என் மலர்
நீங்கள் தேடியது "Pondicherry Budget"
புதுவையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம்.
புதுவைக்கு மத்திய அரசு குறிப்பிட்ட அளவுக்கு பணம் ஒதுக்கும். இந்த பணம் ஒதுக்குவதில் கால தாமதம் ஆவதால் கடந்த 7 ஆண்டுகளாக மார்ச் மாதம் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை.
இந்த ஆண்டு மார்ச் மாதம் ரூ.2,466 கோடிக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இப்போது மத்திய அரசு உரிய நிதி ஒதுக்கி முழு பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான அனுமதி வழங்கி உள்ளது.
இதையடுத்து இன்று புதுவை சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதித்துறை பொறுப்பை வகிக்கும் முதல்-அமைச்சர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்து உரை நிகழ்த்தினார். மொத்தம் ரூ.7,530 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது பட்ஜெட் தாக்கலுக்கு என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் முன்னாள் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினார்கள்.

கூட்டத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர். அவர்கள் ஏற்கனவே பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை.எனவே, இப்போது பட்ஜெட் தாக்கல் செய்வதால் எந்த பயனும் இல்லை என்று கூறி கோஷமிட்டனர்.
அரசுக்கு எதிராக எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய பேனரை கையில் ஏந்தி இருந்தனர். திடீரென அவர்கள் சபாநாயகர் இருக்கையை நோக்கி வந்தனர். அவர்களை சபை காவலர்கள் முன்னேறி வர விடாமல் தடுத்தனர்.
இதனால் அங்கிருந்தபடி தொடர்ந்து கோஷமிட்ட அவர்கள் சிறிது நேர அமளிக்கு பிறகு சட்டசபையில் இருந்து வெளி நடப்பு செய்தார்கள்.
வெளிவே வந்த அவர்கள் சட்டசபை வாசல் படிக்கட்டில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி பட்ஜெட் உரையை வாசித்தார். அப்போது புதுவையின் நிதி நிலைமை குறித்து முழு விவரங்கள் அடங்கிய குறிப்புகளையும் பட்ஜெட் உரையோடு வெளியிட்டார். #PondicherryBudget #PondicherryAssembly #CMNarayanasamy
புதுச்சேரி:
புதுவை சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 4-ந் தேதி கூடியது. அன்று புதுவை அரசின் திட்டக்குழு கூடி 2018-2019-ம் ஆண்டுக்கான புதுவை மாநிலத்துக்கான ரூ.7530 கோடிக்கான திட்ட வரையரையை தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது.
ஆனால், மத்திய அரசிடம் இருந்து இதற்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனால் பட்ஜெட் தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து கடந்த 5-ந் தேதி சட்டசபை கூட்டம் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.

இதன் பிறகு முதல்- அமைச்சர் நாராயணசாமி டெல்லி சென்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினார். இதையடுத்து கடந்த 19-ந் தேதி மத்திய அரசு புதுவை பட்ஜெட்டுக்கு அனுமதி அளித்தது.
இதையடுத்து புதுவை சட்டசபை அடுத்த மாதம் (ஜூலை) 2-ந் தேதி மீண்டும் கூடுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
புதுவை சட்டசபை செயலாளர் வின்சென்ட் ராயர் சட்டசபை 2-ந் தேதி கூடுவதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
அன்றைய தினம் நிதி பொறுப்பு வகிக்கும் முதல்- அமைச்சர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். தொடர்ந்து பட்ஜெட்கூட்டத் தொடர் ஜூலை மாதம் முழுவதும் நடைபெறும் என்று தெரிகிறது. #PondicherryBudget #PondicherryAssembly






