என் மலர்
புதுச்சேரி
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், 50 சதவீதம் பேர் முக கவசம் அணிவதில்லை என புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு வாரங்களாக புதுச்சேரியில் நோய் தொற்று அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தி உள்ளார்.
புதுச்சேரியில் மேலும் 125 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அசனா எம்.எல்.ஏ. தொற்றால் பாதிக்கப்பட்டார்.
புதுவையில் தொற்று பாதிப்பு குறைந்து இருந்த நிலையில் கடந்த சில வாரங்களாக தினமும் அதிகரிப்பது வாடிக்கையாகி விட்டது. அந்த வகையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 1,464 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 125 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. மாகி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 67 வயது முதியவர் பலியானார். இதனால் உயிரிழப்பு 681 ஆக உயர்ந்துள்ளது.
மாநிலத்தில் இதுவரை 41 ஆயிரத்து 226 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 39 ஆயிரத்து 554 பேர் குணமடைந்துள்ளனர். புதுவையில் உயிரிழப்பு 1.65 சதவீதமாகவும், குணமடைவது 95.94 சதவீதமாகவும் உள்ளது.
காரைக்கால் தெற்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக அசனா உள்ளார். தற்போதைய சட்டமன்ற தேர்தலிலும், இதே தொகுதியில் களம் காண்கிறார். இதற்காக கிராமம், கிராமமாக சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார்.இந்தநிலையில் புதுவை ரோடியர் திடலில் இன்று நடைபெறும் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அசனா எம்.எல்.ஏ. திட்டமிட்டு இருந்தார்.
இதனையொட்டி மாவட்ட நலவழித்துறை சார்பில் நேற்று காலை அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவில் அசனாவுக்கும், அவரது உதவியாளருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அசனா எம்.எல்.ஏ.வுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உளளது.

புதுச்சேரி:
புதுவை முன்னாள் எம்.பி. கண்ணன் சமீபத்தில் பாரதிய ஜனதாவில் இணைந்தார். அவர் புதுவையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
டெல்லியில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆட்சியையும், அதிகாரத்தையும் கையில் வைத்திருந்தார். பிரதமர் அலுவலகத்தில் அதிகார உச்சத்தில் சிங்கம் போல் இருந்தார்.
புதுவை வளர்ச்சிக்கு அவர் ஏன் எதுவும் செய்யவில்லை? நாராயணசாமியும், மத்தியில் பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரசும் புதுவைக்கு எதுவும் செய்யவில்லை.
ரங்கசாமி முதல்-அமைச்சராக இருந்த போது, வீரேந்திர கட்டாரியா என்ற கவர்னர் மூலம் ரங்கசாமிக்கு நாராயணசாமி தொல்லை கொடுத்தார்.
புதுவையில் 2.5 லட்சம் பேருக்கு வேலை கொடுக்க போகின்ற திட்டத்தை பா.ஜ.க. அறிவித்துள்ளது. ஓராண்டு காலக்கெடுவில் ஏராளமானோருக்கு வேலை கொடுப்போம். இல்லாவிட்டால், நடுரோட்டில் நிற்க வைத்து என்னை அடியுங்கள்.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் வீட்டுக்கு ஒருவருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கப்போவதாக அறிவித்தனர். யாருக்கும் வேலை கிடைக்கவில்லை. பித்தலாட்டமான ஏமாற்றும் விதத்தில் வாக்குறுதியை அளித்தனர்.
புதுவைக்கு பா.ஜ.க. வந்ததுமே காங்கிரசுக்கு பயம் வந்து தோல்வி பயத்தில் பா.ஜ.க.வை ரவுடி கட்சி என பச்சை பொய்யை சொல்கின்றனர். கார்பரேட் என்பது ஒன்றும் கெட்ட வார்த்தை இல்லை. காங்கிரஸ் கட்சியில் கார்ப்பரேட் இல்லையா என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். காங்கிரசுக்கு வாக்களிப்பது நமது தலையில் நாமே நெருப்பை போட்டுக் கொள்வது.
இவ்வாறு கண்ணன் கூறினார்.
மத்திய மந்திரி அர்ஜூன் ராம் மேக்வால் கூறுகையில், "மீனவர்களை மத்திய அரசு உடனடியாக இலங்கையில் இருந்து மீட்டுள்ளது. பா.ஜ.க. கலவரத்தை தூண்டுவதாக நாராயணசாமி பிரச்சினைகளை திசை திருப்புகிறார். அதுதான் காங்கிரசின் செயல்பாடு. அனைத்து மக்களும் முன்னேற வேண்டும் என்பதே எங்கள் இலக்கு" என்று குறிப்பிட்டார்.
புதுச்சேரி மாநில காங்கிரஸ் சட்டசபை தேர்தலையொட்டி தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
* குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும்.
* முதியோர், விதவைகள், ஆதரவற்றோருக்கு மாத உதவித்தொகை படிப்படியாக ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படும்.
* 10-ம் வகுப்பு, பிளஸ்-2, கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும்.
* மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படும்.
* ரேசனில் மாதந்தோறும் தவறாமல் அரிசி, சர்க்கரை, பருப்பு வழங்கப்படும்.
* சுதேசி, பாரதி, ரோடியர் மில்கள் திறக்கப்படும்.
* மாநில அந்தஸ்து கிடைக்க தொடர்ந்து வலியுறுத்துவோம்.
* மத்திய நிதி கமிஷனில் புதுச்சேரியை சேர்க்க தொடர்ந்து முயற்சிக்கப்படும்.
* மாநிலத்தில் தனி பள்ளி கல்வி வாரியம் அமைக்கப்படும்.
* மாணவர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா இலவசம், வை-பை வசதி.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை தேர்தல் கண்காணிப்பாகத்தின் சார்பில் புதுவையில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் பிரமாண பத்திரங்கள் ஆய்வறிக்கை வெளியிடபட்டுள்ளது.
களத்தில் உள்ள 324 வேட்பாளர்களில் (முழு ஆவணமில்லாத சுயேட்சை வேட்பாளர் ஒருவரை தவிர்த்து) 323 வேட்பாளர்களை ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செய்துள்ளதாக ஒருங்கிணைப்பாளர் ஜோசப் விக்டர் ராஜ் குறிப்பிட்டார்.
இதில் 323 வேட்பாளர்களின் பொருளாதார பின்னணி சுவாரஸ்யமாக உள்ளது. அதன் விவரம்:
புதுவையில் ஆய்வு செய்யப்பட்ட 323 வேட்பாளர்களில் 74 பேர் (23 சதவீதம்) கோடீஸ்வர வேட்பாளர்கள். கடந்த 2016-ல் 343 வேட்பாளர்களில் 96 பேர் கோடீஸ்வர வேட்பாளராக இருந்தனர்.
அதனை ஒப்பிடுகையில் கடந்த முறையை விட கோடீஸ்வர வேட்பாளர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. பா.ஜனதாவில் 9 வேட்பாளர்களில் 8 பேரும் (89 சதவீதம்), காங்கிரசில் 14 வேட்பாளர்களில் 12 பேரும் (86 சதவீதம்), என்.ஆர்.காங்கிரசில் 16 வேட்பாளர்களில் 13 பேரும் (81 சதவீதம்), அ.தி.மு.க.வில் 5 வேட்பாளர்களில் நால்வரும் (80 சதவீதம்), தி.மு.க.வில் 13 வேட்பாளர்களில் 9 பேரும் (69 சதவீதம்) கோடீஸ்வர வேட்பாளர்களாக உள்ளனர்.
புதுவை வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 2.14 கோடி. இது கடந்த 2016-ல் ரூ. 2.49 கோடியாக இருந்தது. கட்சிவாரியாக சராசரி சொத்து மதிப்பு விவரம்:
என்.ஆர்.காங்கிரசில் 16வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 10.79 கோடி. பா.ஜனதா வேட்பாளர்கள் 9 பேரின் சொத்து மதிப்பு ரூ. 9.89 கோடி. அ.தி.மு.க. வேட்பாளர்கள் 5 பேரின் சராசரி சொத்து மதிப்பு 9.1 கோடி. தி.மு.க. வேட்பாளர்கள் 13 பேரின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 8.03 கோடி. காங்கிரஸ் வேட்பாளர்கள் 14 பேரின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 5.82 கோடி.
உருளையன்பேட்டை சுயேட்சை வேட்பாளரும் என்.ஆர்.காங்கிரசிலிருந்து நீக்கப்பட்ட நேருவின் சொத்து மதிப்பு ரூ. 43 கோடியாக உள்ளதால் அவர் வேட்பாளரில் பணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
2-வது இடத்தில் 2 தொகுதிகளில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி உள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ. 38 கோடி. காங்கிரஸ் மாநிலத் தலைவரும், காரைக்கால் வடக்கில் போட்டியிடும் ஏ.வி. சுப்பிரமணியன் 3-வது இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ. 27 கோடி.
சொத்தே இல்லை என்று ஊசுடு தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் அபிமன்னன் தெரிவித்துள்ளார்.
காரைக்கால் வடக்கு தொகுதியில் இந்திய ஜனநாயகக்கட்சியில் போட்டியிடும் அருளானந்தம், காரைக்கால் தெற்கு தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயகக் கட்சி வேட்பாளர் நெப்போலியன், நெட்டப்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் பரந்தாமன் ஆகியோர் தங்களிடம் ரூ. 500 மட்டுமே உள்ளதாக சொத்து மதிப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
புதுவையில் போட்டியிடுவோரில் 178 வேட்பாளர்கள் தங்களுக்கு கடன் உள்ளதாக தெரிவித்துள்ளனர். அதில் காமராஜ் நகர் காங்கிரஸ் வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ஷாஜகான் தனக்கு ரூ. 20 கோடி கடன் உள்ளதாக குறிப்பிட்டு கடனில் முதலிடத்தில் உள்ளார்.
2-வது இடத்தில் உருளையன்பேட்டை சுயேட்சை வேட்பாளர் நேரு ரூ. 14 கோடி கடன் உள்ளதாக குறிப்பிட்டு 2-ம் இடத்தில் உள்ளார். 3-ம் இடத்தில் தி.மு.க. தெற்கு மாநில அமைப்பாளரும் வில்லியனூரில் போட்டியிடும் சிவா தனக்கு ரூ. 10 கோடி கடன் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
323 வேட்பாளர்களில் 25 பேர் தங்களின் பான் எண்ணை தெரிவிக்க வில்லை.
திருநள்ளாரில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் ஆண்டு வருவாய் ரூ. 1.9 கோடி என குறிப்பிட்டு முதலிடத்திலும், வில்லியனூரில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் சுகுமாரன் ஆண்டு வருவாய் ரூ. 1.11 கோடியாகவும், உருளையன்பேட்டை சுயேட்சை வேட்பாளர் நேரு ஆண்டு வருவாய் ரூ. 76 லட்சம் எனவும் தெரிவித்துள்ளனர்.






