search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்-அமைச்சர் நாராயணசாமி
    X
    முதல்-அமைச்சர் நாராயணசாமி

    கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதி

    புதுச்சேரியில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும் ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45,720 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,129 பேர் உயிரிழந்துள்ளனர்.  

    மகாராஷ்டிராவில் 3,37,607 பேரும், தமிழகத்தில் 1,86,492 பேரும், உத்தரபிரதேசத்தில் 55,588 பேரும், தெலுங்கானாவில் 49,259 பேரும், ராஜஸ்தானில் 32,334 பேரும், கர்நாடகாவில் 75,833 பேரும், குஜராத்தில் 51,399 பேரும், டெல்லியில் 1,26,323 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 123 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,420ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா தொற்று காரணமாக புதுச்சேரியில் இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில் புதுச்சேரியில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின்  அனைத்து குடும்பத்திற்கும் ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.   மேலும் கொரோனா நிவாரண நிதியாக பொதுநிவாரண நிதிக்கு ரூ.9.16 கோடி வந்துள்ளதாகவும் அம்மாநில முதல்வர்  நாராயணசாமி கூறியுள்ளார்.

    மேலும் கொரோனா தொற்றால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள இல்லங்கள் அனைத்துக்கும் 700 ரூபாய் மதிப்புள்ள அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும் என்றும் முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 
    Next Story
    ×