search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி
    X
    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி

    சென்டாக் மாணவர் சேர்க்கைக்கு பழைய சாதி சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம்- நாராயணசாமி அறிவிப்பு

    சென்டாக் மாணவர் சேர்க்கைக்கு பழைய சாதி சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    சட்டசபையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி வெளியிட்ட ஒரு அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    2020-21-ம் ஆண்டு தொழில்முறை படிப்பு மற்றும் கலை அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளுக்கு கல்லூரிகளில் சேர இருக்கும் மாணவ-மாணவிகள் இணையதளம் மூலம் ஆன்லைனில் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இது சம்பந்தமான அறிவிப்பில் வருவாய் துறையிடம் இருந்து பெறப்பட்ட சாதி மற்றும் குடியிருப்பு சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது.

    தற்போது கொரோனா தொற்று பரவியுள்ள சூழ்நிலையில் மாணவ-மாணவிகள் புதிதாக குடியிருப்பு மற்றும் சாதி சான்றிதழ் பெறுவதில் சிரமங்கள் இருக்கும். எனவே கடந்த காலங்களில் அதாவது 2018-ம் ஆண்டு அல்லது அதற்கு பிறகு பெறப்பட்ட குடியிருப்பு மற்றும் சாதி சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம் என சென்டாக் முடிவு செய்துள்ளது. எனினும் மாணவ-மாணவிகள் ஒரு மாத காலத்திற்குள் புதிய சான்றிதழ்கள் பெற்று அவற்றை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×