search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாராயணசாமி
    X
    நாராயணசாமி

    குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை- புதுச்சேரி காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

    புதுவையில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2, கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் இலவசமாக வழங்கப்படும் என காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநில காங்கிரஸ் சட்டசபை தேர்தலையொட்டி தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

    * குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும்.

    * முதியோர், விதவைகள், ஆதரவற்றோருக்கு மாத உதவித்தொகை படிப்படியாக ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படும்.

    * 10-ம் வகுப்பு, பிளஸ்-2, கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும்.

    * மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படும்.

    * ரேசனில் மாதந்தோறும் தவறாமல் அரிசி, சர்க்கரை, பருப்பு வழங்கப்படும்.

    * சுதேசி, பாரதி, ரோடியர் மில்கள் திறக்கப்படும்.

    * மாநில அந்தஸ்து கிடைக்க தொடர்ந்து வலியுறுத்துவோம்.

    * மத்திய நிதி கமி‌ஷனில் புதுச்சேரியை சேர்க்க தொடர்ந்து முயற்சிக்கப்படும்.

    * மாநிலத்தில் தனி பள்ளி கல்வி வாரியம் அமைக்கப்படும்.

    * மாணவர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா இலவசம், வை-பை வசதி.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×