search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துணைநிலை ஆளுநர் கிரண்பேடி
    X
    துணைநிலை ஆளுநர் கிரண்பேடி

    மருத்துவர்களைப் பற்றி தவறாக பேசவில்லை - கிரண் பேடி

    மருத்துவர்களைப் பற்றி நான் தவறாக விமர்சனம் செய்யவில்லை என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரியில் கொரோனா தொற்று தொடர்ந்து சில தினங்களாக அதிகரித்து வரும் நிலையில் கடந்த சனிக்கிழமையன்று, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.  அப்போது அங்கிருந்த சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கொரோனா தடுப்பு திட்டங்கள் குறித்து துணைநிலை ஆளுநர் கேள்வி எழுப்பினார்.

    அப்போது பேசிய அவர் கொரோனா தடுப்பு பணியில், பொதுவான வழிமுறைகள்,  என்று எதுவுமே இல்லையா? என்று கேள்வி எழுப்பினார்.  கொரோனா தடுப்பு பணியில் நீங்கள் தோல்வியடைந்துவிட்டீர்கள், வழிமுறையை முறையாகப் பின்பற்றவில்லை. இதனால், உங்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்ததாக தகவல் வெளியானது.  அதை தொடர்ந்து பேசிய அவர் கொரோனா தொற்று உயிரிழப்பு குறித்து அறிக்கைகளை  எனக்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி சுகாதாரத்துறை அலுவலகத்தில் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளைத் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடுமையாகப் பேசியதாகக் கூறப்படும் விவகாரத்தில், கிரண் பேடிக்கு எதிராக மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர்.
    இந்நிலையில் புதுச்சேரியில் கவர்னர் எதிர்ப்பை மீறி 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்தார்.  அப்போது பேசிய சட்டப்பேரவையில் சபாநாயகர் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட மருத்துவர்கள் மற்றும்  சுகாதாரத்துறை அதிகாரிகளை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தவறாக பேசியது தொடர்பாக அவர் வருத்தம் தெரிவித்து, அவர் கூறிய வார்த்தைகளைத் திரும்பப்பெற வேண்டும் என சட்டப்பேரவையில் சபாநாயகர் வலியுறுத்தினார்.

    இந்நிலையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மருத்துவர்களைப் பற்றி நான் தவறாக விமர்சனம் செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.  மக்களை திசைதிருப்ப சில எம்.எல்.ஏ.க்கள் என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×