்து விடுதலை பெறுங்கள்.
* இயற்கையோடு பேச ஒரு வாய்ப்பு கொடுங்கள். * தனிமையில் பிரயாணம் செய்யுங்கள்.
* மன்னிக்கும் பழக்கத்தினை அடங்கா கோபத்தினை விட்டெறியும் பழக்கத்தினை உருவாக்கிக் கொள்ளுங்கள்
* உங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள்.
* பேசாமல், அமைதியாய் நாற்காலியில் அமருங்கள். பேன் சத்தம், பறவைகள் சத்தம் இவற்றை கவனியுங்கள்.
* உங்கள் சுவாசத்தோடு பயணியுங்கள்.
* அனேக பதில்கள் உங்களுடன் பேசும்.
முயற்சி செய்வோமே!
- மரண பயமின்மையே நிம்மதியான மகிழ்ச்சிக்கு அடிப்படை!
- இந்த உலகில் எது எது உண்மையானதோ அவற்றைப்பற்றிப் பேசுவதற்கு அச்சப்படத் தேவையில்லை.
'அச்சம் என்பது மடமையடா!' என்கிற பழந்திரையிசைப் பாடல் வரிகளை அச்சமின்றிப் போற்றுகின்ற அன்பு வாசகப் பெருமக்களே! வணக்கம்!.
உலகில் எதற்கும் அஞ்சாத மனவலிமை உள்ளவர்கூட மரணத்திற்கு அஞ்சியே ஆகவேண்டும் என்று கூறுவர். கொசு தொடங்கிக் கொள்ளிவாய்ப் பிசாசு வரை, மனிதர் அச்சம் கொள்வது ஏகதேசத்திற்கு எல்லாரிடமும் பரந்து விரிந்தே கிடக்கிறது. இன்று கிடைக்கும் உணவு முதலான எல்லா வசதி வாய்ப்புகளும் நாளை திடீரென இல்லாமல் போய்விடுமோ? என்கிற வாழ்வின் நிலையாமை குறித்த அச்சம், நிலைபெற்ற அச்சமாய் ஒவ்வொரு மனிதரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டே இருக்கிறது.
இயற்கை நமக்குக் கொடையாக வழங்கிக் கொண்டிருக்கிற நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், இயற்கையான மரம் செடி கொடிகள், கனிகள் விதைகள் உணவு தானியங்கள், கற்கள் பாறைகள் உலோகங்கள் என எல்லாமே ஒரு பூகம்பத்தில், அல்லது ஒரு சுனாமியில், அல்லது ஒரு பேரழிவு நோயில் காணாமல்போக நேர்ந்துவிட்டால், நமது வாழ்வாதாரங்கள் அத்தனையும் ஒரு நொடியில் நம்மைவிட்டு இல்லாமல் போய்விட்டால் என்ன செய்வது? என்கிற அச்சம் நிரந்தர அச்சமாகி அல்லற்படுத்திக் கொண்டே இருக்கிறது.
சிறுசிறு அச்சங்களுக்கெல்லாம் நான் அச்சப்படுவது கிடையாது; ஆனாலும் மரணபயம் மட்டுமே என்னை பயமுறுத்திக் கொண்டே இருக்கிறது என்று சிலர் கூறலாம். மரணமா? பயமா? எனக்கா? எந்தக்காலத்திலும் கிடையவே கிடையாது; பெரும் போர்ப்படைகளைக் கூட எதிர்த்து நிற்கக்கூடிய ஆற்றல் என்னுடையது; ஆனாலும், அவ்வப்போது குளியலறையில் கரப்பான் பூச்சிகளைப் பார்த்தால் மட்டுமே கொஞ்சம் பயப்படுவேன் என்று சிலர் தமது வீரப் பிரதாபங்களைப் பிரஸ்தாபிக்கலாம்.
எது எப்படியோ எல்லாவிதமான அச்சங்களுக்கும் மூலகாரணமாக மரணபயம் மட்டுமே திகழுகிறது. மரணம் என்பது எப்போதும், வருகின்ற வழிகளில் புரியாத புதிராக இருக்கலாம்; ஆனால் அது ஒவ்வொரு உயிருக்கும் நிகழ்ந்தே ஆகும்; வந்தே தீரும் என்பது மட்டும் மாறாத உண்மையாகவே இருக்கிறது. உண்மைக்கு அஞ்சாதவர்கள்; சிறுசிறு பயங்களுக்கும் அஞ்சாதவர்களாக இருந்து பழக வேண்டும். ஒரே ஒருமுறை மட்டுமே வாழ்க்கையில் நிகழ்ந்துவிடக்கூடிய மரணத்திற்காக நாள்தோறும், நொடிதோறும் அச்சப்பட்டு அச்சப்பட்டுச், செத்துச் செத்துப் பிழைக்க வேண்டுமா?.
'ரௌத்திரம் பழகு' அதாவது 'கோபத்தைச், சாந்தமாக மாறும்வரை பழக்க வேண்டும்' என்று பாரதி கூறுவதைப்போல, மனிதர்களும் தமக்குள் தோன்றும் அச்சத்தையும் பழக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அச்சம் பழக்குவது என்றால், கோபம் தோன்றியவுடன் உள்ளத்திலும் உடம்பிலும் ஏற்படும் இரசாயண மாற்றங்களைப் போல, அச்சம் தோன்றிடும் போதும் உருவாகிடும். அவற்றை உளவியல் ரீதியாக அணுகி, அச்சம்மாற்றி ஆற்றல்பெருக்கிடும் வித்தையை நாம் கற்றிட வேண்டும்.
அருளாளர் திருநாவுக்கரசர்,
" அஞ்சுவது யாதொன்றும் இல்லை! அஞ்ச வருவதும் இல்லை"
என்று பாடுகிறார்; 'தான் பயப்படுவதற்கோ, அல்லது தன்னை பயமுறுத்துவதற்கோ இந்த உலகில் எதுவுமே இல்லை!' என்று கூறுகிறார். மேலும், "நாமார்க்கும் குடியல்லோம்! நமனை அஞ்சோம்!" என்று மற்றோர் இடத்தில் பாடும்போது, 'சிவனைத் தவிர வேறு எவருக்குமே தாம் அடிமையில்லை என்றும், மரணபயம் என்பது துளியும் கிடையாது' என்பதையும் துணிச்சலோடு எடுத்துரைக்கிறார். சூழல் சார்ந்து உடம்பிலும் உள்ளத்திலும் ஏற்படுகிற அச்சத்தை ஆன்மீக உளவியல்கொண்டு அகற்றிடும் முயற்சியில் அந்த ஆன்மீக ஞானி ஈடுபடுகிறார்; நம்மை ஈடுபடவும் சொல்கிறார்.
ஒரு துறவி ஆசிரமம் அமைத்து அங்கு நாள்தோறும் வந்து அவரிடம் முறையிடுகிற மக்களுக்கெல்லாம் ஆர்ந்த வார்த்தைகள் கூறி ஆறுதல் வழங்கி கொண்டே இருந்தார். வருகின்ற மனிதர்கள் பலதினுசு என்பதைப்போல அவர்கள் கொண்டுவருகிற பிரச்சனைகளும் பலதினுசுகளாக இருந்தன. ஆனால் எல்லாருக்கும் மலர்ந்த முகத்தோடு, மனம் கோணாமல் அருளாசியும் அருள்வாக்கும் அவர் சொல்லிக்கொண்டே இருந்தார்.
நாள்தோறும் அந்தத் துறவியைச் சந்தித்து அருளாசி பெற்றுக்கொண்டிருந்த ஒரு செல்வந்தர், ஒருநாள் திடீரெனத் துறவியிடத்துத் தயங்கி நின்றார். குருவும் மாறாத புன்னகையோடு," என்ன விஷயம்?" என்று கேட்டார். " சுவாமி! நானும், என்னைப்போன்ற சீடர்களும் நாள்தோறும் உங்களை வணங்கி, உங்களிடமிருந்து அருளாசி வாங்கிச் செல்கிறோம்; ஆனால் உங்கள் முகத்தில் தங்கியுள்ள அந்த 'ஒளி', அந்த தேஜஸ்! எங்கள் எவர் முகத்திலும் எப்போதும் இருப்பதே இல்லையே! அது ஏன்?" என்று கேட்டார். உடனே துறவி சொன்னார், "சீடரே! முகத்தில் தெளிவும், தேஜஸ் என்கிற ஒளிவட்டமும் ஒரு மனிதன் முகத்தில் எப்போது தோன்றும் தெரியுமா?, எப்போது மரண பயம் அவனைவிட்டு முற்றிலுமாக விலகுகிறதோ! அப்போதுதான்!.
"இப்போது சொல்லக் கூடாது!; இருந்தாலும் சொல்கிறேன். உன்னுடைய மரணத்திற்கு இன்னும் பதினைந்து நாட்கள் மட்டுமே இருக்கின்றன. இன்றிலிருந்து பதினைந்தாவது நாள் இரவு ஒன்பது மணிக்கு உனது மரணம்!" என்று சொல்லிவிட்டார் துறவி. உடனே பதற்றத்தோடு காரியங்களில் ஈடுபடத் தொடங்கினார் செல்வந்தர். "இன்னும் பதினைந்து நாட்கள் மட்டும் தானா?. அதற்குள் நான் ஆற்ற வேண்டிய கடமைகள் இந்தச் சமூகத்திலும் வீட்டிலும் நிறைய இருக்கின்றனவே!. ஆளை விடுங்கள்! நான் முடிந்தால் பிறகு வருகிறேன்" என்று அவசர அவசரமாகத் துறவியிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினார் செல்வந்தார். வீட்டிற்குச் சென்றார்.
தான் தனது வாழ்நாளில் இதுவரை தீர்க்கப்படாமல் இருந்த கொடுக்கல் வாங்கல் கணக்குகளை நேர் செய்தார். தன்னுடைய சொத்துகள் முழுவதையும் கணக்கெடுத்து, குடும்பத்தினர், உறவுகள், நட்புகள் என்று எல்லாருக்கும் பிரித்து எழுதிக் கொடுத்தார்; மீதமுள்ள சில சொத்துக்களை தர்ம ஸ்தாபனங்களுக்கு நன்கொடையாக எழுதி வைத்தார். ஏதோ சில சில்லறைக் காரணங்களுக்காக இதுவரை பகைமை பாராட்டி வந்த உறவினர், நண்பர்களோடு சமாதானமாகி நட்புப் பாராட்டத் தொடங்கினார். கோயிலுக்குச் செல்வது, குருநாதரைப் பார்க்க வருவது என்பதற்கெல்லாம் அவருக்கு நேரம் கிடைக்கவே இல்லை. வாழ்நாளில் அவர் சாதிக்க நினைத்த நல்லகாரியங்களில் சிலவற்றையாவது நிறைவேற்ற வேண்டும் என்று இரவு, பகலாகச் செயல்பட்டார்.
பதினைந்து நாட்கள் முடிந்தன; குருநாதர் கணித்துச் சொன்ன மரணம் வருவதற்குச் செல்வந்தருக்கு இன்னும் ஒருமணி நேரம் மட்டுமே அவகாசமாக இருந்தது. அதற்குள் குருநாதரைப்பார்த்து, நன்றி கூறி விடைபெற்றுக் கொள்ளலாம் என்று ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தார் செல்வந்தர். செல்வந்தரை ஆர்வத்தோடு வரவேற்ற குருநாதர், "இப்போது சொல்லுங்கள்!" என்று கனிவோடு கேட்டார். " குருநாதரே! நீங்கள் சொன்ன இந்தப் பதினைந்து நாட்களுக்குள் என்னால் முடிந்த பொருளாதார, குடும்ப, சமுதாய, ஆன்மீகக் கடமைகள் யாவற்றையும் முடித்துவிட்டேன். மனத்தில் இப்போது முழு நிம்மதி; மரணத்திற்கும் இப்போது தயாராகி விட்டேன்!" என்றார் செல்வந்தர்.

முனைவர் சுந்தர ஆவுடையப்பன்
அருகிலிருந்த சீடரிடம் ஒரு முகம்பார்க்கும் கண்ணாடியை எடுத்து வரச்சொன்ன குருநாதர், அதனைச் செல்வந்தரிடம் கொடுத்து, " இப்போது இந்தக் கண்ணாடியில் உங்கள் முகத்தைப் பாருங்கள்; நீங்கள் தேடிய தேஜஸ்! நீங்கள் விரும்பிய ஒளிவட்டம்! இப்போது உங்கள் முகத்தில் ஒளிவிட்டுப் பிரகாசிப்பதைக் காண்பீர்கள்!" என்றார். அந்தப் பதினைந்து நாட்களும் தன்முகத்தைக் கூடக் கண்ணாடியில் பார்க்க நேரமில்லாமல் செயல்பட்ட செல்வந்தர் அப்போது கண்ணாடியில் பார்த்துப் பிரமித்துப் போய்விட்டார். ஆம்! அவர் குருநாதர் முகத்தில் கண்ட அதே ஒளிப்பிரகாசத்தை இப்போது தன் முகத்திலும் கண்டு மகிழ்ந்து போனார்.
அப்போது துறவி பேசினார்," மரண பயமின்மையே நிம்மதியான மகிழ்ச்சிக்கு அடிப்படை!; எவருடைய மனத்தில் மரணம் குறித்த அச்சம் அகன்று போகிறதோ, அவருடைய முகத்தில் அருள் என்னும் ஒளிவட்டம் அன்புப் பிரகாசம் செய்யத் தொடங்கி விடுகிறது. உங்கள் மரணம் குறித்து நான் சொன்ன கணிப்பு உண்மையானது அல்ல; எவருடைய மரணத்தையும் எவரும் எளிதில் கணித்துவிட முடியாது; நான் சொன்ன அந்தப் பதினைந்துநாள் கணக்கு, உங்களின் மனநிலை மாற்றத்திற்கும், மரண பயத்திலிருந்து உங்களை விடுவிப்புச் செய்வதற்கும் காரணமாக அமைந்து விட்டது; தற்போதைக்கு உங்களுக்கு மரணமில்லை; இனிமேலும் நீங்கள் நீண்ட ஆயுளோடும், நிறைந்த மகிழ்ச்சியோடும் வாழ வாழ்த்துகள்! அச்சமின்மையே மகிழ்ச்சியின் திறவுகோல்!".
துறவியின் அந்த வார்த்தைகள் தத்துவச் செறிவு மிக்கவை என்றாலும், சமூகத்தில் எந்த நிலையில் உள்ளோரும் அச்சமற்ற துணிச்சலோடு எதனை எதிர்கொண்டாலும் துன்பமற்ற இன்பமே ஒவ்வொரு அடியெடுப்பிலும் உறுதுணையாக அமையும். நமது சங்கத் தமிழ் இலக்கியமாம் குறுந்தொகையில், "நல்மொழிக்கு அச்சமில்லை" என்கிற உண்மையைப் போற்றும் ஓர் உன்னத வார்த்தை வருகிறது. உலகில் அச்சமில்லாமல் செயல்படுவோர் ஒளிப்புகழோடு வாழ்ந்திடுவார்; அந்த அச்சமின்மை யாருக்கு வாய்த்திடும் தெரியுமா? ' நல்மொழி' என்னும், எல்லாருக்கும் நன்மை விளைவிக்கிற உண்மையைப் பேசுவோருக்கே வாய்த்திடுமாம். இந்த உலகில் எது எது உண்மையானதோ அவற்றைப்பற்றிப் பேசுவதற்கு அச்சப்படத் தேவையில்லை. உண்மையை உண்மையென்று நம்புதலே, சகல அச்சங்களையும் எதிர்த்து வெற்றி கொள்வதற்கு இனிய வழி ஆகும்.
வீணான கனவுகள், வெற்றுக் கற்பனைகள், மூடத் தனமான நம்பிக்கைகள் போல்வன மனிதர்களை மரணம் குறித்த இல்லாத பொல்லாத அச்சங்களுக்கு ஆட்படுத்தித் துன்ப வலையில் சிக்கித் திணறடிக்கின்றன. எப்போதும் வெற்று மனமாய் வைத்துக்கொள்ளாமல், நிறைந்த மனமாய் வைத்துக்கொண்டால் நலம்குறித்தே மனம் சிந்திக்கும். திரைப்படம் தொடங்கும்போதே, முடிவுக்காட்சி என்ன என்பதைத் தெரிந்துகொண்டால், படம் எப்படி சுவாரஸ்யப்படும்?. வாழ்க்கையும் அப்படித்தான்; அதன்போக்கில் அதனை ரசித்து வாழ வேண்டும்; எல்லார் வாழ்க்கைக்கும் நிறைவு உண்டு; அதனை முன்கூட்டியே தெரிந்து கொண்டு எதைச் சாதித்துவிடப் போகிறோம்.
அச்சங்களின் தொகுப்பு வாழ்க்கை என்று கருதத் தொடங்கினால், வாழ்க்கையின் அத்தனைப் பக்கங்களும் இருட்டுச்சாயம் பூசப்பட்ட இருள்மயமாக மட்டுமே திகழும்; மாறாக எல்லாம் இன்பமயம் என உண்மையின் சார்பில் உற்சாக உறுதியோடு உலாவத் தொடங்கினால் வாழ்க்கை ஒளிமயமாக ஒளிர்ந்து பிரகாசிக்கும். மரண பயமின்மையே மாசற்ற அழகு முகத்திலும்! அகத்திலும்!.
தொடர்புக்கு: 9443190098
- சூரிய ரேகை ஒருவர் கையில் பல இடங்களில் இருந்து ஆரம்பிக்கலாம்.
- சூரிய மேட்டில் திரிசூலம் இருந்தால் நிறைய காசு பணம் வர ஆரம்பிக்கும்.
கைரேகை சாஸ்திரத்தில் சூரிய ரேகை மிகவும் முக்கியமானது. ஒருவரிடம் எவ்வளவு தான் திறமை இருந்தாலும் கூட அவருடைய கையில் சூரிய ரேகை இல்லாவிட்டால் வெளி உலகத்திற்கு அவருடைய திறமைகள் தெரியாமலே போய்விடும். அவர்கள் குடத்தில் இட்ட விளக்கு போல காணப்படுவார்கள்.
சூரிய ரேகை ஒருவருடைய புகழையும், வசியத்தையும், திறமையையும், வெற்றியையும் குறிக்கும். ஒருவருக்கு தங்கு தடை இல்லாத சூரிய ரேகையும், நன்கு அமைந்த சூரிய மேடும் அமைந்தால் அவர்கள் வாழ்க்கை மிகவும் பிரகாசமாக இருக்கும். பெரும்பாலும் அதிர்ஷ்டம் இல்லாதவர்கள் கையில் சூரிய ரேகை காணப்படாது.
சூரிய ரேகை ஒருவர் கையில் பல இடங்களில் இருந்து ஆரம்பிக்கலாம். எனினும் அது மோதிர விரலின் கீழே காணப்படும். சிலருக்கு பிறக்கும் போது காணப்படாமல் திடீர் என்று கூட ஏற்படலாம். ஆயுள் ரேகையில் இருந்து சூரிய ரேகை ஆரம்பித்தால் அவர் வாழ்க்கை சக்கரத்தில் ரேகை ஆரம்பிக்கும் வயதில் இருந்து முன்னேற்றம் ஏற்படும்.
ஜாதகர் பல திறமைகளை தன்னுள் கொண்டு இருப்பார். கொடுத்த வாக்கை எப்படியாவது காப்பாற்றுவார்கள். எழுத்து துறையில் மற்றும் கதை எழுதுவதில் கூட இவர்களிடம் ஆர்வமும் திறமையும் ஒளிந்து இருக்கும். அதனை புரிந்து பயன்படுத்திக் கொண்டால் சிறந்த எழுத்தாளராக இருப்பார்கள்.

விதி ரேகையில் இருந்து சூரிய ரேகை ஆரம்பித்தால் அந்நபர் தன்னுடைய சுய முயற்சியால் முன்னேற்றம் அடைவார். இவர்கள் தன்னுடைய கடும் உழைப்பாலும் முயற்சியாலும் வாழ்க்கையின் வெற்றி விளிம்பிற்கு செல்வார்கள்.
செவ்வாய் மேட்டில் இருந்து சூரிய ரேகை ஆரம்பித்தால் நிலம், சொத்துக்கள் சேரும். ராணுவம், காவல் துறைகளில் கூட உயர் பதவி கிடைக்கப்பெறும். விவசாயத்தின் மூலமாக நல்ல லாபத்தை பெறுவார். அரசியலிலும் கூட சாதிப்பார்கள்.
சந்திர மேட்டில் இருந்து சூரிய ரேகை ஆரம்பித்தால் அந்நபர்களுக்கு கற்பனை சக்தி அதிகம் இருக்கும். அதிலும் சூரிய ரேகை நன்கு தெளிவாகத் தெரிந்தால் அந்நபர்கள் சிறந்த எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களாக இருப்பார்கள். வெற்றியாளராகவும் மிகுந்த அதிர்ஷ்டம் நிறைந்தவராகவும் இருப்பார். தொழில் அதிபராக இருந்து பல பேருக்கு வேலை வாய்ப்பை வழங்குவார். பலர் இவர்களுடைய வெற்றிக்காக உழைப்பார்கள் மற்றும் உதவுவார்கள்.
இருதய ரேகையில் இருந்து சூரிய ரேகை ஆரம்பித்தால் அவர்கள் கால சர்ப்ப தோஷத்தைக் கொண்டு இருப்பார்கள். இவர்களுக்கு 33 வயதிற்கு பிறகு வாழ்க்கையில் அதீத அதிர்ஷ்டம் ஏற்படும். அதிலும் 40 வயதிற்கு பிறகு வாழ்க்கை ஏறுமுகமாக இருக்கும். அவர்களுக்கு பெண்கள் அல்லது தனது மனைவியினால் கூட அதிர்ஷ்டம் ஏற்படும்.

அ.ச.இராமராஜன்
புத்தி ரேகையில் இருந்து சூரிய ரேகை ஆரம்பித்தால் அவர்களுக்கு சமயோஜித புத்தி அதிகம் இருக்கும்.
சூரிய ரேகை துண்டுபட்டு இருந்தால் ஜாதகர் தொழிலும் உத்தியோகத்திலும் பல சரிவுகளை சங்கடங்களையும் சந்திக்க நேரிடும்.
சூரிய ரேகை பல துண்டாக அமைந்து இருந்தால் எதிரிகளால் ஜாதகரின் முன்னேற்றத்திற்கு தடை ஏற்படும். இந்த அமைப்பு ஜாதகருக்கு எல்லா துறைகளிலும் தோல்வியை தான் தரும். சூரிய ரேகை வளைந்து நெளிந்து காணப்பட்டால் அந்த கைக்கு சொந்தக்காரர் தன்னமிபிக்கை இல்லாமல் இருப்பார். உத்யோகம் அல்லது தொழில் ரீதியாகப் பல தோல்விகளை சந்திப்பார். தொழிலில் அல்லது உத்யோகத்தில் எதிரிகள் ஏற்படுத்தும் தடையால் முன்னேற முடியாத நிலை உண்டாகும்.
சூரிய மேட்டில் திரிசூலம் இருந்தால் நிறைய காசு பணம் வர ஆரம்பிக்கும்.
சூரிய மேட்டில் சூரிய வளையம்: புதன் மேடு என்பது சுண்டு விரலுக்கு கீழ் இருப்பது. சூரிய மேட்டையும், புதன் மேட்டையும் ஒரு ரேகை உருவாகி இணைக்கும். இதனை சூரிய வளையம் என்று அழைப்பார்கள். ஆனால் இது எல்லோர் கையிலும் காணப்படாது. மிகவும் அரிதானது. அப்படிப்பட்டவர்கள் அரசியலில் உயர் பதவி, அரசு துறை செயலாளர்கள், பிரதமர், ஜனாதிபதி போன்ற பெரிய பதவிகளில் இருப்பார்கள்.
சூரிய மேட்டில் நட்சத்திரம் தென்பட்டால் அது பெரிய பெயரையும், புகழையும் உடன் பெற்றுத் தரும்.
சூரிய மேட்டில் இருக்க வேண்டிய குறிகள்:-
சூரிய ரேகையில் சதுர குறி இருந்தால் பிரச்சனைகளில் இருந்து பாதுகாப்பை பெறுவதை குறிக்கும்.
சூரிய மேட்டில் அல்லது மோதிர விரலின் கீழே ஒன்றுக்கு மேற்பட்ட சூரிய ரேகை காணப்பட்டால் பல தொழிலில் ஈடுபாட்டை காட்டுவார்கள். சகலகலா வல்லவர்களாக இருப்பார்கள். திருமண ரேகையானது சூரிய ரேகையுடன் இணைந்தால் அதிர்ஷ்டமான மணவாழ்வு அமையப்பெறும்.
சூரிய ரேகையில் பெருக்கல் குறி காணப்படுவது நல்லதல்ல. சூரிய ரேகையில் சதுர குறி காணப்பட்டால் பிரச்சனைகளில் இருந்து பாதுகாப்பை தரும். சூரிய மேடு பல துண்டுகளாக வெட்டப்பட்டு காணப்பட்டால் நிறைய பிரச்சனைகளை சந்திப்பார்கள். திருமண ரேகை சூரிய ரேகையை வெட்டினால் மணமுறிவு ஏற்பட இடம் உண்டு.
சூரிய ரேகையில் தீவுக்குறி காணப்படுவது நல்லதல்ல. அது ஜாதகருக்கு எதிலும் தோல்வியை பெற்றுத் தரும்.
ஒருவருக்கு நல்ல அதிர்ஷ்டமான வாழ்வு அமைய வேண்டும் என்றால், சூரிய ரேகை நன்கு தெளிவாக கையில் அமைய வேண்டும். தெளிவு இல்லாமல் அமைந்த ரேகைகள் ஒருவருக்கு முழு பலனை தராது.
அதேபோல, ஒருவரது கையில் சூரிய ரேகையை இல்லை என்றாலும் கூட வாழ்க்கை மிகுந்த போராட்டமாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் தினமும் சூரிய வழிபாடு செய்ய வேண்டும். வசிஷ்டர் அருளிய ஆதித்ய ஹ்ருதய மந்திரம் சொல்லி வர சூரிய ரேகை கைகளில் தோன்றி தெளிவு பெறும் என்பது ஐதீகம். அதே போல சூரிய ரேகை கையில் இல்லாதவர்கள் பரிகாரமாக மாணிக்கம் அணிவது நன்மை தரும். சூரியனார் கோயில் போக வேண்டும்.
செல்பேசி: 9965799409






