என் மலர்
புதுச்சேரி
புதுச்சேரி என்.ஆர்.காங். எம்எல்ஏ ஜெயபாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் புதிதாக 97 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கொரோனாவுக்கு மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். இதனால் கொரோனா தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை 2,513 ஆகவும், பலி எண்ணிக்கை 35 ஆகவும் உயர்ந்துள்ளது.
புதுவை மாநிலத்தில் நேற்று 647 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 95 பேர், காரைக்கால், மாகியில் தலா ஒருவர் என மொத்தம் 97 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 2,513 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று கதிர்காமம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 47 பேர், ஜிப்மரில் 20 பேர், கொரோனா கேர் சென்டரில் 15 பேர், காரைக்காலில் ஒருவர் என மொத்தம் 83 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மாநிலத்தில் இதுவரை 33,658 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. 312 பேரின் பரிசோதனை முடிவுகள் காத்திருப்பில் உள்ளன.
இந்நிலையில் கதிர்காமம் தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜெயபாலுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரி சட்டசபை கூட்டத்தொடரில் 3 நாட்கள் பேரவை நிகழ்வுகளில் ஜெயபால் கலந்துகொண்டுள்ளார்.
ஒரு எம்எல்ஏவுக்கு கொரோனா உறுதியானதால் புதுச்சேரி பேரவை கூட்டம் இன்று நடக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

புதுச்சேரி சட்டசபையில் கவர்னர் உரையை புறக்கணித்து அமைச்சர் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி சட்டசபையில் கவர்னர் உரை மற்றும் பட்ஜெட் தாக்கல் ஆகியவை கடந்த 20ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அன்றைய தினம் கவர்னர் கிரண்பெடி உரையை தொடர்ந்து முதல் அமைச்சர் நாராயணசாமி பட்ஜெட் தாக்கல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் பட்ஜெட் உரையை படிக்க அவகாசம் கேட்டு வேறு தேதியில் சட்டசபையை நடத்துமாறு கிரண்பெடி கடிதம் அனுப்பினார். இதற்கு பதில் அளித்து முதல் அமைச்சர் நாராயணசாமி கடிதம் எழுதினார்.
இதனால் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து கவர்னர் கிரண்பெடி உரையாற்ற சட்டசபைக்கு வராமல் புறக்கணித்தார். திட்டமிட்டபடி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. புதுச்சேரி அரசியல் வரலாற்றில் எந்த காலத்திலும் நிகழாத சம்பவம் இந்த ஆண்டு நிகழ்ந்துள்ளது. இந்த விவகாரம் புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால், புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை கவர்னர் உரையின்றி தொடங்கியது. முதலமைச்சர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார்.
இந்நிலையில் அரசின் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) மற்றும் துறைவாரியான மானிய கோரிக்கைகளை சட்டசபையில் முன்னிலைப்படுத்த ஒப்புதல் அளித்துள்ளதாக நேற்று மாலை கவர்னர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டது. இதனால், அரசு ஊழியர்களுக்கு சம்பளம், முதியோர் பென்ஷன் மற்றும் நலத்திட்டங்கள் போன்றவை வழக்கம்போல் கிடைக்க வாய்ப்புகள் உருவாகி உள்ளன.
இதனை தொடர்ந்து சபாநாயகர் சிவகொழுந்து, துணை சபாநாயகர் பாலன் ஆகியோர் கிரண்பெடியை பூங்கொத்து கொடுத்து சட்டசபையில் இன்று வரவேற்றனர். இதனையடுத்து கவர்னர் கிரண்பெடி, அவை நடவடிக்கையில் பங்கேற்று ஆங்கிலத்தில் உரையாற்றினார்.
கவர்னர் உரையை வாசிக்க தொடங்கிய உடன், அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் லஷ்மி நாராயணன், அனந்தராமன், ஜெயமூர்த்தி ஆகியோர் அவரது உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். இதில் சட்டமன்ற உறுப்பினர் ஜெயமூர்த்தி கருப்பு சட்டை அணிந்து பேரவைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
எம்.ஜி.ஆர். சிலை அவமதிக்கப்பட்டது தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரி:
வில்லியனூரில் புதுச்சேரி - விழுப்புரம் புறவழிச்சாலையின் நடுவே உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு நேற்று மதியம் காவி துண்டு அணிவிக்கப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
எம்.ஜி.ஆர். சிலைக்கு காவி துண்டு அணிவிக்கப்பட்ட சம்பவத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
எம்.ஜி.ஆர். சிலையை அவமதித்தவர்கள் மீது புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் புதுச்சேரியில் எம்.ஜி.ஆர். சிலைக்கு காவி துண்டு அணிவிக்கப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:
புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலை அவமதிக்கப்பட்டது தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்படும். யார் தவறு செய்திருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருக்கனூர் அருகே சாலையோரம் அனாதையாக விடப்பட்ட மூதாட்டிக்கு உணவு கொடுத்து கிராம மக்கள் பராமரித்து வருகின்றனர். இந்த சம்பவம் இன்னும் மனிதநேயம் மரித்துப்போகவில்லை என்பதை உணர்த்துகிறது.
திருக்கனூர்:
புதுவை மாநிலம் திருக்கனூர் அருகே கொ.மணவெளியில் வீரன் கோவில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் இங்குள்ள புளியமரத்தின் அடியில் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் அதரவற்ற நிலையில் கிடந்தார். அவர் உணவு எதுவும் சாப்பிடாததால் மிகவும் சோர்வாக, சுயநினைவின்றி காணப்பட்டார்.
இதைப்பார்த்த கிராம மக்கள், மூதாட்டி மீது பரிதாபப்பட்டு உணவு மற்றும் குடிநீர் கொடுத்து மனித நேயத்துடன் கவனித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை அந்த மூதாட்டி சுயநினைவுக்கு திரும்பினார். அவரிடம், நீங்கள் யார்? எங்கிருந்து வந்தீர்கள்? என்று கிராம மக்கள் கேட்டனர். அதற்கு, அந்த மூதாட்டி, தான், முருங்கப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவில் வீதியை சேர்ந்த அர்ச்சுனன் என்பவரின் மனைவி சின்னப்பொண்ணு என்றும், 2 மகன்கள், 5 மகள்கள் என 7 பிள்ளைகள் உள்ளனர். மகன்களின் பராமரிப்பில் இருந்து வந்தேன். இந்த இடத்துக்கு எப்படி வந்தேன் என்பது தெரியவில்லை என்றார்.
வயது முதிர்வு காரணமாக மூதாட்டியை பராமரிக்க முடியாமல் அவருடைய குடும்பத்தினர் இரவோடு இரவாக சாலையோரம் விட்டுச்சென்றார்களா? அல்லது உறவினர் வீட்டுக்குச் செல்லும் வழியில் மூதாட்டி வழிதவறி இங்கு வந்தாரா? என்பது தெரியவில்லை. அவருடைய குடும்பத்தினர், உறவினர்களை அடையாளம் கண்டு, அவர்களுடன் மூதாட்டியை சேர்த்து வைக்க போலீசார், சமூக நல அமைப்பினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆதரவற்ற நிலையில் கிடந்த மூதாட்டியை உணவு கொடுத்து கிராம மக்கள் பராமரித்ததன் மூலம் மனிதநேயம் இன்னும் மரித்துப்போகவில்லை என்பதைத் தான் உணர்த்தியது.

புதுவையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு காவி துண்டு அணிவிக்கப்பட்டது. இதை கண்டித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி:
கருப்பர் கூட்டம் யூ-டியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு வீடியோ பதிவிடப்பட்டது. இந்தநிலையில் கோவையில் பெரியார் சிலை மீது காவி நிற சாயம் ஊற்றப்பட்டது. அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்களின் சூடு அடங்குவதற்குள் புதுவையில் நேற்று எம்.ஜி.ஆர். சிலை மீது காவி துண்டு அணிவிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்த விவரம் வருமாறு:-
புதுவை மாநிலம் வில்லியனூரில் புதுச்சேரி - விழுப்புரம் புறவழிச்சாலையின் நடுவே எம்.ஜி.ஆர். சிலை உள்ளது. இந்த சிலையின் மீது காவி துண்டு அணிவிக்கப்பட்டதாக நேற்று மதியம் தகவல் பரவியது. இதை அறிந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், அசனா, வையாபுரி மணிகண்டன் மற்றும் கட்சியினர் அங்கு திரண்டு வந்து பார்த்தனர். அப்போது சிலையின் கழுத்தில் காவி வேட்டியை துண்டு போல் அணிவிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் இதை கண்டித்து சிலையின் முன் நடுரோட்டில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். காவி துண்டு அணிவித்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோஷமிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த வில்லியனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் எம்.எல்.ஏ.க்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதை எல்லாம் சிலை அருகே உள்ள ராமபரதேசி கோவிலில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், போராட்டம் நடந்த பகுதிக்கு வந்தார். அந்த பெண், ‘எம்.ஜி.ஆர். சிலைக்கு நான் தான் காவி வேட்டியை துண்டாக அணிவித்தேன், எனது கணவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். சிலையின் கழுத்தில் மாலை ஏதும் இல்லாததால், அழகுபடுத்துவதற்காக எனது கணவரின் காவி வேட்டியை அணிவித்தேன்’ என்று கூறினார். அவரிடம் போலீசாரும், எம்.எல்.ஏ.க்களும் தொடர்ந்து விசாரித்தனர். அப்போது அந்த பெண் வேட்டியை துண்டாக எம்.ஜி.ஆர். சிலைக்கு அணிவித்தது நான் தான் என்று மீண்டும் மீண்டும் தெரிவித்தார்.
இதையடுத்து எம்.ஜி.ஆர். சிலை மீது அணிவிக்கப்பட்டிருந்த காவி துண்டு அகற்றப்பட்டது. பின்னர் அ.தி.மு.க. வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். சிலைக்கு காவி துண்டு அணிவித்ததாக கூறிய பெண் சற்று மனநிலை பாதிக் கப்பட்டவர் போல் இருந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.எம்.ஜி.ஆர். சிலைக்கு காவி துண்டு அணிவிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுச்சேரி வில்லியனூர் விழுப்புரம் சாலையில் எம்.ஜி.ஆர். சிலை மீது காவித் துண்டு போர்த்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி:
புதுச்சேரி வில்லியனூர் விழுப்புரம் சாலையில் அமைக்கப்பட்டுள்ளது முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். சிலை. இந்நிலையில் அடையாளம் தெரியாத நபர் சிலர் எம்.ஜி.ஆர். சிலை மீது காவித் துண்டு போர்த்தப்பட்டதால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து அதிமுக-வை சேர்ந்த தொண்டர்கள் அந்த இடத்தில் முற்றுகையிட்டனர். மேலும் எம்.ஜி.ஆர். சிலை மீது காவித் துண்டு போர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.எல்.ஏக்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தை முன்னிட்டு பாதுகாப்புக்காக காவல்துறையின் அங்கு குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் அதிகாரிகள் அதிமுக எம்.எல்.ஏக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவித்ததை அடுத்து அங்கிருந்த அதிமுகவை சேர்ந்த தொண்டர்கள் எம்.ஜி.ஆர். சிலை மீது இருந்த காவித் துண்டை அகற்றி மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும் ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45,720 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,129 பேர் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் 3,37,607 பேரும், தமிழகத்தில் 1,86,492 பேரும், உத்தரபிரதேசத்தில் 55,588 பேரும், தெலுங்கானாவில் 49,259 பேரும், ராஜஸ்தானில் 32,334 பேரும், கர்நாடகாவில் 75,833 பேரும், குஜராத்தில் 51,399 பேரும், டெல்லியில் 1,26,323 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 123 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,420ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக புதுச்சேரியில் இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் புதுச்சேரியில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் அனைத்து குடும்பத்திற்கும் ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா நிவாரண நிதியாக பொதுநிவாரண நிதிக்கு ரூ.9.16 கோடி வந்துள்ளதாகவும் அம்மாநில முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
மேலும் கொரோனா தொற்றால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள இல்லங்கள் அனைத்துக்கும் 700 ரூபாய் மதிப்புள்ள அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும் என்றும் முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுவையில் மேலும் 17 இடங்களை கட்டுப்பாட்டு மண்டலமாக மாவட்ட கலெக்டர் அருண் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் வசித்து வந்த பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது. அதன்படி 1.பெரியகாலாப்பட்டு பெருமாள் கோவில் வீதி, 2.லாஸ்பேட்டை மாகவீர் நகர், 3.பிச்ச வீரன்பேட் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் 9-வது குறுக்குத்தெரு, 4.மூலக்குளம் மோதிலால் நகர் 4-வது குறுக்குத்தெரு, 5.அரும்பார்த்தபுரம் வசந்தம் நகர் 2-வது குறுக்குத்தெரு, 6.ரெட்டியார்பாளையம் மோகன் நகர் கங்கையம்மன் கோவில் வீதி, 7.ஜவகர் நகர் 5-வது குறுக்குத்தெரு, 8.திலகர் நகர் முதன்மை சாலை, 9.மடுவுப்பேட் மாரியம்மன் கோவில் வீதி, 10.கொட்டுப்பாளையம் மாரியம்மன் கோவில் வீதி,
11.சாரம் கிருஷ்ணா நகர் 14-வது குறுக்குத்தெரு, 12.புதுசாரம் முதல் குறுக்குத்தெரு, 13.சின்னையன்பேட் ராகவேந்திரா நகர், 14.சாரம் அன்னைதெரசா நகர் சாமந்தி வீதி, 15.கோரிமேடு இந்திரா நகர் பாரதியார் வீதி, 16.திலாசுப்பேட்டை கவிக்கோவில் வீதி, 17.தட்டாஞ்சாவடி காமராஜ் நகர் வாணிதாசன் வீதி உள்ளிட்ட பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 123 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,420 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி:
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45,720 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,129 பேர் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் 3,37,607 பேரும், தமிழகத்தில் 1,86,492 பேரும், உத்தர பிரதேசத்தில் 55,588 பேரும், தெலுங்கானாவில் 49,259 பேரும், ராஜஸ்தானில் 32,334 பேரும், கர்நாடகாவில் 75,833 பேரும், குஜராத்தில் 51,399 பேரும், டெல்லியில் 1,26,323 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 123 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,420ஆக உயர்ந்துள்ளது.

புதுச்சேரி மாணவர்கள் சான்றிதழ்கள் பெற ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் அருண் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வருவாய் துறையின் மூலம் வழங்கப்படும் குடியிருப்பு, சாதி மற்றும் வருமானச் சான்றிதழ்களை ஆன்லைன் வழியாக வழங்கும் முறை 2019-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் சென்டாக் மூலம் மேற்படிப்பிற்கான மாணவர் சேர்க்கையின் போது மாணவர்கள் சான்றிதழ்களை விரைவில் பெற வருவாய்த்துறை தனிப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் நடப்பாண்டுக்கு கடந்த ஜனவரி முதலே அந்தந்த பள்ளிகளின் வழியாக மாணவர்களுக்கு தேவையான சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. அதன்படி பள்ளிகளின் மூலம் பெறப்பட்ட இணையவழி விண்ணப்பங்களை பரிசீலித்து சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
இருப்பினும் சான்றிதழ்களுக்காக மக்கள் தாசில்தார் அலுவலகங்களில் தினமும் வருகின்றனர். கொரோனா காலத்தில் கூட்டம் கூடுவது பாதுகாப்பானது அல்ல என்பதால் மக்கள் சான்றிதழ்களுக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பொதுமக்கள் இருக்கும் இடத்தில் இருந்தே கணினி அல்லது செல்போன் மூலமாகவோ, அருகில் இருக்கும் பொதுசேவை மையத்தின் மூலமாகவும் சான்றிதழ்களுக்கு https://edistrict.py.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் புதுச்சேரி தாலுகா 0413-2356314, உழவர்கரை தாலுகா 2254449, வில்லியனூர் தாலுகா 2666364, பாகூர் தாலுகா 2633453 ஆகிய எண்களை அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
சென்டாக் மாணவர் சேர்க்கைக்கு பழைய சாதி சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
சட்டசபையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி வெளியிட்ட ஒரு அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
2020-21-ம் ஆண்டு தொழில்முறை படிப்பு மற்றும் கலை அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளுக்கு கல்லூரிகளில் சேர இருக்கும் மாணவ-மாணவிகள் இணையதளம் மூலம் ஆன்லைனில் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இது சம்பந்தமான அறிவிப்பில் வருவாய் துறையிடம் இருந்து பெறப்பட்ட சாதி மற்றும் குடியிருப்பு சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது.
தற்போது கொரோனா தொற்று பரவியுள்ள சூழ்நிலையில் மாணவ-மாணவிகள் புதிதாக குடியிருப்பு மற்றும் சாதி சான்றிதழ் பெறுவதில் சிரமங்கள் இருக்கும். எனவே கடந்த காலங்களில் அதாவது 2018-ம் ஆண்டு அல்லது அதற்கு பிறகு பெறப்பட்ட குடியிருப்பு மற்றும் சாதி சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம் என சென்டாக் முடிவு செய்துள்ளது. எனினும் மாணவ-மாணவிகள் ஒரு மாத காலத்திற்குள் புதிய சான்றிதழ்கள் பெற்று அவற்றை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் மின்துறையை தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதுவை மின்துறையை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவெடுத்து அறிவிப்பு வெளியிட்டது. மின் வினியோகத்தை தனியார் மயமாக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என போராட்டக்குழுவின் நிர்வாகிகள் கேட்டுக் கொண்டனர்.
புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட் சில நாட்களுக்கு முன்பு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. கவர்னர் சட்டசபைக்கு வராத நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்ததில் எந்த விதிமீறலும் இல்லை என்று முதல் அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
இந்நிலையில், மின்சாரத்துறை அமைச்சர் கமலக்கண்ணன் வழியே சட்டசபையில் தீர்மானம் ஒன்று நிறைவேறியது. அதில் மின்துறையை தனியார் மயம் ஆக்கப்போவது இல்லை என தெரிவிக்கப்பட்டது. தீர்மானத்திற்கு, காங்கிரஸ் மற்றும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவளித்துள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.