என் மலர்
நீங்கள் தேடியது "தன்வந்திரி"
- தன்வந்திரி ஜெயந்தியைக் குறிக்கும் வகையில் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.
- ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவித்தல்.
உலகளவில் "தேசிய ஆயுர்வேத தினம்" செப்டம்பர் 23-ந்தேதி கடைபிடிக்கப்படுகிறது. இது ஆயுர்வேதத்தின் பழமையான மருத்துவ முறைகளை உலகளவில் மேம்படுத்தவும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கடைபிடிக்கப்படுகிறது.
2016 ஆம் ஆண்டு முதல், தன்வந்திரி ஜெயந்தியைக் குறிக்கும் வகையில் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. இருப்பினும் மத்திய அரசு 2025-ம் ஆண்டு மார்ச் மாதம் ஆண்டுதோறும் செப்டம்பர் 23-ந்தேதி ''தேசிய ஆயுர்வேத தினம்" கடைபிடிக்கப்படுகிறது என்று அறிவித்தது.
ஆயுர்வேத நாளை கொண்டாட பல்வேறு கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் இலவச சுகாதார முகாம்களை ஏற்பாடு செய்து இலவசமாக மருந்துகளை வழங்குகின்றன. ஆயுர்வேத நாளன்று ஆயுர்வேத சிகிச்சை மற்றும் ஆராய்ச்சிக்கு பங்களித்தவர்களை அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் 'தேசிய தன்வந்திரி ஆயுர்வேத விருது' வழங்கி கவுரவிக்கிறது. தேசிய தன்வந்திரி ஆயுர்வேத விருதுகள், ஒரு பாராட்டு சான்றிதழ் (தன்வந்திரி சிலை) மற்றும் ரூ. 5 லட்சம் ரொக்கப் பரிசு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
நோக்கம்:
ஆயுர்வேதத்தின் பழமையான மருத்துவ முறைகளைப் பரப்புதல்.
ஆயுர்வேதத்தை உலகமயமாக்குதல் மற்றும் மேம்படுத்துதல்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவித்தல்.
காரணம்:
ஆயுர்வேத மருத்துவத்தின் தந்தை என்று கருதப்படும் தன்வந்திரி முனிவரின் பிறந்த நாளான தன்வந்திரி ஜெயந்தியைக் குறிக்கும் வகையில் இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.
முக்கியத்துவம்:
உடல், மனம் மற்றும் ஆவி ஆகியவற்றின் சமநிலையை மேம்படுத்துவதன் மூலம் முழுமையான ஆரோக்கியத்தை ஆயுர்வேதம் வழங்குகிறது.
- தன்வந்திரி பகவான், தன்னுடைய கரங்களில் சங்கு, சக்கரத்தையும் தாங்கியிருப்பார்.
- நோய்கள் தீரவும், ஆயுள் அதிகரிக்கவும் பக்தர்கள் இவரை வணங்குகின்றனர்.
தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக திருப்பாற்கடலை கடைந்தபோது, அதில் இருந்து ஏராளமான பொருட்கள் வெளிப்பட்டன. தேவர்கள், தேவ கன்னிகைகள் கூட தோன்றினர். அப்படி தோன்றியவர்களின் ஒருவர்தான் தன்வந்திரி பகவான். இவர்தான் திருப்பாற்கடலில் இருந்து அமிர்தக் கலசத்துடன் வெளிப்பட்டவர். இவர் கையில் மூலிகையும் வைத்திருப்பார். மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாக கருதப்படும் தன்வந்திரி பகவான், தன்னுடைய கரங்களில் சங்கு, சக்கரத்தையும் தாங்கியிருப்பார்.
திருவரங்கம் அரங்கநாதர் கோவில், சேலம் கந்தாஸ்ரமம், கோயம்புத்தூரில் உள்ள ராமநாதபுரம், கேரளாவில் உள்ள நெல்லு வாய் ஆகிய இடங்களில் தன்வந்திரி பகவானுக்கு ஆலயங்கள் உள்ளன. இதில் நெல்லுவாயில் உள்ள ஆலயத்தில் தன்வந்திரி பகவானின் கைகளில் சங்கு, சக்கரம், மூலிகை, அமிர்தக்கலசத்துடன் மாமரப் பூவையும் வைத்திருக்கிறார். நோய்கள் தீரவும், ஆயுள் அதிகரிக்கவும் பக்தர்கள் இவரை வணங்குகின்றனர்.






