என் மலர்
புதுச்சேரி
கொரோனா காலத்தில் பட்டினிச்சாவு ஏற்பட்டால் கவர்னர் தான் காரணம் என்று அமைச்சர் கந்தசாமி பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்தார்.
பாகூர்:
கிருமாம்பாக்கம் அரசு ஊழியர்கள் நல சங்கம் சார்பாக ஆங்கில திறனறிவு பயிற்சி தொடக்க விழா மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது. விழாவுக்கு அரசு ஊழியர்கள் நல சங்க தலைவர் ஹரிதாஸ் தலைமை தாங்கினார். செயலாளர் செல்வம் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கந்தசாமி கலந்துகொண்டு திறனறிவு பயிற்சி புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கினார். பின்னர் அங்குள்ள வளாகத்தில் மரக்கன்று நட்டார். நிகழ்ச்சியில் கலை பண்பாட்டுத் துறை உதவி நூலக அதிகாரிகள் ஜெஸ்லின், கலியபெருமாள், கார்த்திகேயன், பழனிவேலு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் அமைச்சர் கந்தசாமி பேசியதாவது:-
முதல்-அமைச்சர், அமைச்சர்கள் பல்வேறு திட்டங்களை உருவாக்கலாம். ஆனால், அந்த திட்டங்களை கொண்டு செல்வதற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி முதல் ஊழியர்கள் வரை பணி செய்தல் தான் செயல்படுத்த முடியும். கொரோனா தொற்றின் பாதிப்பை விட வறுமைதான் மக்களை அதிகமாக பாதிக்கிறது.
மத்திய அரசு கொடுக்கின்ற அரிசியும், மாநில அரசு கொடுக்கின்ற நிதியும் மக்களுக்கு போதுமானதாக இருக்காது. மாநில அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக பல்வேறு சோதனைகளை சந்தித்து வருகிறது என்பதை அனைத்து மக்களும் புரிந்து கொண்டுள்ளனர். தற்போது கொரோனா ஊரடங்கு காலத்தில் புதுச்சேரி மாநிலம் தவித்து வரும் நிலையில் மத்திய அரசு ஒரு ரூபாய் கூட நிதி தரவில்லை.
பிரதமர் மோடி ஒரே தேசம், ஒரே ரேஷன் கார்டு திட்டம் என்று அறிவித்துள்ளார். ஆனால் நமது மாநிலத்தில் ரேஷன் கடையே இல்லாத நிலையை ஏற்படுத்தி ஊழியர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைத்துவிட்டு கவர்னர் கிரண்பேடி பணமாக வழங்க முரண்பட்ட உத்தரவிட்டுள்ளார். இதனை மக்கள் தான் சிந்திக்கவேண்டும். இருக்கின்ற 6 மாதத்தில் திட்டங்களை செயல்படுத்த முடியுமா என்று தெரியவில்லை.
இந்த கொரோனா காலத்தில் பட்டினிச் சாவு ஏற்பட்டால், அதற்கு கவர்னர் தான் காரணம் என்பதை நான் தெளிவாக கூறமுடியும். அலுவலகத்திற்கு சென்று வேலை செய்யவில்லை என்று அதிகாரிகளை கேள்வி கேட்கும் கவர்னர், 10 ஆயிரம் அரசு ஊழியர்கள் சம்பளம் இல்லாமல் இருக்கிறார்களே, அவர்களுக்கு நிதி வாங்கிக்கொடுத்தார்களா? மத்திய அரசிட மிருந்து நிதி பெற்று தொழிற்சாலைகளை நடத்துவதற்கு உதவி செய்தார்களா? சனிக்கிழமை தோறும் சைக்கிள் வந்தார்களே இப்போது எங்கே போனார்கள்? மக்களை எதற்காக நீங்கள் ஏமாற்றிக்கொண்டு இருக்கிறீர்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
அரசு ஊழியர் நல சங்க அன்புமணி, சந்திரபாலன், ஆனந்தவேலு, அஞ்சாப்புலி மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் சங்க பொருளாளர் விநாயகம் நன்றி கூறினார்.

புதுச்சேரி சட்டசபையில் கவர்னர் எதிர்ப்பை மீறி 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்தார்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் இன்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் சிவக்கொழுந்து தலைமையில் சட்டசபை தொடங்கியது. சுமார் 15 நிமிடங்கள் கவர்னர் கிரண்பேடிக்காக காத்திருந்தனர். அதுவரை அவர் வராததால் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது. சட்டசபையில் கவர்னர் நிகழ்ந்த வேண்டிய உரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், மதியம் 12.05 மணிக்கு முதலமைச்சர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்று கூறிய சிவக்கொழுந்து சட்டசபையை ஒத்திவைத்தார்.
இதையடுத்து கவர்னர் எதிர்ப்பை மீறி 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்தார்.
பட்ஜெட் உரையை எதிர்த்து அதிமுக, என்.ஆர்.காங்., பா.ஜ.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

புதுவையில் மேலும் 22 இடங்களை கட்டுப்பாட்டு மண்டலமாக மாவட்ட கலெக்டர் அருண் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
11.லாஸ்பேட்டை அரசு குடியிருப்பு பிளாக் 23-9, 12.மூலக்குளம் ஜெ.ஜெ.நகர் குறுக்குத்தெரு, 13.மூலக்குளம் ஜெ.ஜெ.நகர் 11-வது குறுக்குத்தெரு, 14.சாரம் காமராஜர் சாலை, 15.சாரம் வெங்கடேஸ்வரா நகர் பாண்டியன் வீதி, 16.முத்தியால்பேட்டை எழில்வீதி, 17.சாரம் சின்னையன்பேட்டை ராகவேந்திரா வீதி, 18.முத்தியால்பேட்டை எழில்நகர், 19.சாரம் ரெயின்போ நகர் 2-வது குறுக்குத்தெரு, 20லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் 11-வது குறுக்குத்தெரு, 21.லாஸ்பேட்டை சலவையாளர் நகர் 7-வது குறுக்குத்தெரு, 22.பழைய சாரம் கிழக்கு வீதி ஆகியவை கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்கள் வசித்து வந்த பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது. அதன்படி 1.உழவர்கரை பாலாஜி நகர் வைசாலி அலென்யு 3-வது குறுக்குத்தெரு சி4 3-ம் தளம், 2.கதிர்காமம் காமராஜ் சாலை, 3.தட்டாஞ்சாவடி கங்கையம்மன் கோவில் வீதி, 4.கோரிமேடு குருநகர் முதன்மை சாலை, 5.தட்டாஞ்சாவடி காமராஜர் நகர் கென்னடி வீதி, 6.தட்டாஞ்சாவடி வி.பி.சிங் நகர் திரு.வி.க. வீதி, 7.முத்திரையர்பாளையம் சேரன் வீதி, 8.தர்மாபுரி செட்டிவீதி, 9.கருவடிக்குப்பம் மகாவீர் நகர் முதல் முதன்மை சாலை, 10. கருவடிக்குப்பம் கங்கையம்மன் கோவில் வீதி சூர்யா அப்பார்ட்மென்ட்,
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் ஒரு பகுதியை கொரோனா மருத்துவமனை ஆக்குவோம் என்று அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் கூறினார்.
புதுச்சேரி:
புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
கொரோனா பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தினமும் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறேன். கவர்னர் கிரண்பேடி சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகம் சென்று அங்கு பணியில் இருந்த டாக்டர்களிடம், தன்னை ஒரு போலீஸ் அதிகாரியாகவும், மருத்துவர்களை குற்றவாளியாகவும் நினைத்துக் கொண்டு செயல்பட்டுள்ளார். அளித்த பதிலை ஏற்காமல் பல்வேறு குறுக்கு கேள்விகளை எழுப்பியுள்ளார். இது சுகாதாரத்துறை அதிகாரிகளிடையே மனஉளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. அதிகாரிகளை தனது உத்தரவுக்கு அடிபணியும்படி கிரண்பேடி கட்டாயப்படுத்துகிறார். அவரது இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் விடுப்பு எடுக்கலாமா அல்லது போராட்டத்தில் ஈடுபடலாமா? என்ற மன நிலைக்கு வந்துள்ளனர். கீழ் நிலையில் உள்ள பணியாளர்கள் சொல்வதை கேட்டுக்கொண்டு அதிகாரிகளை படாத பாடுபடுத்துவது சரியானது இல்லை.
புதுச்சேரி மாநிலம் பல்வேறு வகையில் துன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் கவர்னருக்கு உள்ளது. ஆட்சியை கலைக்க நினைத்து பல்வேறு முயற்சிகளை செய்தார். பட்ஜெட்டை தக்கல் செய்யவிடாமல் தடுத்துப் பார்த்தார். தற்போது, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை கூட காலத்தோடு செய்ய முடியாத நிலை உள்ளது.
கவர்னர் மாளிகையில் 100 நாட்கள் தூங்கி விட்டு திடீரென வந்து ஆய்வு நடத்துகிறார். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூட அதிகாரிகள் வேலை செய்கின்றனர். ஆனால் அவர்களது பணியை அங்கீகரிப்பதற்கு பதிலாக மோசமாக பேசக்கூடாது. கொரோனா தடுப்பு பணியில் கவர்னர் ஈடுபடத் தொடங்கிய பின்னர் தான் புதுவையில் பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மக்கள் தான் எங்களுக்கு எஜமானர்கள். நீங்கள் (கவர்னர்) அல்ல.
உண்மையிலேயே மக்கள் மீது அக்கறை இருந்தால் பெரிய கவர்னர் மாளிகையில் இருப்பதற்கு பதிலாக சிறிய இடத்தில் கவர்னர் இருக்கலாம். தற்காலிகமாக கவர்னர் மாளிகையின் அடித்தளத்தை கொரோனா மருத்துவமனையாக மாற்றலாம். உங்களது மிரட்டல்களுக்கு நான் அஞ்சமாட்டேன். புதுச்சேரியின் நலன் தான் முக்கியம். தேவைப்பட்டால் சட்டசபை வளாகத்தில் ஒரு பகுதியை கூட கொரோனா மருத்துவமனையாக மாற்றுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

புதுச்சேரியில் கொரோனா தடுப்பு பணியை தீவிரப்படுத்த கவர்னர் கிரண்பேடி அதிகாரிகளுடன் நேற்று சுமார் 4 மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலத்தில் நேற்று வரை கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை நெருங்கியது. சாவு எண்ணிக்கை 28 ஆனது. கொரோனா தொற்று பரவிய காலத்தில் கவர்னர் கிரண்பேடி, கவர்னர் மாளிகையில் இருந்தபடியே காணொலி மற்றும் செல்போன் மூலமாக மருத்துவம், காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் தினசரி கூட்டம் நடத்தி தடுப்பு பணிகளை ஆய்வு செய்து வந்தார்.
ஆனால் கடந்த சில வாரங்களாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மார்க்கெட், பஜார்களுக்கு சென்று காரில் இருந்தபடியே கவர்னர் கிரண்பேடி ஆய்வு செய்தார். நேற்று முன்தினம் சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.
நேற்று மதியம் 3.30 மணிக்கு கோரிமேடு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று அதிகாரிகளுடன் கவர்னர் கிரண்பேடி ஆலோசனை நடத்தினார். இதில் மாவட்ட கலெக்டர் அருண், போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா, சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார், சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள் பிரதிக்ஷா கோத்ரா, ராகுல் அல்வால் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டம் இரவு 7.30 மணி வரை 4 மணிநேரம் நடந்தது. இதில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் கிரண்பேடி கவர்னர் மாளிகைக்கு திரும்பினார்.
கூட்டத்திற்கு பின்பு கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் வெளியிட்டு ஒரு பதிவில் கூறியிருப்பதாவது:-
அனைத்து அம்சங்களுடன் விரிவான தகவல் மையம் அமைப்பதற்காக போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் கூட்டம் நடந்தது. சுகாதார மற்றும் காவல்துறை இடையே முழு ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தினசரி காலை 9 மணிக்கு சுகாதாரத்துறை இயக்குனர் மின்னஞ்சல் மூலம் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புவார். இந்த ஒருங்கிணைப்பு சூழ்நிலையால் வேகமான தரமான செயல்பாடுகளை மேம்படுத்த முடியும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 93 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,092 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி:
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 40,425 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 681 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 3,10,455 பேரும், தமிழகத்தில் 1,70,693 பேரும், டெல்லியில் 1,22,793 பேரும், கர்நாடகாவில் 63,772 பேரும், உத்தர பிரதேசத்தில் 49,247 பேரும், மேற்கு வங்காளத்தில் 42,487 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 93 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,092ஆக உயர்ந்துள்ளது.

புதுச்சேரியில் முதல் முறையாக துணைநிலை கவர்னர் கிரண்பேடி பங்கேற்காமல் சட்டசபை கூட்டம் தொடங்கியது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்து அதன்பிறகு முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்த ஆண்டும் கடந்த மார்ச் மாதம் (ஏப்ரல், மே, ஜூன்) 3 மாதங்களுக்கான அரசின் செலவினங்களுக்காக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கான அவகாசம் நிறைவடைந்த நிலையில் கடந்த ஜூன் 30--ந்தேதிக்குள் முழு பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெற்று இருக்க வேண்டும். இந்தநிலையில் ரூ.9,500 கோடிக்கு முழுபட்ஜெட் தயாரித்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த 3 நாட்களுக்கு முன் புதுவை மாநில பட்ஜெட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.
இதையடுத்து சட்ட சபையை கூட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி இன்று (திங்கட்கிழமை) பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. காலை 9.30 மணிக்கு கூட்டம் தொடங்கியதும் கவர்னர் உரையாற்றுவார். அதற்கு அடுத்து நிதி பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கிடையே கவர்னர் உரை தயாரிக்கப்பட்டு ஒப்புதலுக்காக கவர்னர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தநிலையில் கவர்னர் கிரண்பேடி அந்த உரையை படித்துப் பார்க்க கூடுதல் நேர அவகாசம் வேண்டும் என்று தலைமைச் செயலாளர் மூலம் அரசுக்கு திடீரென தகவல் அனுப்பியதாக தெரிகிறது.
இதையொட்டி முதல்- அமைச்சர் நாராயணசாமி தலைமையில் திடீர் ஆலோசனை கூட்டம் நேற்று இரவு நடந்தது. கூட்டத்தில் அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், ஷாஜகான், கந்தசாமி, கமலக்கண்ணன், வைத்திலிங்கம் எம்.பி., துணை சபாநாயகர் எம்.என்.ஆர்.பாலன் எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், அனந்தராமன், ஜெயமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் இன்று காலைக்குள் உரையை படித்துவிட்டு சட்டசபை கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்ற வேண்டும் என்று கவர்னருக்கு தலைமைச் செயலாளர் மூலம் கடிதம் அனுப்பியதாக தெரிகிறது.
கவர்னர் கிரண்பேடி சட்டசபைக்கு வந்து உரையாற்றவில்லை என்றால் சபையை ஒத்தி வைத்துவிட்டு ஏற்கனவே திட்டமிட்டபடி பகல் 12.05 மணி அளவில் மீண்டும் சட்டசபையை கூட்டி 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வது என முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டது.
அதன்படி இன்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் சிவக்கொழுந்து தலைமையில் சட்டசபை தொடங்கியது. சுமார் 15 நிமிடங்கள் கவர்னர் கிரண்பேடிக்காக காத்திருந்தனர். அதுவரை அவர் வராததால் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது. சட்டசபையில் கவர்னர் நிகழ்ந்த வேண்டிய உரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், மதியம் 12.05 மணிக்கு முதலமைச்சர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்று கூறிய சிவக்கொழுந்து சட்டசபையை ஒத்திவைத்தார்.
புதுச்சேரியில் நாளை நடைபெறவுள்ள சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆளுநர் உரை இடம்பெறாது எனத் தகவல் வெளியாகியுள்ளது
புதுச்சேரி:
அரசு செலவினங்களுக்காக கடந்த மார்ச் மாதம் 3 மாதங்களுக்கான (ஏப்ரல், மே, ஜூன்) இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கான அனுமதி காலம் முடிந்ததையடுத்து முழு பட்ஜெட் தயாரித்து மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. நீண்ட இழுபறிக்குப் பின் பட்ஜெட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை (திங்கட்கிழமை) காலை 9.30 மணியளவில் கவர்னர் உரையுடன் தொடங்க உள்ளது. முதல்-அமைச்சர் நாராயணசாமி ரூ.9 ஆயிரம் கோடிக்கு 2020-2021-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதையொட்டி நேற்று மதியம் 12 மணியளவில் சட்டசபை வளாகம் 4-மாடியில் உள்ள கருத்தரங்க கூடத்தில் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது.
புதுவை மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தேர்தலை மனதில் வைத்து முக்கிய அறிவிப்புகள், சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்பதால் இந்த பட்ஜெட் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் புதுச்சேரி பேரவையில் நாளை தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆளுநர் உரை இடம்பெறாது என தகவல் வெளியாகியுள்ளது. தனது ஒப்புதல் இல்லாமல் உரை தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறி கோப்பை ஆளுநர் திருப்பி அனுப்பிதாக வெளியான தவலை அடுத்து நாளை நடைபெறும் கூட்டத்தொடரில் ஆளுநர் உரை இடம்பெறாது என தகவல்.
மேலும் ஆளுநர் உரை இல்லாமல் புதுச்சேரி சட்டசபை பட்ஜெட்டை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்வார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுச்சேரியில் சத்துணவுக்கு பதிலாக மாணவர்களுக்கு அரிசி, பணம் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
புதுச்சேரி:
புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் சட்டசபை வளாகத்தில் உள்ள கமிட்டி அறையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுச்சேரி பொறியியல் கல்லூரியை தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக உயர்த்த ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். இதன் தொடக்க விழா விரைவில் நடைபெற உள்ளது. விழாவிற்கு ஜனாதிபதி அல்லது துணை ஜனாதிபதியை அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் அரசு பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் மட்டும் இந்த பல்கலைக்கழகத்தின்கீழ் கொண்டு வரப்படும்.
புதுவை மாநிலத்தில் சத்துணவு திட்டத்தின் கீழ் புதுவையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். தற்போது பள்ளிகள் நடத்தப்படாத காலத்தில் மதிய உணவு வழங்காததற்கு பதிலாக 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவருக்கு தலா ரூ.250, 6-ம் வகுப்புக்கு மேல் உள்ள மாணவர்களுக்கு தலா ரூ.330-ம், தலா 4 கிலோ அரிசியும் வழங்கப்படும்.
கொரோனாவால் பள்ளிக்கூடங்கள் இதுவரை திறக்கப்படாத நிலையில் தமிழக அரசு கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்களை ஒளிபரப்ப ஏற்பாடு செய்துள்ளது. நாம் தமிழக அரசின் பாடத் திட்டத்தை பின்பற்றி வருகிறோம். எனவே இந்த நிகழ்ச்சி வாயிலாக நமது மாணவர்களும் பயனடைவார்கள்.
எனவே புதுவை மற்றும் காரைக்காலில் உள்ள கேபிள் டி.வி. நிறுவனத்தார் தமிழக அரசு ஒளிபரப்பும் கல்வி நிகழ்ச்சிகளை கேபிள் டி.வி.யில் ஒளிபரப்ப வேண்டும். இதேபோல் புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்ககம் சார்பாகவும் காணொலி வாயிலாக நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இதையும் கேபிள் டி.வி.க்கள் ஒளிபரப்ப வேண்டும். இதுகுறித்து புதுவை, காரைக்கால் மாவட்ட கலெக்டர்கள் மூலமாக கேபிள் டி.வி. நிறுவனங்களுக்கு அறிவுறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
2020-2021-ம் கல்வி ஆண்டில் நீட் அல்லாத பொறியியல், பாலிடெக்னிக், சட்டம் உள்ளிட்ட தொழில்முறை படிப்புகள், இளங்கலை படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் நாளை (திங்கட் கிழமை) முதல் ஆன்லைன் முறையில் சென்டாக் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. 2016-17-ல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புகளில் 3,858 இடங்களே இருந்தன. தற்போது 6,620 இடங்களாக இது உயர்த்தப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள கணினி ஆய்வகங்களில் பயிற்றுனர்கள் உதவுவர். விண்ணப்ப கட்டணத்தை ரத்து செய்வது குறித்து முதல்-அமைச்சரிடம் பேசி அறிவிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது கல்வித்துறை செயலாளர் அன்பரசு, கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
மோட்டார்சைக்கிள் மோதி சிறுவன் பலியான சம்பவம் குறித்து வாலிபருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து காரைக்கால் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
காரைக்கால்:
காரைக்கால்மேடு சுனாமி நகர்-மகாராஷ்டிரா நகர் சந்திப்பில் கடந்த 14-1-2011-ந்தேதி அதே பகுதியை சேர்ந்த 8 வயது சிறுவன் சந்துரு சைக்கிளில் சென்று கொண்டிருந்தான். அப்போது அண்ணுசாமி வாய்க்கால் தெருவைச்சேர்ந்த பெனில் ஸ்டான்லி நிர்மல்(19) என்பவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக சந்துரு சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சிறுவனை அக்கம்பக்கத்தினர் மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து குணபாலன் கொடுத்த புகாரின் பேரில், காரைக்கால் நகர போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பெனில் ஸ்டான்லி நிர்மலை கைது செய்து காரைக்கால் மாவட்ட கூடுதல் உரிமையியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. நேற்று இந்த வழக்கில் கூடுதல் மாவட்ட உரிமையியல் கோர்ட்டு நீதிபதி செந்தமிழ்செல்வன் தீர்ப்பு அளித்தார். அப்போது விபத்தை ஏற்படுத்திய பெனில் ஸ்டான்லி நிர்மலுக்கு 6 மாத சிறை தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்தார். மேலும் அபராதம் கட்ட தவறினால், மேலும் ஒரு மாத சிறை தண்டனை அளிக்கப்படும் என்றும் அவர் உத்தரவிட்டார்.
கன்னியக்கோவில் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுவதாக வின்வாரியம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி:
பாகூர் துணை மின்நிலையத்தில் இருந்து செல்லும் பண்டசோழநல்லூர் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதையொட்டி நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட இடங்களில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது. அதன்விவரம் வருமாறு:- கன்னியக்கோவில், மதிகிருஷ்ணாபுரம், மூர்த்திக்குப்பம், உச்சிமேடு, புதுக்குப்பம், குருவிநத்தம், சுல்லியாங்குப்பம் மற்றும் வண்ணாங்குளம் ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது என்று மின்துறை செயற்பொறியாளர் விடுத்துள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி சட்டசபை கூட்டத்தொடர் நாளை கூடுகிறது. இதையொட்டி பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து அமைச்சரவை ஆலோசனை நடத்தியது.
புதுச்சேரி:
அரசு செலவினங்களுக்காக கடந்த மார்ச் மாதம் 3 மாதங்களுக்கான (ஏப்ரல், மே, ஜூன்) இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கான அனுமதி காலம் முடிந்ததையடுத்து முழு பட்ஜெட் தயாரித்து மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. நீண்ட இழுபறிக்குப் பின் பட்ஜெட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை (திங்கட்கிழமை) காலை 9.30 மணியளவில் கவர்னர் உரையுடன் தொடங்க உள்ளது. முதல்-அமைச்சர் நாராயணசாமி ரூ.9 ஆயிரம் கோடிக்கு 2020-2021-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதையொட்டி நேற்று மதியம் 12 மணியளவில் சட்டசபை வளாகம் 4-மாடியில் உள்ள கருத்தரங்க கூடத்தில் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ் கந்தசாமி, கமலகண்ணன், தலைமை செயலாளர் அஸ்வனி குமார், மாவட்ட கலெக்டர் அருண் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் கவர்னர் உரைக்கு இறுதி வடிவம் கொடுப்பது, பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய முக்கிய திட்டங்கள், மின் வினியோகத்தை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிடக்கோரி தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
புதுவை மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தேர்தலை மனதில் வைத்து முக்கிய அறிவிப்புகள், சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்பதால் இந்த பட்ஜெட் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே முடங்கியுள்ள நலத்திட்டங்கள், பொதுமக்கள் சந்திக்கும் பல்வேறு நெருக்கடிகள் தொடர்பாக இந்த கூட்டத்தொடரில் பிரச்சினை எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன. கொரோனா விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிப்பது, நலத்திட்ட உதவிகளை வழங்காதது போன்ற பிரச்சினைகளை எழுப்பப்படும் என்று தெரிகிறது.
பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்க இருப்பதையொட்டி சட்டசபை வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.