என் மலர்
புதுச்சேரி
பாகூர் அருகே குடிபோதை தகராறில் ரவுடிக்கு கத்தி வெட்டுப்பட்ட சம்பவம் தொடர்பாக இறைச்சி கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.
பாகூர்:
பாகூர் அருகே குருவிநத்தம் வாழப்பட்டு ரோடு வெங்கட்டா நகரை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 30). பிரபல ரவுடி. இவர் மீது அடிதடி, திருட்டு, மணல் கடத்தல் உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. அதே பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (37). இறைச்சி கடை வைத்துள்ளார். இவர்கள் இருவரும் நண்பர்கள். கடந்த சில நாட்களுக்கு முன் ரமேசுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஜெய்சங்கருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ரமேஷ் ஜெய்சங்கரை தாக்கினார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கார்த்திக், ரமேஷ் இருவரும் மது குடித்துவிட்டு குருவிநத்தம் பஸ் நிறுத்தத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது ரமேசிடம், ‘ஏன் ஜெய்சங்கரை தாக்கினாய்’ என்று கார்த்திக் கேட்டுள்ளார். இது குடிபோதையில் இருந்த அவர்களுக்குள் வாய்த்தகராறாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த ரமேஷ், இறைச்சி கடையில் பயன்படுத்தும் கத்தியால் கார்த்திக்கை வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார். கத்தி வெட்டில் காயமடைந்த கார்த்திக் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது குறித்து பாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய ரமேசை கைது செய்தனர்.
டீசல் மானியத்தை உயர்த்தி வழங்கக் கோரி காரைக்காலில் விசைப் படகு மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் குதித்தனர்.
காரைக்கால்:
காரைக்கால் மாவட்டத்தில் காரைக்கால்மேடு, கிளிஞ்சல்மேடு, கோட்டுச்சேரிமேடு உள்பட 11 மீனவ கிராமங்களை சேர்ந்த சுமார் 400 விசைப் படகுகள், காரைக்காலில் தங்கி மீன் பிடித்துவரும் வெளிமாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 50 விசைப்படகுகள் என 450 விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர்.
டீசல் விலை உயர்வு மற்றும் கொரோனாவால் வெளி மாநில மீன் வியாபாரிகள் காரைக்காலுக்கு வராமல் போனதால் ஏற்பட்ட வர்த்தக பாதிப்பால், மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்தனர்.
அதன்படி, காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த 11 மீனவ கிராம விசைப்படகு மீனவர்கள் நேற்று முதல் தொடர் வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்லாததால் விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த போராட்டம் குறித்து கிளிஞ்சல்மேடு மீனவ பஞ்சாயத்தார்கள் கூறியதாவது:-
சுமார் 3 மாதத்துக்குப்பின் கடந்த மாதம்தான் மீன் பிடிக்கச் சென்றோம். இந்த நேரத்தில் கேரளா போன்ற வெளி மாநிலங்களில் மார்க்கெட்டுகள் மூடப்பட்டதால், வியாபாரிகள் காரைக்கால் வருவதில்லை. அதனால், பிடித்த மீன்களை விற்க முடிவதில்லை. இதனால் பலத்த நஷ்டத்துக்குள்ளாகி உள்ளோம்.
இக்கட்டான சூழ்நிலையில் டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதற்கான மானியத்தை அரசு உயர்த்தி தரவேண்டும். மீன் வியாபாரிகளுக்கு தடையற்ற போக்குவரத்தை ஏற்படுத்தவேண்டும். அனைத்து மீனவர்களுக்கும் மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கவேண்டும். அதுவரை தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம். பைபர் படகு மீனவர்கள் வழக்கம் போல் தொழிலில் ஈடுபடுவார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 124 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,300 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி:
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,724 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த எண்ணிக்கை 12 லட்சத்தை நெருங்குகிறது.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 3,27,031 பேரும், தமிழகத்தில் 1,80,643 பேரும், டெல்லியில் 1,25,096 பேரும், உத்தர பிரதேசத்தில் 53,288 பேரும், கர்நாடகாவில் 71,069 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 124 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,300ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாக கோகுலகிருஷ்ணன் எம்.பி. கூறினார்.
காரைக்கால்:
காரைக்கால் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தொற்று தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகள் குறித்து கோகுலகிருஷ்ணன் எம்.பி. நேற்று மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், கலெக்டர் அர்ஜூன் சர்மா, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்குமார் பன்வால், துணை கலெக்டர் ஆதர்ஷ், நலவழித்துறை துணை இயக்குனர் மோகன்ராஜ் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தின் முடிவில் கோகுலகிருஷ்ணன் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
காரைக்கால் மாவட்டத்தில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் திருப்தி அளிக்கிறது. மாவட்டத்தில் இதுவரை 135 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். 83 பேர் குணடைந்து வீடு திரும்பியுள்ளனர். அந்த வகையில் குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக, மாவட்ட நிர்வாகத்தையும், நலவழித்துறை, போலீசார் மற்றும் அரசு துறை அதிகாரிகளையும் பாராட்டுகிறேன். காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வெண்டிலேட்டர்கள், ஆம்புலன்ஸ் வாங்க நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையொட்டி கல்லூரிகளில் கொரோனா சிகிச்சை மையமாக்க திட்டமிட்டுள்ளோம் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி:
சுகாதாரத்துறை அதிகாரிகளை அவமரியாதை செய்த கவர்னர் கிரண்பேடியை கண்டித்து சட்டசபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினார்கள். இந்த விவாதத்தின் போது முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
கவர்னரின் செயல்பாடு தொடர்பாக டாக்டர்கள் சங்கத்தினரும் என்னிடம் புகார் அளித்துள்ளனர். கவர்னரின் இந்த செயல்பாடு துரதிஷ்டவசமானது. அவரது நடவடிக்கைகள் எனக்கு வருத்தமளிக்கிறது. கவர்னரின் நடவடிக்கை குறித்து பலமுறை அவருக்கு கடிதம் எழுதியுள்ளேன். விதிமுறைகளை மீறி அதிகாரிகள் செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் யாரையும் தூக்கிலிட முடியாது. டாக்டர்கள் தொடர்ந்து களப் பணியாற்றி வருகிறார்கள். இந்த நேரத்தில் கவர்னர் அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
எம்.எல்.ஏ.க்களின் கோபம் மற்றும் எண்ணங்களை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. கவர்னர் எல்லை மீறி செயல்படுகிறார். அவரது செயல்பாட்டுக்காக நான் அரசு சார்பில் எனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். கவர்னர் அதிகாரிகளை திட்டுவதை தவிர்ப்பது தான் பெருந்தன்மையான செயலாகும்.
இந்த சூழ்நிலையில் மருத்துவப் பணியாளர்களை குறைகூற நமக்கு உரிமை இல்லை. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்காக நாம் கல்லூரிகள் போன்றவற்றை சிகிச்சை அளிக்கும் மையங்களாக மாற்றும் நிலையில் உள்ளோம். தேவைப்பட்டால் பல்கலைக்கழக வளாகத்தை பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற உபகரணங்கள் வாங்குவதிலும் முட்டுக்கட்டை போடுகிறார். எந்த தடை வந்தாலும் நாங்கள் ஒருங்கிணைந்து மக்களுக்காக நடவடிக்கை எடுப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து சபாநாயகர் சிவக்கொழுந்து பேசியதாவது:-
மருத்துவ அதிகாரிகள் மனது புண்படும் வார்த்தைகளை கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார். இந்த காலகட்டத்தில் நாம் டாக்டர்களை ஊக்குவிக்க வேண்டும். அவர்களுக்கு வருத்தம் ஏற்படுத்தக்கூடாது. எனவே கவர்னர் கிரண்பேடி தான் கூறிய வார்த்தைகளை திரும்ப பெற்று வருத்தம் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மின்துறை தனியார்மயமாக்கும் மத்திய அரசு முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி சட்டசபையில் நாளை தீர்மானம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது
புதுவை மின்துறையை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவெடுத்து அறிவிப்பு வெளியிட்டது. இதனை கண்டித்து புதுவை மாநில மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
புதுவையில் மின் வினியோகத்தை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை பொறியாளர்கள், ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மின் வினியோகத்தை தனியார் மயமாக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என போராட்டக்குழுவின் நிர்வாகிகள் கேட்டுக் கொண்டனர்.
இந்நிலையில் புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்கும் அறிவிப்பை திரும்பப் பெறக்கோரி நாளை தீர்மானம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுத்தொடர்பாக மத்திய அரசு மின்துறையை தனியார் மயமாக்கும் அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும் என புதுச்சேரி பேரவையில் நாளை தீர்மானம் கொண்டுவரப்படுகிறது.

மருத்துவர்களைப் பற்றி நான் தவறாக விமர்சனம் செய்யவில்லை என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் கொரோனா தொற்று தொடர்ந்து சில தினங்களாக அதிகரித்து வரும் நிலையில் கடந்த சனிக்கிழமையன்று, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கொரோனா தடுப்பு திட்டங்கள் குறித்து துணைநிலை ஆளுநர் கேள்வி எழுப்பினார்.
அப்போது பேசிய அவர் கொரோனா தடுப்பு பணியில், பொதுவான வழிமுறைகள், என்று எதுவுமே இல்லையா? என்று கேள்வி எழுப்பினார். கொரோனா தடுப்பு பணியில் நீங்கள் தோல்வியடைந்துவிட்டீர்கள், வழிமுறையை முறையாகப் பின்பற்றவில்லை. இதனால், உங்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்ததாக தகவல் வெளியானது. அதை தொடர்ந்து பேசிய அவர் கொரோனா தொற்று உயிரிழப்பு குறித்து அறிக்கைகளை எனக்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சுகாதாரத்துறை அலுவலகத்தில் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளைத் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடுமையாகப் பேசியதாகக் கூறப்படும் விவகாரத்தில், கிரண் பேடிக்கு எதிராக மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் புதுச்சேரியில் கவர்னர் எதிர்ப்பை மீறி 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்தார். அப்போது பேசிய சட்டப்பேரவையில் சபாநாயகர் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தவறாக பேசியது தொடர்பாக அவர் வருத்தம் தெரிவித்து, அவர் கூறிய வார்த்தைகளைத் திரும்பப்பெற வேண்டும் என சட்டப்பேரவையில் சபாநாயகர் வலியுறுத்தினார்.
இந்நிலையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மருத்துவர்களைப் பற்றி நான் தவறாக விமர்சனம் செய்யவில்லை என தெரிவித்துள்ளார். மக்களை திசைதிருப்ப சில எம்.எல்.ஏ.க்கள் என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆதிதிராவிடர்களுக்கு திருமண நிதி உதவியாக ரூ.75 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:-
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இந்த ஆண்டு சிறப்பு கூறு திட்ட நிதியாக ரூ.348 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த மக்களின் சமூக வளர்ச்சியை உறுதி செய்யும் பொருட்டு டாக்டர் அம்பேத்கர் சமூக நீதிப் பாதுகாப்பு திட்டம் என்ற புதிய திட்டத்தை இந்த நிதியாண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்படி பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் வகுப்பினருக்கு வீடு கட்ட தற்போது மத்திய அரசின் மானியம் ஒரு லட்சத்து 50 ஆயிரத்து சேர்த்து ரூ.4 லட்சம் வழங்கப்படுகிறது. இது நடப்பாண்டில் மேலும் ஒரு லட்சம் உயர்த்தப்பட்டு ரூ.5 லட்சமாக வழங்கப்படும்.
தனியார் பள்ளிகளில் படிக்கும் ஆதிதிராவிட மாணவர்களுக்கு இலவச டேப்லெட் பள்ளிக்கல்வித்துறையில் புதிய திட்டத்தையொட்டி வழங்கப்படும். ஆதிதிராவிட மகளிருக்கு கால்நடை வளர்ப்பு, விவசாய தொழில், மீன் வளர்ப்பு பிரிவு மற்றும் இதர தொழில்களில் வாங்கும் கடனுக்கு 3 சதவீத வட்டி அரசின் மானியமாக வழங்கப்படும். தற்போது ஆதிதிராவிடர்களுக்கு திருமண நிதி உதவியாக ரூ.75 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இது உயர்த்தப்பட்டு ரூ.ஒரு லட்சமாக வழங்கப்படும்.
பிற்படுத்தப்பட்ட கிராமப்புற மாணவர்களுக்கு உண்டு உறைவிட பள்ளி அமைக்க ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. முதியோர் ஓய்வூதிய திட்டங்களுக்கு மட்டும் வருடத்துக்கு சுமார் ரூ.320 கோடி செலவிடப்படுகிறது. இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் முதியவர்கள் பயனடைகிறார்கள். இந்த நிதியாண்டில் மேலும் 10,000 பயனாளிகளுக்கு முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை வழங்கப்படும்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையினால் ஊக்குவிக்கப்படும் சுய உதவி குழுவில் உள்ள ஒவ்வொரு பெண்களுக்கும் ரூ.10 ஆயிரம் வீதம் குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்பட்டு வருகிறது. கிராமப்புற ஏழை மக்களின் இடர் களைவதற்காக 3 சதவீத வட்டி மானியம் வழங்கப்படும். பெண்கள் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிகள் மூலம் தலா ரூ.50ஆயிரம் சிறு தொழில் தொடங்குவதற்காக வட்டி மானியத்துடன் கடன் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் சம்பளம், செலவு, ஓய்வூதியம் போன்றவை அடுத்த மாதம் (ஆகஸ்டு) முதல் பாதிக்கப்படும் என கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. காலை 9.30 மணிக்கு கவர்னர் உரையும், மதியம் 12.05 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே கடந்த 18-ந் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் கவர்னர் உரைக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு கவர்னர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் கவர்னர் கிரண்பேடி உரையை படிக்க கூடுதல் அவகாசம் கேட்டு தலைமை செயலாளர் மூலமாக அரசுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து காங்கிரஸ், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆலோசித்து திட்டமிட்டபடி பட்ஜெட்டை நடத்துவது என்று முடிவு செய்தனர்.
இதற்கிடையே கவர்னர் கிரண்பேடி சட்டசபை கூட்டத்தை மற்றொரு நாளுக்கு தள்ளி வைக்கும்படி கேட்டுக்கொண்டார். அதாவது, முதல்-அமைச்சருக்கு அனுப்பிய கடிதத்தில் பட்ஜெட் தொடர்பான கோப்பு தனக்கு வரவில்லை. எனவே கவர்னர் உரை, பட்ஜெட் தாக்கல் மற்றொரு நாளில் வைக்கும்படி குறிப்பிட்டிருந்ததாகவும் அந்த கடிதத்தை முதல்-அமைச்சர் அலுவலக ஊழியர்கள் பெற மறுத்து விட்டதாகவும் இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு புகார் தெரிவித்து இருப்பதாகவும் சமூக வலைதளத்தில் கவர்னர் கிரண்பேடி ஒரு பதிவை வெளியிட்டார்.
இதன் எதிரொலியாக நேற்று காலை சட்டசபைக்கு வராமல் பட்ஜெட் உரையாற்றுவதை கவர்னர் கிரண்பேடி புறக்கணித்தார். இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் நேற்று புதிதாக ஒரு கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
சட்ட விதிகளின் படி பட்ஜெட் கோப்புகள் என்னிடம் அனுப்பப்படவில்லை. புதுவை மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்கள் சம்பளம், செலவு, ஓய்வூதியம் போன்றவை அடுத்த மாதம் (ஆகஸ்டு) முதல் பாதிக்கப்படும். இந்த குற்றம் கவர்னர் மீதோ, இந்திய அரசு மீதோ சுமத்தப்படக் கூடாது. கவர்னர் தாமதப்படுத்தியதாக முதல்-அமைச்சரோ, அமைச்சர்களோ குற்றம் சாட்டினால் அது தவறானது. சட்ட விதிகளின் கீழ் ஜனாதிபதியிடம் ஒப்புதல் பெறப்பட்ட பட்ஜெட் கோப்பை எனக்கு அனுப்பவில்லை. விதிகள், சட்டத்தை நான் எழுதவில்லை. அதே நேரத்தில் யூனியன் பிரதேச சட்ட விதிகளை நாங்கள் அறிந்துள்ளோம். தாமதம் கவர்னரிடம் இல்லை. உண்மையற்ற குற்றச்சாட்டுகளை மக்களிடம் யாரும் பரப்பக் கூடாது.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 91 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,179 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி:
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,148 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 587 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 3,18,695 பேரும், தமிழகத்தில் 1,75,678 பேரும், டெல்லியில் 1,23,747 பேரும், கர்நாடகாவில் 67,420 பேரும், உத்தர பிரதேசத்தில் 51,160 பேரும், மேற்கு வங்காளத்தில் 44,769 பேரும், குஜராத்தில் 49,353 பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 91 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,179ஆக உயர்ந்துள்ளது.

முழு ஊரடங்கு உத்தரவால் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டன. இருப்பினும் புதுச்சேரிக்கு நடந்தே சென்று மதுபாட்டில்களை வாங்கிய கடலூர் மதுபிரியர்கள் தென்பெண்ணையாறு, கரை பகுதியில் அமர்ந்து குடித்தனர்.
கடலூர்:
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் வருகிற 31-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நிபந்தனைகளுடன் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு மதுவிற்பனை நடைபெற்று வருகிறது. கடைகள் முன்பு சானிடைசர் வைக்க வேண்டும். முக கவசம் அணிந்து வந்தால் தான் மதுபாட்டில்களை கொடுக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதை கடைபிடித்து ஊழியர்கள் மதுபிரியர்களுக்கு மதுபாட்டில்களை விற்பனை செய்து வருகின்றனர். இதற்கு முன்பு குறிப்பிட்ட நேரம் வரை மட்டுமே கடை திறந்து இருக்கும் என்பதால் மதுபிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். தற்போது இரவு 8 மணி வரை கடை திறக்கப்பட்டு மது விற்பனை நடைபெற்று வருகிறது.
அதேவேளையில் கடலூரை ஒட்டியுள்ள புதுச்சேரி மாநிலத்தில் மதுக்கடைகள் திறக்காமல் இருந்த போது, அங்குள்ள மதுபிரியர்கள் கடலூரில் வந்து மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். பின்னர் அங்கு மதியம் 2 மணி வரை மட்டும் கடைகள் திறக்கப்பட்டு மது, சாராயம் விற்பனை நடைபெற்றது. விலை குறைவு என்ற நிலையில் தற்போது கொரோனா வரி விதிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஒரே மாதிரியாக விலை அதிகமாக இருப்பதால் கடலூரில் இருந்து மதுபிரியர்கள் புதுச்சேரிக்கு செல்வதை குறைத்து விட்டனர். தற்போது அங்கும் இரவு 8 மணி வரை மதுக்கடைகள் இயங்கி வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் ஜூலை மாதம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் புதுச்சேரியில் முழு ஊரடங்கு கிடையாது. இதனால் கடலூரில் உள்ள மதுபிரியர்கள் புதுச்சேரிக்கு சென்று மதுபாட்டில்களை வாங்கினர். ஆனால் வாகனங்களில் செல்ல போலீசார் கெடுபிடி விதித்ததால் பெரும்பாலான மதுபிரியர்கள் கடலூர் தென்பெண்ணையாற்றின் குறுக்கே நடந்தே புதுச்சேரிக்கு சென்று மதுபாட்டில்கள், சாராயத்தை வாங்கி குடித்தனர். சிலர் சைக்கிளில் சென்று மதுபாட்டில்களை வாங்கி குடித்தனர். பெரும்பாலான மதுபிரியர்கள் தென்பெண்ணையாற்றிலும், அதன் கரையோரத்திலும் அமர்ந்து மது, சாராயம் குடித்ததை பார்க்க முடிந்தது. தென்பெண்ணை ஆறு மதுபார் போன்று இருந்தது. புதுச்சேரிக்கு நடந்தும், சைக்கிளில் சென்றவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். அவர்களை துரத்தி விட்டும் அவர்கள் யாரும் கேட்கவில்லை. சிலர் புதுச்சேரிக்கு தான் செல்கிறோம் என்று போலீசாரிடம் வாக்குவாதமும் செய்தனர்.
கருணாநிதி பெயரில் புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் நாராயணசாமி அறிவித்தார்.
புதுச்சேரி:
புதுச்சேரி சட்டசபையில் இன்று முதல்வர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய முதல்வர் நாராயணசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில்
புதுச்சேரியில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம், இலவச குடிநீர்.
கருணாநிதி பெயரில் புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம். நவம்பர் 15-ந்தேதி முதல் காலை உணவாக இட்லி, கிச்சடி, பொங்கல் வழங்கப்படும்.
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள் அனைவருக்கும் கல்லூரி கட்டணம் ரத்து. அனைத்து கல்லூரி கட்டணத்தையும் ரத்து செய்வதுடன் கல்லூரியில் சேர இலவசமாக விண்ணப்பம் வழங்கப்படும்.
ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்துக்காக ரேசன் கடைகள் புத்தாக்கம் செய்யப்படும்.
இவ்வாறு நாராயணசாமி அறிவிப்புகளை வெளியிட்டார்.